திங்கள், 4 ஜூன், 2012

தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்!



வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு வலைப்பதிவர் வந்தாலே அமளிதுமளிப்படும். அதிலும் மூன்று பதிவர்கள் என்றால் அதகளம் ஆகிவிடுமே! மேலே இருக்க மாதிரி பேனர் யாராவது வச்சிட்டா? எனவே முன்னரே அறிவித்தால் சென்னை மாநகரமே பரபரப்பாகி பொது மக்களுக்கு தொந்தரவு ஆகிவிடும் என்பதால் சில நட்பு வட்டாரத்திற்கு மட்டும் அறிவித்துவிட்டு வந்தார்கள் அந்த மூன்று தில்லி பதிவர்களும். 

அட ஆமாங்க, நான், மனைவி மற்றும் மகளுடன் தமிழகம் வந்திருந்தேன். மே மாதம் ஐந்தாம் தேதி தமிழகம் வந்து இருபத்தி எட்டாம் தேதி திரும்பினேன். பயணம் என்றால் சில பதிவுகள் அது பற்றி இல்லாமலா? ஒரே பதிவிலேயே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் விறுவிறுப்பு ஏது… ஐந்தாறு பதிவுகளாவது தேத்த வேண்டாமா? அப்பதானே நம்மையும் பதிவர்னு ஒத்துப்பாங்க!

இந்தப் பயணத்தில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் வீடு திரும்பல் மோகன்குமார், மன்னை மைனர் ஆர்.வி.எஸ்., கற்றலும் கேட்டலும் ராஜி, மின்னல் வரிகள் கணேஷ் ஆகியோர்! திருச்சியில்  ரிஷபன்,  ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி, வை. கோபாலகிருஷ்ணன், திருமதி கீதா சாம்பசிவம்! அனைவரும் காட்டிய அன்பிற்கும் வரவேற்புக்கும்  என்ன கைம்மாறு செய்து விடமுடியும்?

சென்னையில் இருக்கும் சில உறவினர்களைப் பார்க்க வேண்டியிருந்ததால் நண்பர் மோகன்குமாரை நெடுநேரம் காக்க வைத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்கு முன்பாக  'கற்றலும் கேட்டலும்' ராஜியை அவர்கள் வீட்டில் சந்தித்தோம். மாங்கோ மில்க்‌ஷேக் செய்து வைத்திருந்தார்கள். ”தில்லிக்காரங்களாச்சே!” என ”சாச்” வாங்கி வைத்திருந்தார் அவரின் கணவர். வென்றது மகளிர் அணியே என்பதில் சந்தேகமென்ன?   

அங்கிருந்து மன்னை மைனரிடம் அலைபேசியில் பேசியபோது, “எங்க வீட்டு வழியாதான் மோகன் வீட்டுக்குப் போகணும், முதலில் இங்க வந்துடுங்க, எல்லோரும் சேர்ந்து அவர் வீட்டுக்குப் போகலாம்” என மடக்கினார். 

அவரது வீட்டிலும் நிறைய விஷயங்கள் பேசினோம் [மைனர் மட்டுமே பேசினார் என்பதே பொருத்தமாக இருக்கும் என மோகன் சொல்வது கேட்கிறது!].  அவரது புத்தக அலமாரி பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எவ்ளோ புத்தகங்கள்! பாடல் பெற்ற திருத்தலங்கள் பற்றிய புத்தகம் காண்பித்து அத்தனை ஊர்களுக்கும் செல்ல நினைத்திருப்பது குறித்துப் பேசினார். 

மோகன்  வீட்டிற்குச் செல்ல சற்றே தடுமாறியதால், இரண்டு சக்கர வாகனத்தில் வந்து எங்களை வழிநடத்தி  அழைத்துச் சென்றார். கொஞ்ச  நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, அஜு, நாட்டியுடன் சற்றே விளையாடிவிட்டும் இருப்பிடம் திரும்பினோம். 

A2B சென்று இரவு உணவு உட்கொள்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனாலும் காலையிலிருந்து உறவினர்கள், நண்பர்கள்  என எல்லோர் வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டதே ஓவர் டோஸ்!. நான் வாயைத் திறந்தால் நிச்சயம் காகம் கொத்தி உணவு உட்கொண்டிருக்கும்!  அதனால் அது கான்சல். 

திருச்சியிலும் சில இனிமையான நினைவுகள் உண்டு.   ஒரு முன்மாதிரியாக சில படங்கள் மட்டும் இப்பகிர்வில்…..

உங்களை கைக்கூப்பி வரவேற்கும் இந்த இடம் எதுவோ?

இது ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம். எந்த ஸ்தலம்?

இவர் யாருங்க… பாருங்க! 

 இங்கே குடிகொண்டிருக்கும் அழகர் யாரோ?

லிங்கத்திற்குள் லிங்கங்கள் – வரலாறு தந்த ஒரு இடம்!

மிகச் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோவில் கோபுரம் இது… எந்த ஊர்  கோவில்?

திருஷ்டி பொம்மை செய்யும் நபருடன் ஒரு பேட்டி….  :)

 பக்தருக்கு வழி சொல்லிய கடவுள் கோவில். 

 என்ன ஒரு அருமையான படம்.  எங்கே எடுத்ததோ?

 இங்கேதான்! :)

இவை தவிர நாங்கள் சந்தித்த ஒரு முக்கிய நபர் பற்றிய விவரங்கள் வரும் பதிவுகளில். . 

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


56 கருத்துகள்:

  1. அந்த மூன்று தில்லி பதிவர்களும் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  2. அடுத்த முறையாவது மதுரை ப்திவர்களுக்கு
    உங்களைச் சந்திக்கும் வாய்ப்ப்பை ஏற்படுத்தித் தரவும்
    தொடர் பதிவுகளையும் அசத்தலான புகைப்படங்களையும்
    அதிகம் எதிர்பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறையே மதுரை வந்திருக்க வேண்டியது. சிவகங்கை வரை மட்டுமே வரமுடிந்தது. நிச்சயம் அடுத்த பயணத்தின் போது மதுரை வருவேன். உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ்மணத்தில் இணைத்து முதலாவது வாக்கினை அளித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  4. மூன்று பதிவர்களும்ன்னா நிஜம்மாவே அதகளம் தான் ...
    :)
    நாங்க இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கோம்.. ஆட்டத்தை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று பதிவர்களுக்குப் பிறகு அடுத்த மூன்று பதிவர்கள் தற்போது தமிழகத்தில்.... :) கொண்டாட்டம் தான் போங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  5. சென்னை வந்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது!
    நானும் சந்தித் திருப்பேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டே நாட்கள் அங்கே இருந்ததால் பலருக்குத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை வரும்போது நிச்சயம் தெரிவிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

      நீக்கு
  6. அட ....நான் இரண்டு பதிவர்களைத் தான் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது பதிவர் தனது தாத்தா-பாட்டியுடன் பயங்கர பிசி.... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  7. பயணம் அனுபவங்கள் அருமை.

    இருப்பினும் ஒரு சின்ன குறை.

    மூன்றாவது குட்டிப்பதிவர் ரோஷ்ணியை எப்படியும் தங்களுடன் எங்கள் வீட்டுக்குக் கூட்டி வருவீர்கள் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

    அவர்களைப் பார்க்காதது தான் என் குறை.

    ஏக் ... தோ .... மட்டுமே. தீன் ?

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொன்னபடி, மூன்றாவது பதிவர் நீண்ட நாட்கள் கழித்து தனது தாத்தா-பாட்டி, அத்தைகள் மற்ற உறவினர்களைச் சந்திப்பதால், எங்களுக்கே கால்ஷீட் தரவில்லை :))) அடுத்த முறை வரும்போது நிச்சயம் அழைத்து வருகிறேன்.

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

      நீக்கு
  8. மூவரும் சென்னைக்கே வந்து விடுகிற நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்ததில் எங்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூவரும் சென்னைக்கே வந்து விடுகிற நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். //

      பார்க்கலாம் எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதென...

      தங்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  9. ம்ம்ம்... அசத்தலா இருக்கு புகைப்படங்களும் பதிவும். விரிவாவே சொல்லிட்டு வாங்க. கூட வந்து கேக்கறோம் ஆவலோட. ஆமா... யார் அந்த ‘முக்கிய’ பதிவர்? உங்க அன்பைக் காட்ட ஓவரா இறுக்கிப் பிடிச்சதுல ரொம்ப முக்கிட்டாரோ..? ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கிய நபர் என்று தானே எழுதி இருக்கிறேன்... பதிவர் என எழுதவில்லையே :) வரும் பதிவுகளில் யாரெனச் சொல்லிவிடுகிறேன் நிச்சயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. உங்களைச் சந்தித்து தெரிந்து கொண்ட விஷயங்கள் நிறைய. அதற்குத் தனியாக ஒரு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  11. கலக்குங்க. பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ... எழுதி விடுகிறேன் சீக்கிரமாகவே.

      நீக்கு
  12. முன்னாடி சொல்லாமப் போய்ட்டீங்களே வெங்கட். தகவல் தெரிஞ்சிருந்தா சந்திச்சிருக்கலாம்.பரவாயில்லை. அடுத்த தடவை சந்திப்போம் கண்டிப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாட்களில் நிறைய உறவினர்களைச் சந்திக்க வேண்டியிருந்ததால் நண்பர்களில் மிகச் சிலரையே சந்திக்க முடிந்தது. அடுத்த பயணத்தின் போது நிச்சயம் உங்களைச் சந்திக்கிறேன் ஜி...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி.

