அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கல்யாண (வரவேற்பு) வைபோகமே பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் நடந்த ஒரு விளையாட்டுத் திருவிழா குறித்த தனது எண்ணங்களையும், அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
VERDANT (CGV) விளையாட்டுத் திருவிழா - 26.10.2025
தீபாவளி கொண்டாட்டதில் (20.10.25) அனைவரும் எவ்வளவு உற்சாகத்துடன் விளையாடினர் என்பதைப் பார்த்துவிட்டு நம்(CGV) மக்களை இதே போல் நன்றாக சந்தோஷமாக வெச்சுக்கணும் என்று கமிட்டி முடிவெடுத்து உடனே செயல்பட்டது.. விளைவு? மினி மராத்தான், group games ⚽ கொண்ட விளையாட்டுத் திருவிழா (games festival) அறிவிப்பு!
26.10.25 மாலை 4.45 க்கு complex க்கு உள்ளே இருக்கும் மியா வாக்கி (செயற்கை forest) முன்னால் அனைவரும் குழுமினோம்.
சும்மா சொல்லக் கூடாது, Sports shoe, track pants, T shirt என அனைவரும் அமர்க்களமாகக் களமிறங்கினர். (பெண்கள் உட்பட. சில பெண்கள் குறைந்த பக்ஷம் SS உடன்).
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முதலிலும் 18+ க்கு மேற்பட்டோருக்கு அதற்குப் பின்னரும் போட்டி.
திரு.நடராஜன் (sports coach cum Event manager) அனைவருக்கும் மராத்தான் விதிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்.11.45 நிமிடங்களில் மூன்று முறை complex ஐ சுற்றிவர வேண்டும் (2.4 km) அதிக பக்ஷ நேரம் 16 நிமிடங்கள். அதற்கு மேல் ஆனால் அவர்கள் மனிதர்களாகவே அதாவது மராத்தானர்களாகவே மதிக்கப் (கருதப்) பட மாட்டார்களாம்! (ennnnnaa வில்லத்தனம்☹️)
அதன் பின்னர் warmup முடிந்து count down முடிந்து விசில் ஒலியுடன் மராத்தான் ஆரம்பித்தது...
விசில் சப்தம் கேட்ட மாத்திரத்தில் குழந்தைகளுடன் சில பெரியவர்களும் அதீத ஆர்வத்தால் ஓட ஆரம்பிக்க, அவர்கள் உற்சாகத்துக்கு அணை போட வேண்டியதாயிற்று!
குழந்தைகள் வெகு உற்சாகத்துடன் ஓடினர்.அனைவருமே மூன்று முறை சுற்றி ஓடி வந்துவிட்டனர். மூன்று சிறுவர்கள் (Master Vinay, Master Vignesh & Master Sachith) 14 நிமிடங்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். பாராட்டுக்கள்👏🏻👏🏻 👏🏻. 4 வயது வாண்டு சித்தாந்தும் அழகாகச் சுற்றி வந்தது!
பின்னர் 18+ க்கு (18 லிருந்து 80 வரை 18+ தான்😊) மராத்தான் துவங்கியது.
என்னைப் போல் ஒரிருவரைப் பார்த்து விட்டு நீங்கள் ஓட்டம், jog பண்ணனும் என்று கட்டாயமில்லை (அப்படி சொன்னால் மட்டும் கண்ணை விட்டு ஓடிப் போக முடியுமா...🏃🏻♀️காலே முடியுமா...😟.🎼) நடந்து செல்லுங்கள் பரவாயில்லை (அவர் நட ராஜன் 🚶♂️அல்லவா? அப்படித்தான் சொல்வார்😊) ஆனால் ஊர்ந்து செல்லலாம் என்று சொல்லவில்லை😒). ஆனால் மூன்று சுற்று சுற்றி முடித்துவிடுங்கள் என்று ஊக்கப் படுத்தினார்.
அது ஒரு பொன் மாலை பொழுது..🌅. வெயில் நன்றாக(வே) காய்ந்தது..💥🌞.அங்கங்கே தண்ணீர் பந்தலும் ஏற்பாடாகியிருந்தது.
