செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கதம்பம் – எதிர்பார்ப்பு – சஹானா – சமையல் குறிப்பு – யூட்யூப் - மண்டலா ஆர்ட் - அமுதா

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

இழந்த இடத்தினை பிடித்துக் கொள்ளலாம்… இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது! 

எதிர்பார்ப்பு இல்லா வாழ்க்கை – பகுதி 2: 

சென்ற வாரத்தின் இதே நாளில் எதிர்பார்ப்பு பற்றிய கருத்துகளை எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்! (இங்கே படிக்கலாம்!) அதன் தொடர்ச்சியாக இன்னும் சில சிந்தனைகளை இன்று பார்க்கலாம்! 

பெற்றோராக எங்கள் பார்வை! 

மாணவியாக நான் கடந்து வந்த பாதையைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். இன்று பெற்றோராக நாங்கள் எங்கள் மகளை எப்படி வளர்க்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்கிறேன். 

சிறுவயது முதலே அவள் கேட்டதையெல்லாம் நாங்கள் எப்போதும் வாங்கிக் கொடுத்ததில்லை. கேட்கும் பொருள் அவளுக்கு உபயோகமாக இருக்குமா? நியாயமான விலை தானா? என்றெல்லாம் யோசிக்காமல் நிச்சயம் வாங்கித் தர மாட்டோம்! எடுத்துச் சொல்லி புரிய வைப்போம். அவளும் அடம் பிடிக்க மாட்டாள்! 

நாங்கள் திருவரங்கம் வந்த நாள் முதலாக ஒரே ஸ்கூல் தான். ஸ்டேட் போர்ட் தான்! மகளின் விருப்பம் ஆதலால் வீட்டுக்கு அருகேயே C.B.S.E பள்ளி இருந்தும் மாற்றவில்லை. அந்த மாணவர்களை விட நிச்சயம் இவளின் ஆங்கிலம் தரமாகத் தான் இருக்கிறது. தமிழும் எழுத்துப் பிழையில்லாமலும், உச்சரிப்பு சுத்தமாகவும், கையெழுத்தும் அழகாகவும் தான் இருக்கிறது! 

அதே போல் அவளின் எதிர்காலத்தைப் பற்றி பெரிதாக எந்த எதிர்பார்ப்பையும் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. என்ன படிக்கணும் என்று நினைக்கிறாளோ அப்போது உள்ள சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். எந்தத் துறையிலும் சாதிக்கலாம்! முன்னேறலாம்! 

பெற்றோரின் கஷ்டநஷ்டங்கள் நிச்சயம் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். சென்ற வாரம் கூட என் கணவர் தன்னுடைய pay slip-ஐ வாட்ஸப்பில் அனுப்பி உங்க இருவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்க வேண்டும் என்றார்! 

எங்களுக்குத் தெரிந்தவரையில் நல்லதொரு பெண்ணாகத் தான் வளர்க்கிறோம். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக்கூடியவளாக இருக்க வேண்டும். பார்க்கலாம்! 

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்! 

இதைப் பற்றி ஒரு தொடராகவே எழுதுகிற அளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

இன்றைய சிந்தனை: 

அடுத்தவர்களிடம் குறை கண்டுபிடிக்கவும், மட்டம் தட்டவும் தான் நிறைய பேர் இருப்பார்கள்! இங்கு பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் இருப்பவர்கள் மிகவும் குறைவே!! 

சமையல் குறிப்பு பிரசுரம்! 
நேற்று சஹானா இணைய இதழில் பீஹார் ஸ்பெஷலாக என்னுடைய சமையல் குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இணைப்பை க்ளிக் செய்து வாசிக்கலாம். 


எனக்கான அடையாளம்! 


வீட்டுல தான் இருக்க! வெட்டியா தான இருக்க! இரண்டு பேருக்கு என்ன பெரிய வேலை இருக்கப் போறது! இப்படியான வார்த்தைகள் நிறைய கேட்டாச்சு. புதுசா ஒன்றை நேற்று பார்த்த போது நிஜமாகவே மனசு குளிர்ந்து போச்சு! சும்மா கெத்தா இருந்தது. ரொம்ப வருஷமா மனசில கெடந்து தவிச்சது இதைத் தானா!!! எனக்கே என்னை புரிய வைத்த தோழி Bhuvana Govindக்கு மிக்க நன்றி. தோழி அவங்க வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததை screenshot எடுத்துள்ளேன். 

