நல்ல மனம் வாழ்க…
படத்தில் இருக்கும் சர்தார்
குமீத் சிங், கடந்த பதினைந்து வருடங்களாக பட்னா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்க
வரும் ஏழை நோயாளிகளுக்கு, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இலவசமாக உணவு வழங்கி வருகிறாராம்…. நல்ல மனம் கொண்ட இம்மனிதருக்கு இந்த வாரப் பூங்கொத்து!
வாழ்க்கை வாழ்வதற்கே!:
ஒரு நாவிதரின் கடை. அங்கே
வந்திருந்த பெரியவரின் தலையில் எண்ணி எட்டே எட்டு முடி. அவர் இருக்கையில் அமரவும், கடைக்காரர் கோபத்துடன்,
முடியை எண்ணனுமா, இல்லை வெட்டி விடணுமா என்று கேட்க, அந்த பெரியவர் சொன்ன பதில்……
கலர் பூசுப்பா!
நம்மிடம் என்ன இருக்கிறதோ
அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்போம்!
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
ஒரு குழந்தையைப் போல காரணம்
ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருப்போம்… காரணம்
இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால் பிரச்சனை தான்! மகிழ்ச்சிக்கான அந்தக்
காரணம் எந்த நேரமும் உங்களை விட்டு விலகக் கூடும்!
தானம்: காணொளி
உடலுறுப்பு தானம் என்பது
நம் நாட்டில் இன்னும் அதிகமாய் பரவாத ஒரு விஷயம். தானம் செய்வதற்கும் பல சட்டங்களுக்குக்
கட்டுப்பட வேண்டியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் உங்கள் உடலுறுப்புகளை தானம் செய்து
விடமுடியாது. சமீபத்தில் பெங்களூர் சாலை விபத்தில் மரணித்த ஒரு இளைஞர் உடலுறுப்பு தானத்திற்காக
இறக்கும் போதும் முயற்சிக்க, அவர் தவிப்பதை காணொளிகளும், புகைப்படங்களுமாக எடுப்பதில்
தானே மும்மரமாக இருந்திருக்கிறார்கள் பலரும்….. உடலுறுப்பு தானம் பற்றிச் சொல்லும்
நல்லதோர் காணொளி இது…. பாருங்களேன்!
விளம்பரம்: Share the Load…
வீட்டு வேலைகள் அனைத்தையும்
வீட்டிலுள்ள பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பது என்ன எழுதாத சட்டமா? வீட்டிலுள்ள
அனைவருக்கும் அந்த வேலைகளில் பங்குண்டு என்று அழகாய்ச் சொல்லும் விளம்பரம்! பாருங்களேன்!
சென்ற சனி-ஞாயிறன்று எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி. அங்கே சென்றிருந்தபோது வாகனங்கள் வைக்குமிடத்தில் குடியிருந்த காவலாளியின் குழந்தைகள் மூன்று பேரும் புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல – அவர்களை புகைப்படம் எடுத்தேன். காண்பிக்க அவர்களுக்கு அத்தனை குஷி…. குறிப்பாக இடப்பக்கச் சிறுமிக்கு! பாருங்களேன்!
ஏம்மா!
வேலைக்குச் சென்று வீடு
திரும்பிய அம்மாவிடம் ஐந்து வயது சிறுமி கேட்டாள்….
“ஏம்மா நம்ம வீட்டு பீரோ
சாவியை ஆயாகிட்ட கொடுத்துட்டு போகல?”
அம்மா சொன்னாள்: “அதைப்
போய் யாராவது ஆயாகிட்ட கொடுப்பாங்களா?”
”ஏம்மா, நம்ம வீட்டு பீரோல
இருக்கற நகை, பணத்தை எல்லாம் ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?”
”ஷ்ஷூ…. அதை எல்லாம் ஆயாகிட்ட
கொடுக்கக் கூடாது!”
”ஏம்மா உங்க ATM கார்ட
ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?”
”என்ன கேள்வி இது. நீ
சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதை ஆயாகிட்ட எல்லாம் கொடுக்கக் கூடாது!”
”அப்போ ஏம்மா என்னை மட்டும்
ஆயாகிட்ட விட்டுட்டுப் போற? உனக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியம் இல்லையா?”
இம்முறை அம்மாவிடம் பதில்
இல்லை. கண்களில் நீர் மட்டுமே இருந்தது!
மீண்டும் அடுத்த வாரம்
வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
நல்ல மனம் வாழ்க!..
பதிலளிநீக்கு>>> அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற? உனக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியம் இல்லையா?..<<<
அருமை..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குமுத்துமுத்தான தகவல்கள்! காணொளி மனதை நெகிழ வைத்தது. இங்கு ஓட்டுனர் உரிமம் வாங்கும்போது உடல் உறுப்பு தானம் செய்ய நினைப்பவர் (organ donor)என்ற விசயத்தை உரிம அட்டையில் அச்சடிக்க ஒரு வாய்ப்பு உண்டு. நம் இஷ்டம் தான்.
