எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 12, 2016

ஃப்ரூட் சாலட் – 158 – அறிவுக்கண் – மாற்றம் – நடனம் – நெருப்பு வடை

அறிவுக் கண் திறக்கும் பார்வையற்றவர்: 

திருச்சியிலிருந்து திங்களன்று காலை பல்லவன் விரைவு வண்டியில் புறப்பட்டேன். சென்னை [மாம்பலம்] வரை பார்த்துக் கொண்டே வந்தேன். அவை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். ஆனால் இன்று நான் சொல்லப் போவது ரயிலில் புத்தகம் விற்கும் ஒரு வியாபாரி பற்றி…. 

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பல்லவன் சில நிமிடங்கள் நின்ற பிறகு சென்னையை நோக்கிப் புறப்பட்டது. விழுப்புரத்திலிருந்து பல விற்பனையாளர்கள் – பேனா, விளையாட்டு பொம்மைகள், தின்பண்டங்கள் என எதை எதையோ விற்று வந்தார்கள். ஒரு குரல் மட்டும் என்னை மிகவும் கவர்ந்தது – “பொது அறிவு வினாக்களும் பதில்களும் – 20 ரூபாய், நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – 20 ரூபாய், என பல புத்தகங்களின் பெயர்களைச் சொல்லி ஒவ்வொரு புத்தகமும் 20 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த குரல் தான் அது! 

குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். எனதருகே வரும்போது தான் கவனித்தேன் – பலருக்கும் அறிவுக்கண்ணைத் திறக்கும் அந்த மனிதருக்கு கண் பார்வை இல்லாததை! 

தான் வாழ தன்னம்பிக்கையோடு உழைக்கும் அவருக்கு இந்த வாரப் பூங்கொத்து! 

இந்த வார முகப்புத்தக இற்றை: 

மாற்றங்கள் நம்மிலிருந்து துவக்குவோம்! 


இந்த வார குறுஞ்செய்தி: 

 A truth can walk naked….. but a lie always needs to be dressed. – Khalil Gibran 

ரசித்த நடனம்: இதை விடச் சிறந்த நடனம் ஏதாவது உண்டெனில் சொல்லுங்கள்…… அதிலும் நடுவே இருக்கும் குழந்தையின் நடனம் மிகச் சிறப்பு…. So cute! பாருங்களேன்!


This may just be the cutest video I've ever seen <3
Posted by Jordan Jansen Music on Wednesday, November 4, 2015

நெருப்பு வடை – ஒரு மண்டைக் குடைச்சல்: 

சமீபத்தில் சத்திரம் பேருந்து நிலையம் வழியே பேருந்தில் பயணித்த போது ஒரு கடையின் வெளியே வைத்திருந்த பதாகையில் “நெருப்பு வடை” என்று எழுதி இருந்தது! நெருப்பையே வடையாகப் போட்டுத் தருவார்களா?, இல்லை வடையை நெருப்பில் நேரடியாகச் சுட்டுத் தருவார்களா? என்னதான் அது? என்று ஒரே குடைச்சல். அக்கடைக்குச் சென்று அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஊரில் இருந்தவரை போக முடியவில்லை. இன்னமும் மண்டைக்குடைச்சல் இருக்கிறது – அது என்ன எனத் தெரிந்து கொள்ள…. யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்! 

ரசித்த விளம்பரம்: 

இந்தியாவிற்குள் இயக்கப்படும் விமானங்களில் இப்படி கவனிப்பதில்லை என்றாலும் விளம்பரத்தில் பார்த்தது பிடித்தது. பாருங்களேன்!

What happens when an Air Hostess from British Airways travels to India for the first time. Share it if you like everything Indian and India! :-)
Posted by Storified.me on Tuesday, February 2, 2016
படித்ததில் பிடித்தது: 

சமீபத்திய புதுக்கோட்டை பயணத்தின் போது நிலாபாரதி அவர்களைச் சந்தித்தேன். ”வேட்டி” என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தார். வேட்டி தினம் கொண்டாடுவதை மிகச் சிறப்பாக சாடியிருந்தார். அதன் பின்னர் தான் அவரது வலைப்பூவினை தொடர ஆரம்பித்தேன். இன்றைய ஃப்ரூட் சாலட்-ல் அவருடைய வலைப்பூவில் அவர் எழுதிய கவிதை ஒன்று படித்ததில் பிடித்தது பகிர்வாக…. 

வாழ்க்கை 

வாழ்க்கை

இலேசான இதயம்தான் எவ்வளவு
கனமான எண்ணங்களை எளிதாக சுமக்கிறது

எண்ணங்களின் சுமைதாங்காமல்
இதயமும் அழுத்துகையில்
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
வெளியில் வந்து வந்து போகிறது....
சூடான சுவாசக்காற்றும் !


வெளிவந்த சுவாசத்தை விட்டுவிட முடியாமல்
முந்திகொண்டுவருகிறது
திணறலுடன் மூச்சுக்காற்றும்....

எல்லையில்லா வானம்கூட
எதற்கும் ஆசைப்படுவதில்லை

ஆசை கொண்ட மனிதனுமே
அத்தனையும் அடைந்து விடத்தான்
சிறு இதயமும் துடிக்கிறதென
சிறு பிள்ளைப்போல் நினைத்துவிட்டான்

கொள்ளளவு குறைவுதான் என்றாலும்
கொட்டிடத்தான் தேடுகின்றான்
கோடி கோடி வேண்டுமென்று
வீதிஎங்கும் ஓடியோடி....

