செவ்வாய், 1 டிசம்பர், 2020

கதம்பம் - கரண்டி வெற்றிகள் - இளவயது திருமணம் - சன்னா மசாலா - நிவர் புயல் - கோவை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளில் எனது முகநூல் பக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட தகவல்கள்/விஷயங்களின் தொகுப்பினை பார்க்கலாம்.  அதற்கு முன்னர் இந்த நாளை தொடங்கும் விதமாக நல்லதொரு வாசகத்தினுடன் தொடங்கலாம் வாருங்கள்!


People remember our good work only till our next mistake. so neve feel proud of appreciation and never feel depressed by criticism. Just keep doing your best. 


*****


கரண்டி வெற்றிகள் - 30 நவம்பர் 2020




பொறியியல் துறையில் பயின்றிருந்தாலும், கடந்த பத்து வருடங்களாக இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும், எனக்கு கிடைக்கும் வெற்றிகள் 'கரண்டியால்' தான்..🙂 எனக்கான அடையாளமும் அது தான்..🙂


36 வயதினிலே ஜோதிகா போல் 30+ ல்  தான் என்னுடைய முதல் வெற்றி ஆரம்பமானது.. இதற்கு முன்பு இருந்த அபார்ட்மெண்டில் நடந்த மகளிர் தின விழா ரெசிபி போட்டியில் எனக்குக் கிடைத்த இரண்டாம் பரிசு தான் துவக்கம். பின்பு Better butter சமையல் குழுவில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டு முறை பரிசு பெற்றேன்..


இப்போது எதற்கு இந்த புராணங்கள்??? 





சஹானா இணைய இதழ் தீபாவளி 2020 போட்டிகளின் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது.. அதில் "தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி" போட்டியில் எனக்குக் கிடைத்த இரண்டாம் பரிசே இப்பதிவு எழுதுவதின் காரணம்...🙂


என் பாட்டியின் நினைவாக நான் செய்த பாரம்பரிய இனிப்பான  'உக்காரை' பரிசு பெற்று தந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இப்போது மட்டும் பாட்டி இருந்திருந்தால் "அடி! கூறு கெட்டவளே" என்று சொல்லி மகிழ்ந்திருப்பார்...🙂


சஹானா இணைய இதழுக்கும், Madhura boutiqueக்கும் என் மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன். 


இப்போட்டியில் முதல் பரிசு வென்ற கீதா மாமிக்கும், போட்டிகளில் வென்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


நீயா நானா - இளவயதில் திருமணம் - 29 நவம்பர் 2020


இன்றைய விஜய் டிவி நீயா நானாவில் பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்யலாம்! இளம் வயதில் திருமணம் செய்யக்கூடாது! என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது..


எதுவும் அறியாமல் திருமணம் செய்த பின் ஒவ்வொன்றாக வாழ்வில் புரிந்து கொண்டு பக்குவப்படுவது ஒரு விதம்! 


இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் சில வருடங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து திருமணம் செய்து பின்பு புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஒரு விதம்!


எந்த வயதில் திருமணம் செய்தாலும் மெச்சூரிட்டி என்பது இருந்தால் தானே??? எனக்குத் தெரிந்தே சிலர் இருக்கிறார்கள்.. நிறைய ப்ளான் எல்லாம் பண்ணி பின்பு திருமணம் செய்து கொண்டாலும் முழி பிதுங்கி நிற்கிறார்கள்..🙂. மெச்சூரிட்டி என்பது எப்படி வரும்??  திருமணம் சுதந்திரத்தை தடை  பண்ணுமா!! 


என்னுடைய கருத்துகளாக நான் பதிவு செய்வது என்னவென்றால்....ரொம்ப எல்லாம் யோசிக்கக்கூடாது!!!! என்ன நடக்கணும்னு இருக்கிறதோ அது தானே நடக்கும்..🙂 


வாழ்வை அதன் போக்கில் விட்டு விட வேண்டும். நம்மால் எல்லாவற்றையும் திட்டமிட்டபடியே செய்ய முடியுமா!! அனுபவங்கள் தானே நம்மை பக்குவப்படுத்தும்!  எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளாமல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இருந்தால் வாழ்க்கை நிச்சயம்  இனிமையாகும்!!


ஆதி’ஸ் கிச்சன் - சன்னா மசாலா - 28 நவம்பர் 2020


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் வட இந்திய ரெசிபியான சன்னா மசாலாவின் செய்முறையை பகிர்ந்துள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பார்க்க சுட்டி கீழே...


