படம்: இணையத்திலிருந்து....
சமீபத்தில் திருவரங்கத்தில்
நடந்த பதிவர் சந்திப்பு பற்றி எனது பக்கத்தில் எழுதி இருந்தேன். சந்திப்பின் போது நண்பர்
ரிஷபன் அவர்கள் அனைவருக்கும் அவரது சிறுகதைத்
தொகுப்பாகிய “முற்றுப் பெறாத ஓவியம்” புத்தகத்தினை அளித்தார். ஊரிலிருந்து வந்து சில நாட்கள் புத்தகங்கள் படிக்க
முடியவில்லை. நேற்று இப்புத்தகத்தினை வாசித்து முடித்தேன் – இதோ உங்களிடம் வாசிப்பனுபவத்தினைப்
பகிர்ந்து கொள்ள வந்துவிட்டேன்.
ஆசிரியர் பற்றி முதலில்
சொல்லி விடுகிறேன். வலையுலகில் அவ்வப்போது
பதிவுகள் எழுதி வரும் இவர் இப்போதெல்லாம் முகப்புத்தகத்தில் மூழ்கிவிட்டவர். இவரது
சிறுகதைகள் பல வார, மாத இதழ்களில் வெளியானவை.
சில குறுநாவல்களும் உண்டு. மனதைத் தொடும்
கதைகளை எழுதுபவர். பிரசுரமான பல கதைகள் பரிசு பெற்றவை. “இலக்கியச் சிந்தனை” பரிசு பெற்ற
“என்” சிறுகதை ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பும் உண்டு.
தொகுப்பு பற்றி அவரது
வார்த்தையிலேயே சொல்கிறேன் – “ நல்ல வாசகனுக்குப் பிடித்தது….. அருமையான படைப்புகள்.
அந்த வகையில் எழுத்தின் மூலம் இதயங்களைத் தொடும் முயற்சியில் இதோ…. இன்னொரு சிறுகதைத் தொகுப்பு…. உங்கள் வாசிப்பிற்கு.”
“முற்றுப் பெறாத ஓவியம்”
– தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் – ஒவ்வொன்றும் சிறப்பான கதைகள். முதல் கதையே நட்பு
பற்றியது – எட்டு வருட நட்பு – சில வார்த்தைகளில் நண்பர்களுக்குள் நட்பில் விரிசல்
வர அதை எப்படிக் கடந்து மீண்டும் நட்புடன் இருப்பது பற்றியது.
”அம்மாவுக்குச் சுடிதார்” – தனது பெண் அம்மாவும் சுடிதார் போட்டுக்கணும்னு ஆசைப்பட்டாலும் பிடிக்காது என்று சொன்ன தாரிணி, சுடிதார் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் பிரச்சினைளை – “ஒரு பெண்ணால முடியாதுன்னு சில பேர் நினைக்கிறாங்க… முடியும்னு காட்டணும் நான் நினைக்கிறேன்!” என சமாளிக்கும்
வித்தையைச் சொல்லும் கதை.
”நிறைவு” எனும் கதை –
தேரோட்டம் பற்றியது. தேரோட்டம் பற்றி அவர்
சொல்லி இருப்பதைப் பாருங்களேன் – “தேர் ஓடி வரும்போது இனம் புரியாத கவர்ச்சி இருக்கிறது.
யாரோ நம்மைத் தேடி வருகிற மாதிரி…. எத்தனை பெருசாய் அணைத்துக் கொள்ள வருகிற மாதிரி….
மனச்சுமை களைந்து….. மயிலிறகாய் மாற்றி….. ஆலிங்கனத்தில் சுகம் தரப்போவது போல!” தேரோட்டத்தின் போது வெக்கையின் கொடுமையைக் குறைக்க
அடர்த்தியாய் மயிற்தோகைகளால் ஆன விசிறி கொண்டு மேலே உயர்த்தி வீசிக் கொண்டிருக்கிறார்
ஒரு பெரியவர் . பத்து வினாடியாவது அவர் வீசும்
காற்று பட்டுத்தான் ஜனக்கூட்டம் அந்த இடத்தைக் கடக்க முடியும். என்னவொரு உயர்ந்த மனது. அவருக்கு பணம் தர ஆசைப்பட்டுக் கொடுக்க அதை வாங்கிக்
கொள்ளாத பெரியவர். எதுவும் எதிர்பார்க்காத மனிதர் – அப்பா, அம்மாவைப் போல! மனதைத் தொட்ட கதைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொருவரும்
படிக்க வேண்டிய கதை.
