ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

TINGALA SA BABA – பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம்

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல. உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம். இந்த முறை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம் தான். குறும்படம் என்பது கூடவே இது ஒரு விளம்பரமும் கூட – நெஸ்லே விளம்பரம்! மொழி புரியவில்லை என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை – ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு. பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக, பள்ளியை ஒட்டியிருக்கும் பூங்காவில் காத்திருக்கும் சற்றே தடியான சிறுவன். அந்த நேரத்தில் அவனுடன் விளையாட வரும் ஒரு ஏழைச் சிறுவன்! அவர்களுகுள் இருக்கும் நட்பு, விளையாடும் போது அவர்களுக்குள் இருக்கும் டீலிங்! என ரொம்பவே அழகாக இருக்கிறது குறும்படம். பணம் படைத்தவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இருக்கும் வித்தியாசங்கள், சிறுவர்கள் வளரும் சூழல் என பல விஷயங்களைச் சொல்கிறது இக்குறும்படம். குறும்படத்தினைப் பாருங்களேன்!


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் வெங்கட் நாகராஜ் 
புது தில்லி 

பின் குறிப்பு: நேற்று இரவு வெளியிட்ட எனது காஃபி வித் கிட்டு பதிவினை படிக்காதவர்கள் படிக்க ஏதுவாக அந்தப் பதிவின் சுட்டி – காஃபி வித் கிட்டு.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை.. குறும்படம் கதை நீங்கள் சொல்லியிருக்கும் பாணியில் நன்றாக உள்ளது. நீங்கள் ஞாயறுதோறும் தேர்ந்தெடுத்து தரும் கருத்துள்ள குறும்படங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்று மதியம் முழுதாக பார்த்து விட்டு மறுபடி வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வரும் குறும்படங்கள் உங்களுக்கும் பிடித்ததாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. குண்டன் தனது மகிழ்ச்சிக்கு லஞ்சம் கொடுத்து அனுபவிக்கும்போது... அம்மாவின் வறட்டு கௌரவத்தால் பாழாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வறட்டு கௌரம் - பலருக்கும் இந்த பழக்கம்! அதனால் இழப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறைக்கு பாராட்டுகள். பார்த்தேன். பல செய்திகளைத் தருகின்ற படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்ந்தெடுக்கும் முறை - நன்று முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. குறும்படம் மிகவும் அருமை.

  எப்படியோ குண்டு பையன் சீஸா விளையாடி விட்டான்.
  எல்லோரும் நன்றாக நடித்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அன்பு வெங்கட் எத்தனை அருமையான குறும்படம். !!!!!!
  உங்கள் கண்களில் பட்டு எங்களையும் வந்தடைந்து மகிழ்வித்தது.
  அருமையான அன்பான அறிவான குழந்தைகளும் அவர்கள் நடிப்பும்.
  தயாரித்தவர்களுக்கும்
  பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறை நன்றிகள். என்றும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. குறும்படமா? சாவகாசமாய்ப் பார்க்கணும். பார்க்கிறேன் பின்னர்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....