வியாழன், 3 செப்டம்பர், 2020

சஹானா இணைய இதழ் – கல்யாணக் கனவுகள் மின்னூல்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

”எப்படிச் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிரு. கனவு காண். அந்தக் கனவே உன்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.”

 

*****

 

இந்த நாளில் இரண்டு தகவல்களுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  முதலாவது தகவல் ஓர் இணைய இதழ் பற்றியது. “அப்பாவி தங்கமணி” (http://appavithangamani.blogspot.com/) என்ற பெயரில் வலைப்பக்கம் வைத்து எழுதிக் கொண்டிருந்தார். சில வருடங்களாக வலைப்பூவில் எழுதுவது குறைந்து விட்டது. தற்போது அந்தப் பக்கமும் அனைவரும் பார்க்கும்படியாக இல்லாமல் அவர் அனுமதித்தால் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கிறது. சென்ற மாதம் அப்பாவி தங்கமணி என்று அழைக்கப்பட்ட திருமதி கோவிந்த், “சஹானா” என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றினைத் தொடங்கி, சுவையான பல கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி இருக்கிறார்.  “சஹானா” இணைய இதழுக்கான முகவரி -   https://sahanamag.com/

 

சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவை, பயணக் கட்டுரைகள், ஆன்மீகம், கவிதைகள், சிறுவர் பக்கம், போட்டிகள், புதிர்கள் என பல்சுவை இணைய இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த இணைய இதழ் ஒரு மாத காலத்தினை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.  நம் வலைப்பதிவர் நண்பர்கள் சிலரின் பங்களிப்பும் அங்கே இருந்தது – திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் ஆன்மீகக் கட்டுரை, திரு பரிவை சே குமார் அவர்களின் சிறுகதை போன்றவை குறிப்பிட்டுச் சொல்லலாம்! என் இல்லத்தரசியின் பங்களிப்பாக, சமையல் குறிப்பு ஒன்றும் வெளிவந்தது.

 

சஹானா இணைய இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவர சகோதரி திருமதி கோவிந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 

 

பின் குறிப்பு:  நான் எழுதிய பயணக் கட்டுரை ஒன்றும் நேற்று சஹானா இணைய இதழில் வெளிவந்திருக்கிறது! (சுட்டி: https://sahanamag.com/lastvillage-traveloguebyvenkatnagaraj/).  வெளியிட்ட இணைய இதழ் ஆசிரியருக்கு மனம் நிறைந்த நன்றி. 

 

கல்யாணக் கனவுகள் – மின்னூல்:


 

சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது மின்னூல் ஒன்றை நேற்று வெளியிட்டேன்!  பணிச்சுமை காரணமாக வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதுவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.  பத்து, பன்னிரெண்டு நாட்கள் வரை பதிவுகளை முன்னரே எழுதி, சேமித்து, தானாகவே வெளியாகும்படி செய்து வைத்திருப்பதெல்லாம் இப்போது செய்ய முடிவதில்லை.  முதல் நாள் எழுதுவது சில சமயங்களில் முடிவதில்லை. முடிந்தபோது எழுதி, அப்போதே வெளியிட வேண்டியிருக்கிறது!  இந்தப் பதிவு கூட அப்படியே! ”கல்யாணக் கனவுகள்” என்ற பெயரில் அமேசான் தளத்தில் வெளியிட்ட நூல் கூட சுமார் ஒரு மாதமாக அவ்வப்போது சில நிமிடங்கள் எடுத்து தொகுத்த நூல் தான்.

 

எனது வலைப்பூவில் வெளியிட்ட சில கதை மாந்தர்களின் கதைகளைத் தொகுத்து “கல்யாணக் கனவுகள்” என்ற பெயரில் மின்னூலாக நேற்று வெளியிட்டு இருக்கிறேன். மின்னூலின் விலை ரூபாய் 50/- மட்டும்.  அமேசான் தளத்தில் Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாகப் படிக்க முடியும்.  விரைவில் சில நாட்கள் இலவசமாகப் படிக்க/தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, அமேசான் அனுமதிக்கும் ஐந்து நாட்கள் மட்டும் தருவேன்! நூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே!

 

கல்யாணக் கனவுகள் https://www.amazon.in/dp/B08H8VW3Z8

 

இதுவரை வெளியிட்ட மற்ற மின்னூல்களுக்கான சுட்டியும் கீழே தருகிறேன்.

 

இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் - https://venkatnagaraj.blogspot.com/p/blog-page.html

 

இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

03.09.2020

24 கருத்துகள்:

 1. சஹானா இணைய இதழ் பற்றி எழுதியமைக்கு நன்றிங்க. "கல்யாணக் கனவுகள்" சூப்பரா இருக்கு அட்டை படமே,படிச்சுட்டு full review போடறேன். நன்றி பகிர்ந்தமைக்கு 👍🙂

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாணக் கனவுகள் - படித்து விட்டு ஃபுல் ரெவ்யூ செய்வதாகச் சொன்னது மகிழ்ச்சி தந்தது. எழுதப் போகும் உங்களுக்கு முன்னதாகவே எனது நன்றி அப்பாவி தங்கமணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வாழ்த்துகள் ஜி
  மின்நூல்கள் அணி வகுக்கட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ...சஹானா நூல் அறிமுகம் செய்தமைக்கும்..மின்நூல் தகவலுக்கும் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. சஹானா இணைய இதழ் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்! அப்பாவி தங்கமணி புவனாவுக்குப் பாராட்டுகள்!

  தங்களது மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாழ்த்துகள். சஹானா இணைய இதழுக்கும், மின்னூல் வெளியீட்டுக்கும் மீண்டும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 6. புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள் ஐயா
  தரவிறக்கம் செய்து படிப்பேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  தங்கள் மின்னூல்கள் வெளிவந்திருக்கும், சஹானா இணைய இதழுக்கும், தங்களின் புதிய மின்னூலுக்கும், என மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மனம் நிறை வாழ்த்துகள் அன்பு வெங்கட்.
  உங்களுக்கும் புவனா கோவிந்த் அவர்களுக்கும்.
  புதிய மின்னூலுக்கும் வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அவரின் வலைப்பூ போலவே சஹானா இணைய இதழும்,,, வாழ்த்துகள்...

  மின்நூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. சஹானா இணைய இதழ் வாழ்த்துகள்.

  'கல்யாண கனவுகள் 'படம் அருமை மின் நூல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. தொடரும் மின் நூல் வெளியீடுகளுக்கு வாழ்த்துகள். சஹானாவின் முதல் இதழை வாசித்தேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. சஹானா இணைய இதழுக்கும், மின்னூல் வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....