ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

BIYAHE (JOURNEY) – குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

முன்னேற்றம் இயற்கையின் விதிகளில் ஒன்றல்ல. மனித சமுதாயம் வாழுமா, வீழுமா என்பது வானிலுள்ள விண்மீன்களைப் பொறுத்தல்ல. நம்மைப் பொறுத்தே – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.


இந்த வாரமும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறும்படம் வெளிநாட்டுக் குறும்படம் தான் – ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் உண்டு! மொழி தெரியாது என்ற கவலை வேண்டாம்.  இதனை குறும்படம் என்று சொன்னாலும், இது ஒரு விளம்பரமும் கூட!  ஒரு முதியவர் – தள்ளாத வயதிலும் வாகனம் செலுத்தி பணம் ஈட்டுகிறார் – தனது மகனுக்காகவும், பேரனுக்காகவும். மகன் ஒரு விபத்தின் காரணமாக காலில் கட்டுப் போட்டுக் கொண்டு வீட்டில் இருப்பதால் பெரியவர் வேலை செய்ய வேண்டிய கட்டாயம்! இப்படி மூத்தவர்கள் தனது வயது காரணமாக வீட்டில் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து உழைக்கிறார்கள் – தங்கள் குழந்தைகளுக்காக! மனதைத் தொடும் இந்தக் குறும்படத்தினைப் பாருங்களேன்! Grand Parents Day கொண்டாட்டமாக இந்தக் குறும்படம் வெளியிட்டு இருக்கிறார்கள்.



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


BIYAHE(JOURNEY)


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 கருத்துகள்:

  1. இனிய ஞாயிறு காலை வணக்கம் அன்பு வெங்கட்.

    எப்பொழுதும் போல அருமையான குறும்படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

    நம் ஊரிலும் உழைக்கும் தாத்தா பாட்டிகளைப்
    பார்த்திருக்கிறேன்.
    குடும்பத் தேவை என்பது மட்டும் இல்லாமல்
    அவர்களால் ஒரு இடத்தில் சும்மாவும் உட்கார்ந்திருக்க முடியாது.
    தாத்தாவாக நடித்தவர் நடிப்பது போலவே தெரியவில்லை.
    பேரனும் அப்படியே.
    அன்பு வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி. பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நீண்ட நாளைக்குப் பிறகு மலாய் மொழி கேட்டேன். தமிழிலில் பல யூ டியுப் சேனல் மூலம் இதே போல படங்கள் தயாரித்து போடுகின்றார்கள். எல்லாமே பத்து லட்சம் இருபது லட்சம் பார்வையாளர்கள். மகள் சொல்கின்றார் என்று சிலவற்றைப் பார்த்தேன். குப்பையிலும் குப்பை. கேடு கெட்ட குப்பை. ஆனால் இந்த குறும்பட்சத்தில் உணர்வுகளை உணர்ச்சிகளை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகின்றார்கள் என்று பார்த்த போது எழுதும் எழுத்தை விட காட்சி வடிவம் எந்த அளவுக்கு தாக்கத்தை உருவாக்கும் உருவாக்க முடிகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      தமிழில் உள்ள குறும்படங்கள் - எனக்கும் அவ்வளவாக பிடிக்கவில்லை - ஒன்று நீண்ட நேரம் எடுக்கிறார்கள் - சினிமாவைப் போலவே இருக்க வேண்டும் என நினைத்து எடுப்பதாகத் தோன்றும் எனக்கு! கேடு கெட்ட குப்பை - :) சில குறும்படங்கள் பார்த்தபோது எனக்கும் தோன்றியது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தாத்தா, பாட்டி தினத்துக்கான பதிவுக்கும், குறும்படத்துக்கும் நன்றி. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் நன்றாக இருக்கிறது.

    அருமையான குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. குறும்படம் நல்ல தேர்வு..
    அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....