வியாழன், 18 நவம்பர், 2010

உண்டவல்லி குகைகள்

[பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 6]

பெஜவாடா – விஜயவாடா பயணம்
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5

சென்ற பகுதியில் சொன்ன மாதிரி எல்லோரும் கைக்குட்டையை தயாரா எடுத்து வச்சுக்கிட்டீங்களா? நாம அடுத்து பார்க்க போற இடத்துக்கு நிச்சயமா தேவைப்படும். ஏன்னா நான் கைக்குட்டை இல்லாம போயிட்டு ஒரே திண்டாட்டமா போச்சு!

உண்டவல்லி குகைகள்: கனகதுர்கா கோவிலில் துர்காம்மாவினை தரிசித்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி, கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் வழியே ஆறு கிலோ மீட்டர் சென்றால் அங்கே உள்ள ஒரு சிறிய கிராமம் உண்டவல்லி. கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் மலையை குடைந்து நான்கு நிலைகள் கொண்ட குகைக் கோவில்களை அமைத்துள்ளனர். நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குகைக் கோவில்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு நிலையிலும் பல அழகிய சிலைகள் உள்ளன. விநாயகர், ஆஞ்சனேயர், பிரம்மா, நரசிம்மர், தேவி, போன்ற மூர்த்திகளும், சயனித்திருக்கும் மிகப்பெரிய விஷ்ணுவின் சிலை என்று பல உருவங்கள் இங்கே உள்ளன. சுமார் 5 மீட்டர் நீளத்தில் இருக்கும் விஷ்ணுவின் சிலை ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் சிலைக்கு பக்கச்சுவர், மற்றும் காலடியில் பல சிலா ரூபங்களையும் காண முடிகிறது.குகையில் நான் எடுத்த சில படங்களையும், குகை மேலிருந்து எடுத்த சில படங்களையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

நான்காம் நிலைக்குச் செல்லும் வழியினையும் வேறு சில குகைகளுக்குச் செல்லும் வழிகளையும் அடைத்து வைத்துள்ளனர். அங்கு செல்ல அனுமதியில்லை. முற்காலத்தில் இந்த குகைகளின் வழியே பானக நரசிம்மர் கோவில் இருக்கும் மங்களகிரிக்கு செல்ல வழி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினால் பராமரிக்கப்படும் இந்த கோவில் “பராமரிப்பு”என்றால் என்ன என்றும் கேட்கும் நிலையில் உள்ளது. உள்ளே நுழையும் போதே வௌவால் எச்சத்தின் “மணம்” ஆளைத்தூக்குகிறது. உள்ளே செல்ல கட்டணம் [10 ரூபாய்] வாங்க இருக்கும் ஒரே ஒரு பணியாளர் கூட குகையில் இருந்து தொலைவில் வெட்ட வெளியில் உட்கார்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஊரை விட்டு சற்றே தள்ளி இருப்பதாலோ என்னவோ நிறைய காதலர்களைக் காண முடிந்தது – கோவிலின் வெளியே இருந்த புல்தரையில். எல்லா சுற்றுலாத் தலங்களைப் போலவே இந்த குகைகளிலும் “ஐ லவ் யூ” வை செதுக்கி வைத்தும், எழுதி வைத்தும் சென்றிருக்கின்றனர் நவீன கால ரோமியோக்கள் பலர்.பராமரிப்பு மட்டும் ஒழுங்காய் இருந்தால், சுமார் 16 நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த இந்த குடைவரைக் கோவிலை நிம்மதியாய் தரிசிக்கலாம்.

கோவில், கோவிலாத் தான் போனீங்களா, வேற எங்கேயாவது அழைத்துச் செல்லுங்களேன் என்று சில குரல்கள் கேட்பதனால் அடுத்து நான் உங்களை ஒரு அழகிய தீவிற்கு அழைத்துச் செல்கிறேன். விசைப்படகு கிளம்புவதற்குள் ஏறி உட்கார்ந்துடுங்க. சரியா?…

17 கருத்துகள்:

 1. நம்ம ஊர்ல மட்டும்தான் இந்த நவீன ரோமியோ இருக்காங்கன்னு நினச்சேன் . அங்கயுமா ??

