புதன், 24 நவம்பர், 2010

தலைநகர் தில்லியில் தமிழ் கருத்தரங்கம் – தமிழ் 2010

கடந்த 64 ஆண்டுகளாக, தலைநகர் தில்லியில் இயங்கி வரும் தில்லி தமிழ் சங்கம் வரும் டிசம்பர் மாதம் 10-12 தேதிகளில் “தமிழ் 2010” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்திட ஏற்பாடு செய்துள்ளனர்.

டிசம்பர் 10, 2010 வெள்ளிக்கிழமை அன்று தொடக்கவிழாவும், 11-12, தேதிகளில் தில்லி தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் ஏனைய நிகழ்ச்சிகளும் நடைபெறும். அவ்வமயம் 50 ஆண்டுகாலப் புனைவிலக்கியம், கவிதை இலக்கியம், கணினித் தமிழ், பிறமொழிகளில் தமிழ், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், நாடக-ஊடகத்தமிழ் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இருக்கும்.

கவிஞர் சிற்பி, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் ப்ரேம், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், வெளி ரங்கராஜன், கவிஞர் இமையம், அம்பை, லிங்க்ஸ்மைல் வித்யா, காந்தளகம் சச்சிதானந்தன், அமரந்தா, தியடோர் பாஸ்கரன், ரவிசுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி, பேராசிரியர் சந்திரபோஸ் ... மற்றும் பலர் கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள். நிறைவு விழா சிறப்புரையை டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் sangamtamil2010@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation -என்று குறிப்பிடுவதுடன் அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அவசியம் தர வேண்டும்.

விழா அழைப்பிதழ் கீழே.








10 கருத்துகள்:

  1. கருத்தரங்கம் பற்றிய தொடர் பதிவுக்கு காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. @@ KANA VARO: முதல் வருகைக்கு நன்றி.

    @@ நிலாமகள்: நன்றி சகோ. கருத்தரங்கம் முடிந்த பிறகு அதைப் பற்றி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ’தில்லி’ பெயர்ச்சொல் ஆச்சே? அதுல எதுக்கு கடைசியில் ‘த்’ சேர்ந்திருக்கு? திருத்த முடியுமென்றால் இப்பொழுதே திருத்தி விடுங்கள்ண்ணா ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  4. @@ அன்னு: நன்றி. சங்கத்தில் சொல்லி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. விழா சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. @@ ரிஷபன்: நன்றி சார். கருத்தரங்கம் முடிந்த பிறகு அதைப் பற்றி எழுதுகிறேன்.

    @@ அமைதி அப்பா: நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. நிகழ்வுகளைப்பற்றி விரிவாக பதிவுகள் போடுவீர்களென்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. @@ DrPKandaswamyPhD: நன்றி ஐயா. பதிவு எழுத எண்ணம் இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....