சன்னா மசாலா 


நிவர் புயலும் திருச்சியும் - 25 நவம்பர் 2020


காய்கறி, பால், மளிகை, மருந்து எல்லாம் இருக்கா? 

(இருக்கு இருக்கு!!)


இன்வெர்ட்டரில் distilled water விடணுமா? 

(செக் பண்ணியாச்சு!)


செல்ஃபோன், பவர் பேங்க் சார்ஜ் போடணும்..


டேங்க்கில் தண்ணீர் இருந்தாலும் எதுக்கும் ஒரு பக்கெட் தண்ணீர் பிடிச்சு வெச்சுப்போம்!!


Power shutdown இருக்கும்னு சொன்னாங்களே.. இன்வெர்ட்டர் சார்ஜ் தீர்ந்து போச்சுனா..candle இருக்கு!


எல்லாம் தயார் நிலையில்!!! ஆனால்???????


கோயம்புத்தூர் டே - 24 நவம்பர் 2020




எங்க ஊரு!


என் சொந்த ஊர் என்று சொன்னால் அது கொங்கு நாடாம் கோவை தான். பிறந்து மூன்று மாதக் குழந்தையாக கோவை வந்ததிலிருந்து திருமணம் வரை இருபது வருடங்கள் வசித்திருக்கிறேன்.. எனக்கு மிகவும் பிடித்த ஊர். 


சில்லென்ற தட்பவெப்பம், சுவையான சிறுவாணித் தண்ணீர், மணக்க மணக்க மரியாதையுடன் கொங்கு தமிழில் பேசும் மக்கள்.. என்று தனிச்சிறப்பு இதற்கு நிறைய உண்டு.


அப்பா அரசு ஊழியர் என்பதால், நான் வளர்ந்தது எல்லாமே ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டில் தான். வசதிகளே இல்லாத சிறிய வீடு என்றாலும் எனக்கு பிடித்த வீடு. Walking roadல் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்யும் மக்கள்..அதே வாக்கிங் ரோடிலேயே நடந்தால் K.G Theatre, Govt Arts college, சாரதாம்பாள் கோவில், Collector பங்களா என்று ஒரு ரவுண்ட் வலம் வரலாம்.


ஆசியாவிலேயே பெரிய முந்தி விநாயகர், மருதமலை முருகன், தண்டுமாரியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், கோணியம்மன், அநுவாவி முருகன் என்று கோவில்களுக்கும் பஞ்சமில்லை.


கொங்கு நாட்டு ஸ்பெஷலான அரிசி பருப்பு சாதம், பச்சைபயறு கடைஞ்சது, அன்னபூர்ணா கெளரிசங்கர் மசால் தோசை , சாம்பார் இட்லி,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் என்று இங்கு தனிச்சிறப்பான உணவுக்கும் பஞ்சமில்லை.


ஒருபுறம் கேரளா, மறுபுறம் ஊட்டி, வால்பாறை, டாப்ஸ்லிப், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி என்று சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு.


உறவுகளும், நட்புகளும் இங்கு நிறைய பேர் உண்டு. வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வருகிறேன். கடைசியாகச் சென்றது School reunion-க்காக இரண்டு வருடங்கள் முன்பு.


என்னை வளர்த்த கோவைக்கு இன்னிக்கு பிறந்தநாளாம். இங்கு வசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மகிழ்வாக வசிப்பேன்.


என்ன நண்பர்களே இந்த நாளில் ”கதம்பம்” பதிவாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம். 

 

நட்புடன்,


ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.  நிவர் இந்தமுறை எவரையும் ரொம்ப சேதப்படுத்தாமல் சென்றது மகிழ்ச்சி.    ஆதீஸ் கிச்சன் க்ளிக்கினால் இங்கேயே திறக்காமல் தனி ஜன்னலில் திறப்பது போல அமைத்தால் நலம்.  கோவையில்தான் சமீபத்தில் மறைந்த என் மாமாவின் இரண்டாவது பெண் இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தனி ஜன்னலில் திறப்பது போல் அமைத்தால் நலம் - மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அன்பின் இனிய காலை வணக்கம் ஆதி.
    சுவையான கதம்பம். தங்கள் வெற்றிக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    மிக அமைதியான பெண் நீங்கள். சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறீர்கள்.
    உக்காரை மிகப் பிடித்த பட்சணம். தீபாவளியையும் உக்காரையையும் பிரிக்கவே மூடியாது.