  பதிலளிநீக்கு
 2. பராமரிப்புக்கும் தொல்பொருள் துறைக்கும்தான் ஏழாம்பொருத்தமாச்சே..

  மற்ற படங்களும் நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 3. @@ LK: நன்றி கார்த்திக். இவங்க எல்லா ஊரிலும் இருக்காங்க போல :)

  @@ அமைதிச்சாரல்: வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு.
  தீவைச் சுற்றிப் பார்க்க
  நாங்க ரெடி.

  பதிலளிநீக்கு
 5. இந்தியா முழுக்க அந்த கலாச்சாரம் பின்பற்றப்படுது காதலர்கள்ன்னா புரதான இடத்துல போய் பேரை செதுக்கனும் :)

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. @@ அமைதி அப்பா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  @@ முத்துலெட்சுமி: :)))

  @@ K.B. ஜனா: வருகைக்கு நன்றி சார். சீக்கிரமே தீவில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. படமும் வர்ணனையும் நேரே பார்த்த எபக்ட் தருகின்றன.. பராமரிப்பில்லா நிலை எப்போதும் பொருமல் தருவது தான்..

  பதிலளிநீக்கு
 9. //அடுத்து நான் உங்களை ஒரு அழகிய தீவிற்கு அழைத்துச் செல்கிறேன். // ok ready to visit.

  பதிலளிநீக்கு
 10. விஜயவாடாவைப் பார்க்க வில்லையே என்கிற என் குறை தீர்ந்தது!

  பதிலளிநீக்கு
 11. //இந்த குகைகளிலும் “ஐ லவ் யூ” வை செதுக்கி வைத்தும், எழுதி வைத்தும் சென்றிருக்கின்றனர் நவீன கால ரோமியோக்கள் பலர்.//

  கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது இங்கே சாலப் பொருந்தும். இதே நிலைதான் தஞ்சை கோவில் முதல் எல்லா இடங்களிலும் அழகிய இடங்களை கொச்சைப்படுத்துகிறது. நின்று நிதானமாய் ரசிக்க வைக்க முடியாமல் போகிறது. ப்ச்..

  பதிலளிநீக்கு
 12. ஆஜர். படித்துக்கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. @@ ரிஷபன்: பராமரிப்பு ஒழுங்காய் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் இல்லையே : ((((( வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  @@ KBJ: மீண்டும் நன்றி!

  @@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: உங்கள் குறை தீர்ந்ததா? மகிழ்ச்சி.

  @@ அன்னு: உண்மைதான் சகோ. பல இடங்களில் இன்னும் மோசமாக எழுதி வைத்திருப்பது சங்கடத்தையே அளிக்கிறது.

  @@ Dr. KandaswamyPhD: ஆஜராகி, படித்துக் கொண்டு இருப்பது தெரிந்து மகிழ்ந்தேன்.

  @@ இண்ட்லி தளத்தில் வாக்களித்த எல்லா நல்லுங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. பயணக் கட்டுரை நல்லா இருக்கிறது.
  படங்கள் பார்த்தேன் நல்லா இருக்கு.

  புராதன சின்னங்கள் ,இடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

  இதோ வந்து விட்டேன் என்னயும் ஏற்றிக் கொள்ளுங்கள் விசை படகில்.

  பதிலளிநீக்கு
 15. @@ கோமதி அரசு: நன்றிம்மா. சீக்கிரமா கிளம்பிடலாம் பவானிபுரம் தீவிற்கு. : )))

  பதிலளிநீக்கு
 16. கைக்குட்டை அவசியமற்று கண்டு ரசிக்க முடிந்தது குகை சிற்பங்களை... தங்கள் திறன்மிகு புகைப்படங்களால்...! நன்றி சகோதரரே.

  பதிலளிநீக்கு
 17. @@ நிலாமகள்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....