அலைந்து அலைந்து திரிந்த காற்று
கண்ணில்பட்டவன் காதில்
ஊதிவிட்டுப்போனது ஒற்றைச்சேதி.!

உனக்குள் இருக்கும் நான்
உட்புகுந்தவீட்டை விட்டு
வெளியேறினால்
நீ நாறின பிணமடா..!!
இதை என்று உணரும்
உன் மனமடா....!!!

-    கவிதாயினி நிலாபாரதி

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. //பலருக்கும் அறிவுக்கண்ணைத் திறக்கும் அந்த மனிதருக்கு கண் பார்வை இல்லாததை!//
  //தான் வாழ தன்னம்பிக்கையோடு உழைக்கும் அவருக்கு இந்த வாரப் பூங்கொத்து!//

  மிகப் பொருத்தமானவருக்குப் பூங்கொத்து .... மிக்க மகிழ்ச்சி!

  குழந்தைகள் நடனம் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. இம்மாதிரி மலிவு விலைப் புத்தகங்களை நானும் நிறைய வாங்கியதுண்டு !

  'குட்டி'சின் சேஷ்டைகள் அருமை !

  விமான விளம்பரம் ,ஆள் பிடிக்கிறதுக்கு செய்ததுதானே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. ரசித்தேன் அனைத்தையும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. அற்புதமான காணொளி.

  very rare however such hospitality

  subbu thatha

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   Delete
 5. அனைத்தும் அருமை சகோ,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 6. நிலா பாரதியின் கவிதை அருமை...

  விளம்பரம் ரசித்தோம்..குட்டீஸ் செம செம செம க்யூட்! அவர்கள் என்றுமே எப்போதுமே தேவதைகள்தான்! அதுவும் நடுவில் ஆடிய குழந்தை ஸோ ஸ்வீட்!!!

  ஆம் கண்ணில்லாதவர்கள்தான் பெரும்பாலும் ஏதேனும், குறிப்பாகப் புத்தகங்கள் விற்றுக் கொண்டுவருவதைப் பார்த்திருக்கின்றோம்...வாங்கியும் இருக்கின்றோம்..
  எங்கள் பூங்கொத்தும் ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. நெருப்புத் தணலில் சுடும் வடைக்கு நெருப்பு வடை என்று சொல்வார்களோ என்னமோ?

  ReplyDelete
  Replies
  1. இப்படிச்சுட்ட வடையில் எண்ணை இல்லாதிருப்பது ஒரு பிளஸ் பாய்ன்ட். வட இந்தியாவில் சப்பாத்தியை இப்படித்தானே சுடுகிறார்கள்.

   Delete
  2. நெருப்புத் தணலில் சுடும் வடை - தெரியவில்லை. அடுத்த பயணத்தில் நிச்சயம் சென்று பார்த்து விடுவேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
  3. எண்ணையில்லாத சப்பாத்தி - நல்லது தான். அதே போல வடை! :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 8. நல்ல தொகுப்பாய்...
  எல்லாமே அருமை...
  குஷ்பு இட்லி...
  விருதுநகர் புரோட்டா...
  போல நெருப்பு வடையா...?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. அனைத்தும் நன்று குழந்தைகள் காணொளி ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. நடுவில் நடனமாடும் பெண்வருங்காலத்தில் ஒரு சிறந்த பாலேநடனக் காரியாக வருவார் என்று நம்பலாம் ரயிலிலும் பேரூந்துகளிலும் விற்பனை செய்யும் கண் இல்லாதவர்கள் பாராட்டுக்குரியவர்கள் அனைத்தையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. பழக்கலவையினை அதிகம் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. நெருப்பு வடை?
  சத்திரம்காரர்களுக்கே வெளிச்சம்...
  மாற்றம் நம்மிடம் இருந்தே...
  சகோ நிலா பாரதியின் கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள்
  டெல்லி சென்றாயிற்றா?
  அடுத்த பொங்கல் விடுமுறை அன்று சந்திப்போம்
  நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. டெல்லி வந்து சேர்ந்து விட்டேன் மது. விசாரிப்புக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 13. நானும் வைகை எக்ஸ்பிரசில் பயணிக்கும் போது அந்த மனிதரை பார்த்து வியந்திருக்கிறேன். நடிவில் ஆடும் அந்தக் குழந்தையின் நடனத்தை மிகவும் ரசித்தேன்.
  த ம மீண்டும் தகராறு செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 14. அது ஒன்னும் இல்லை. வரட்டி தான்
  நெருப்பு வடை என்று நினைக்கிறேன்.
  ஜெயகுமார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயகுமார் ஜி!

   Delete
 15. பார்வை இல்லாதவர் யாரையும் சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல் என் சார்பாகவும் ஒரு பூங்கொத்து. வாழ்க்கை கவிதை டச்சிங். காணொலி காண முடியல.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம் ஜி! காணொளி பார்க்க முடியவில்லை என்பதில் வருத்தம். மற்றவர்கள் பார்த்திருக்கிறார்கள்..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....