நானும் என் நடை mate ம்🚶🏻♀️🚶🏻♀️ நடந்தோம் நடந்தோம் verdant இன் எல்லைக்கே நடந்தோம்...
அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து, பரவாயில்லை பின்னால் நான்கு பேர் வருகிறார்கள், அந்த நாலு பேருக்கு நன்றி என்று சொல்லிக் கொண்டே நடந்தோம்.
ஒரு குழந்தை toy car இல் என்னை முந்தியது. மரத்திலிருந்து உதிர்ந்த ஓரிரு இலைச் சருகுகள் என்னைத் தாண்டி உருண்டு ஓடின..அப்போது உணர்ந்தேன், நடையில் கொஞ்சம் வேகம் தேவை என்று!😌
இரண்டு சுற்றுக்கள் முடிந்து திரும்பிப் பார்த்தால் யாருமே இல்லை! என்னது? வான் வழியே பயணித்தார்களா, இல்லை நம்மளை முந்தும்போது நாம் கவனிக்க வில்லையா? அந்த அளவா நம் கண் பார்வை நடந்ததில் மங்கி விட்டது🧐 என்று யோசித்துக் கொண்டே சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யர்களாக மூன்றாவது சுற்றையும் முடித்து விட்டுப் பார்த்தால்...............
எங்களைப் பார்த்து அனைவரும் கையசைத்து ஆரவாரம் செய்து சிவப்பு ரிப்பன் பிடித்து கீழே சிவப்புக் கம்பளம் விரித்து, பூத்தூவி........
ம்ஹும்..எதுவும் செய்யவில்லை😞. கடைசியாய் வந்தவர்களை உற்சாகப்படுத்த ரிப்பன் வேண்டாம் (அது old fashion) ஒரு hair band கூடவா காட்டக் கூடாது? Committee இதைப் பற்றி யோசிக்க வேண்டும்...
அங்கு ஈ காக்கா இல்லை (ஒரு குருவியும் & அணிலும் மட்டும் மரத்தின் மேல்!) அனைவரும் அடுத்த program க்காக tennis court போய்விட்டனர். அங்கு தோழிகளிடம் (அந்த 4 பேர்) அட ரொம்ப சீக்கிரம் முடித்துவிட்டீர்கள்? Super என்று சொல்லும்போது தெரிய வந்தது, அவர்கள் ரொம்ப ஸ்மார்ட் ஆக ஒரு சுற்று, 2 சுற்றோடு கழண்டு கொண்டனர் என்று..👍🏻🤷♀️
பேசிக் கொண்டே நடந்ததாலும் (Master Arush எங்களுக்கு sensor board ஆக செயல்பட்டாலும்), நடுவில் ஒரு வில்லா பெண்மணியிடம் குசலம் விசாரித்ததாலும், மேலும் சிலருடன் (visitors) நின்று பேசியதாலும் (மே) நான் கோப்பையை / prize money ஐ வெல்லவில்லை என்பதைத் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்🙂🙏🏻.மேலும் பிறருக்கு விட்டுக் கொடுப்பது போல் ஒரு இன்பம் இவ்வுலகில் இல்லை அல்லவா?😊
மராத்தானில் ஆண்களில் Shri.சதீஷ் & Shri.ஶ்ரீதர் பெண்களில் Smt.மாலினி & Smt. பூர்ணி வென்றனர்..🏆பாராட்டுக்கள்🙏🏻🙏🏻🙏🏻
ஓரிரு பெண்மணிகள் (எங்களைப் போலவே) என்ன ஆனாலும் சரி (இரவும் நிலவும் 🌚🌝 மலரட்டுமே - என்ன ஆகிவிடும்?) 3 சுற்று முடித்து(தே) தீருவது என்று விரதமெடுத்து முடித்தும் விட்டனர் (டோம்). ஆனால் மாலை மயங்குவதற்குள் வந்து சேர்ந்து விட்டோம் 😊👍🏻 (எத்தனை நிமிடங்களில் என்று கேட்பது அபச்சாரம்..🤨)
இந்த மராத்தானில் ஒருவரின் செல்லப் பிராணியும்🐕 கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் அள்(லொள்)ளியது குறிப்பிடத்தக்கது..👏🏻👍🏻😁
அடுத்தது, குரூப் games. இரு groups.ஒரு குரூப் சுற்றி வட்டமாக நிற்க 2 ஆவது குரூப் நடுவில் நிற்க, சுற்றியுள்ள குரூப் ஆட்கள் பந்தை உருட்டி நடுவிலுள்ளவர்கள் முட்டிக்கு கீழே அடித்து out ஆக்க வேண்டும்.
