வெள்ளி, 26 நவம்பர், 2010

“ப்ளேட் இன் தி ஓபன்” – மழலை மொழி



முன்பு ஒரு பதிவில் மழலை மொழி என்று எனது மகளின் சில மழலை மொழிகள் பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவில் மேலும் சில – அவளின் பாஷையிலேயே...

மூன்றரை வயதில் என் மகளை ஒரு மழலைகளுக்கான பள்ளியில் சேர்த்து இருந்தோம். அங்கே குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பாடல்களை சொல்லித் தருவார்கள். அதை அவளது பாஷையில் எங்களிடம் சொல்லுவாள்.

ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து வந்த போது, அவளது பள்ளியில் அன்று சொல்லிக்கொடுத்ததாக கீழ்க்கண்ட பாடலை அவளின் மொழியில் சொன்னாள் –

கேக் யுவ பா கெய்லி,
ஏரி க்ளோத்ஸ்,
ஈ கூ ஃபூட்,
ப்ளேட் இன் தி ஓபன்,
பெட்ஸ்பிரட் யுவர் எல்டர்ஸ்”

அழகாய் கையைக் காலை ஆட்டி, தலையை சாய்த்து சொல்லி முடித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு மூன்று தடவை கேட்ட பிறகு தான் புரிந்தது – அன்று சொல்லிக் கொடுத்த பாடல் –

“Take Your Bath Daily
Wear Clean Clothes
Eat Good Food
Play in the Open
Respect your elders”

அவளது பள்ளியில் ஆங்கில நர்சரி பாடல்களைத் தவிர ஹிந்தி மொழியிலும் நிறைய பாடல்களை சொல்லித் தருவார்கள். ஒவ்வொன்றையும் அவள் மழலை கொஞ்சும் ஹிந்தியில் சொல்லுவதைக் கேட்டு அவளது பள்ளி ஆசிரியையே ஒவ்வொரு சந்திப்பின் போதும் எங்களிடம் சிலாகித்து சொல்லுவார்.

அவள் சொல்லும் மற்றுமொரு ஆங்கில நர்சரி பாடலின் சில வரிகள் –

“மம்மா கால் டாக்டர்,
டாக்டர் சேஸ், நோ நோ மோன்கி,
நம்பிக்கோத்தா பேர்” –

அந்த பாடலின் சரியான வரிகள் –

“Mumma Called the Doctor,
The Doctor Said, “No More Monkey”
Jumping on the Bed”

இப்போதும் கூட வீட்டில் சில சமயங்களில் நானும் எனது மனைவியும் “நம்பிக்கோத்தா பேர்” என்று அவளிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருப்போம்.

ஒரு சில பாடல்களை மட்டும் அவளின் மொழியிலேயே சொல்லச் செய்து பதிவு செய்து வைத்திருக்கிறோம். வீட்டில் அதை எப்போது கேட்டாலும் ஒரே சிரிப்புதான். ஒரு முறை என் மகளுக்கு பாரத மாதா வேடமிட்டு, இரண்டு வரியில் பாரத மாதாவைப் போல பேச வீட்டில் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் பள்ளிக்குச் சென்று சொல்லிக் கொடுத்ததை விட்டு “அம்மா, அம்மா” என்று சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

25 கருத்துகள்:

  1. பெட்ஸ்பிரட் யுவர் எல்டர்ஸ் //
    ஹாஹாஹா... மழலை மொழி அழகு.