”முற்றுப் பெறாத ஓவியம்” சாலையில் இறை ஓவியம் வரைந்து, அதன் மேல் பார்வையாளர்கள்
அதன் மேல் போடும் சில்லறைக் காசுகளை எடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு மனிதன், அவன் பிரியம்
வைத்திருக்கும் ஒரு நாய்க் குட்டி, அவர்களின் பசி, அந்த ஏழைக்கும் வந்த காதல், அந்த
காதலி வேறொருவரை மணந்து கொள்வது என நமக்குப் பல விஷயங்களைச் சொல்லும் கதை.
“இதயத்தை எடுத்துக்கொள்”
சிறுகதை – தன் வாழ்நாளில் மனம் வந்து ஒரு பொருளையும் யாருக்கும், தனது மகன்களுக்குக்
கூட கொடுக்க நினைக்காத மனிதர் – கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்க
“எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என அப்பாவைக் காப்பாற்ற, அம்மாவுக்காக அதைச் செய்ய
நினைக்கும் மகன்கள் – மருத்துவர்கள் கடைசியில் கைவிரிக்க, அவரது உறுப்புகளைத் தானம்
செய்ய ஒத்துக் கொள்ளும் அம்மா….
”பெயர் தெரியாத தேவதை”
– உடுத்திய துணியோடு, மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பு ஜோல்னாவில் போட்டுக் கொண்டு இலக்கில்லாத
பயணமாய், மனைவியிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிய
ஒருவரின் கதை. அப்பயணத்தில் அவர் சந்தித்த
பெயர் தெரியாத தேவதை, அவருக்குக் கிடைத்த அனுபவம் அவரை வீடு நோக்கித் திரும்ப அனுப்பியதா
இல்லையா என்பதை நீங்கள் தொகுப்பினைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
தொகுப்பில் இருக்கும்
அனைத்து கதைகளும் எனக்குப் பிடித்தன என்றாலும், அனைத்தையும் இங்கே சொல்லப் போவதில்லை. நீங்களே படித்துப் பாருங்களேன். புத்தகம் கிடைக்குமிடம்:
பிரபாத்
புக் ஹவுஸ், 3/20, அலங்கார்நகர், 2வது தெரு, ஷேக்மானியம், போரூர், சென்னை-600116. அலைபேசி:
9841170750. விலை: ரூபாய் 55.
மற்றுமொரு வாசிப்பனுபவத்துடன்
உங்களைச் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
டிஸ்கி: புத்தகத்திற்கும் மேலே பகிர்ந்திருக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை! இந்த ஓவியம் வரைந்தது “இளையராஜா” என்று இணையத்தில் போட்டிருக்கிறார்கள். மிக அழகிய ஓவியம் என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!
அன்பு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குரிஷபன் அவர்களுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇவரது கவிதைகள் அவ்வப்போது முக நூலில் படித்து வியந்து இருக்கிறேன்.
இவர் வார்த்தைகளில் காணும் சந்தம் வசந்தம்..
என்றாவது இவரை சந்திக்க ஆவல் தான்.
சுப்பு தாத்தா
எனக்கும் ஆர்வம். எப்போ வாய்க்குமோ
நீக்குவார்த்தைகளில் காணும் சந்தம் வசந்தம்..... அற்புதம்
நீக்குசந்திக்கலாம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
சென்னை பதிவர் சந்திப்பில் அவரைச் சந்தித்தது... அதன் பிறகு பார்க்கவில்லை. “எப்போ வாய்க்குமோ?” அதே தான் என் மனதிலும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
அப்பா அம்மாவைப் போல என்கிற முத்தாய்ப்பு பிரமாதம். நல்ல பகிர்வு. ரிஷபன்ஜியின் கதைகளை வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாகவே எனக்கு உண்டு.கல்கியில் அவ்வப்போது வெளியாகும் சிறுகதைகளை சுடச்சுடப் படித்திருக்கிறேன். மனதை வருடும் எழுத்துகள். முற்றுப் பெறாத ஓவியம் கதைச்சுருக்கத்தைப் படிக்கும்போது ஏற்கெனவே வாசித்திருக்கிறேனோ என்று தோன்றுகிறது. நாங்கள் ஸ்ரீரங்கம் வந்தபோது இவரைச் சந்திக்க முடியாமல் போனது.
பதிலளிநீக்குதமிழ்மணம் பட்டையே கண்ணுக்குத் தெரியவில்லை. பின்னர் வந்து வாக்களிப்பேன்.