இந்த வார காணொளிகள்:- 


ஆதியின் அடுக்களையில் இந்த வாரம் ஒரு வட இந்திய உணவின் செய்முறையை பகிர்ந்துள்ளேன். மகளிடமிருந்து எடிட்டிங் கற்றுக் கொண்டதால் சென்ற வார வீடியோவிலிருந்தே அனைத்தும் நானே தான் செய்து கொள்கிறேன். வீடியோ, எடிட்டிங், செய்முறை, ஃபோட்டோ, பின்குரல், அப்லோட் என அனைத்தும் முடிந்தவரை சரியாகத் தான் தந்துள்ளேன் என்று நினைக்கிறேன். 


மகளின் சேனலில் இந்த வாரம் வீணாக வீட்டில் இருந்த ஒரு coffee mug-இல் பெயிண்ட்டிங் செய்து கலைப்பொருளாக மாற்றியிருக்கிறாள் பாருங்களேன். 


நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். 

ரோஷ்ணி கார்னர் - மண்டலா ஆர்ட் – 20 செப்டம்பர் 2020: மகள் சமீபத்தில் வரைந்த Mandala Art இது! பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! 

அமுதா – 20 செப்டம்பர் 2020: 

பக்கத்துப் பக்கத்து வீட்டில் மூன்று வருடங்கள் ஒன்றாய் இருந்தோம்! ஒத்த ரசனை உடையவர்கள்! ரசத்துக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி இரவல் முதல் சுகதுக்கங்கள் வரை அனைத்தையும் பரிமாறிக் கொள்வோம்! 

இந்திரா செளந்தர்ராஜனும், பாலகுமாரனும், ரமணிச்சந்திரனும் பரிச்சயமானது இவரால் தான். போட்டி போட்டு வாசிப்போம். புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். விவாதிப்போம். வாடகை நூலகத்தில் எடுத்த 400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைக் கூட நான்கு நாட்களில் இருவரும் வாசித்துத் தருவோம். 

ரங்கனைக் காண இருவரும் சேர்ந்து சென்று மணிக்கணக்கில் நின்று தரிசிப்போம்! மார்கழியில் யார் முதலில் எழுந்து கோலத்தைப் போட்டு விளக்கு வைக்கிறோம் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். 

இப்படி பல நல்ல நினைவுகளையும், நிகழ்வுகளையும் கொண்ட நட்பு இவருடனானது. மூன்று வருடங்கள் தான் அருகருகே இருந்தோம். ஆனால் இவரைப் பற்றி நினைக்காத நாள் இல்லை எனலாம். 

எப்போதும் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் வளைய வந்த அமுதா இனி இல்லை என்பதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஆம்! இன்று முற்பகலோடு இந்த உலகத்தோடு இருந்த பந்தத்தை முடித்துக் கொண்டு விட்டார். 

புற்றுநோய் இன்னும் எத்தனை உயிர்களைத் தான் எடுத்துக் கொள்ளப் போகிறதோ :( தோற்றத்தையே முற்றிலும் உருக்குலைத்து விடுகிறது. குளிர்ப் பெட்டிக்குள் அடங்கிப் போன அமுதாவின் முகத்தை இன்று பார்த்து வந்தேன். சேலையின் மடிப்புக் கூட கலையாமல் எப்போதும் புத்துணர்வாய் பேசிய அந்த முகம் எங்கே? 

அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

 1. நல்ல வாசகம்.

  முதல் விஷயத்தையும் கடைசி விஷயத்தையும் பேஸ்புக்கில் படித்தேன். உங்கள் காணொளி சேனல் பக்கம்தான் இப்போதைக்கு வரமுடியவில்லை.

  ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. காலையிலேயே சோகத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்களே. அந்த ஆத்மா சாந்தியடையட்டும். நல்ல நட்பு எப்போதுமே மறக்கக்கூடியதல்ல

  காணொளிகளை பிறகு பார்க்கணும். எடிட்டிங் போன்றவை கற்றுக்கொண்டது உங்கள் ஆர்வத்தைக் காண்பிக்கிறது. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில் சோகம்! :) எந்த வேளையில் இருந்தாலும் சோகம் தான்! அதை மாற்ற முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. எல்லாவற்றையும் முகநூலிலும் பார்த்தேன், படித்தேன். ரசித்தேன் ரோஷ்ணியின் திறமை நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டு வருகிறது. ஆசிகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 5. அன்பு ஆதி,
  அருமையாக ஆரம்பித்து சோகத்தில் முடிந்துவிட்டது பதிவு.
  தங்கள் தோழியை நீங்கள் இழந்தது மகா வருத்தம்.

  ஆறுதலுக்கு வேண்டிக்கொள்கிறேன்.
  குழந்தை மண்டலா டிசைன் மிக அருமை.
  உங்கள் புது வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

  பார்க்கிறேன்.
  வாழைக்காய் சப்ஜி பற்றி வெங்கட் எழுதி இருந்தார்,
  நீங்கள் கோஃப்தா செய்தீர்களா.

  மகளை நல்ல படியாகத்தான் வளர்க்கிறீர்கள்.
  மற்றவர் பேச்சுக்கு ஏது மதிப்பு. விட்டுத் தள்ளுங்கள்.

  நல்ல பெற்றோருக்கு நல்ல மகள் தான் பெயர் வாங்கிக் கொடுப்பாள்.
  நலமே வாழக் அம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் பற்றிய தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அணைவருக்கும் காலை வணக்கம்.
  உங்களுக்கான அடையாளம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
  ரோஶ்ணிக்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் நன்பரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிகப் பெரிய இழப்பு உங்களுக்கு. உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 8. உங்களது தோழியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

  ஓவியம் அருமை.

  பொன்மொழிகள் சிந்திக்க வைத்தன.

  கதம்பம் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. அமுதா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன.

   நீக்கு
 11. போற்றுதலுக்கு உரிய பெற்றோர்
  அமுதா அவர்களின் மறைவிறகு ஆழ்ந்த இரங்கல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. அம்மா பொண்ணு ரெண்டு பேரும் சூப்பரா வீடியோஸ் போட்டுட்டு இருக்காங்க. வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும். சஹானா இணைய இதழ் சுட்டியை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிங்க அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   நீக்கு
 13. முகநூலில் படித்தேன்.
  கடைசி செய்தி மனதை கனக்க வைத்து விட்டது. நட்பின் பிரிவு மிகவும் கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 14. உங்கள் தோழியின் மறைவு செய்தி பற்றி முகநூலிலும் வாசித்தேன். ரோஷ்ணியின் ஓவியம் அற்புதம். வாழைக்காய் கோஃப்தா கண்டிப்பாக முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைவான பதிவு   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 15. வாசகம் மனதை தொட்டது. குற்றம் கண்டு பிடிக்கிறது மிகவும் தரம் குறைவான செயல். ரோஷ்ணி mandala art excellent.அவ்வளவு எளிது அல்ல. mandala art வரைய concentration, patience, attention தேவை. Kofta கண்டிப்பாக செய்கிறேன். Roshini is very matured at young age. There is nothing to worry about her.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  கதம்பம் அருமை. வாசகம் நன்றாக இருந்தது. வாழைக்காய் கோஃப்தா வெகு நன்றாக உள்ளது. போனவாரந்தான் தங்கள் கணவரின் பதிவில், வாழைக்காய் சப்ஜி படித்து தெரிந்து கொண்டேன். இப்போது முதலில், இதைப்பண்ணவா, அதைப்பண்ணவா என்ற குழப்பம். இரண்டுமே நன்றாக உள்ளது. இரண்டையும் ஒரு தடவை செய்து பார்க்கிறேன்.

  ரோஷ்ணியின் ஆர்ட் நன்றாக உள்ளது. குழந்தைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  இறுதி செய்தி மனதை கலங்க வைக்கிறது.பழகிய தோழியின் பிரிவு மனதை மிகவும் சங்கடபடுத்தும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். அனைத்து பகிர்வினுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....