வெள்ளி, 12 நவம்பர், 2010

குரங்கு மிட்டாயும், ஆஞ்சனேயரும்

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4)

பெஜவாடா – விஜயவாடா பயணம் _ பகுதி 1 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3 படிக்க இங்கே

இப்பயணத் தொடரின் நான்காம் பகுதியான இப்பதிவில் நாம் காணப் போவது ஆஞ்சனேயர் கோவில் மற்றும் வேங்கடாசலபதி கோவில்.தென்னூர் – நெடுபுரோலு ஆஞ்சனேயர் கோவில்: குண்டூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் தெனாலியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் ஒரு சிறிய ஊர் தென்னூர். அருகிலிருக்கும் ரயில் நிலையம் நெடுபுரோலு. இந்த ஊரில் கருப்பு நிறக் கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு சேவை சாதித்துக்கொண்டு இருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களைப் போலவே இந்த கோவிலும் பகல் நேரத்தில் 1 மணி முதல் 4 மணி வரை நடை சார்த்தி வைத்துள்ளார்கள். பிரம்மாண்டமான ஆஞ்சனேயர் சிலை – தமிழ் நாட்டின் நாமக்கல் ஆஞ்சனேயர் அளவு உயரமாக இல்லை – இங்கும் விக்ரத்திற்கு மாலை சார்த்துவதிற்கும், அபிஷேகம் போன்றவைகளை படிகள் மூலம் மேலே ஏறிச் சென்று மேடையில் நின்று தான் செய்ய வேண்டி இருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த கோவில் தெனாலி-குண்டூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.வைகுண்டபுரம் வேங்கடாசலபதி கோவில்: திருப்பதியில் இருப்பது போல இங்கும், பெருமாள் பத்மாவதி தாயார் உடன் காட்சி அளிக்கிறார். மற்றும் லக்ஷ்மி தேவியின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. ஒரு பெரிய புற்றின் மேலே நாகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. புற்று மண்ணை காது மடல்களில் பூசிக் கொண்டால் காதில் எந்த பிரச்சனையும் வராது என இங்குள்ள மக்கள் சொல்கின்றனர். பித்தளையில் செய்யப்பட்ட அன்னப்பட்சி, யானை, கருடன், குதிரை, ஆஞ்சனேயர் போன்ற அழகிய வாகனங்களையும் கோவில் பிரகாரத்தில் காண முடிகிறது. கோவிலின் வெளியேயும், ஆஞ்சனேயர் மற்றும் கருடாழ்வாரின் பெரிய சிலைகளை அமைத்துள்ளார்கள்.


மடித்த மஞ்சம்: இப்ப இருக்கிற Camp Cot-க்கு தாத்தா தான் மடித்த மஞ்சம். ஆந்திர மாநிலத்தில் இந்த மடித்த மஞ்சம் பெரும்பாலானோர் வீட்டில் இருக்கிறது. கட்டிலில் கால்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டு அதன் நடுவில் கெட்டியான துணியால் இணைக்கப்பட்ட இந்த படுக்கையை தேவையான போது விரித்து போட்டுக் கொண்டு தேவையில்லையெனில் மடித்து சுவற்றில் சாய்த்து வைத்து விடலாம். ஆனால் நான் பார்த்த எல்லா மடித்த மஞ்சமும் 5 முதல் ஐந்தரை அடி நீளம் தான் இருந்தது. உயரமான மனிதர்களுக்கு இந்த படுக்கையில் படுப்பது கொஞ்சம் சிரமம்தான். எனினும் இன்றைய புறாக்கூண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறையை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

பந்தர் மிட்டாய்: ஹிந்தியில் “பந்தர்” [Bandhar] என்றால் குரங்கு. பந்தர் மிட்டாய் என்றவுடனே ஏதோ குரங்கு மிட்டாய் போல இருக்கு என நினைத்தால் – அப்படி இல்லை என நம்மைப் பார்த்து இளிக்கிறது இந்த பந்தர். லட்டுக்கு பூந்தி செய்வது போல பூந்தி செய்து அதனை முக்கால் பங்கு வெல்லம் மற்றும் கால் பங்கு சக்கரை சேர்த்து பாகு செய்து அதில் பூந்தியைப் போட்டு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டால் கிடைக்கும் ஒரு வித இனிப்பே ”பந்தர் மிட்டாய்”. லட்டு போல மிருதுவாக இல்லாமல் கரகரவென இருக்கிற பந்தர் மிட்டாய். இதோ உங்களுக்காகவே.சாப்பிட்டு முடித்து தயாராய் இருங்கள், உங்களை விஜயவாடாவின் முக்கியமான கோவிலான கனகதுர்கா ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன். “துர்காம்மா” என ஆந்திர மக்களால் அழைக்கப்படும் கனக துர்கா கோவில் வாசலில் சந்திப்போமா?...

22 கருத்துகள்:

 1. முற்றிலும் புதியத் தகவல்கள். கனகதுர்கையை வழிபட காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. எல்லாப்பயணங்களுமே மகிழ்ச்சிக்குரியவைதான்.அந்த மகிழ்ச்சியோடு நல்ல பல தகவல்களும் கிடைக்கின்றன உங்கள் பதிவில்.பயணம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 3. //எனினும் இன்றைய புறாக்கூண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறையை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.//
  TRUE!

  பதிலளிநீக்கு
 4. படங்களும் கோவில்களைப் பற்றிய தகவல்களும் அருமை.

  ரேகா ராகவன்

  பதிலளிநீக்கு
 5. 36 அடி ஆஞ்சநேயர்...
  புத்து மண்ணை காதில் பூசிக்கொள்வது..
  பூந்தி சூப்பர்..
  எல்லாம் முடித்து..
  கனக துர்கா கோயிலில் செருப்பு விடும் இடத்தில் நிற்கிறேன்.. சீக்கிரம் வாருங்கள்.. உள்ளே சென்று தரிசிப்போம்.. ;-)

  பதிலளிநீக்கு
 6. நிறைய புதுவிஷயங்கள் சொல்லியிருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 7. தின்பதற்கும் கொடுத்து, நல்லா ஊரையும் சுத்திக் காட்டறீங்க.. புதுப் புது தகவல்கள்..

  பதிலளிநீக்கு
 8. பூந்தி சாப்டாச்சு. அடுத்த கோவிலில் சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 9. நன்றி நண்பரே இது வரை கேள்விப்பாடாத பலத்த தகவல்கள் . இது வரை சென்றதே இல்லை . விரைவில் செல்லும் ஆர்வத்தை ஏற்ப்படுத்தியது தங்களின் பதிவு . புகைப்படங்களும் அசத்தல்

  பதிலளிநீக்கு
 10. எனது இந்த பதிவில் கருத்துரையிட்ட நல்லுள்ளங்களான LK, சுசீலாம்மா, KBJ, ரேகா ராகவன், RVS, கிறுக்கன், அமைதிச்சாரல், ரிஷபன், கலாநேசன், பனித்துளி சங்கர், நிலாமதி ஆகிய அனைவருக்கும் நன்றி.

  இண்ட்லி தளத்தில் இதுவரை 23 வாக்களித்து இந்த பதிவினை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள தகவல்கள்...விஜயவாடா சென்றால் வெங்கட் நினைவு நிச்சயம் வரும்!!


  அன்புடன்,
  “ஆரண்ய நிவாஸ்”
  http://keerthananjali.blogspot.com/

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமமூர்த்தி சார்.

  பதிலளிநீக்கு
 13. ஆஞ்சநேயரின் பிரம்மாண்டம் அபாரம். புற்று மண்ணை காதில் பூசிக்கொள்ளும் புதுப் பழக்கம் ஆச்சர்யம். மடித்த மஞ்சம்... அட... நம்ம பக்கத்து நாடாக் கட்டிலுக்கு என்ன ஒரு அழகிய பெயர்! பூந்தி பற்றி ...இனிப்பு பிரியர்களின் ஏக்கத்தை தூண்டும்படி பதிவுதோறும் ஒன்று ...

  பதிலளிநீக்கு
 14. @@ நிலாமகள்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 15. அருமையான பயணக்கட்டுரை.

  நல்ல தகவல் சேகரிப்பு.

  பூந்தி செய்யும் முறை (பந்தர் மிட்டாய்)
  தெரிந்து கொண்டோம்.
  கனக துர்கா கோவில் தரிசிக்க ஆவல்.

  பதிலளிநீக்கு
 16. @@ உயிரோடை: நன்றி, லாவண்யா.

  @@ கோமதி அரசு: நன்றிம்மா. சீக்கிரமாவே கனக துர்கா கோவில் பற்றிய பதிவில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 17. 36 அடி ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைத்தது.... மிக்க நன்றி...

  பூந்தி படு சூப்பரா இருந்தது... இன்னும் கொஞ்சம் வேணும்னா கிடைக்குமா?

  கனக துர்கா கோயிலில் துர்காம்மா தரிசனத்திற்காக வெயிட்டிங்....

  பதிலளிநீக்கு
 18. @@ R. Gopi: நன்றி சார். பூந்தி தானே, தந்துட்டா போச்சு. சீக்கிரமே கனகதுர்கா பற்றிய பதிவு வரும்..

  பதிலளிநீக்கு
 19. கரகர ந்னு ப்ந்தர் மிட்டாய் ந்ல்லா இருக்கும் போலயே....

  நல்ல சுற்றுலா..

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....