நிச்சயம் சந்திப்போம் அடுத்த முறை
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்! நீங்கள் திருவரங்கம் வந்தபோது நான் தமிழகம் வந்திருந்தாலும் சந்திக்க இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.....
நீக்குஅவர் வரும் போது நானும் அங்கிருந்தால் வருவேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
மீண்டும் மீண்டும் முயற்சித்ததில் தம பட்டை வந்தது! 504 எரரையும் மீறி மறுபடி லோட் செய்ததில் வெற்றி! வாக்களித்து விட்டேன்!
பதிலளிநீக்கு:)))
தொடர்ந்து முயற்சித்து தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஒவ்வொரு சுருக்கமான கதையும் அருமை...
பதிலளிநீக்குநன்றி
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஅருமை. எனக்கும் இப்புத்தகம் பெறும் பாக்யம் கிடைச்சது. இன்னும் வாசிக்லை:-(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஇந்தியா வரும்பொழுது வாங்குகிறேன்..பகிர்விற்கு நன்றி அண்ணா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்குஅருமையான அறிமுகமும் விமர்சனமும்.....நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார் ஜி!
நீக்குஉங்கள் விமர்சனமே ...படிக்கும் ஆவலை தூண்டுக்கிறது..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குமுற்றுப் பெறாத ஓவியம்..
பதிலளிநீக்குஅழகிய வர்ணனை!..
வேறெங்கும் இந்நூல் கிடைக்குமா?..
வேறு எங்கே கிடைக்கும் என்பது தெரியவில்லை. ரிஷபன் ஜியிடம் கேட்டுச் சொல்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
புத்தகம் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை இந்தியா வரும் போது பார்க்கலாம்... த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபுதுக் கோட்டைக்குப் போகும் வழியில் மலைக் கோட்டையில் என்விடுதி அறையில் திரு ரிஷபனைச் சந்த்தித்து இருக்கிறேன் அவர் எனக்கு அவர் எழுதிய மனிதம் எனும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார் வாசித்துக் கொண்டிருக்கிறேன் முடித்ததும் நானும் எழுதுவேன் பகிர்வுக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குநூலைப் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது தங்களின் விமரிசனம். அருமையாய் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅழகிய விமர்சனம் ஜி வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குதிரு. ரிஷபன் சாரின் கதைகள் போலவே தங்களின் இந்த விமர்சனமும் கச்சிதம். :)
பதிலளிநீக்குநானும் 07.02.2016 அன்று ஆரம்பித்து நேற்றுதான் (23.02.2016) ஒருவழியாக, அதிலுள்ள இருபது கதைகளையும் மனதில் வாங்கிக்கொண்டு ரஸித்துப் படித்து முடித்தேன்.
மனதுக்குத் திருப்தியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.
அழகிய விமர்சனம்! அதற்கு மகுடம் போல தாங்கள் வைத்திருந்த ஓவியம் மிக மிக அழகு!!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குரிஷபன் பற்றி கொஞ்சம் வாசிப்பு அனுபவம் உண்டு ஆனால் அவர் வலைச்சரம் எல்லாம் அறிந்த பதிவர் ஆனால் அதிகம் பலரை நட்பு யாசிக்க மாட்டார் போலும் ஆனாலும் நூல் வாங்கும் ஆசையிருக்கு அடுத்த ஆண்டு சென்னையில் தேடலாம்[[! பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி! தாங்கள் நலம்தானே?,
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
நீக்குமிகச் சுருக்கமாக ஆயினும்
பதிலளிநீக்குமிக அருமையாக முன்னுரை
அளித்துள்ளீர்கள்
அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்கு#மயிற்தோகைகளால் ஆன விசிறி கொண்டு மேலே உயர்த்தி வீசிக் கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர்#
பதிலளிநீக்குஇதைப் படிக்கும் போதே, உள்ளத்தில் ஒரு குளுமையை உணர வைத்து வைத்து விட்டாரே ,ரிஷபன் ஜி :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவிமரிசனம் அருமை! நானும் படிச்சேன். என்றாலும் விமரிசனம் ஏதும் எழுதவில்லை! எல்லாக் கதைகளுமே ஒவ்வொரு வகையில் சிறப்பானவை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குநல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குஇளையராஜாவின் ஓவியங்களுக்கு நான் ரசிகன்....
என்ன உயிர்ப்பான ஓவியம்...
ரிஷபன் சாரின் எழுத்து அருமையாக இருக்கும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநூல் விமர்சனம் அருமை வெங்கட்ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு