வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 14 – உலக இன்னிசை தினம் – டிப்ஸ் மஹாத்மியம்!


[பட உதவி: கூகிள்]



இந்த வார செய்தி:  

அக்டோபர் இரண்டாம் தேதிகாந்தி பிறந்த தினம்.  இந்த நாள் இன்னோரு விஷயத்திற்காகவும் பிரபலம்.  அன்று தான் உலக இன்னிசை தினம்.  இந்த வருடம் இந்த தினத்தில் உலகம் முழுவதும் இந்தியாவின் புராதன இசைக்கருவியான வீணை பல பிரபல இசைக்கலைஞர்களால் வாசிக்கப்பட இருக்கிறது.

பெங்களூரில் உள்ள National Institute of Advanced Studies-ல் வயலின் மேஸ்ட்ரோ எல். சுப்ரமணியன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, சென்னை, ஹைதை, மும்பை, மைசூர், புது தில்லி, திருவனந்தபுரம், மெல்போர்ன், சிட்னி, நியூ ஜெர்சி, சான் ஃப்ரான்சிஸ்கோ, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஓஸ்லோ, டென்மார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வீணை வாசித்து இந்நாளைக்  கொண்டாட இருக்கிறார்கள்

சென்னையில் அக்டோபர் 2 முதல் 11-ஆம் தேதி வரை ஸ்ரீகிருஷ்ண கான சபாவில்வீணா மஹோத்சவமாகக் கொண்டாட இருக்கிறார்கள்.  இசைப் பிரியர்களுக்கு இது நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும்.


இந்த வார முகப்புத்தக இற்றை:



[பட உதவி: கூகிள்]


பேசாத வார்த்தையை விட...
பார்க்காத கண்களை விட...
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்துக்கு வலி அதிகம்!

இந்த வார குறுஞ்செய்தி:

You can make more friends in two months by becoming interested in other people than you can in two years by trying to get other people interested in you – Dale Carnegie.

நடந்தது என்ன: 



[பட உதவி: கூகிள்]

இன்று 28, செப்டம்பர்.  இதே நாளில் தான் 1928-ஆம் வருடம் லண்டனின் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் ஃப்ளெம்மிங் பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்தார்.  நவீன மருத்துவத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கிய இந்த மருந்தைக் கண்டுபிடித்தது சென்ற நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.     

ராஜா காது கழுதைக் காது: 

திருச்சி சத்திரம் பேருந்தின் எதிரே இருக்கும் வசந்த பவன் உணவகத்தில் ஆனியன் ஊத்தப்பம் சொல்லி விட்டுக் காத்திருந்தபோது கேட்டடிப்ஸ் மஹாத்மியம்”!



டிப்ஸ் எவ்வளவு கொடுக்கணும்னு தெரியுமா?  நீ சாப்பிடறத பொறுத்துதான் கொடுக்கணும்.  50 ரூபாய்க்கு சாப்பிட்டா அவருக்கு வேலை கம்மி.  200 ரூபாய்க்கு மேலே சாப்பிட்டா கொஞ்சம் வேலை ஜாஸ்தி.  அதுனால, 50 ரூபாய்க்கு உனக்கு பில் வந்தா, 2 ரூபாய் டிப்ஸ் கொடு, 100 ரூபாய்லேர்ந்து 200 ரூபாய் வரைக்கும் உன் பில் வந்தா 5 ரூபாய் கொடு, 200 ரூபாய்க்கு மேலேன்னா, போனா போகுதுன்னு 10 ரூபாய் கொடு!” - சொன்னது ஒரு பதினெட்டு வயது இளைஞன்!


இந்த வாரக் காணொளி: 

இந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்ததுஉங்கள் குடும்பத்தினரோடு கண்டுகளியுங்கள் என்ற விண்ணப்பத்தோடு!  நீங்களும் பார்த்து ரசிக்கலாம்! :)

இந்த காணொளியைக் காண இங்கே செல்லுங்கள்!

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை



நட்புடன்




வெங்கட்.

புது தில்லி.

டிஸ்கி: தொடரும் நண்பர்கள் டாஷ்போர்டில் அப்டேட் ஆகாத எனது இதற்கு முந்தைய பதிவு - 

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மத்யார்ஜுனேஸ்வரர்


46 கருத்துகள்:

  1. ஃப்ரூட் சாலட் - அருமை...

    முகப்புத்தக இற்றை : உண்மை...

    நல்ல டிப்ஸ் மஹாத்மியம்....

    கண்ணொளி பார்க்கிறேன்...

    நன்றி...

    (பதிவுகள் dashboard-ல் வருகிறது... ஆனால் தளத்தில் உடனே வருவதில்லை... Not Found என்று வருகிறது... ஏன்...?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். சில பதிவுகள் உடனே வருகின்றன. ஒரு சில பதிவுகள் வருவதில்லை. பிரச்சனையாக இருந்த இண்ட்லியும் எடுத்து விட்டேன். பிரச்சனை என்னவென்பது Blogger-க்கே வெளிச்சம். :)

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  3. இரண்டு ரூபா டிப்ஸ் குடுத்தா நம்ம கிட்டேயே திரும்ப குடுத்துடுவாங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொன்னதைக் கேட்டபோது நானும் இதையே நினைத்தேன்...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  7. மிகவும் நல்ல பதிவு...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.

      நீக்கு
  8. உணவகத்தில் ஆனியன் ஊத்தப்பம் சொல்லி விட்டுக் காத்திருந்தபோது நீங்கள் கேட்ட “டிப்ஸ் மஹாத்மியம்”! உண்மையின் உரைகல்லாக இருக்கிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  10. அழகாகத் திட்டமிட்டு வலைபதிவு செய்கிறீர்கள், வெங்கட். அதற்கு முதலில் பாராட்டுக்கள்!

    ப்ரூட் சாலட் என்றவுடன் சமையல் குறிப்பு என்ற நினைத்துவிட்டேன். ஹி...ஹி...(அசட்டுச் சிரிப்பு!)(எப்போதும் சாப்பாட்டு நினைவுதானா?)

    நான் நினைத்த ப்ரூட் சாலட் நாவில் தான் சுவைக்கும். உங்களின் வெள்ளிகிழமை செய்திகள் பயனுள்ளவையாகவும், மிகச் சிறப்பாக புதிய செய்திகளை அறியவும் உதவுகின்றன.

    தலைப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன.

    டிப்ஸ் சாதாரணமாக நம் பில்லில் 10% இருக்க வேண்டும். (டிப்ஸ்-க்கு ஓர் டிப்ஸ்!)


    இன்னொமொரு தடவை பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ப்ரூட் சாலட் என்றவுடன் சமையல் குறிப்பு என்ற நினைத்துவிட்டேன். ஹி...ஹி...(அசட்டுச் சிரிப்பு!)(எப்போதும் சாப்பாட்டு நினைவுதானா?)//

      :)) தப்பில்லையே...

      டிப்ஸ்-க்கு டிப்ஸ் - கரெக்ட்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  11. //வயலின் மேஸ்ட்ரோ எல். சுப்ரமணியன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க...//

    வயலின் வாசித்து வீணை வாசிப்பினை ஆரம்பித்து வைப்பாரா! இல்லை, வீணையில் வயலின் வில் கொண்டு தொடங்கி வைப்பாரா!

    இந்த வார குறுஞ்செய்தியில் டேல் கருமூஞ்சி என்னவோ சொல்ல வருகிறார் என்று நன்கு புரிகிறது.

    டிப்ஸ் பற்றிய டிப்ஸ் சூப்பர்.

    காணொளி சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வயலின் வாசித்து வீணை வாசிப்பினை ஆரம்பித்து வைப்பாரா! இல்லை, வீணையில் வயலின் வில் கொண்டு தொடங்கி வைப்பாரா! //

      நல்ல doubt... விசு பாணியில்...