    பதிலளிநீக்கு
  2. //நம்பிக்கோத்தா பேர்” –//

    hahaha soopaar

    பதிலளிநீக்கு
  3. ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் சார்! :-)

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசம். குழலினிது... யாழினிது...... ;-)

    பதிலளிநீக்கு
  5. இப்பொழுதும் கூட எனது மகனின் மழலை முகமும் அந்த செயல்களும் எங்களுக்கு மறக்கவில்லை. கூடிய வரை பதிவு செய்து வையுங்கள்.
    நிச்சயம் பிற்காலத்தில் சுவாரஸ்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ரெக்கார்டையும் போடுங்களேன் நாங்களும் ரசிக்கிறோம்..
    மழலை மொழி அழகு. :)

    பதிலளிநீக்கு
  7. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்

    பதிலளிநீக்கு
  8. வெங்கட் அவர்களே,
    பிளேட்டில் ப்ரெட்டும் கேக்கும் ஒருசேர உண்டால் போல ஒரு கிறக்கம் வருகிறதைய்யா, படிக்கும்போதே. ஆண்டாண்டு காலம் சென்றாலும் அள்ள அள்ள குறையாத இன்பத்தை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்குமைய்யா தம் மக்கள் மழலை மொழி. இதில் மாறுபட்ட கருத்துக்குஇடமேயில்லை.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  9. சொல்லிச் சொல்லிப் பார்த்தால் நாமே மழலையாகி விட்டது போலொரு பூரிப்பு !! நம்பிக்கோத்த பேர் -ஹை லைட் !! பெரியவளாகி இவற்றைப் பார்க்கும் போது அவள் முகத்தில் நிறையும் வெட்கப் புன்னகையை கற்பனையில் கண்டு மகிழ்கிறேன். அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  10. மழலைமொழி இனிமை.

    எங்க வீட்லயும் இதே கதைதான்.

    "மச்லி ஜல்கா ராணி ஹை"

    "கம் பேட்டா சீதா கம் டு மீ

    இ வில் டீச் யு A , B , C .....etc

    பதிலளிநீக்கு
  11. ரசித்து படித்தேன்.. பெரும்பாலும் இந்த அனுபவம் இருக்கும் .. ஆனால் அதை இந்த மாதிரி ரசமாய் சொல்ல முடியாது.. என்ன அழகு..

    பதிலளிநீக்கு
  12. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும், இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //ஆனால் பள்ளிக்குச் சென்று சொல்லிக் கொடுத்ததை விட்டு “அம்மா, அம்மா” என்று சொல்லிவிட்டு வந்து விட்டாள். //

    ஆஹா... பெரிய அரசியல்வாதியா வருவாங்க போல இருக்கே. இவங்க பேச ஆரம்பிக்கறப்ப நமக்குதான் நம்ம பாஷை மறந்து போகும். அதிலும் அவங்க வார்த்தைகளை form பண்ண்ற விதமே அழகோ அழகு. நல்ல பதிவு அண்ணா, ‘மாஷா அல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (கண்ணேறு ஏற்படுவதை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.. :)

    பதிலளிநீக்கு
  14. குழல் இனிது யாழ் இனிது மழலை சொல் கேளாதவர். நானும் என் பாலர் பாடசாலையில் உணர்ந்திருக்கிறேன்.
    எந்த கல்லூரியிலும் பயிலாத பாடங்கள் அங்கு பயிலலாம்.

    உங்கள் உதவிக்காக சில

    five little moneys
    jumping on the bed
    one fell down and
    bump his head
    mummaa called the doctor
    Dr said no more monkeys
    jumping in the bed
    then

    four little.......

    பதிலளிநீக்கு
  15. மழலை மொழி திகட்டாத மொழி.

    நிறைய தாருங்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  16. @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. மழலை மொழி திகட்டாத தேன்மொழிதான்.

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வெங்கட்
    ஹைய்ய்ய்ய்ய்ய்யோ. என்ன அழகுக் குட்டி!! என்ன மழலை.!!!
    பெட்ஸ்ப்ரெட் சூப்பர் ஹஹஹஹஹ்ஹா.
    எங்கள் பேரனும் இந்தப் பேத்தியும் ஒரே வயதோ.
    இருக்கலாம்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. வெகு அழகும் இனிமையும். எப்போதும் நினைவில் தங்கும். ஆனால் நாம் தான் சொல்லிக் கொண்டிருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் நினைவில் தங்கும் - உண்மை தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....