வியாழன், 27 டிசம்பர், 2018

கதம்பம் – ஷிம்லா மிர்ச் சட்னி – கிளாஸ் பெயிண்டிங் – கோலங்கள் – திறந்தவெளி நூலகம்சாப்பிட வாங்க – ஷிம்லா மிர்ச் சட்னி - 22 டிசம்பர் 2018:ஷிம்லா மிர்ச் எனும் குடமிளகாய் சட்னி.

கோலத்தில் மட்டும் தான் வண்ணங்களா!!!


முதல்முறையாக குடமிளகாயில் சட்னி செய்தேன். வாங்க சாப்பிடலாம். எப்படிச் செய்யணும்னு கேட்டா ரொம்ப சிம்பிள் - வெங்காயம், குடமிளகாய், தக்காளியுடன் வரமிளகாய் உப்பு சேர்த்து வதக்கி அரைக்க வேண்டியது தான். கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் எல்லாம் விருப்பம் தான்.

திறந்த வெளி நூலகம் - 21 டிசம்பர் 2018

திருச்சி மாநகராட்சி பகிர்ந்து கொண்ட செய்தி இங்கேயும் ஒரு தகவலாக…."இந்தியாவில் முதல் முறையாக *Give a book & take a book* என்னும் முறையில் தெருவோர திறந்தவெளி நூலகம் திருச்சி மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ளது."

இந்தியாவில் முதல் முறையாக திருச்சி ஆபிசர் காலணி,புத்தூர் பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் "தெருவோர திறந்தவெளி நூலகம்" திறக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 2000 புத்தங்கங்களை வைப்பதற்கு தேவையான வசதிகள், மற்றும் அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு தேவையான அமர்வு நாற்காலிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் சிறப்பம்சமாக *Give a book and take a book* என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது "மக்கள் தாங்கள் படித்து முடித்த புத்தங்கங்களை மற்றவர்கள் படிப்பதற்காக இங்கு வழங்கிவிட்டு, இந்த நூலகத்தில் இருக்கும் வேறு புத்தகங்களை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்", என்ற புதிய முறையில் தொடங்கப்பட்டுள்ளது. நல்ல நூல்களை பகிர்ந்து கொள்ளவும், புதிய நூல்களின் அனுபவம் பெறவும் இந்த நூலகம் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. பொது மக்களும் ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்குவதுமாகவும், புதிய புத்தகங்கள் எடுத்து செல்வதுமாக இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். நூலக திறப்பு விழாவில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி மாண்புமிகு ஜோதிமணி அவர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் IAS, நகராட்சி நிர்வாக ஆணையர் திரு.பிரகாஷ் IAS அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ரோஷ்ணி கார்னர் – 23 டிசம்பர் 2018மகள் இணையத்தில் பார்த்து முதல்முறையாக செய்து பார்த்த கிளாஸ் பெயிண்ட்டிங். OHP ஷீட்டில் செய்திருக்கிறாள். படமும் அவளே வரைந்தது தான்.

எங்க ஊர் எங்க ஊர்தான் – 24 டிசம்பர் 2018

எங்க ஊரின் சிறப்புகளை இந்த காணொளியில் பாருங்க.. கோவைன்னா சும்மாவா…
மார்கழி கோலங்கள் - டிசம்பர் 2018

சென்ற கதம்பம் பதிவில் மார்கழி முதல் நான்கு நாட்கள் எங்கள் வீட்டு வாசலில் போட்ட கோலங்களைப் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரம் இன்னும் ஆறு கோலங்கள்….விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  கோலங்கள் அழகா இருக்கே!!! அண்ட் சிம்ல மிர்ச் சட்னி ஆஹா!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் ஆதி குடைமிளகாய்ச் சட்னி சிம்பிள். இதே தான் வீட்டில் உடனே சாப்பிடுவதாக இருந்தால். டிஃபன் பாக்ஸ் கட்ட வேண்டும் என்றால் தேங்காய் சேர்க்காமல் இப்படி அரைத்தும் விட்டு தாளித்து மீண்டும் கொஞ்சம் எண்ணையில் வதக்கி வைத்தால் மதியம் இரவு வரை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று சென்னையில் அப்படிச் செய்ததுண்டு. அந்த வெதருக்கு டக்கென்று கெட்டு விடுமே..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. சட்னியில் துளி புளியும் சேர்த்துச் செய்யலாம் தேங்காய் இல்லாமல் அதுவும் ஒரு வித சுவை...வெங்காயம் இல்லாமலும்..

  உங்க சட்னி தோசை சூப்பரா இருக்கு...சாப்பிட வந்துரலாம் போல!!!

  //"இந்தியாவில் முதல் முறையாக *Give a book & take a book* என்னும் முறையில் தெருவோர திறந்தவெளி நூலகம் திருச்சி மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ளது."//

  இது சூப்பர் ஐடியா!!!வாவ்!!! ரொம்பவே ஈர்க்கிறது இந்த ஐடியா...நல்ல ஒரு விஷயம் இல்லையா...திருச்சி மாநகராட்சியை பாராட்டனும்..பார்க்கவும் ரொம்பவே மனதை ஈர்க்கிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. ரோஷ்னிகுட்டி ரொம்ப அழகா செஞ்சுருக்கா க்ளாஸ் பெயிண்டிங்க்! கை குலுக்கிப் பாராட்டரேன்...ரோஷ்னி நிஜமாவே ரொம்ப அழகா எல்லாம் கலக்கறீங்க வாழ்த்துகள்!

  ஆதி உங்க கோலங்கள் ரொம்ப அழகா இருக்கு ரங்கோலி பொடி ஈவனா அழகா போட்டுருக்கீங்க...பார்க்க ஸ்மூத்தா தெரியுது சூப்பர்!!

  காணொலி மட்டும் அப்புறம் பார்க்கறேன்

  கதம்பம் அருமை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவும் மகளும் சேர்ந்து கலர் கொடுப்பார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. சட்னியில் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் சேர்த்துக்கொண்டால் அதுவும் ஒரு ருசிதான்! குட்மார்னிங்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நூலக திட்டம் அருமையான ஏற்பாடு. பொறுப்பாளர் யாராவது உண்டா? இந்தச் செய்தி படிக்கும்போது மயிலாப்பூர் ஆழ்வார் காலமான செய்தி நினைவுக்கு வந்து வருத்தமேற்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறுப்பாளர் இருக்க வேண்டும். யாரும் இல்லாமல் விட முடியாதே நம் ஊரில்.


   ஆழ்வார் பற்றி முகநூலில் நானும் படித்தேன். அவரது மறைவிற்கு எனது அஞ்சலி.
   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 7. ரோஷ்ணியின் திறமைகளுக்கு ஒரு ஸலாம். கோலங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. திறந்தவெளி நூலகம் போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா
  ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரப்பட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல முயற்சி தான் ஐயா. பலரும் பயன் அடையலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. நூலகம் குறித்துக் கேள்விப் பட்டேன். இங்கேயும் அது மாதிரி வரணும். குடைமிளகாயை நம்மவர் வாங்கவே மாட்டார். ஒரு குருக்ஷேத்திர யுத்தம் நடத்தித் தான் வாங்க வைக்கணும். அப்புறம் எங்கே சட்னி செய்யறது? :)))))) பச்சை மிளகாயில் செய்வேன். மிளகாய்த் தொக்கும் அடிக்கடி பண்ணுவேன். :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிளகாய்த் தொக்கு - படிக்கும் பொழுது கண்ணில் நீர்! :)

   சிலருக்கு சில காய்கறிகள் பிடிப்பதில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  2. மிளகாய்த் தொக்கு அவ்வளவு காரமாக இருக்காது வெங்கட், அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்கும், கொஞ்சம் புளித்த வெந்தய தோசைக்கும் நல்ல துணை. சப்பாத்தி, தேப்லா, பராட்டா, மோர் சாதம் போன்றவற்றிற்கும் துணை! மஹாராஷ்ட்ராவில் சமோசா வாங்கினால் தொட்டுக்கக் கொடுக்கும் சட்னியோடு பச்சைமிளகாய் வதக்கினதும் கொடுப்பாங்க! நான் அதைச் சாப்பிட்டதில்லை. பொதுவா சமோசாவே எனக்கு இரண்டாம் பட்சம் தான். அவ்வளவு பிடித்தம் இல்லை. :)))))

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. கோலங்கள், ரோஷ்ணியின் ஓவியம் எல்லாமும் முகநூலிலும் பார்த்தேன். மணக்கும் கதம்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. திறந்தவெளி நூலகம் நல்ல முயர்ச்சி. திருச்சி செல்லும்போது பார்க்க விரும்புகிறேன்.ரோஷ்ணியின் கிளாஸ் வேலைப்பாடு மிகவும் அருமை. கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 13. கோலங்கள் நல்லா இருக்கு..

  குடமிளகாய் சட்னிக்கு கொஞ்சம் உ.பருப்பு வரமிளகாய் சேர்த்து இளம்பொன் முறுவலாய் வறுத்து அதனோடு குடமிளகாய், தக்காளி, கொஞ்சமா வெங்காயம், பூண்டு, புளி, உப்பு சேர்த்து அரைப்பது என் வழக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  குடமிளகாய் சட்னி நானும் அடிக்கடி செய்வதுண்டு. புளி வைத்து தக்காளி இல்லாமல், வத்தல், உ. ப க. ப கொஞ்சம் வறுத்து,கு. மிளகாய் வதக்கிச் செய்வதுண்டு. தங்கள் முறையும் வெகு நன்றாக உள்ளது.

  திறந்த வெளி நூலகம் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்குமென தோன்றுகிறது. அமைத்தவருக்கு பாராட்டுகள்.

  ரோஷ்ணியின் கிளாஸ் பெயிண்டிங் கைவண்ணம் மிகவம் நன்றாக உள்ளது. விதவிதமாக கைவண்ணங்களில் திறம்பட ஈடுபடும் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  தங்களின் மார்கழி கோலங்கள் மிக அழகாக உள்ளது. பார்த்து ரசித்தேன். தங்களுக்கும் பாராட்டுக்கள்.
  கதம்பம் மணம் வீசியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 15. திறந்தவெளி நூலகம் அருமையான செய்தி. ஆனால் மழைக்காலங்களில் என்ன பாதுகாப்பு செய்திருக்கிறார்கள் என்று தெரியாவில்லையே. எங்கே மழை பெய்கிறது என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

  ரோஷ்ணியின் ஓவியத் திறமை பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதிய பாதுகாப்பு இருப்பதாகத் தான் தெரிகிறது. மழை எங்கே பெய்கிறது! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....