எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 6, 2013

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே.....

[தொடர் பதிவு]தமிழ் வலையுலகில் இது ஒரு தொடர்பதிவு சீசன் போல.....  ஏற்கனவே  முதல் கணினி அனுபவத்தினை ஸ்ரீராம் மற்றும் தமிழ் இளங்கோ அவர்கள் இருவரும் அழைத்திட, “பார்த்த முதல் நாளே என எனது வலைப்பூவில் கணினி அனுபவத்தினை எழுதிவிட்டேன். இப்போது அடுத்த தொடர்பதிவு எழுதிட அழைப்பு. இப்போது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தலைப்பில் எனது அனுபவத்தினை எழுதிட, தனது கனவுகளை தொலைத்துவிட்டு “காணாமல் போன கனவுகள்எனும் வலைப்பூவில் எழுதி வரும் ராஜி.


முதல் பதிவு போலவே இன்றைய பதிவும் கொஞ்சம் ஸ்பெஷல் பதிவு தான்..... அது என்ன ஸ்பெஷல் பதிவு – கடசில சொல்றம்பா!

உங்களை ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு வீடு தேடி வந்து ஒரு அழைப்பு விடுத்த பிறகு நீங்க போகாம இருந்தா நல்லாவா இருக்கும். அதுமாதிரி என்னோட ஹர்ஷ் கா டிலா ரத்த பூமி பகுதி 9 [சந்தடி சாக்குல ரொம்ப பேர் படிக்காத இந்த பதிவுக்கு ஒரு விளம்பரம்.....] பதிவுல “வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிட்டபிறகு எழுதாம இருந்தா நிச்சயம் உங்களை புருஷா மிருகம் தின்னட்டும்ந்னு வரமளித்து விட வாய்ப்பு இருக்கிறது. அதனால எழுதிட்டேன்....

இணையத்தில் பல வருடங்களாக உலவி தமிழ் நாளிதழ்களையும், ஆங்கில நாளிதழ்களையும் படித்து என்னோட பொழுதை கழித்திருந்தாலும், வலைப்பூக்கள் படித்தது இல்லை. 2009 ஆம் வருடம் என்னுடைய சித்தப்பா திரு ரேகா ராகவன் அவர்களுடன் GMAIL CHAT மூலம் அளவளாவிக் கொண்டிருந்தபோது அவர் தான் எனக்கு சில வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரது பதிவுகளையும் அவர் அறிமுகம் செய்த சில வலைப்பூக்களையும் படித்து ரசித்ததோடு இருந்தேன்.

கல்லூரி காலத்திலும், தில்லி வந்த பிறகும் அவ்வப்போது வெள்ளை காகிதங்களை எனது கிறுக்கல்களால் நிறைத்து, பத்திரப் படுத்தி வைப்பேன். அதை என்னைத் தவிர இதுவரை யாரும் படித்ததில்லை – அவ்வளவு பிரபலமான எழுத்து அது!

தொடர்ந்த CHAT பேச்சுகளில், “நீயும் எதையாவது எழுதேன்....என சித்தப்பா வித்திட, விளைந்தது எனது முதல் பதிவு. எனது முதல் பதிவு ஒரு கல்லூரி பயணத்தின் போது நடந்த விஷயம் பற்றியது. அங்கே தொடங்கிய வலையுலக பயணம் இன்று வரை தொடருகிறது. முதல் முதலா என்னோட நினைவுகளை பதிவா எழுதி வெளியிட்டபோது அதை கணினி திரையில் பார்த்தவுடன் எழுத்தின் மேல் காதல் வர... மனதில் நிறையவே சந்தோஷம்....  நம்மளோட எழுத்து கணினி மூலம் பலரைச் சென்று அடையப்போகிறது என்ற எண்ணம். ஆனா என்னோட அந்த நினைப்புல மண்ணு தான்! :) முதல் பதிவ எத்தனை பேர் படிச்சு இருக்காங்கன்னு தெரியுமா......

குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும் எனும் தலைப்பில் எழுதிய பதிவு எழுதி வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த பதிவு எழுதும் வரைக்கும் படித்தது மொத்தமே 50 பேர் தான்! இதுல நான் பார்த்ததே முப்பது தடவைக்கு மேல் இருக்கலாம்! :) வந்த கருத்துரைகள் “அப்படி ஒன்றும் அதிகமில்லை ஜெண்டில்மேன்! இரண்டே இரண்டு.... அதில் ஒன்று என் சித்தப்பா ரேகா ராகவன் அவர்கள் எழுதியது. மற்றொரு கருத்துரை நிலாமதி என்பவர் எழுதியது. 

