எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 29, 2013

உழைப்பாளிமுஸ்கி: தொடர்ந்து பயணத்தில் இருப்பதால் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பதிவுலகம் பக்கமே வர இயலவில்லை. திருவனந்தபுரம், சபரிமலை, சென்னை, மஹாபலிபுரம், நேமம் [திருக்காட்டுப்பள்ளி] என தொடர் பயணங்கள். [அடடா இத்தனைக்கும் பயணப் பதிவுகள் வரப் போகுதா! நான் வரலை இந்த விளையாட்டுக்கு! என பயந்து ஓட வேண்டாம். இன்னும் சில நாட்களுக்கு நான் பதிவுலகம் பக்கம் வருவது கடினம்! அதனால் பயப்பட வேண்டியதில்லை!]இந்தப் பயணத்தின் போது சந்தித்த சில உழைப்பாளிகள் பற்றிய விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன். முதலில் ஒரு 52 வயது உழைப்பாளியைப் பார்க்கலாம்.

முகேஷ் குமார் - வயது 52, பீஹாரின் சமஸ்திபூர் ஜில்லாவைச் சேர்ந்தவர். தொழில் – ராஜ்தானி விரைவு வண்டியில் படுக்கை விரிப்புகள் தருவது. மாதத்தில் இருபது நாட்கள் ரயிலேயே ஓடி விடும் இவரது மாத வருமானம் ஏறக்குறைய 6000 மட்டுமே [ஒரு முறை பயணம் செய்ய 300 ரூபாய், 20 பயணங்கள் செய்தால் 6000 ரூபாய்]. இதுவும் முழுதாய் கிடைப்பது பயணிகள் கையில் – எப்படி என்கிறீர்களா? பயணிகளுக்குக் கொடுக்கும் படுக்கை விரிப்புகளோ, கைத் துண்டுகளோ அவர்கள் கையோடு கொண்டு போய்விட்டால், இவரது சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள்!

தவிர, வரும் பயணிகளிடம் பயணத்தில் முடிவில் டிப்ஸ் கேட்டு கிடைக்கும் பணம் சில சமயங்களில் மாதத்திற்கு இரண்டாயிரம் முதல் நாலாயிரம் வரை.  ”ராஜ்தானி வண்டியில் அவர்கள் கொடுத்த பணத்திற்கு உணவு தரும் சிப்பந்திகளுக்கு நிறைய டிப்ஸ் கொடுக்கும் பயணிகள், நான் அவர்களுக்கு படுக்கை விரிப்புகள் தருவது மட்டுமல்லாது, பயணம் முழுவதும் காவல் காப்பது, ரயில் பெட்டியைச் சுத்தம் செய்ய வைப்பது, AC சரியாக வேலை செய்யவில்லையெனில், அதற்கான பணியாளை அழைத்து வந்து சரி செய்ய வைப்பது என பல விஷயங்களைச் செய்தாலும் எனக்கு டிப்ஸ் கொடுப்பதற்கு இஷ்டப் படுவதில்லை”, என ஆதங்கப் படுகிறார்.

ஒப்பந்த ஊதியம் பெறும் இவர் தனது சம்பாத்தியத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார். பீஹாரிகளிடம் “கௌன் ஜில்லா?” என அவர்களது மொழியில் அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கேட்டால் அவ்வளவு சந்தோஷம்! முகேஷ் குமார் சமஸ்திபூர் ஜில்லாவைச் சேர்ந்தவர். நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள் ஒரு மகன். இரண்டு பெண்களையும் பட்டப் படிப்பு வரை படிக்க வைத்து, வேலையும் செய்கிறார்கள், கல்யாணமும் செய்து கொடுத்து விட்டார்.  இன்னும் ஒரு பெண்ணும், பையனும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நல்ல படிப்பும் வேலையும் கிடைத்துவிட்டால், தான் வேலை செய்து அவதிப் படாது, மகனின் நிழலில் இருந்துவிடுவேன் எனச் சொல்கிறார்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் வண்டி ஓடும்போது உணவுக்குப் பிரச்சனையில்லை – எப்படியும் மீதமிருக்கும் உணவு உண்டு பொழுதினைக் கழித்து விடலாம். வண்டி ஒரு பயணம் முடித்து, அடுத்த பயணம் தொடங்கும் வரை ரயில் நிலையத்தில் இருக்கும்போது உணவு வெளியில் வாங்கித்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது – நாளொன்றுக்கு வெறும் ரொட்டியும் – [Dha]தாலும் சாப்பிட்டால் கூட ஐம்பது முதல் அறுபது ரூபாய் வரை செலவாகிறது.

தொடர்ந்து பயணத்தில் இருப்பதால் குடும்பத்துடன் இருக்க முடிவதில்லை.  மாதத்தின் பெரும்பகுதி ஓட்டத்திலேயே போய்விட, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ தான் பீஹார் சென்று மனைவி மக்களுடன் இருக்க முடிகிறது. மற்ற சமயங்களில் ரயில் தான் மனைவி, பயணிகள் தான் மக்கள் என ஓடுகிறது வாழ்க்கை இவருக்கு.

ஒவ்வொரு பயணத்திலும் சில நல்ல மனிதர்கள் வந்து தன்னை மதித்துப் பேசி, பயணம் முடியும்போது பத்து முதல் ஐம்பது ரூபாய் கொடுத்தாலும், தன்னை அவமதிக்கும் மனிதர்களையே அதிகம் சந்திப்பதாகச் சொல்லி வருத்தப் படுகிறார் முகேஷ். பயணத்தின் முடிவில் எல்லோரிடம் டிப்ஸ் கேட்டு வர பலர் அவரை பிச்சைக்காரரை துரத்துவது போல துரத்துவதைக் கண்ட போது அவரின் வருத்தம் புரிந்தது.

