திங்கள், 30 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் - ராஜவாழ்க்கை



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மாளிகை - தற்போது நட்சத்திர ஹோட்டலாக...

ஞாயிறு, 29 ஜூலை, 2018

காவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி



அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...

இன்று இரண்டு மூன்று வேலையை மனதில் வைத்துக் கிளம்பினேன். முதலில் சூப்பர் மார்க்கெட். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். ஃப்ரெஷ் க்ரீம் எனக் கேட்டால் அங்கிருந்த பெண் "மூஞ்சிக்குப் போடற க்ரீமா அக்கா" என்றாள். நானே பார்த்துக்கறேன் விட்டுடுப்பா என்றேன்.

அடுத்து காஸ்மெட்டிக்ஸ் பக்கம் போனால், மேடம் தப்பா எடுத்துக்காதீங்க! கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு! Aloevera gel வாங்கிப் போடுங்க என்றாள்.


கரை புரண்டு ஓடும் காவிரித்தாய்...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...



மலைக்கோட்டை....
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து... 



அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...


அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...


அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...

அங்கிருந்து கிளம்பி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தோம். நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க வேண்டாமா! மூன்று நான்கு வருடங்களாகவே ஆடிப்பெருக்கு அன்று கூட குழாய் மூலம் வந்த தண்ணீரில் தான் குளித்து வந்தனர். இந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய். புதுத்தண்ணீரில் காலை நனைத்து மகிழ்ந்தோம். சில படங்களை எடுத்துக் கொண்டு கீதா மாமிக்கு ஃபோன் செய்தேன்.

அவரும் வீட்டில் தான் இருக்கிறேன் எனச் சொல்லவும் அவர் வீட்டுக்குச் சென்று மாமாவையும் மாமியையும் பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வந்தேன். மறக்காமல் மாமியிடம் தவலை வடை அருமையாக இருந்ததாகச் சொன்னேன்.


அன்னாசிப் பழம்...

வீட்டுக்கு வரும் வழியில் அன்னாசி பழங்களை கொட்டி வைத்து வியாபாரம். ஒரு பழம் 20 ரூபாய். அவர்களே தோலை வெட்டி சுத்தம் செய்து தருகின்றனர். கொல்லி மலைப் பழமாம். இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டேன்.

போகும் போது ஓலாவில் 38 ரூபாய். வரும் போது 58 ரூ! என்ன கணக்கோ!!! சாயங்காலம் மாமனார் மாமியாரைப் பார்க்கப் போனபோது, கொள்ளிடமும் போய் பார்த்தாச்சு…






கொள்ளிடம் காட்சிகள்.....

எச்சரிக்கை பதாகை அங்கே வைத்திருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாயில்லை. ஆட்டோவிலும், பைக்கிலும், காரிலும் வந்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே குளிக்கின்றனர்.

சிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தின் மேலேயிருந்து டைவ் அடிக்கின்றனர். சோப்பு துணிமணிகளுக்கும், தங்களுக்கும் போட்டு பரபரக்க தேய்த்து மும்முரமாய் இருந்தனர். கிடைத்த சிறிய இடத்தில் காலை வைத்து ஒரு படி இறங்கி கால் நனைத்து வந்தோம்.

வரும் வழியில் ஒரு சிறுவன் கோணியில் எலுமிச்சம்பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். பெரிய பழங்களாக ஆறு பழம் பத்து ரூபாய் சொன்னான். வாங்கிக் கொண்டேன்.

இப்படியாக, நிறைந்திருக்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் காட்சிகளை பார்த்து வந்தோம். மனதில் அப்படி ஒரு திருப்தி – இன்றைய பொழுது பார்த்த, சந்தித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

ஆதி வெங்கட்

எங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா


Photo of the day Series – Part 7

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


சனி, 28 ஜூலை, 2018

வியாழன், 26 ஜூலை, 2018

மனதைத் தொட்ட விளம்பரங்கள்….



தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் யூ ட்யூபில் பாடல்/சினிமா பார்க்கும் போது நடுவில் வரும் விளம்பரங்கள் பல சமயங்களில் எரிச்சல் உண்டாக்குபவை. ஆனால் சில விளம்பரங்கள் மனதைத் தொடுபவை. சமீபத்தில் பார்த்த இரண்டு விளம்பரங்கள் மிகவும் பிடித்திருந்தது. ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் 20 வருடங்கள் முடிந்ததைக் கொண்டாடும் வகையில் சில விளம்பரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றில் இரண்டு ரொம்பவும் பிடித்தது. குறிப்பாக இந்த விளம்பரம்..... எத்தனை முறை பார்த்து விட்டேன் என கணக்கில்லை.

புதன், 25 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] – மலையுச்சியில் மாளிகை



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை...
உதய்பூர் நகரிலிருந்து...

திங்கள், 23 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கொட்டாவி விடுகிறதா... இல்லை உள்ளே வந்தா.. என சாப்பிட்டுடுவேன் என்று சொல்கிறதா?
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

ஞாயிறு, 22 ஜூலை, 2018

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா



Photo of the day Series – Part 6

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

வெள்ளி, 20 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


போஹா எனும் அவல்....
உதய்பூரிலிருந்து....

புதன், 18 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வழியில் பார்த்த ஒரு நீர்நிலை...
சில்லென்ற காற்று வந்ததே....
உதய்பூர் செல்லும் வழியில்....

திங்கள், 16 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ராஜஸ்தான் என்றதும் நினைவுக்கு வரும் தலைப்பாகை....
புஷ்கரிலிருந்து உதய்பூருக்கு...

ஞாயிறு, 15 ஜூலை, 2018

கருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா


Photo of the day Series – Part 5

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

திருவரங்கத்து வீதிகளில் தேரோட்டத்தின் போது எடுத்த படம். கைகளில் சங்கு, தோளில் தொங்கும் பரங்கிக்காயால் ஆன பழங்காலத்து ஹேண்ட் பேக்…. பொதுவாக சுரைக்காயால் ஆன குடுக்கை வைத்துக் கொள்வது தானே வழக்கம்!


படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் இருக்கின்றன.  எவை அதிகமாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அவன் நடந்து கொள்கிறான்.  இந்தக் குழந்தைகள் சாத்தானின் கொம்புகளை மாட்டிக் கொண்டிருந்தாலும், நல்ல எண்ணங்களுடன், சிரித்த முகத்துடனும் இருக்கிறார்கள்! இந்தப் பருவத்தில் இப்படி விளையாடுவது தானே இயல்பு… கொம்பை வாங்கி மாட்டிப் பார்க்க ஆசை இருந்தது! வெட்கம் தடுத்தது! முன்பெல்லாம் தில்லியில் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது தமிழகத்திலும் கிடைக்கிறது இந்த சாத்தான் கொம்புகள் – இதில் விளக்கு வேறு எரியும்!


படம்-3: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

முதுமை ஒரு வரம்.  “வயதாகிறதே என்று வருத்தப் படாதீர்கள். அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!”


படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

என்னடா நடக்குது இங்கே…..

ஒண்ணுமே புரியலையே! யாராவது சொல்லுங்கப்பா…

கண்களில் தெரியும் கேள்விகள் ….
பதில் சொல்வார் யாரோ?


படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

வாழ்க்கை என்பது ஐஸ்க்ரீம் மாதிரி….
டேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
வேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
அதனால வேஸ்ட் பண்ணாம,
டேஸ்ட் பண்ணுவோம்! 

மகிழ்ச்சி என்பது உங்கள் கையில்…. மகிழ்ச்சியாக இருப்போம்!


படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

நிறங்களில் கருப்பென்ன, சிவப்பென்ன, மனத்தில் கள்ளம் கபடம் இல்லாவிட்டால் போதும். நல்ல எண்ணங்கள் நம்மை வழிநடத்தட்டும். 

“அண்ணே, என்னை ஒரு ஃபோட்டோ புடிக்கறீங்களா?” என்று அவராகவே கேட்க, நான் எடுத்த புகைப்படம். வெள்ளந்தியாகவே இருந்து விட்டால் சுகம் தான். அவர் கேட்காவிடினும் எடுத்திருப்பேன் என்பது வேறு விஷயம்.

படித்ததில் பிடித்த கவிதை ஒன்று….

வெள்ளையான
நிறமா அழகு?
இல்லையடி
என் செல்லமே…
வெள்ளந்தியான

உன்
உள்ளமே அழகு...

     நவீன் ப்ரகாஷ். 

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

இதுவரை Photo of the Day Series-ல் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க…..





மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஞாயிறு, 8 ஜூலை, 2018

கோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா


Photo of the day Series – Part 4

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


படம்-1: எடுத்த இடம் – ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு நெடுஞ்சாலை.

திங்கள், 2 ஜூலை, 2018

ஞாயிறு, 1 ஜூலை, 2018

புகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா?

Photo of the Day Series - 3

நான் வலைப்பூவில் தினம் தினம் எழுதி வந்தது நின்றிருக்கிறது. அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை! என்றாலும் இந்த ஞாயிறில் ஒரு பதிவு வெளியிட இதோ வந்தாயிற்று! முகநூலில் சில நாட்களாக வெளியிட்டு வந்த #Photo_of_the_day புகைப்படங்களின் தொகுப்பும் சில நாட்களாக வெளியிட முடியவில்லை. இன்று தான் ஒரு படம் வெளியிட்டு இருக்கிறேன் – அது இங்கேயும்! சென்ற வாரத்தில் வெளியிட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே புகைப்பட உலாவாக!