ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வைகுண்ட ஏகாதசி - தில்லியில் தஞ்சாவூர் ஓவியங்கள்….
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தலைநகரம் கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பாலாஜி கோவிலில் நல்ல ஏற்பாடுகள் பலவும் செய்திருந்தார்கள். காலை 02 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு தான் நடை சாத்தினார்கள். பெருந்திரளமான தில்லி வாழ் மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அந்நாளில் கோவில் வளாகத்தில் சில கடைகளுக்கும் இடம் கொடுத்திருந்தார்கள். காஞ்சிபுரம் புடவை, தஞ்சாவூர் ஓவியங்களுக்கான ஸ்டால், திருமலா திருப்பதி தேவஸ்தான பிரஸாதம் மற்றும் புத்தாண்டு கேலண்டர், மற்றும் புத்தக விற்பனை என நிறைய விஷயங்கள். அன்றைய தினம் அலுவலகம் உண்டு என்பதால் இரவு தான் என்னால் கோவிலுக்குச் செல்ல முடிந்தது.

இரவு உற்சவ மூர்த்தி சேஷ வாகனத்தில் எழுந்தருள, நானும் சேவித்தேன். மூலவரைப் பார்க்க நீண்ட வரிசை. வெளியிலிருந்தே ஒரு ஹாய் சொல்லி வைத்தேன். சற்று நேரம் அங்கே நண்பர்களுடன் இருந்து அரட்டை. அங்கே காலை முதலே பிரசாத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு தொன்னையில் கதம்ப சாதமும் மற்றொரு தொன்னையில் வண்ணம் சேர்க்காத கேசரியும்! எனக்கும் கிடைத்தது! மகிழ்ச்சி. இரவு உணவு வீட்டிற்கு வந்து தான் சமைக்க நினைத்திருந்தேன். கோவிலிலிருந்து புறப்படும் முன்னர் கதம்ப சாதம் கிடைக்க, அதுவே இரவு உணவாக முடிந்தது! அன்றைய தினம் ஏழுமலையான் படி அளந்தார்! உணவினைப் பற்றிய கவலை இல்லாததால் கடைகள் பக்கமும் ஒரு விசிட் அடித்தேன்.

புத்தகங்களும் வைத்திருந்தார்கள். எல்லாமே இலவசம்! பத்து பன்னிரெண்டு புத்தகங்கள் எனக்குப் பிடித்த மாதிரி கிடைத்தன – திருப்புகழ்த் திருத்தலங்கள், திருப்பூவனப் புராணம், பகவத் கல்யாண மஹோத்ஸவம், திருவையாறு தல வரலாறு, நாமமும் அனுமன் என்பேன் [கம்பர் காட்டும் அனுமன்], வைணவ விழுதுகள் – ஒரு சின்ன பட்டியல்! - எடுத்து வந்தேன். படிக்க வேண்டும். ஏற்கனவே படிக்காத புத்தகங்கள் இருக்கிறதே என மனது சொன்னாலும் கேட்கவா போகிறேன்! புத்தகங்கள் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் புத்தகங்கள் இருந்தன. ஏன் உருது மொழியில் கூட புத்தகம் இருந்தது! உருது மொழிக்கு என்னைத் தெரியாது என்பதால் அதை எடுத்துக் கொள்ளவில்லை!

கலைக்கு விலையேது:

ஸ்ரீ பாலாஜி ஆர்ஸ் லோகநாதன் அவர்களது தஞ்சாவூர் ஓவியங்களுக்கான ஸ்டாலில் சிறிது நேரம் இருந்தேன். அலைபேசியில் ஓவியங்களை படம் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் மொழிபெயர்ப்பு வேலைகள் – வந்தவர்கள் கேட்டதை கடை உரிமையாளருக்கு தமிழில் சொல்வதும், அவர் சொன்னதை வாங்க வந்தவர்களிடமும் சொல்வது! என சில நிமிடங்கள் அங்கே இருந்தேன். ரொம்பவே அழகான ஓவியங்கள். 7 அடி உயரமும்,  நான்கு அடி அகலமும் உள்ள ஒரு பெரிய வெங்கடாஜலபதி ஓவியம் மிகவும் கவர்ந்தது. மரச்சட்டத்தில் ரொம்பவே அழகாக ஃபினிஷ் செய்யப்பட்ட ஓவியம் – விலை எவ்வளவு எனக் கேட்க, எட்டு லட்சம் என்றார்! கலைக்கு விலையேது! அங்கே இருந்த ஓவியங்களின் படங்களே இந்த ஞாயிறில். அலைபேசியில் எடுத்ததால் கொஞ்சம் சுமாராகவே வந்திருக்கிறது படங்கள்.