    கோவை எனக்கும் மிகப் பிடித்த ஊர்.
    தண்ணீருக்குக் கொஞ்சம் சிரமப்பட்டோம். சிறுவாணி அந்தத் துன்பத்தைத் தீர்த்தது.
    வெகு கலகலப்பான இடம்.
    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை மேடம்.
    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    நிவார் புயலால் பெரும் இழப்புகள் வராமல் தமிழகத்துக்கு தேவையான நீரை தந்து சென்றது மிக்க மகிழ்ச்சி.
    சீக்கிரம் கோவை செல்லுங்கள்.
    கோவை குறித்த ரேடியோ மிர்ச்சியால் உருவாக்கப்பட்ட ஒரு ஒலி நூல் எனக்கு கிடைச்சது.
    சீக்கிரம் அத கேட்டு ஊர் பத்தி நிறைய தெரிஞ்சுக்கலாம் நு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  4. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சமையல் பரிசு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வழக்கம்போல கதம்பம் அருமை. நான் பிறந்த ஊரான கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக நான் அதிகம் ரசித்த ஊர் கோயம்புத்தூர். 1980களில் ரேஸ்கோர்ஸ் சாலையில் டி ஸ்டேன்ஸ் சாலையில் பணியாற்றிய நாள்களும், அச்சமயத்தில் புதுசித்தாபுதூரில் தங்கியிருந்த பேச்சலர் அறையும்தான். கோவையில் எனக்குக் கிடைத்த நண்பர்கள், குறிப்பாக எல்.ஐ.சி.காலனியைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி போன்றோரை என்றுமே வாழ்வில் மறவேன். வாழ்வில் நான் காலூன்றவும், நெறிப்படுத்திக்கொள்ளவும், தன்னம்பிக்கை பெறவும் கைகொடுத்த ஊர் கோயம்புத்தூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      கோவை பற்றிய உங்கள் நினைவுகள் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. என் மறுமொழியில் டி ஸ்டேன்ஸ் அண்ட் கோ நிறுவனத்தில் என்று வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. வாசகம் முற்றிலும் உண்மை. தங்களுக்கு மேன்மேலும் வெற்றி கிடைத்திட வாழ்த்துகள். உக்காரை எனக்கு மிகவும் பிடிக்கும். கோயம்புத்தூர் மிகவும் 👌 ஊர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் வழக்கம்போல் மணமே..
    கோவை விசயங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆதி போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

    கரண்டி பிடித்தாலும் அதிலும் கொடி நாட்டலாம்!! உங்களுக்கும் வாழ்த்துகள்! கொடி நாட்ட!

    சன்னா மசாலா பார்த்துவிட்டேன் நல்லா செஞ்சுருக்கீங்க

    கோயம்புத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள், இடம் எல்லாம் நினைவு வந்தது. அங்கு உள்ள ரேஸ்கோர்ஸ் க்ரவுண்டில் தான் மகன் கராத்தே க்ளாஸ் நடக்கும். நான் அழைத்துச் சென்று அவன் பயிற்சி செய்ய நான் சுற்றி நடைப்பயிற்சி செய்துவிடுவேன். காலை 5.30க்கு க்ரவுண்டில் ஆஜர் ஆகிவிடுவேன். இப்போதும் என் தம்பி/கஸின் அங்குதான் இருக்கிறான். பல நினைவுகள்.

    நல்லகாலம் நிவர் வந்துவிட்டுச் சென்றுவிட்டது. பாதிப்பு ஏற்படுத்தாமல்..

    கதம்பம் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதா ஜி.

      சன்னா மசாலா - மகிழ்ச்சி.

      கதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்ததற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. மீண்டும் வாழ்த்துகள், பாராட்டுகள், தொடர்ந்து பல வெற்றிகளை அடையவும் பிரார்த்தனைகள். கோவை பிடித்த ஊர் தான். முக்கியமாக அதன் சீதோஷ்ணம். ஆனால் அங்கிருந்து எங்கு போவதானாலும் திருச்சிக்கோ/சென்னைக்கோ வர வேண்டும். இங்கே திருச்சி எனில் முக்கிய நகரங்களுக்குக் கூட விமான/ரயில் சேவை இருக்கு. அந்த வகையில் வெப்பம் அதிகம் ஆனாலும் வசதியான ஊர் தான் திருச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவையிலிருந்தும் தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு விமான சேவை உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    2. ஓஹோ! இது எனக்குப் புதிய செய்தி!

      நீக்கு
    3. தில்லியிலிருந்து கோவைக்கு நானே விமானத்தில் பயணித்ததுண்டு.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. எல்லாவற்றையும் முகநூலிலும் ரசித்தேன். தொடர்ந்து யூ ட்யூப் சானலிலும் முக்கியத்துவம் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....