சனி, 26 செப்டம்பர், 2020

பாடும் நிலா பாலு – எங்கும் ஒலிக்கட்டும் அவர் குரல்…


அன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

மரணம் என்பது வேறு உடை மாற்றுவது போலதான்! அதனால் என்ன போயிற்று? – ஸ்வாமி விவேகானந்தர். 


பாடும் நிலா பாலு – இன்று நம்முடன் இல்லை! மரணம் அவரையும் வீழ்த்தி விட்டது! ஆனால் அவரது பாடல்களை, அவரது குரலை, இந்த மரணத்தினால் வீழ்த்தி விட முடியுமா என்ன? நிச்சயம் அவரது நினைவினையும், பாடல்களையும், பல மொழிகளில் ஒலித்த அவரது குரலையும் இன்னும் பல வருடங்களுக்கு மறக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது நிதர்சனம். 

திறமை இருக்கும் இடத்தில் கர்வமும் இருப்பது பொதுவானது – ஆனால் இவரோ அப்படி இருந்ததில்லை – எளிமை, அனைவரிடமும் பண்பாக நடப்பது என மிகவும் சிறப்பான வாழ்க்கை – பார்த்த காணொளிகள், பார்த்த இசை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் அப்படி ஒரு எளிமை. பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சின்னஞ்சிறு பாடகர்கள், அதிகம் பிரபலமில்லாத பாடகர்கள் என அனைவருக்கும் நல்ல விதமாக, சொல்லித்தருகின்ற ஒரு கலைஞர் இவர் மட்டுமே! சக பாடகர்களின் திறமையை மதிக்கும், பாராட்டும் கலைஞர்கள் இவ்வுலகில் மிகவும் குறைவே – பெரும்பாலும் இல்லை என்று கூட சொல்லி விடலாம்! ஆனால் பாலு இதிலும் ஒரு படி மேல்! எல்லோருடைய திறமைகளையும் பாராட்டும் இவரது குணம் யாருக்கு வரும்! அவரது நீண்ட நாள் நண்பர், ஆதி காலத்திலிருந்து ஒன்றாக பல வெற்றிப்படிகளை தொட்டவர்கள் என நீண்ட உறவு அவருக்கும் இளையராஜாவுக்கும்! அந்த இளையராஜா, இவருடன் பிணக்கு கொண்ட போது கூட புறம் பேசாத நல்ல மனிதர் பாலு! 

அவர் நம்மிடமிருந்து மறைந்தாலும், அவரது குரலில் ஒலித்த பல பாடல்கள், அவரது குரல், அவரது எளிமை, அவரது நினைவுகள் நம்மை விட்டு என்றைக்கும் மறையாது! இத்தனை காலம் நம்மை சந்தோஷம் கொள்ளச் செய்தவர் இப்போது இறைவனை அவரது குரலால் மகிழ்விக்கச் சென்று இருக்கிறார்! 

என்றைக்கும் உங்களது குரல் ஒங்கி ஒலிக்கும் பாலு! சென்று வாருங்கள்! 

நட்புடன் வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

30 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. அவர் எளிமை, அவர் பண்பு...

  அவர் குரல்...

  SPB..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. என்றும் ஒலித்திடும் இனிய குரல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 4. எனிமையான மனிதர் என்பதை நேரில் கண்டவன் மாமனிதருக்கு எமது இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. அவரது குரல் என்றும் ஒலித்து நமக்கு ஆறுதல் அளிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 6. உலகம் உள்ள வரை அவர் பாடல்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 7. அவர் பாடல்களில் என்று வாழ்வார்.
  சிறு குழந்தைகளின் பாடல்களை கேட்டு வாய் விட்டு பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவார். இனி பாடும் குழந்தைகளுக்கு இழப்பு. எப்போதும் புன்னகை சிந்தும் முகம் அன்பான பேச்சு என்று நல்ல மனிதர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. என்றென்றும் காற்றலைகளில் கலந்தே இருப்பார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 9. ஆம் நீங்கள் குறிப்பிடுவதோடு அதிகத் திறமை கொண்டவர்கள் இவரைப் போல் தலைசிறந்த தனிமனிதர்களாக இருப்பது அபூர்வமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 10. என்றும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருப்பார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. அவருடைய பாடல்கள் இருக்கும்வரை அவர் நம் மனதில் நிலைத்து நிற்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 12. இளையராஜா இவரைத் தன் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொன்னபோது கூட வாயைத் திறந்து அதிர்ந்து பேசாத மனிதர். இப்படி ஒரு நல்ல மனிதர் இனி கிடைப்பதே அரிது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். எல்லோர் நினைவுகளிலும் என்றென்றும் வாழ்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. நினைக்க நினைக்க ஆறவில்லை.
  இத்தனை தேன் சிந்தும் பாடல்களைக் கொடுத்தவர்,
  அமைதி,அன்பு ,பண்பு எல்லாம் சேர்ந்த நற்சந்தன
  மனிதர்.
  எங்கும் ஒலிக்கட்டும் அவர் குரல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 14. நல்ல மனிதருக்கு உலகம் உள்ளவரை சிறப்பான புகழ் என்றும் உண்டு. காலம் உள்ள வரை அவர் நினைவுகளும் நம் மனதில் என்றும் தேங்கியிருக்கும். பிறர் மனதை காயபடுத்தாத நல்ல பண்புகளை பெற்றிருப்பவர். இறைவனது நிழலில் இளைப்பாற சென்றிருக்கும் அவரது ஆன்மா என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும் என வேண்டிக் கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 15. என்றும் நம் நினைவில் வாழ்வார். தம் குரலால் நம்மை வருடிக் கொண்டு தான் இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....