வாருங்கள் தஞ்சாவூர் ஓவியங்களின் நிழற்படங்களை ரசிக்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட ஓவியங்களின் படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  படங்கள் ரொம்ப அழகா இருக்கு...

  பதிவு பார்க்கிறேன்...இன்று திருவாதிரை இல்லையா ஸோ பிசி களி அண்ட் கூட்டு...செய்ய

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் 🙏 கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வௌகுண்ட ஏகாதசிக்கு கோயில் அருகில் கடைகள்! அதுவும் புத்தகங்கள் ஃப்ரீயாகவா பரவாயில்லையே!

  ஹை கதம்ப சாதம் கலர் சேர்க்காத கேசரி!!! ஆமாம் சில கோயில்கள், மடங்களில் கலர் சேர்க்காமல் கேசரி செய்வதுண்டு. கோயம்புத்தூரில் இருந்தப்ப ஒரு முறை வீட்டுக்கு வந்த உறவினருடன் அங்கு ஆனைக்கட்டி ஆஸ்ரமத்துக்குச் சென்ற போது அங்கு கலர் சேர்க்காத கேசரி சாப்பிட்டபின் அட இது நல்லாருக்கு நல்ல விஷய்மாச்சே என்று அப்பலருந்து சேர்க்காம செய்யறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்ப சாதம் திருப்பதி கோவில் பிரசாதமாக இங்கே கிடைக்கிறது. நண்பர் வீட்டுப் பூஜைகளிலும் கதம்ப சாதம் பிரசாதமாக கிடைக்கும்.

   செயற்கை வண்ணம் சேர்க்காமல் செய்யப்படும் கேசரி நல்லது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். சுமாராகவா? எல்லாம் நல்லாவே வந்திருக்கின்றன வெங்கட். வல்லவன் நீங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிப் போடுங்க ஸ்ரீராம்...

   ஸ்ரீராம் கீழுள்ள கமென்டிற்கு இங்கவே கொடுத்துடறேன்...சென்னையிலும் கூட கதம்ப சாதம் பிரசாதம் சாப்பிட்டிருக்கேன்...எங்கள் வீட்டு அருகில் இருக்கும் அம்மன் கோயில் மற்றும் சிவன் கோயிலில்...திருப்பதியில் கூட உண்டு.

   வெங்கடேஷ் பட் கூட திருப்பதி கதம்பசாதம் ரெசிப்பி சொல்லிக் கொடுத்ததை பார்த்த நினைவு...

   கீதா

   நீக்கு
  2. DSLR-ல் எடுக்கும் அளவிற்கு திருப்தி தரவில்லை இப்படங்கள்.

   வைணவக் கோவில்களில் நான் கதம்ப சாதம் சுவைத்தண்டு கீதாஜி.

   நீக்கு
  3. கீதாஜிக்கு சொன்னது தான் - DSLR கேமராவில் எடுக்கும்போது கிடைக்கும் திருப்தி இதில் இல்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதம்பசாதம்... அட... ப்ரசாதத்தில் இது கூட உண்டா? இரவு உணவாக அதையே வைத்துக்கொள்ளும் அளவு தருகிறார்களா... கடைகளை பார்ப்பது(ம்) சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது.

   கடைகள் - ஸ்வாரஸ்யம் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. வைகுண்ட ஏகாதசி கோயில் தரிசனம் செய்திருக்கிறேனா நான் என்று யோ............சித்துப்பார்க்கிறேன்! நினைவுக்கு வரவில்லை! படத்தின் விலை எட்டு லட்சம்தானா? ஓ... எவ்வளவு எளிமையான விலை?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் நானும் ஊரிலிருந்த வரைதான். அதன்பின் நான் சென்றதில்லை.....நானும் யோ.........சித்துக் கொண்டே இருக்கிறேன்....எனக்கும் நினைவு இல்லை ஹிஹிஹி...அது போலவே ஆருத்ரா தரிசனமும்....எங்கள் ஊரில் இருந்தவரைதான் இதுவும்...அதன் பின் அதுவும் இல்லை என்றே நினைக்.....

   கீதா

   நீக்கு
  2. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் இருந்ததில்லை. இருந்திருந்தாலும் அன்றைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை - அவ்வளவு கூட்டத்தில் சென்று வர விருப்பமில்லை. நின்று நிதானமாக பார்க்க முடியவில்லை என்பது ஒரு விதத்தில் அலுப்பான விஷயம்.