      நீக்கு
  13. படங்கள் அற்புதம் அந்த முக்கிய நபர் யார் என அறிய ஆவலோடு காத்திருக்கிறோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

      நீக்கு
  15. மூன்று பதிவர்களின் சென்னை விஜயம் நல்ல பகிர்வு. தொடர்ந்து வரும் திருச்சி பதிவிற்காகவும் வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர். அடுத்த பதிவுகள் விரைவில்.....

      நீக்கு
  16. பதில்கள்
    1. சீக்கிரமே பதிவிடுகிறேன்...

      தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.

      நீக்கு
  17. சென்னை விசிட்டில் படங்கள் எதையும் காணோமே....! அது திருவானைக்கா கோவில் கோபுரமா? அவர் அகத்தியரா? முக்கிய நபர் யாரென்று தெரிந்து விட்டது..... அப்புறம் சொல்றேன்!! :)))

    பதிலளிநீக்கு
  18. சென்னை விசிட்டில் படங்கள் எதுவுமே எடுக்கவில்லை ஸ்ரீராம்.

    திருவானைக்கா கோபுரம் அல்ல.... அகத்தியர் சரியான பதில் - கல்லணையில் எடுத்தது. முக்கிய நபர் யாரென்று தெரிந்துவிட்டதா... நல்லது :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  19. இனிய சந்திப்புகள்:)! பகிர்வுக்கு நன்றி.

    படங்கள் அருமை. பயணம் குறித்து மேலும் தொடரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினையும் படங்களையும் ரசித்துக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  20. பதிவர்கள் சந்திப்பு எப்போதுமே சந்தோஷம் தான்! மைனர்வாள் வாயை திறந்தா மூச்சு விடாம பேசிண்டே இருப்பார்(எழுதர மாதிரியே). திருச்சி சந்திப்பு தகவல்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மைனர்வாள் வாயை திறந்தா மூச்சு விடாம பேசிண்டே இருப்பார்(எழுதர மாதிரியே).// ஆமாம், தக்குடுக்கு முன் அனுபவம் இதில் உண்டே... :) ஆனா பேசின அனைத்துமே பிடித்தும் இருப்பதால் பிரச்சனை இல்லை இல்லையா :)

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

      நீக்கு
  21. சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கலாமே?!தொடரும் சுவாரஸ்யத்துக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை நிறைய பேரை சந்திக்க முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் தான்.

      அடுத்த முறை சென்னை வரும்போது சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டமே ஏற்பாடு செய்துடலாம் ஐயா.... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  22. இனிய சந்திப்புகள்... காத்திருக்கிறேன் ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி. அடுத்த பதிவுகள் விரைவிலேயே வெளியிடுகிறேன்....

      நீக்கு
  23. அன்புள்ள வெங்கட்

    தங்களின் கருத்துகளையும் போட்டோகளையும் எங்களுடன் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வளர்க உங்கள் பணி. தொடரட்டும் உங்கள் வலை
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

      நீக்கு
  24. அன்புள்ள வெங்கட்...

    அடுத்த பயணம் வாய்க்கையில் தஞ்சைக்கு வாருங்கள். சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பயணத்தின் போது தஞ்சையும் வரவேண்டும்.... வரும்போது நிச்சயம் சொல்கிறேன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹரணி சார்.

      நீக்கு
  25. சார் நா உங்க மேல கோவமா இருக்கேன். நான் பதிவர் இல்லையா சார் என்ன ஏன் கூப்பிடவில்லை. அப்புறம் நான் டெல்லி வரும் போது உங்க வீட்டுக்கு வார மாட்டேன் :-)

    உங்கள் மகள் கூட பதிவர் ஆ. கேட்கவே சந்தோசமாக உள்ளது. மூன்று பெரும் இன்னும் மிகப் பெரிய பதிவர்கள் ஆக இந்த சிறிய பதிவரின் ஆசை

    பதிலளிநீக்கு
  26. அடாடா, கோபம் எதற்கு நண்பரே..... அடுத்த பயணத்தின் போது சந்தித்தால் போயிற்று.....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  27. மகிழ்ச்சியான சென்னைப் பயணம். தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  28. நாங்களும் எல்லா ஊருகளுக்கும் சென்று வந்தோம் மதுரையில் மட்டும் சின்ன பதிவர் சந்திப்பு(என்னையும் சேர்த்து 10 பேர்) நடத்தினோம்.
    உங்கள் பயண அனுபவங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நீங்களும் சென்று பதிவர் சந்திப்பு நடத்தினீங்களா? அனுபவங்களை எழுதுங்களேம்மா..

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....