திங்கள், 29 நவம்பர், 2010

சதம் அடிச்சாச்சு! [100 வது பதிவு]



சென்ற வருடத்தில் பதிவர் திரு ராகவன் அவர்களுடன் ஜி-மெயில் அரட்டையின் போது அவரது வலைப்பூக்களை [ரேகா ராகவன், அன்பே சிவம்] அறிமுகப்படுத்தி என்னையும் எழுதச் சொல்லி வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லிக் கொடுத்தார். ஒரு சுப யோக சுப தினத்தில் வலைப்பூவினை ஆரம்பித்து, ”எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாரு” என்பதாய், எனது முதல் பதிவாக, செப்டம்பர் 30, 2009 அன்று, ஒரே ஒரு பத்தியில் குரங்கு வீழ்ச்சியில் எங்களது கல்லூரி சுற்றுலாவின் போது நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன்.

ஒரு வருடம், இரண்டு மாதம் கழித்து இன்று எனது வலைப்பூவில் 100-வது பதிவு [சதம் அடிச்சாச்சு!]. வடிவேலு ஏதோ ஒரு படத்தில் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏறிக்கொண்டு, “எல்லோரும் பார்த்துக்குங்க, நானும் ரௌடி தான்!” என்று அலறுவது போல, நானும் “ஒரு வலைப்பதிவாளன் தான்!” என்று அலப்பறை விட்டுக் கொண்டிருக்கிறேன்.

“வலைப்பூ எனக்கு என்ன தந்தது?” என்று பல முறை என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். ”பணமா, பதவியா?” ஒன்றுமே இல்லை. எனினும் எனக்கு இந்த வலைப்பூ அள்ளி அளித்தது ஏராளமான நட்பு எனும் பூக்களை. எத்தனை எத்தனை முகம் தெரியா நட்புகள் எனக்கு வாய்த்திருக்கின்றன இந்த கால கட்டத்தில்.

பதிவுலகோடு நின்றுவிடாமல், பத்திரிக்கைகளிலும் சிறுகதை, நாவல், கவிதை என்று அசத்திக்கொண்டிருக்கும், திரு ரவி பிரகாஷ், திரு கே.பி, ஜனார்த்தனன், திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி போன்ற பெரியவர்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது இந்த வலைப்பூ உலகின் மூலமே. தவிர, என்னுடைய பதிவுகளைப் படித்து, இது வரை 1000-த்திற்கு மேலான பின்னூட்டங்கள் மூலமாக கருத்துக்களை அளித்து ஊக்கமூட்டிய, ஊக்கமளித்துக் கொண்டு இருக்கும் பல நண்பர்கள், எனது வலைப்பூவினை தொடரும் 67 நண்பர்கள் என வளர்ந்திருக்கிறேன். அத்தனை நண்பர்களின் வலைப்பூ முகவரியையும் இங்கே குறிப்பிட ஆசைதான் எனினும் பதிவு நீள…..மாக ஆகிவிடும் என்பதினால் பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தில்லியிலும் எனக்கு பல நண்பர்களை பெற முடிந்தது. ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் சுசீலாம்மா, சந்திரமோகன், மோகன்குமார் கருணாகரன், முத்துலெட்சுமி, விக்னேஷ்வரி, லாவண்யா, விட்டலன், கலாநேசன், ஜீஜீ என அடுக்கிகொண்டு போகலாம். இவர்களில், சிலரைத் தவிர மற்றவர்களை தில்லியில் நடந்த பதிவர் சந்திப்புகளில் சந்தித்து அளவளாவி இருக்கிறேன். எல்லோருக்கும் எனது நன்றிகள்.

வலைப்பூ எழுதுவதன் மூலம் கிடைத்த இன்னுமொரு நன்மையையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னுடன் பணிபுரிந்து மாற்றல் வாங்கிக் கொண்டு போனார் ஒரு நண்பர். நீண்ட நாட்களாக அவரிடம் தொடர்பு இல்லாமலேயே இருந்தது. சென்ற மாதம் திடீரென்று அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். தான் வலையில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது என்னுடைய வலைப்பூவைப் பார்த்து அதன் மூலம் என் முகவரி கிடைத்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

இன்னுமொரு விஷயம் நான் எழுதுவதைப் பார்த்து இப்போது என் மனைவியும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து விட்டார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அவருடைய இடுகைகள் வெளிவந்துவிட்டது.

மேன்மேலும் எழுதவும் ஆசை இருப்பதால்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன், உங்களின் தொடர்ந்த ஆதரவும் வரவேற்பும் இருக்கும் என்கிற தெம்பில்.

நூறாவது படிக்கட்டில் காலெடுத்து வைக்கும் இந்த நாளில், நல்லதொரு கருத்துப் பரிமாற்றத்திற்கு உறுதுணையாய் இருக்கின்ற இந்த வலைப்பூவிற்கும், வலையுலக நட்புகள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.

தொடர்ந்து சந்திப்போம்.

41 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்க. தம்பதியாக வலையுலகை கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
  3. The link to your wife's blog given in this article is not working. Please check.

    பதிலளிநீக்கு
  4. சதமடித்தது பெரிய விஷயமல்ல; மணி மணியாக நூறு இடுகை எழுதியிருக்கிறீர்களே அது தான் பெரிய விஷயம். உங்களை வலையுலகிற்கு அழைத்து வந்த ரேகாராகவனுக்குப் பாராட்டுக்கள். நீங்கள் இன்னும் பற்பல அருமையான இடுகைகளை எழுதி எங்களை மகிழ்விக்க எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.