   எட்டு லட்சம் - தங்க ரேக்குகளில் செய்த ஓவியமாயிற்றே.... அதனால் தான் கலைக்கு விலையேது என்று சொன்னேன்! 2000 ரூபாய்க்கு குறைவாக ஓவியம் கிடைக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. இன்றைக்கு ஆருத்ரா தரிசனம் - மலை மந்திர் செல்லலாம் என யோசித்துச் செல்லவில்லை. :) களியும் கிடைக்கவில்லை! மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால் யோசிக்க வேண்டியிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. தஞ்சாவூர் படங்களின் அழகும் கலை நயமும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. படங்கள் எல்லாம் மிக அழகு.

  புத்தகங்களும் வைத்திருந்தார்கள். எல்லாமே இலவசம்!//

  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. //உருது மொழிக்கு என்னைத் தெரியாது என்பதால் அதை எடுத்துக் கொள்ளவில்லை//

  ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் ஜி ரசித்தேன். படங்கள் இன்னும் திறக்கவில்லை பிறகு காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. கண்ணை கவரும் அருமையான ஓவியங்களின் படங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. கருத்துரை பப்ளிஷ் ஆனதும் படங்கள் திறந்து விட்டன... தரிசித்தேன் ஜி.

  பதிலளிநீக்கு
 11. தனித்துவ ஓவியப்பாணியிலும், கலையழகிலும் உள்ளம் கொள்ளை கொள்ளும் தஞ்சாவூர் ஓவியங்கள் அனைத்துமே கண்கொட்டாமல் ரசிக்கவைக்கும் அழகு.

  \\உருது மொழிக்கு என்னைத் தெரியாது என்பதால் அதை எடுத்துக் கொள்ளவில்லை\\ ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 12. தஞ்சாவூர் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 13. வெங்கட்ஜி தஞ்சாவூர் ஓவியங்கள் புகைப்படங்கள் எல்லாமே நல்லாருக்கு க்ளியரா இருக்கு...தஞ்சாவூர் ஓவியங்களே அழகுதானே...

  //உருது மொழிக்கு என்னைத் தெரியாது என்பதால் அதை எடுத்துக் கொள்ளவில்லை!//

  ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ஜி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 14. அது என்ன மச்ச கன்னியா நானிதுவரை காணாதது நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மச்ச கன்னியா? தெரியவில்லை. எனக்கும் அந்த ஓவியம் பிடித்திருந்தது. இரண்டு அளவுகளில் ஓவியங்களை வைத்திருந்தார்கள். அதனால் இரண்டுமே இங்கே வந்திருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 16. படங்களும், உங்கள் அனுபவமும் எல்லாமே சிறப்பாக இருக்கிறது

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 17. படங்களும் அனுபவமும் அருமையாக இருக்கின்றன. கதம்பசாதம் என்பது கிட்டத்தட்ட நம்ம சாம்பார் சாதம் போலத் தானே! க்ஷீரா எனப்படும் கேசரியை மஹாராஷ்ட்ரா குஜராத், ராஜஸ்தானில் நிறமி இல்லாமலே செய்கின்றார்கள். சாப்பிட்டிருக்கேன். நல்லாவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ஷீரா - நம் ஊரில் கூட உண்டு. பால் சேர்த்து செய்வார்கள். கர்னாடகா காரர்களும் க்ஷீரா செய்வதுண்டு.

   கதம்ப சாதம் - சாம்பார் சாதம் இரண்டிலும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 18. புத்தகங்கள் கிடைச்சிருப்பதைப் பார்த்தால் அங்கே வராமல் போயிட்டேனேனு இருக்கு! :) படிச்சுட்டுச் சொல்லுங்க! சென்னை முகப்பேர் சந்தான ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் அடிக்கடி கதம்ப சாதம் கொடுப்பாங்க! வேலூர் ஶ்ரீபுரத்திலும் கொடுத்தாங்க! ஆனால் ரொம்பவே அலட்டல்! ஆகையால் நாங்க வாங்கிக்கலை! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகங்கள் - :) திருவரங்கம் வரும்போது தருகிறேன்.

   வேலூர் ஸ்ரீபுரம் இதுவரை சென்றதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 19. அந்த 8 லட்சத்தைக் கண்ணுல காட்டலியே நீங்க. அவ்வளவு விலைக்கு எப்படிப் பண்ணியிருந்தாங்கன்னு பார்க்க நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எடுக்க வாகாக இல்லை. ஆகவே எடுக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....