பதிலளிநீக்குமுதல் வாக்கு என்னுடையதாய் இருக்கட்டும் என்று பார்த்தால் வட்டம் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது..பதிவு செய்கிறதா பார்க்கலாம்..
ஓட்டுனர் உரிம அட்டையிலேயே பதிவு செய்வது நல்ல விஷயம். இங்கே அதைச் செய்ய எத்தனை வருடங்கள் ஆகுமோ.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
வாழ்க சர்தார் குமீத் சிங். பாஸிட்டிவ் செய்தி!
பதிலளிநீக்குகாணொளியை ஃபேஸ்புக்கிலேயே ரசித்தேன்.
விளம்பரங்களில் சமயங்களில் இது மாதிரி முத்துகள் கிடைப்பதுண்டு. வாழ்க இதைத் தயாரித்தவர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்தும் அருமை வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகலர் பூசப்பா, உடலுறுப்பு தானம், காவலாளிகளின் குழந்தைகள், நான் முக்கியம் இல்லையா குழந்தையின் கேள்வி நெஞ்சில் அறைகிறது.
த ம 3
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
நீக்குசூப்பர்ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.
நீக்குகுழந்தைகள் சிலநேரம் ஆசிரியர் ஆகிறார்கள்.. சிங்கைப்போல் மனிதர்கள் சிலநேரம் தெய்வமாகிறார்கள் .. பிள்ளைகள் சிரிப்பு எல்லாமாகிறது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபெரியவர் காமெடிதான் சூப்பரு...
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு அண்ணே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குகடைசியில் உள்ளது பலமுறை படித்தாலும் ரசித்தேன். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இப்படி உதவி செய்யும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என்னும் போது மனதுக்கு மகிழ்வு.. மற்றவைகள் அனைத்தும் சிறப்பு ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅனைத்தும் நல்ல விடயங்களே ஜி குழந்தையாகவே கடைசிவரை வாழ்ந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
பதிலளிநீக்குகுழந்தையாகவே கடைசி வரை..... நம் அனைவருக்கும் உள்ள நிறைவேறாத ஆசை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வார்த்தைகளே இல்லை ஐயா.அருமையான காணொலி மனதை வென்று விட்டது.மேலும் உடலுறுப்பு என்பது இறந்த பின் மண்ணுக்கு பயன்படுவதை விட மனிதனுக்கு பயன்பட வேண்டும் என்பதை விளக்கும் பதிவாக அமைந்துள்ளது ஐயா.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!
நீக்குநிஜமான இயற்கையான மகிழ்ச்சியை
பதிலளிநீக்குஅந்தக் குழந்தைகளின் முகத்தில்
காண முடிந்தது
காணொளி அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குஎல்லாம் அருமை அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநானெல்லாம் ஒரு பூவைப் பறித்துத் தருவதற்குள் போதும்போதுமென்றாகிறது.. நீங்கள் என்னவென்றால்..ஒருகூடைப் பூவை ஒருமூச்சில் கவிழ்த்தால் மூச்சு முட்டாதா? அவ்வளவும் மணம் கமழும் மருக்கொழுந்து வேறு! அருமை அருமை! கடைசிக் குழந்தையின் கேள்விக்கு வைரமுத்து சொன்ன பதில் நினைவிலிருக்கிறதா? -
பதிலளிநீக்கு“தாவி அணைப்பதற்கும் தழுவிமுத்தம் தருவதற்கும்
ஞாயிற்றுக் கிழமை வரும் நினைத்தபடி கண்ணுறங்கு!” த.ம.10
வைரமுத்துவின் பதில்..... சோகம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
இந்த வார பழக்கலவையில் இரண்டு காணொளிகளும் அருமை. அதைவிட அந்த ‘ஏம்மா’ என்ற அந்த சிறுமியின் ஏக்கம் மனதை தொட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு>>> அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற? உனக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியம் இல்லையா?..<<< நாமெல்லம் வெடகி தலை குனிய வேணடியா விஷயம் அய்யா. அருமையான பகிர்வு வாழ்க உங்கள் தொண்டு
பதிலளிநீக்குவிஜய் டில்லி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குசர்தார் குமீத் சிங் ற்கு பூங்கொத்து!
பதிலளிநீக்குகாணொளி நெகிழ வைத்தது...உடலுறுப்புதானம், மகிழ்ச்சிக்குக் காரணம் வேண்டுமா போன்ற அனைத்தும் அருமை...
குழந்தையின் கேள்வி பளீர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு