ஞாயிறு, 2 டிசம்பர், 2018

பீஹார் டைரி – நிழற்பட உலா – முதலாம் தொகுப்பு


சமீபத்தில் பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சில வேலைகளுக்காகச் செல்ல வேண்டியிருந்தது. அப்படியே கொஞ்சம் சுற்றியும் பார்க்கலாம் என நினைத்தேன். கேரள நண்பர் பிரமோத்-உம் புத்த கயா செல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவரும் நானும் வாரணாசி சென்றபோது புத்தகயா சென்றிருக்க வேண்டியது. அப்போது முடியாததால், நீண்ட நாட்களாக புத்த கயா போக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்ததால், அவரை அழைத்தேன். சில தகவல் பரிமாற்றங்களுக்குப் பிறகு சடுதியில் பயணத்திட்டம் தயாரானது. என் வேலைகளை முடித்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் சில நாட்கள் பயணம் – நடுவில் விடுமுறை தினங்கள் வந்ததால் சுலபமாக இருந்தது.

 
பயணங்கள் சென்று வந்த பின்னர் இங்கே பயணக் கட்டுரைகளை ஒரு தொடராக எழுதுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி தொடராக எழுதப் போவதில்லை. முடிந்த போது சில நினைவுகளை, பார்த்த இடங்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தனிப்பதிவுகளாக வெளியிட இருக்கிறேன். பீஹார் டைரி மற்றும் ஜார்க்கண்ட் டைரி என்ற தலைப்புகளுடன் சில பதிவுகள் வெளிவரலாம். இன்றைய பதிவில் பீஹார் மாநிலத்தில் எடுத்த சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.


படம்-1: நீங்க நல்லா இருக்கணும்....  ஆசிர்வாதம் செய்யும் சீக்கியப் பெரியவர்....
படம் எடுத்த பின் கொஞ்சம் காசு கொடுத்தோம். அருகில் வா என சைகையில் அழைத்து நான் எடுத்த புகைப்படத்தினைப் பார்த்த பிறகு முதுகில் தட்டிக் கொடுத்தார்....


படம்-2: மேளதாளத்துடன் ஊர்வலம் - ஊர்வலத்தில் போவது யார்? அடுத்த படத்தில் விடை!


படம்-3: chசட் பூஜா முடிந்த பிறகு தேவியின் உருவச்சிலை மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு நதியில் கரைக்கப்படும் - அப்படிச் சென்றபோது எடுத்த படம்.... 


படம்-4: சிதைந்த நிலையில் ஒரு அழகிய சிலை.... 
அருங்காட்சியகத்தில் எடுத்த படம்....


படம்-5: என்னவொரு நளினம் - வெண்கலச் சிலை....
இதுவும் அருங்காட்சியகத்திலிருந்து....


படம்-6:  முதலையின் வாய்க்குள் நடனமோ? ஒரு அழகிய சிற்பம்....
அருங்காட்சியகத்திலிருந்து....படம்-7: ஆஹா.... நம்மளதான் படம் எடுக்காங்க டோய்!


படம்-8: பீஹாரின் ஒரு வகை இனிப்பு - இதன் பெயர், விவரங்கள் தனிப்பதிவாக.....


படம்-9: இதுவும் ஒரு உணவுப் பண்டம் தான் - இதை விற்பதே ஒரு ஊரில் பலருக்கும் தொழில்! தனிப்பதிவு வரும்....


படம்-10: மனிதனை அமர வைத்து மனிதன் இயக்கும் ரிக்‌ஷா... இன்னமும் இங்கே நிறைய இருக்கிறது....


படம்-11: அறுவடை செய்யப்பட்ட காலிஃப்ளவர் - சாலையோரங்களில் விற்பனைக்கு - நிலத்தின் பக்கத்திலேயே...


படம்-12: ஹலோ... இந்த சின்ன யானையில எத்தனை பேரைத் தான் ஏத்துவீங்க டே...


படம்-13: பச்சைப் பசேலென ஒரு நீர் நிலை...


படம்-14: நீர்நிலைக்கு நடுவே இருக்கும் ஜல் மந்திர்.... 


படம்-15: அப்படியே தண்ணீரில் ஒரு ரவுண்ட் போலாம் வரீங்களா?


படம்-16: ஹலோ எக்ஸ்யூஸ் மீ.... நீ என்ன செய்யறேன்னு சொல்லேன்...


படம்-17: வாழ்க்கைச் சுமைக்கு முன் இச்சுமை எம்மாத்திரம் என வீறுநடை போடும் மனிதர்....


படம்-18: நாளந்தா பல்கலைக்கழக இடிபாடுகள்....
எத்தனை இழந்திருக்கிறோம்...


படம்-19: கடை விரித்தேன்... கொள்வாரில்லை...
வாடிக்கையாளருக்குக் காத்திருக்கும் சிறுவியாபாரி...


படம்-20: வாங்களேன்... இந்த குதிரை வண்டியில ஒரு ரவுண்ட் போகலாம்!

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் பிடித்திருக்கிறதா? படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  வாத்து படம் ஈர்க்குது...இதோ எல்லாம் பார்க்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!

   நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட வேண்டும். பார்க்கலாம்.

   நீக்கு
 2. படங்கள் எல்லாம் அழகு!

  அந்தக் குளத்தின் பச்சையில் அந்த வாத்துக்ள் படம் ஹையோ செமையா இருக்கு...மிக மிக அழகான படம்...

  அது ஊட்டி வர்க்கி போல இருக்கே!

  அந்த ஸ்வீட்டு அனார்சி கோலியா? அரிசிமாவில் செய்வது? பாண்டிச்சேரியில் இருந்தப்ப என் மகனுடன் படித்த பீஹார் தோழர் இப்படித்தான் ஒன்று கொண்டுவந்தார். அவரிடம் பெயர் தெரிந்து கொண்டு நெட்ட்டில் பார்த்து....

  அரிசி சர்க்கரை சேர்த்து புளிக்க வைத்து உருட்டி எள்ளு புரட்டி பொரித்து...நான் ஒரே ஒரு முறை அங்கிருக்கும் போது செய்து பார்த்தேன் எண்ணெய் அதிகம் குடித்தது போலத் தெரிந்தது ஆனால் சுவை நன்றாகஅதற்கப்புறம் செய்யவில்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி!

   ஊட்டி வர்க்கி போல - இல்லை! இது சாஃப்ட் சமாச்சாரம் - இதிலும் இரண்டு வகை இருக்கிறது.

   பீஹாரில் இந்த இனிப்புகள் நிறைய உண்டு. சாப்பிட்டதுண்டு - பீஹாரி நண்பர்கள் கொண்டு வருவார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். படங்கள் யாவும் அழகாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சிலைகள் ரொம்ப அழகா இருக்கு முதலை வாயில் அந்த சிலை என்று ரொம்ப அழகு...முதலை வயில் கவ்வுவதைக் கூட அழ்கியல் சேர்த்து கற்பனையில் ரசிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கு ...

  காலிஃப்ளவர் நிலத்தின் அருகிலேயே வாவ்...ஃபார்மர்ஸ் மார்க்கெட் போல..

  குழந்தைகள் வெள்ளந்தி...

  எல்லாமே அழகு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலை வாயில் குழந்தை - அந்தச் சிற்பம் ரொம்பவே கவர்ந்தது.

   காலிஃப்ளவர் பறித்து விவசாயிகளே சாலையோரங்களில் விற்கிறார்கள். மற்ற காய்கறிகளும் இப்படி நிறையவே பார்க்க முடிந்தது - குறிப்பாக உருளை - மூட்டை மூட்டையாக.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. சீக்கியப்பெரியவர் ஒரு ஜாடைக்கு நம்மூர் குள்ளமணி போல இருக்கிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குள்ளமணி - அப்படியா... எனக்கு குள்ளமணி உருவம் போலத் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. விநாயகரை கரைப்பது போல அந்த தேவியையும் கரைத்து விடுவார்களா? சிறுவர்கள் படம் ஜோர். சேர்ந்திருக்கும் இனிப்பை எறும்புகள் எடுத்து விட்டால் மிச்சமிருக்கும் பொரி போல இருக்கிறது அந்தமுதல் தின்பண்டம். இரண்டாவது மைதாவில் செய்யப்பட்ட இனிப்புமில்லாத ஒன்று....

  ரிக் ஷாக்காரர், காலிபிளவர் எல்லாம் கவர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் - மண் பொம்மைகளை ஆற்றில் கரைத்து விடுவார்கள். மேளதாளத்துடன் எடுத்துச் சென்று வணங்கி ஆற்றில் கரைத்து விடுவார்கள் - கூடவே பூஜை நேரத்தில் பயன்படுத்திய பூக்கள் மற்ற கழிவுகளும் ஆற்றில் தான்.

   மிச்சமிருக்கும் பொரி - ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. படம் 16 : "அவன் ரொம்ப நேரமா என்னை ஃபாலோ பண்றாண்டி.... "

  படம் 17. "வாழ்க்கையும் இப்படிதாங்க... பார்க்கப்பெறும் சுமைபோலத்தோன்றும். கடைசியில் முயன்றால் வைக்கோல் மாதிரி எளிதாகச் சுமந்துவிடலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபாலோ பண்றாண்டி - ஹாஹா.... சுளுக்கெடுத்துடலாம்னு பதில் சொல்லி இருக்குமோ....

   வைக்கோல் மாதிரி எளிதாய்ச் சுமந்து விடலாம் - நல்ல கருத்து. அதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிப்பு. இல்லாவிடின் கசப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. நாளந்தா கவர்கிறது. பார்க்க ஆவல். அவ்வளவுதானா? உள்ளே ஏதும் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளந்தா - பார்க்கும்போதே மனதில் அப்படி ஒரு வருத்தம். எத்தனை இழந்திருக்கிறோம். சில தகவல்கள் கேட்ட போது மனதுக்குள் அப்படி ஒரு வெறுப்பு வந்தது - அதைச் செய்தவர்கள் மீது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. இங்கே காய்களை வயலுக்கு வெளியே சாலையில் வைத்திருப்பது போலவே ஒரிசாவிலும் பார்க்கலாம். அந்த இனிப்பு என்னனு தெரியலை. எள்ளுருண்டையோனு நினைச்சேன். ஆனால் அது இல்லை. இன்னொன்று பார்க்க வெஜ் பஃப் போலத் தெரியுது. ஆனால் நீங்க உள்ளூர் உணவுனு சொல்றீங்க. நாளந்தா இடிபாடுகள் பார்த்தால் மனம் வலிக்கிறது. எல்லாப் படங்களும் அவற்றுடன் கூடிய செய்திகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடக்கே நிறைய கிராமங்களில் - குறிப்பாக நெடுஞ்சாலை அருகே இருக்கும் கிராமங்களில் வயல்களில் அறுவடை செய்த காய்கறிகள், வேர்க்கடலை போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

   நாளந்தா இடிபாடுகள் - வேதனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. அருமையான காட்சிகள் பல. வரலாற்று வேதனை நாளந்தா. தனிப் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளந்தா வரலாற்று வேதனை - வருத்தம் தரும் உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. படங்கள் எல்லாம் அழகு.
  இனிப்பு தேன் மிட்டாய் போல இருக்கிறது, கசகசா மேலே இருக்கா? வெள்ளை எள்ளா?
  கீழே உள்ளது இனிப்புதான் சுருள் துக்கடா மைதாவில் சீனீகலந்து செய்யும் இனிப்பு என்று நினைக்கிறேன்.

  அன்னங்கல் அழகு.
  சீக்கிய முதியவரின் ஆசி கிடைத்து இருக்கிறது உங்களுக்கு.
  குழந்தைகள் அழகு.
  முதலை வாயில் சிற்பம் சுந்தரர் முதலை வாயில் இருந்து மீட்ட சிறுவனை நினைவூட்டும் சிற்பம் போல் இருக்கிறது. சிறு வயதில் விழுங்கிய சிறுவனை தேவார பதிகம் பாடி மீட்கும் படம் போல் இருக்கிறது.

  அனைத்தும் மிக அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவார பதிகம் பாடி மீட்கும் படம் போல இருக்கிறது - பதிகம் படிக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. இந்த வண்டியை குட்டி யானை என்று சொல்வார்கள் அதை அழகாய் விளக்கிய படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டி யானை - நிறைய மக்கள் அதில் - பேருக்குத் தகுந்தாற்போல.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 13. படங்களும் கருத்துகளும் ரசிக்க வைத்தன ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 14. அனைத்து படங்களும் அருமை. எங்களை மீண்டும் பீகார் அழைத்து சென்றதிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 15. /படம்-9: இதுவும் ஒரு உணவுப் பண்டம் தான் - இதை விற்பதே ஒரு ஊரில் பலருக்கும் தொழில்! தனிப்பதிவு பின்னே எழுத ஒரு தலைப்பு சிகினால் விடுவோமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிப்பதிவு எழுத வாய்ப்பு கிடைத்தால்.... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 17. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன ஜி.

  குறிப்பாக அந்த முதலை சிலை மிக மிக வித்தியாசமாய் இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலை சிலை பார்த்த உடனே பிடித்து விட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 18. சாமானியனி வாழ்க்கை முறையை எடுத்து சொல்லியது உங்கள் படங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. முதலை வாய் நடனம் அருமை!

  இப்போதைய பீஹாரைப் பார்க்கும் போது நாளந்தா பல்கலைக் கழகத்தில் படித்தவர்களின் வம்சமே இப்போது அங்கு இல்லை என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 21. அழகியபடங்கள் பல கதைகள் பேசுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....