எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 3, 2017

ஒட்டக எலும்பில் ஆபரணங்கள்…சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் பயணம் சென்றிருந்தேன். ராஜஸ்தான் என்றாலே ஒட்டகங்கள் நினைவுக்கு வருமே உங்களுக்கு! ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்தில் கூட நிறைய ஒட்டகங்கள் உண்டு.  சில மாதங்களுக்கு முன்னர் ஆடு மாடு மேய்ப்பது போலவே, நிறைய ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டு போன காட்சியைப் பார்த்ததோடு, அதை காணொளியாகப் படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்! பார்க்காதவர்கள் வசதிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் சாலையைக் கடக்கும் காட்சியைப் பகிர்ந்து கொண்ட பதிவின் சுட்டி கீழே.


சமீபத்திய பயணத்தின் போது ஒரு ராஜஸ்தான் பகுதி ராஜாக்களின் கோட்டை ஒன்றிற்குச் சென்றிருந்த போது அங்கே சில கடைகள் பார்க்க முடிந்தது. எங்கே சென்றாலும் கடையைப் பார்த்தால் நின்று விடுவேன் – பொருட்கள் வாங்குவதற்கென தப்புக்கணக்கு போட வேண்டாம்! மற்றவர்கள் வாங்கிக் கொண்டிருக்க, நான் அங்கே இருக்கும் வித்தியாசமான பொருட்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்! அதற்காகத் தான் நிற்பது! சுற்றுலாத் தலங்களில் பொருட்களை வாங்குவது அரிதான ஒன்று – என்னைப் பொறுத்தவரையில்!  அப்படி ஒரு கடையில் நின்ற போது பார்த்த ஆபரணங்கள் கண்களைக் கவர, அவை எந்தப் பொருளில் செய்யப்பட்டது எனக் கேட்க, அவர் சொன்ன பதில் – ஒட்டகத்தில் எலும்புகள் கொண்டு செய்தது என!

யானைகளின் தந்தங்களைக் கொண்டு ஆபரணங்களும் வேறு சில அழகுப் பொருட்களும் செய்வதுண்டு. மிகவும் அதிக விலை கொடுத்து அப்பொருட்களை வாங்குபவர்களும் உண்டு! இங்கே செல்லும் வரை ஒட்டக எலும்பினைக் கொண்டும் ஆபரணங்கள் செய்ய முடியும் என்பதை அறிந்திலேன்! அப்போது பார்த்த சில ஆபரணங்கள், மற்ற பொருட்கள் ஆகியவற்றை பார்த்ததோடு, புகைப்படமாகவும் எடுத்துக் கொண்டேன்! ஒட்டக எலும்பில் செய்யப்பட்ட ஆபரணங்கள், பொருட்களின் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!

டவுட் தனபால் கேள்வி: காதில் அந்த தொங்கட்டான்களை மாட்டிக் கொண்டு, கண்ணாடியில் பார்த்து ரசிக்கும்போது காதில் ஒட்டகத்தின் குரல் கேட்குமோ?

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

28 comments:

 1. தந்தத்தால் செய்யப்பெற்ற பொருட்கள் போலவே உள்ளன ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. இப்படியும் இருக்குதா?.. எலும்பையும் விடுவதில்லையா?.. அடப்பாவமே!..

  .

  ReplyDelete
  Replies
  1. எப்படியெல்லாமோ இருக்குது! :) எதையும் விடுவதில்லை. அனைத்தையும் கலைக்கண்ணோடு தான் பார்க்க வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. எலும்பா? பயந்தேன், பின்னர் வியந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கொஞ்சம் கேள்விகளும் பயமும் இருந்தன! கடைக்காரரிடம் எலும்பு எடுப்பதற்காக ஒட்டகத்தினைச் சாகடிப்பது வழக்கமா? என்று கேட்க கொஞ்சம் முறைத்தார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. கீதா: எங்கே சென்றாலும் கடையைப் பார்த்தால் நின்று விடுவேன் – பொருட்கள் வாங்குவதற்கென தப்புக்கணக்கு போட வேண்டாம்! மற்றவர்கள் வாங்கிக் கொண்டிருக்க, நான் அங்கே இருக்கும் வித்தியாசமான பொருட்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்! அதற்காகத் தான் நிற்பது! சுற்றுலாத் தலங்களில் பொருட்களை வாங்குவது அரிதான ஒன்று – என்னைப் பொறுத்தவரையில்!//. மீ டூ..... பொருட்கள் வாங்குவது அரிது...