ஒரே குரூப் இல் இருந்த இரு கணவர் மனைவி pair களை ஆன மட்டும் திரு.நடராஜன் பிரித்து வைக்க முயன்று தோற்றார்.நல்லவேளை அந்த பாபம் அவரைச் சேராமல் Verdant காப்பாற்றிற்று!
வேற வேற குரூப்பில் இருந்திருந்தால் மனதிலிருக்கும் ஆத்திரத்தை பந்தில் காட்டி தன் spouse களை சீக்கிரம் out ஆக்கி வெற்றி பெறும் நல்ல சந்தர்ப்பத்தை அந்த யோசிக்காத தம்பதியினர் இழந்தனர்… பரவாயில்லை........ better luck next time....😁
அடிவாங்காத அதிக மெம்பர்கள் கொண்ட குரூப் வென்றது அல்லது எங்கள் குரூப் விட்டுக் கொடுத்தது என்றும் சொல்லலாம்😊.
அடுத்து ஆடு புலி ஆட்டம் போல் ஒரு game.கட்டங்கள் வரைந்து அதற்குள் வரிசையாக 4 கோன்களை place செய்ய வேண்டும். அதற்கு நன்றாக ஓட, குனிந்து, நிமிர முடிந்தவர்கள் கலந்து கொண்டனர். தரையில் விழுந்து உருண்டு புரண்டு விளையாடிய (முக்கியமாக எதிரணி வெல்ல முடியாதபடி தடுத்தாட்கொண்ட) குரூப் members வந்தார்கள், வென்றார்கள்....🏆பாராட்டுக்கள்👏🏻👏🏻👏🏻
குறிப்பாக விழுந்து பூமித்தாயை முத்தமிட்டு விளையாடிய வீர மங்கை Smt.ஜெயஶ்ரீ வைத்யநாதனுக்கு special பாராட்டுக்கள்...👏🏻
இறுதியில் அனைவருக்கும் snacks & drinks வழங்கப்பட்டது.. அதில் யாரும் தோற்கவில்லை😊
மராத்தான், games ஐ (+ சுவையான snacks & drinks ஐயும் ) சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களும் (CGV sports & cultural committee) மிக நன்றாக conduct செய்த திரு. நடராஜனும், சுவாரசியமாக தொகுத்து வழங்கிய திரு.ரகோத்தமன் அவர்களும் சிறப்புப் பாராட்டைப் பெறுகிறார்கள்👏🏻👏🏻👏🏻
திரு.ரகோத்தமன் அவர்கள் மராத்தான் ஓடியவர்களை கூடவே சைக்கிள் ஓட்டியே ஓட்டினார்.. உற்சாகமூட்டினார்.. தண்ணீ(ர்) காட்டினார்.. சிறப்பு👍🏻
ஒரு சுவாரசியமான பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மராத்தானில் வென்றவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் (தந்தை ஶ்ரீ சதீஷ் ,மகன் Master வினயன்) முதல் பரிசுகளைத் (kids & adult) தட்டிச் சென்றனர்! சபாஷ் 👏🏻👏🏻👏🏻சும்மா சொல்லக் கூடாது இல்லத்தரசி (Smt. அனு) நன்றாகவே இவர்களை ஓட்டியிருக்கிறார்😁👏🏻👏🏻👏🏻special பாராட்டு Smt.அனுவிற்கு 👍🏻👏🏻
இன்னொரு குடும்பத்தில் வென்றவர் தாய் (Smt. பூரணி), கலந்து கொண்டது இரு குழந்தைகள் (தீரன் & தென்றல் - என்ன அழகான பெயர்!) 👏🏻👏🏻
அழகான சுவாரசியமான உற்சாகமான மாலைப் பொழுதைத் தந்தமைக்கு அனைவருக்கும், நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 நவம்பர் 2025


உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு! விவரங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்கு