      குறுஞ்செய்தி - :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பதமநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  12. எப்போதும் போல அறுசுவையான சாலட் அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  13. டாஷ்போர்ட் பிரச்சனையை விட நிறைய நேரங்களில் கமெண்ட் பெட்டி தெரியாமல் இருக்கிறது. சில நேரம் refresh செய்தால் வருகிறது. [ஹிட் கவுண்டரில் என் வருகை அதிகமாக இருக்கும்!!!]
    இது என் PC-யில் மட்டுமா அல்லது அனைவருக்குமா என்றுத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // [ஹிட் கவுண்டரில் என் வருகை அதிகமாக இருக்கும்!!!] //

      :))

      சிலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கு சீனு.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  14. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ் ஜி!

      நீக்கு
  15. உலக இன்னிசை தினம் - புதிய தகவல்.

    பெனிசிலினுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்ஹ்து சொல்லிடலாம்!!

    டிப்சுக்கே டிப்ஸா!

    காணொளி காலையில்தான் பார்க்கணும்!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பென்சிலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து - :)))

      காணொளி நல்லா இருக்கு... முடிந்தால் காலையில் பார்த்துடுங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு

  17. //பேசாத வார்த்தையை விட...
    பார்க்காத கண்களை விட...
    நினைத்துக் கொண்டிருக்கும்
    இதயத்துக்கு வலி அதிகம்!//


    என்னைப் பார்க்கும் கண்களை விட‌
    என்னை எண்ணி ஏங்கும் கண்கள்
    என்றோ எங்கோ பார்த்திடினும்
    அன்று போல் இன்றும்
    என்னைப் பாராமலே
    என் இதயத்தை பிளக்கின்றன.

    நயனங்களா அவை ? இல்லை
    நம்பமாட்டேன்.
    நீண்ட வானில் நீர் காணா
    மீன் இனங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கவிதைக்கு அதை விட சிறந்த கவிதையாய் பதில்... சிறப்பாக இருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. உங்கள் ப்ரூட் சாலட் சுவையாய் இருக்குன்னு நண்பருக்கு டிப்ஸ் கொடுத்துட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்.... டிப்ஸ் கொடுத்தாச்சா? :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  19. மிகவும் ரஸித்தேன், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  20. இன்னிசை தினமா? தெரியாத விஷயம். இது இதுவது தொடர் நிகழ்ச்சியா இல்லை ஒவ்வொரு நாட்டிலும் தனித் தனியாக நடக்கிறதா ?

    விடியோ அருமை. ரொம்ப வருடங்கள் முன்னால் டிச்னியில் இது போல் ஒரு நடனம் நடத்திக் காட்டினார்கள். மிகவும் பிரபலமானது. This is even better.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னஞ்சல் மூலம் வந்த காணொளி இது. மிகவும் ரசிக்கமுடிந்தது.

      அக்டோபர் இரண்டு அன்று எல்லா இடங்களிலும் நடக்க இருக்கிறது. இது பற்றிய செய்தி சில நாளிதழ்களில் வந்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

      நீக்கு
  21. அக்.2‍க்கு இன்னுமொரு சிற‌ப்புண்டா! அறிய‌ச் செய்த‌மைக்கு ந‌ன்றி ச‌கோ. ப‌திவிட்ட‌ நாளுக்குமொரு சிறப்பு செய்தி... ராஜா காது ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளையே கேட்டுவ‌ருகிற‌து. சால‌டை க‌வ‌ன‌மாக‌ த‌யாரிக்கிறீர்க‌ள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ராஜா காது ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளையே கேட்டுவ‌ருகிற‌து//

      :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  22. FRUIT SALAD-ல் பழக்கலவை அருமை! டிப்ஸ் மகாத்மியம் சுவாரஸ்யமாக இருந்தது! இந்தக் கால இளைஞர்கள் மிக மிக புத்திசாலிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....