புதன், 30 செப்டம்பர், 2020

ஒரு மாமாங்கம் ஆச்சு - தொடரும் வலைப்பயணம்…

அன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தன் கஷ்டங்களை எண்ணிக் கொண்டே இருப்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமானது, ஆனால் அவன் தனது சந்தோஷங்களை எண்ணுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், ஒவ்வொரு இடத்திலும் போதுமான மகிழ்ச்சி இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார். 

***** 




அது ஆச்சு ஒரு மாமாங்கம்! இப்படி வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம்! நானும் இப்படிச் சொல்ல வேளை வந்து விட்டது! ஹாஹா… வேறொன்றும் இல்லை நண்பர்களே! இந்த வலைப்பூவில் நான் எழுத ஆரம்பித்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது என்று சொல்லலாம்! பதினோறு ஆண்டுகள் முடிந்து, பன்னிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன் எனது இந்த வலைப்பயணத்தில்! 30 செப்டம்பர் 2009-இல் துவங்கிய இந்த வலைப்பயணம் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், என்னுடைய வலைப்பயணத்திற்குக் காரணகர்த்தாவாகிய திரு ரேகா ராகவன், எனது சித்தப்பா இன்றைக்கு இல்லை! இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் பூவுடலை நீத்து மேலுலகுக்குச் சென்று விட்டார். அவர் ஆரம்பித்து வைத்த அன்று இத்தனை தூரம் பயணிப்பேன் என்று நினைத்ததில்லை. ஏதோ வலைப்பூ அமைத்து எழுத ஆரம்பித்து விட்டேனே தவிர தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவர் கொடுத்த ஊக்கமும், கூடவே இந்த வலையுலக நட்புகள் தந்த ஊக்கமும், இதோ இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன்! பதினோறு ஆண்டுகள் முடிந்து பன்னிரெண்டாம் ஆண்டில் எனது வலைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 




இந்த பதினோறு ஆண்டுகளில், இந்தப் பதிவினையும் சேர்த்து 2314 பதிவுகள் எழுதி இருக்கிறேன். 17 லட்சத்திற்கும் மேலான பக்கப் பார்வைகள், 83 ஆயிரத்திற்கும் மேலான கருத்துப் பரிமாற்றங்கள், 376 பின் தொடர்பவர்கள் என தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த காலகட்டத்தில் எனது எழுத்து சில இணைய இதழ்களிலும், நாளிதழ், வார இதழ்களிலும் வெளிவந்திருக்கிறது. தவிர எனது சில பதிவுகளை, குறிப்பாக பயணக் கட்டுரைகளை தொகுத்து, மின்னூல்களாகவும் வெளியிட்டு இருக்கிறேன். இதுவரை 33 மின்னூல்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் சில மின்னூல்களும் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணி நடந்து கொண்டு இருக்கிறது. வரும் வாரங்களில் வரலாம்! பணிச் சுமைகளுக்கு இடையில் எழுவது சில நாட்களில் சிரமமாக இருந்தாலும், முடிந்த அளவு தினம் ஒரு பதிவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் உங்கள் அனைவருடைய தொடர்ந்த ஊக்குவித்தலும் ஆதரவுமே காரணம் என்பதை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வலைப்பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதில் உங்கள் அனைவருடைய பங்களிப்பும் உண்டு! என்னுடைய பங்கு/விருப்பம் மட்டும் காரணம் இல்லை! 

தொடர்ந்து பயணிப்போம்! உங்கள் ஆதரவும் தொடரட்டும். 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. மனம் நிறை வாழ்த்துகள் அன்பு வெங்கட்.
    இமாலய சாதனை.!!!!!!!!!!