    அத்துடன், உங்கள் இல்லத்தரசியாரின் வலைப்பூ பூத்துக் குலுங்க எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. @@ மோகன்குமார்: வாழ்த்தியமைக்கு நன்றி. இப்போது லின்க் சரி செய்து விட்டேன்..

    @@ LK: நன்றி கார்த்திக். உங்கள் போன்றோரது தொடர் ஊக்குவிப்பும் இந்த 100க்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
  6. 100க்கு வாழ்த்துகள் நண்பரே....அட்டகாசமாக மேலும் மேலும் கலக்கவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். இன்னும் அசத்துங்க. ;-)

    பதிலளிநீக்கு
  8. @@ சேட்டைக்காரன்: உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.

    @@ தேவா: நன்றி நண்பரே...

    @@ RVS: மிக்க நன்றி நண்பரே..

    @@ உயிரோடை: மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  9. அன்புச் சகோதரனின் சதம் கண்ட பதிவுக்கு உற்சாகமான வாழ்த்துகள். துணைவியாருக்கும் எனது அன்பு.

    பதிலளிநீக்கு
  10. @@ நிலாமகள்: தங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வெங்கட்,
    100ஆவது பதிவுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
    உண்மையிலேயே இப் பதிவில் நீங்கள் சொன்னவற்றை நானும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.நட்பு என்ற உன்னதமான விஷயத்தைப் பெற்றுத் தரும் வலை ஒரு வரம்தான்.
    இன்னும் பல நூறு பதிவு கண்டு புகழுடன் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் மகிழ்ச்சியாயுள்ளது வெங்கட். வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  13. @@ எம்.ஏ. சுசீலா: மிக்க நன்றிம்மா. உங்களைப்போன்றோர் வாழ்த்து என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    @@ விக்னேஷ்வரி: தொடர்ந்த ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. மேலும் வளர்ந்து பல நூறு சதங்களை காண வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. முதல் சதமடித்த தங்களுக்கும் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் இன்னும் பல சிறப்பானப் பதிவுகளுடன் .

    பதிலளிநீக்கு
  17. @@ DrPKandaswamyPhD: மிக்க நன்றி அய்யா.

    @@ ரேகா ராகவன்: உங்களது வழிகாட்டுதல்தான் இந்த 100-க்குக் காரணம். தொடர்ந்த ஆதரவுக்கும் மிகவும் நன்றி.

    @@ அசியா ஓமர்: மிகவும் நன்றி சகோ.

    @@ பனித்துளி சங்கர்: மிக்க நன்றி நண்பரே…

    பதிலளிநீக்கு
  18. நூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

    மேன்மேலும் பதிவு வளரட்டும்.

    ஆதியை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றீ.

    பதிலளிநீக்கு
  19. மிக்க மகிழ்ச்சி .........உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. @@ முத்துலெட்சுமி: நன்றி சகோ. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    @@ நிலாமதி: நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  21. @@ அமைதி அப்பா: தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றி

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  23. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. @@ கலாநேசன்: நன்றி நண்பரே..

    @@ விக்கி உலகம்: வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. மனமார்ந்த வாழ்த்துக்கள்,வெங்கட்!
    நிறைய எழுதுங்கள்..
    நீங்கள் நிறையவும்.. நிறைவாகவும்
    எழுத வேண்டும்...
    படித்து, விமர்சனம் எழுத நாங்கள்
    இருக்கிறோம்!


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  27. @@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள் வெங்கட்ண்ணா... :) இன்னும் நிறைய தூரம் பயணிக்கவும், இந்த வலை தங்களுக்கும், வலையுலகை பார்வையிடும் எல்லோருக்கும் பயனாய் இருக்க வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  29. @@ அன்னு: நன்றி சகோ. தொடர்ந்த ஆதரவுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வெங்கட்......

    முதல் சதமடித்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    சச்சின் டெண்டுல்கர் போல், தொடர்ச்சியாக பலப்பல சதங்கள் அடித்து நிலைத்து நீண்ட வருடங்கள் விளையாட வாழ்த்துகிறேன்....

    என் வலைப்பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து, பின்னூட்டம் இட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  31. 100 க்கு 100 மனப் பூர்வமான பாராட்டுகள்.. தொடரட்டும் தங்கள் சாதனைப் பயணம்.. சரளமாக.. சுவாரசியமாக.. மொழியை அழகாகக் கையாளும் தங்கள் பதிவுகளின் ரசிகனாய் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. @@ R. கோபி: மிக்க நன்றி.

    @@ ரிஷபன்: தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும், நீங்கள் இடும் பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. @@ அப்பாதுரை: உங்கள் முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. இது பெரிய விஷயம் ...சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் ...இனி பற்பல சதங்களுக்கும் வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  35. @@ பத்மநாபன்: உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  36. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! காலதாமதமாய் வாழ்த்துகிறேன்.
    நான் ஊரில் இல்லை அதனால் தான்.

    மேலும் மேலும் பதிவுகள் எழுதி சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  37. @@ கோமதி அரசு: உங்கள் வாழ்த்துகளுக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....