  என்ன ஜி ஒட்டகத்தின் எலும்பையும் விட்டு வைக்கவில்லை...ஹும் ..உங்கள் டவுட் தனபாலின் கேள்வி எனக்கும் எழுந்தது...நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. .இன்னும் என்னென்னவோ தோன்றுகிறது...வேண்டாம்..இங்கு..

  துளசி: படங்கள் அழகா இருக்கிறது...யானத்தைத் தந்தத்தில் செய்வது போலத்தான் டிசைன்கள் இருக்கிறது....ஆனால் கொல்லாமை இருந்தாலும்...ஏனோ மனது ஏற்க மறுக்கிறது

  ReplyDelete
  Replies
  1. இன்னும் என்னென்னவோ தோன்றுகிறது! :) மனதில் தோன்றும் அனைத்து விஷயங்களை எழுத முடிவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. ஒட்டக எலும்பிலா? மிகவும் கலைவண்ணத்தோடு செய்திருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். ஒட்டக எலும்பில் தான்! கலைவண்ணம் நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. ஒட்டக எலும்பால் செய்யப்பட்ட சீப்பைக்கொண்டு தலைவாரினால் உயரமாக வளரலாம் என்று சொல்லி விற்கவில்லையா!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹை... இது நல்ல ஐடியாவா இருக்கே! நான் கேட்ட கேள்வியால் இதைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. ஶ்ரீராம்... அப்போ மாலையைப் போட்டுக்கிட்டா அடிக்கடி தண்ணி குடிக்கவேண்டாமா?

   Delete
  3. ஹை... இது கூட நல்லா இருக்கே! மாலையைப் போட்டுக்கிட்டா முதுகில் தண்ணீர் பை வந்துவிடுமோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. ஒட்டக எலும்பில் இத்தனை ஆபரணங்களா? நல்லாருக்கு. இவையெல்லாம் கலைப்படைப்புகள். த ம

  ReplyDelete
  Replies
  1. கலைப் படைப்புகள்... உண்மை - எலும்பிலே கலைவண்ணம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. ஒட்டக எலும்பு நம்பமுடியவில்லை ஜி

  ReplyDelete
  Replies
  1. நம்ப முடியவில்லை! :) எல்லாவற்றிலும் எதையாவது செய்து விடுவது இப்போதைய வழக்கமாயிற்றே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. அருமை.. நியூயோர்க்கில்.. ஒட்டக எலும்பில் ஒரு அழகிய பலஸ் என நினைக்கிறேன்ன் செய்திருந்தார்கள் பார்த்தோம்.

  ReplyDelete
  Replies
  1. ஒட்டக எலும்பில் சிற்பங்களும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 10. ராஜஸ்தானிலேயே கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் இருந்தும் இது குறித்து இப்போத் தான் கேள்விப் படறேன். !!!!!!!!!!!!!!!!! ஒட்டக எலும்பினால் ஆகிய ஆபரணங்கள் அருமை! இவற்றைப் பல முறை பார்த்திருந்தாலும் ஒட்டக எலும்பு என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் கிடைக்கும் செய்தி!


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 11. அனைத்தும் அழகு. ஒட்டகக்தின் எலும்பிலிருந்து தயாரித்ததுபோல் தெரியவில்லை. தந்தத்தில் செய்ததுபோல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. கேட்டுத் தெரிந்து கொண்டது இப்பதிவில் சொன்ன விவரங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. ஒட்டகத்த கட்டிக்கோ பாட்டு கேட்கும் காதுல மாட்டிகிட்டா..!

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவினை எழுதும்போது அந்தப் பாடல் எனக்கும் நினைவிற்கு வந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 13. வெங்கட்,

  ஒட்டகத்தின் பேரன்பு என் எலும்புகளையும் சிலிர்க்கவைக்கின்றது-- "என்பும் உரியர் பிறர்க்கு".

  இறந்த ஒட்டகங்களின் எலும்புகளை அழகிய கைவினை பொருட்களாக மாற்றி இருக்கும் அந்த கைவினைஞருக்கு பாராட்டுக்கள். அவற்றை படமெடுத்து பதிவோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  துபாயில் ஒட்டகப்பால் குடித்த நினைவு வருகிறது.

  கோ

  ReplyDelete
  Replies
  1. ஒட்டகப் பால்! ராஜஸ்தானில் சிலர் ஒட்டகப் பால் என்று ஏமாற்றி காசு வாங்குவார்கள்! நேரடியாக ஒட்டகப் பால் கறந்து பார்த்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோ!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....