முப்பது தடவை பார்த்தியா... எதுக்கு? அப்படின்னு கேட்டா நீங்க பதிவுலகில் புதுசுன்னு சொல்லிடுவாங்க! நம்ம பதிவ படிச்சு, கருத்து கந்தசாமியா யாராவது கருத்து சொல்லி இருக்காங்களான்னு பார்க்க தான்! முதல் பதிவுல மட்டுமில்லாது பல பதிவுகள் வரை இது தொடர்ந்திருக்கு.....  நம்ம லெவல் இவ்வளவு தான்...  நம்மளோட பதிவுகள நிறைய பேர் படிக்க வரமாட்டாங்க ன்னு தெரிந்த பிறகு அவ்வளவு ஆர்வமா பார்க்கறதில்லை. ஆனாலும் இதுவரை வந்த கருத்துரைகள் [எனது பதில்களையும் சேர்த்து!] 19000-த்திற்கு மேல் என Google Stats  சொல்கிறது.

அன்னிக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இன்று வரை தொடர்ந்தாலும் “என்னத்துக்கு எழுதணும்.... கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு இந்த பதிவுலகம்அப்படின்னு ஒரு எண்ணம் அவ்வப்போது தலை காட்டுகிறது. எப்போது நிலையா இந்த எண்ணம் ஒரு சீட் போட்டு மனசுக்குள்ளே உட்கார்ந்துக்குதோ அன்னிக்கு எழுதுவதை நிறுத்த வேண்டியது தான்.....  பார்க்கலாம்! எங்கே வரை செல்கிறது இந்த பாதை.......

சரி முதல் பதிவு அனுபவத்தினை சொல்லியாச்சு.... அடுத்த கட்டளையையும் நிறைவேற்றி விடவேண்டும்....  நான் எழுதறது மட்டுமில்லாது இன்னும் ஐந்து பேரையும் இந்த வலையில் கோர்த்து விட வேண்டும்.....

இன்னிக்கு என் வலையில் விழப்போவது யார்.... யார்..... 

அட எவ்வளவு தூரம் வலை வீசினாலும் யாரும் சிக்க மாட்டாங்க போல இருக்கே! ஏன்னா ஏற்கனவே மத்தவங்க வீசின வலையில சிக்கி இருக்காங்க! அதனால, இன்னும் யார் எழுதலையோ அவங்களை எல்லாம் தேடிட்டு இருக்கேன்.  என் வலையில் மாட்டறாங்களோ இல்லையோ, ஆனா மாட்டாம, இந்தப் பதிவினை படித்து தனது முதல் பதிவு தந்த சந்தோஷத்தினை வலையுலக நட்புகளுடன் பகிர நினைக்கும் அனைவரையும் தொடர அழைக்கிறேன்....

மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....


ஏம்பா... இது நியாயமா, கட்சில இது என்ன பெசல் பதிவுன்னு சொல்லாமலேயே களண்டுக்கறியே!ந்னு நியாபகமா கேட்கும் பதிவுலக நட்புகளுக்கு...... கீழே கொடுத்திருக்கும் இந்த படம் சொல்லும் என்ன பெசல் பதிவுன்னு!முதல் பதிவில் ஆரம்பித்த எனது சந்தோஷம் இந்த ஐநூறாவது பதிவு வரை தொடர காரணமாக இருக்கும், அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.....மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்......

வெங்கட்.
புது தில்லி.

64 comments:

 1. 500 பதிவா...? வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மனோ..... 500-வது பதிவு தான்.....

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 2. தங்களின் வெற்றிகரமான 500வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. தங்களின் 500வது பதிவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. அரை சதம்..!

  500 வது பதிவுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. அரை சதம்.... ? ஓ அரை சஹஸ்ரம் எனச் சொல்ல வந்தீர்களா?

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. 500 பதிவுகளா .... மலைத்தேன் ... அத்தனையும் மலைத் தேன்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   Delete
 6. அட ! 500 வது பதிவா.. வாழ்த்துகள்.. வாழை மரம் கட்டியிருக்கேன்னு உள்ளே வந்தா.. வடை பாயசம் கிடைச்சுது. இன்னும் பல பதிவுகளுக்குக் காத்திருக்கோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!....

   வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி...

   Delete
 7. // மொத்தமே 50 பேர் தான்!// இந்த ---------- நாங்களே நிரப்பனுமா

  தொடர்ந்து உற்சாகமாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை ஊக்குவித்துக் கொண்டும் இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....

   வாழ்த்திய உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 8. தங்கள் 500 ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! தொடரட்டும் ... ..