    பிரமிக்க வைக்கிறது தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை, பார்வை விவரம்.
    மின்னூல் சாதனைகள் மேலும் பூரிக்க வைக்கின்றன.
    இன்னும் தொடரட்டும்.
    என்றும் வாழ்க வளமுடன்.
    மிக மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள், வெங்கட் நாகராஜ்...
    தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.
    ரசிக்கிறோம் உங்கள் எழுத்து படைப்புகளை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீனிவாச சுப்ரமணியன் ஜி. தங்களது முதல் கருத்துரையோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    தங்களது சாதனைகள் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் சாதனைகள் என்னை பிரமிக்க வைக்கிறது. உங்கள் எழுத்துக்களால், வசீகரிக்கப்பட்ட ரசிகைகளில் நானும் ஒருவள்.உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் நிறைய எழுத்துக்களை, பல அரிய விஷயங்களை ஒவ்வொரு நாளும் தொகுத்து தந்து எங்களை மகிழ்விக்க செய்யுமாறு இறைவனை மனமாற வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி
    தொடரட்டும் பயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிகப்பெரிய சாதனை சந்தேகமில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் மேலும் இந்தப் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ரஞ்சனிம்மா. சாதனை - எனக்கு அப்படித் தோன்றவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. 11 வருடம். வாழ்த்துக்கள். வயதும் ஒரு காரணம். மூத்தவர்கள் வழிகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். சிறிய வயதில் வலைப்பக்கம் வந்ததால் தான் தொடர்ந்து எழுதும் சக்தி கிடைக்கிறது. குறைந்தது 25 வருடங்களாவது எழுத வாழ்த்துகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெங்கட்! உங்கள் எழுத்துப்பயணம் மேலும் அழகாக, இனிமையாக தொடரட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதினோரு என்று வரவேண்டும் பதினாறுக்குதான் அந்த று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றி விடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாழ்த்துகளும் பாராட்டுகளும். பதிவுகள் எண்ணிக்கை மென்மேலும் உயரட்டும். பயணக்கட்டுரைகளும், கதம்பமும் உங்கள் ஸ்பெஷல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பனிரண்டாம் வருடத்துக்கு வாழ்த்துகள். பதினேழு லட்சம் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துகள். எனக்கெல்லாம் அதில் பாதி தான்! :)))) 50,000க்குள் தான் கருத்துப் பரிமாற்றங்களும். ஆனால் நான் எழுதுவதற்கெல்லாம் இதுவே அதிகம்! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. 2005 ஆம் வருடம் நவம்பரில் ஆரம்பித்தாலும் 2006 ஏப்ரலில் இருந்து தான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். பதினைந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் அவ்வப்போது ஏதாவது எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் எழுதுவது தான் சிறப்பு. அலுவலக வேலையையும் பார்த்துக் கொண்டு சமையலும் சமைத்துக் கொண்டு மற்றவர்கள் பதிவுகளிலும் கருத்துச் சொல்லிக் கொண்டு, உங்கள் பதிவுகளையும் வெளியிட்டு அவற்றுக்கும் கருத்துச் சொல்லிக் கொண்டு இடைவிடாமல் பதிவுகள் போடுவதோடு இப்போதெல்லாம் மின்னூல்கள் வெளியீட்டையும் பார்த்துக்கொண்டு! அதையும் சிறப்பான முறையில் வெளியிட்டுக் கொண்டு! இடைவிடாமல் உழைக்கிறீர்கள்!உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கவும், இன்னும் மேன்மேலும் சிறப்பாக எழுதவும், பற்பல மின்னூல்கள் வெளியிடவும் வாழ்த்துகள்/ஆசிகள்/பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. மிக மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் ...

    உண்மையில் தொடர்ந்து எழுதுவதே பெரும் சாதனை ...உங்களின் சாதனை எங்களையும் ஊக்கப்படுத்துக்கிறது ...

    இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு பல பல மின்னூல்களை வெளியிட மனம் நிறைந்த வாழ்த்துக்களும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. தொடர்ந்து எழுதும் மிகச் சிலரின் நீங்களும் ஒருவர். வலைப்பதிவு வரலாற்றில் உங்களுக்கு ஒரு இடம் உண்டு/ வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி முரளிதரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....