வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை நோக்கி – காலை உணவு




இரு மாநில பயணம் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காலைச் சூரியன்.... - வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

முதல் நாள் இரவு பாடண் நகரில் தங்கிய பிறகு இரண்டாம் நாள் நாங்கள் பாடண் நகரிலிருந்து சென்ற இடம் கட்ச்! கட்ச் மற்றும் புஜ் பகுதிகள் பற்றி தெரியாத பலருக்கும் 2001-ஆம் ஆண்டு 26 ஜனவரி அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் [ரிக்டர் ஸ்கேலில் 7.7 அளவு!] அப்பகுதி பற்றி தெரிய வந்தது. அந்த கட்ச் மற்றும் [B]புஜ் பகுதிகளுக்கு இப்பயணத்தின் போது சென்று வர வேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது.  கட்ச் பகுதியில் இருக்கும் வெண் பாலைவனம் [White Desert] பகுதிக்குச் சென்று வர நாங்கள் திட்டமிட்டிருந்தோம். பாடண் நகரிலிருந்து நேராக கட்ச் சென்று அங்கிருந்து [B]புஜ் செல்வதாக எங்கள் திட்டம்.  குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் ஒரு விளம்பர வாசகம் தான் எங்களை அங்கே செல்லத் தூண்டியது! அந்த விளம்பர வாசகம்….



வா ராஜா வா என்று அழைக்கிறாரோ சிவபெருமான்?.... -
 வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

KUTCH NAHI DEKHA TO KUCH NAHI DEKHA….

இந்த வாசகத்தின் அர்த்தம் கட்ச் பகுதியை நீங்கள் பார்க்காவிடில் எதையுமே பார்க்காத மாதிரி தான் என்பதாகும். இந்த கட்ச் பகுதியில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எங்கள் இரண்டாவது குஜராத் பயணத்தில் இப்பகுதிக்குச் சென்று வர முடிவு செய்திருந்தோம்.  பாடண் நகரிலிருந்து கட்ச் செல்ல கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே தங்குமிடத்தினைக் காலி செய்து, புறப்பட்டோம். காலை உணவு வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது எங்கள் முடிவு. ஓட்டுனர் முகேஷ்-உம் அதையே சொல்ல கட்ச் நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது.


மாயமில்லை மந்திரமில்லை.... அந்தரத்திலிருந்து கொட்டும் தண்ணீர் - வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

குஜராத் சுற்றுலாத் துறையின் மற்றுமொரு வாசகம் – ”MUSKURATHE RAHIYE, AAP KUTCH ME HAIN” அதாவது “Smile – You are in Kutch” என்பது தான் அந்த வாசகம்.  சிரிச்சிட்டே இருந்தா ”இளிச்சவாயன்”னு யாரும் சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம்! அதனால கொஞ்சமா புன்னகையோடு நிறுத்திக் கொள்ளலாம்!


வழுக்கும் சாலைகள்.... - வெண்பாலை நோக்கிய பயணத்தில்.... 

குஜராத் மாநிலத்தில் இரண்டு முறை பயணம் செய்தபோதும் என்னை கவர்ந்த விஷயம் அங்கே இருக்கும் சாலைகள். எல்லா பகுதிகளுக்கும் மிகவும் சிறப்பான சாலை அமைத்திருக்கிறார்கள் என்பதால் சாலைப் போக்குவரத்து சுலபமாகவும், விரைவாகவும் அமைகிறது. கட்ச் பகுதிக்குச் செல்லும் சாலைகளும் அப்படியே. வழியில் கண்ட காட்சிகளை படம் பிடித்தபடியே சென்று கொண்டிருந்தோம். சுமார் ஒன்பது மணிக்கு வயிறு சபிக்க ஆரம்பிக்க, முகேஷ்-இடம் காலை உணவுக்கு வண்டியை நிறுத்தச் சொன்னோம்.  அவர் நிறுத்திய இடம் ஹோட்டல் ஷிவ் இன்டர்நெஷனல் ஹானஸ்ட் என்ற பெயருடன் இயங்கி வரும் ஹோட்டல் – செல்லும் வழியிலிருந்த ஒரு ஊரில் இருந்த உணவகத்தில் தான்.


காடு பொட்டக்காடு என்று பாரதிராஜா குரல் கேட்குதா?.... - வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

கொஞ்சம் பெரிய இடம் தான் – எங்களைத் தவிர யாருமே இல்லை! கொஞ்சம் பொறுமையாகத்தான் தர முடியும் என்று அமர வைத்து விட்டார்கள். மெல்லிசை பின்னணியில் இசைக்க, மெனு கார்ட் வர காத்திருந்தோம். ஒரு பெண் வந்து, மெனு கார்ட் கொடுத்து, எங்களுக்கு என்ன தேவை என விசாரித்து, பூரி-சப்ஜி, பராட்டா-தஹி, ப்ரெட்-ஆம்லேட், கார்ன் ஃப்ளேக்ஸ்-பால் என Combo break fast கிடைக்கும் எனச் சொன்னார். பூரி-சப்ஜி மற்றும் தேநீர் என எங்களுக்குத் தேவையானவற்றைச் சொல்லி காத்திருந்தோம். முகேஷ் பராட்டா போதும் எனச் சொல்லிவிட்டார். மெனு கார்டை வாங்கிக் கொண்டு சென்ற பெண்ணுக்காக காத்திருந்தோம். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று பாடாத குறை தான்.


”ஏலே சின்ராசு... அங்க என்ன வெட்டிப்பேச்சு, பழக்கூடைய எடுலே....” சாலையோர பழக்கடைப் பெண்.... 
வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

ஒரு வழியாக பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் கேட்ட உணவு வந்தது. சாப்பிட்டு முடித்து, உரிய பணத்தைக் கொடுத்து, அங்கிருந்து புறப்பட்டோம். கொஞ்சம் காசு அதிகம் தான் – இரண்டு பூரிக்கு 50 ரூபாய்! தேநீர் 20 ரூபாய்! இரண்டே இரண்டு பூரி சாப்பிட வயிறு நிறையுமா என்ன, தேவையான அளவு பூரியை சாப்பிட்டோம். பயணத்தின் போது உணவின் தரம் நன்றாக இருந்தால் போதும் என்பது தான் முக்கியமாக இருக்கிறது, விலை பற்றிய எண்ணம் வருவதில்லை. சில சிறிய இடங்களில் உணவும் நன்றாக இருந்து, வாங்கும் விலையும் குறைவாக இருக்க, பெரிய உணவகங்களில் விலை அதிகம், தரம் குறைவு! பயணத்தில் இப்படி கிடைக்கும் அனுபவங்கள் பலவிதம். 


எங்கே செல்லும் இந்தப் பாதை.... யார் தான் யார் தான் அறிவாரோ...
சாலையோரத்தில் நடந்து சென்ற கிராமியப் பெண்கள்....
வெண்பாலை நோக்கிய பயணத்தில்....

கட்ச் பகுதிக்குள் நுழையும் போதே சாலையின் இரண்டு பக்கத்திலும் பொட்டல் காடு! காட்டுச் செடிகள் தவிர பெரிதாக விவசாயம் என ஒன்றுமே இல்லை. வித்தியாசமான உடை, நகைகள் அணிந்த மனிதர்கள், வாகனங்கள் என பார்த்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

24 கருத்துகள்:

  1. அழகிய படங்களும்...

    அருமையான சாலைகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  2. >>> சென்று சேர்ந்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது அடுத்த பகுதியில்..<<<

    ஆவலுடன் காத்திருக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதி விரைவில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. அழகாக அழைக்கிறார் சிவன்.. ஆனா முகம் சரியாக அமையவில்லை. அதென்ன தண்ணி அந்தரத்தில் கொட்டுதே.... சாலை ஓர பழக்கடையும் குழந்தையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீருக்குள் ஒரு குழாய் இருக்கும் - அது தான் சூட்சுமம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  4. அதெப்படி அந்தரத்தில் தண்ணீர் ???
    ஆச்சர்யமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீருக்குள் ஒரு குழாய் இருக்கும் அது தான் சூட்சுமம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. படங்கள் அழகாக இருக்கின்றன.....

    கட்ச், புஜ் பற்றி அறிய தொடர்கிறோம்...

    கீதா: அக்கருத்துடன்....அந்தரத்தில் எப்படி தண்ணீர் வருது ஜி....கட்ச் என்றாலே எனக்கு கட்ச் எம்பிராய்டரி யம், கச்சி தாபேலி அப்டின்ற ஒரு உணவும் நினைவுக்கு வரும்...சாட் போல...ஆனால் பர்கர் போன்று...ஆனால் பரகரல்ல..

    என்ன பார்த்தீர்கள்னு ஒரே ஆர்வம்.... .தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்ச் பகுதியில் நிறையவே வேலைப்பாடுகள் செய்வார்கள். உணவும் நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. படங்கள் ஜோர். அதற்கு போட்டி போடுகிற மாதிரி உங்கள் பாடல் வரிகளும் ஜோர்.
    சுற்றுலாத் துறையின் விளம்பர வாசகங்களும் கவர்ந்தன.
    பாலையை நோக்கியப் பயணம் என்று நீங்கள் சொன்னாலும் பயணக் களைப்பு தெரியாத ஒரு ஜிலுஜிலுப்பு இந்தப் பதிவில் உணரப்படுகிறது
    அது என்ன என்று சொல்லத் தெரியவில்லை. நீங்களாவது சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஜிலுஜிலுப்பு பதிவில்..... எனக்கும் சொல்லத் தெரியவில்லை. என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஜி!

      நீக்கு
  7. படங்களும், செய்திகளும் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. படங்களும் பதிவும் சுவாரஸ்யம். அந்தரத்தில் தண்ணீர் அதிசயத்தை சென்னையிலேயே நன் பார்த்திருக்கிறேன். சிங்கத்தின் கைவண்ணம். ஆம், வல்லிம்மா வீட்டில்தான் பார்த்திருக்கிறேன். கொலுவில் வைத்திருப்பார்கள். ஏன், நீங்களும் பால கணேஷோடு சென்றபோது பார்த்திருப்பீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கத்தின் கைவண்ணம் - ஆம். இதே படத்தினை முன்னர் கூட ஒரு முறை எனது பதிவில் வெளியிட்டு இருக்கிறேன். அப்போது வல்லிம்மாவே கருத்து சொன்ன நினைவு.....

      பால கணேஷோடு சென்றபோது பார்த்த நினைவு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. புஜ்ஜில் டபேலி சாப்பிட்டீர்களா? அங்கே ராபடியும் வெள்ளை வெளேர் என அருமையா இருக்கும். ஒரே ஒரு மதராஸி ஓட்டல் இருந்தது, 20 வருடம் முன்னே. குஜராத்திலிருந்து வந்த பின்னரும் 2,3 முறை போனாலும் கட்ச் பகுதிக்குப் போகலை. அஹமதாபாத், சௌராஷ்ட்ரா, துவாரகை, சோம்நாத் என இருந்துட்டோம். ஒரு முறை அம்பாஜி போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரபடி சாப்பிட்டோம். டபேலி சாப்பிடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. மான்ட்வி கூடப் போயிருக்கோம் ஆனால் ஒரே முறை. புஜ்ஜில் உள்ள ஸ்வாமிநாராயண் கோயில் தான் மிகப் பழமையானது என்பார்கள். பெண்கள் அங்கே அனுமதி இல்லை. வாசலில் இருந்து கொண்டே பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜ்ராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடம் இன்னும் உண்டு - மாண்ட்வி உட்பட.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. ஆஷாபுரா கோயிலுக்குப் பாத யாத்திரையாகச் சாதுர்மாஸ்யத்தில் செல்வார்கள். கோடீஸ்வரருக்கும் போவார்கள். இங்கெல்லாம் நான் போனதில்லை. நம்ம ரங்க்ஸ் மட்டும் அலுவலக வேலையாகப் போறப்போ எல்லாம் போயிட்டு வந்துடுவார். ஆஷாபுரா கோயிலில் அன்னதானம் பெயர் பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஷாபுரா கோவில் - நாங்கள் செல்லவில்லை. பெரும்பாலும் இப்பயணத்தில் கோவில்கள் சென்றது குறைவு - த்வாரகா, சோம்நாத் போன்ற சில இடங்களுக்கு மட்டும் தான் சென்றோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. முகப்புத்தகம் வழியே:

    Subbu Subbu Aapne Kutch Dekhliya to hum sab ne bhi dekhliya. Thanks to thorough narration.😃😃👌👌👍👍👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்ரமணியன் அண்ணாச்சி....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....