தற்போது +2 படித்து வரும் மகனையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து ஒரு வேலையிலும் அமர்த்தி விட்டால், “அக்கடாவென” பீஹாரில் சென்று விழுந்து விடுவேன் எனச் சொல்லும் முகேஷ் குமார் அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  விரைவில் அவருக்கு அந்த நன்னாள் அமையட்டும் என மனதில் பிரார்த்தித்தேன்.

பயணத்தின் நடுவில் சில மணித்துளிகளை அவருடன் பேசிக் கழித்ததில் எனக்கும் பொழுது போயிற்று. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் கிடைத்தது.

வேறொரு உழைப்பாளி பற்றி பார்க்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..


46 comments:

 1. இது போல் தொகுப்பூதியத்தில் இருப்பவர்களின் நிலை கடினம்தான். எப்படியாவது நிரந்தர ஊழியராகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 3. உழைப்பாளி நிலை வருத்தம்தான்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. [அடடா இத்தனைக்கும் பயணப் பதிவுகள் வரப் போகுதா! நான் வரலை இந்த விளையாட்டுக்கு! என பயந்து ஓட வேண்டாம். இன்னும் சில நாட்களுக்கு நான் பதிவுலகம் பக்கம் வருவது கடினம்! அதனால் பயப்பட வேண்டியதில்லை!]

  புரிகிறது. இந்நேரம் ஒரு 20 பதிவுகளாவது வந்திருக்கணுமே. ;)))))

  பயணங்கள் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. 10 நாளில் 20 பதிவுகளா? :) வாய்ப்பில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. தங்கள் பதிவுகள் இல்லையெனத் தெரிந்ததுமே
  பயணத்தில் இருக்கிறீர்கள் எனப் புரிந்து கொண்டோம்
  சந்திப்பில் சந்திப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. நானும் அவர் மகன் பட்டப்படிப்பு முடித்து நல்ல வேலையில் அமர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்குறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

   Delete
 8. பயணத்தின் போது நேரம் போக பேசியதை இப்படி அழகாக பதிவாக்கிவிட்டீர்கள். அவர்களின் நிலை கடினம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 9. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வரும் கொஞ்ச சம்பளத்திலும் திருட்டுப் பயணிகள் புண்ணியத்தில் கைவைக்கப் படும் நிலை என்பதும் கஷ்டமாக இருக்கிறது. அவர் நிலை சீக்கிரம் உயர கடவுள் துணை புரியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. திருவரங்கம் வந்து விட்டீர்களா? ஆதி,ரோஷிணிக்கு மகிழ்ச்சிதான்.
  குடும்பத்திற்காக உழைக்கும் தந்தையின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தற்போதைக்கு திருவரங்கம்..... 6-ஆம் தேதி தில்லி திரும்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. சுத்துங்க எசமான்! சுத்துங்க! அப்படியே இதுபோல் நாட்டுக்கும் வீட்டுக்கும் உழைக்கும் நாலுபேரைப் பற்றி சொல்லுங்க. தெரிஞ்சுக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 12. நல்ல உழைப்பாளி தான். எந்த நேமம்? மருவத்தூர் அருகில் இருப்பதா ?

  ReplyDelete
  Replies
  1. நேமம் - கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சாவூர் செல்லும் பாதையில் இருக்கிறது இந்த ஊர். கல்லணையிலிருந்து 12 கிலோ மீட்டர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 14. இது போன்ற மனிதர்களின் தன்னம்பிக்கையைப் பார்க்கும் போது தான் நம்முள் ஏற்படும் சோகங்களும் விலகுகின்றன.. அவர்கள் குழந்தைகள் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 15. இவர்களைப் போன்றோரெல்லாம் இன்னமும் இருப்பதால் தான் உழைப்பை உன்னதம் உணர முடிகிறது..

  ReplyDelete
  Replies
  1. Dear Kittu,

   Padhivar vazha patri arindhukolla un valaipoovukkul nuzhaindhen. Unnudaiya Payanakatturai padithen.Melum pala pudhu Payanakatturaigalai edir parkiren.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 16. பெரியவர் முகேஷ் குமாரின் ஆசைகள் நிறைவேறட்டும்...
  ஊருக்குப் போயிருக்கிறீர்கள்... சந்தோசமாக குடும்பத்தாருடன் இருந்து வாருங்கள்...
  வந்து பதிவிடலாம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 17. முகேஷ்க்கு ஒரு ராயல் சல்யூட். அவர் பிழைப்பில் மண் போடும் நாகரீகத் திருடர்கள் நரகம் புகக் கடவர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 18. மகேஷ் அவர்களின் நிலையை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. இனி இரயில் பயணத்தின் போது இவர் போன்ற உழைப்பாளிகளைப் பார்க்கையில் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்வோம். தகவலைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஜி!

   Delete
 19. முகேஷ் குமாரின் கனவுகள் நனவாகட்டும். உழைப்பாளிகள் பற்றிய பகிர்வுகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. பகிருங்கள்.. தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 21. படிக்கும்போது மனது கனக்கத்தான்செய்தது எத்தனைவகையான தொழிலாளர்கள். முகேஷ் குமாரின் கனவுகள் நனவாக வாழ்த்துவோம்.

  அட! இத்தனை தொடர்பயணங்கள். வாழ்த்துகள். படிக்கக் காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. பல நேரங்களில் சக பயணியை கூட மனிதனாக மதிப்பதில்லை ,சில மனிதர்கள் .நன்றியை எதிர்பார்த்தால் நெஞ்சுவலி நமக்கு நிச்சயம் வரும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....