  // அன்னிக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இன்று வரை தொடர்ந்தாலும் “என்னத்துக்கு எழுதணும்.... கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு இந்த பதிவுலகம்” அப்படின்னு ஒரு எண்ணம் அவ்வப்போது தலை காட்டுகிறது. எப்போது நிலையா இந்த எண்ணம் ஒரு சீட் போட்டு மனசுக்குள்ளே உட்கார்ந்துக்குதோ அன்னிக்கு எழுதுவதை நிறுத்த வேண்டியது தான்..... பார்க்கலாம்! எங்கே வரை செல்கிறது இந்த பாதை....... //

  எனக்கும் இதே சலிப்புதான். வீட்டிலும் சில சமயம் எனக்கு திட்டுதான். பதிவுலகில் நீண்ட நாட்களாக இருக்கும் எல்லோருக்கும் இந்த எண்ணம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள், தசரதனுக்கு காதோரம் தென்பட்ட நரைமுடி போன்று நமக்கும் ஏதோ ஒன்று தோன்றும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வப்போது இந்த எண்ணம் வருகிறது.... பார்க்கலாம் எத்தனை நாளைக்கு என....

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. அப்படிப்போடு! 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். 5000 க்கும் காத்திருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 11. 500 முறை வாழ்த்துகள். உங்கள் முதல் பதிவைப் போல் ஆகாமல் இருக்க, முதல்லே நாம போய் எல்லாப் பதிவிலேயும் கமென்டிட்டு வந்துடணும். அப்புறமாப் பதிவு போட ஆரம்பிக்கணும். ஹிஹிஹி, இது ஒண்ணும் பெரிய டெக்னிக்கெல்லாம் இல்லை; முதல்லே நான் கமென்ட் மட்டுமே போட்டுட்டு இருந்தேன். அப்புறமாத் தான் பதிவு எழுத ஆரம்பிச்சேன். அப்போ ஏற்கெனவே கமென்ட் மூலம் அறிமுகம் ஆனவங்க வந்தாங்க. ஹிஹிஹிஹி. அதான்!

  ReplyDelete
  Replies
  1. முதல்ல போய் எல்லாப் பதிவிலேயும் கமென்டிட்டு வந்துடணும்.... :))))

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 12. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மிக பல.
  Great job. Keep it up. Jeetiro hazarom saal.
  vijay / Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜய்ராகவன் ஜி!

   Delete
 13. 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்கள் எழுத்து எல்லோரையும் சென்று அடையும் வரை நாம் எழுதுவதில் தவறில்லை வெங்கட். நானே இப்போது அந்த மாதிரி ஒரு சோர்வில் தான் சும்மா இருப்பதே சுகம் என்றிருக்கிறேன்.
  ஆயிரமாவது பதிவில் வந்து வாழ்த்துகிறேன்.:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

   வாழ்த்துகளுக்கும் தான் வல்லிம்மா....

   Delete
 14. மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ...!

  உங்க பயண அனுபவப் பதிவுகளை புத்தகமாக்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. புத்தகம்..... :) பார்க்கலாம்.... நடப்பது என் கையில் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 15. எவ்வளவு தூரம் வலை வீசினாலும் யாரும் சிக்க மாட்டாங்க போல இருக்கே! ஏன்னா ஏற்கனவே மத்தவங்க வீசின வலையில சிக்கி இருக்காங்க!
  >>
  இதுக்குதான் கூப்பிட்ட உடனே எழுதிடனும். எழுதி இருந்தா இப்படி ஆள் கிடைக்காம திணறி இருக்க வேணாமில்ல!!!

  ReplyDelete
  Replies
  1. இருக்கற ஆணியெல்லாம் எழுத விடமாட்டேங்குது ராஜி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. இன்னாபா வெங்கட், இன்னிக்கு இஸ்பெஷலான நாளுன்னு கூவுறே! அதனால, லேடீசுக்கு ஒரு ஜாக்கட் பிட்டும், ஜென்ஸ்க்கு ஒரு கட்டிங்ன்னு குடுக்க கூடாதா?!

  ReplyDelete
  Replies
  1. ஷர்ட் கட்டிங் தானே சொல்றீங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 17. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  முதல் பதிவின் சந்தோஷ அனுபவம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 19. 500க்கு வாழ்த்துக்கள்...
  சந்தோஷப் பகிர்வும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 20. தலைப்புப் பாடல் ஹரிஹரன் குரலுக்காகவே பிடிக்கும். அவர் குரலால் அது அதன் ஒரிஜினலான ஹிந்தியை விட நன்றாக இருப்பதாக என் கருத்து.

  பதிவின் சந்தோஷம் தொடரட்டும்.

  500 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   தங்களது வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 21. ஐநூறாவது பதிவுக்கு ஏற்றப் பகிர்வு:)! இனிய வாழ்த்துகள். ‘எங்கே வரை செல்கிறது இந்த பாதை.......’ இப்படிதான் தொடருகிறோம் எல்லோருமே:)! பாதை ஆயிரத்தை எட்டட்டும் சீக்கிரம். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. பார்வையாளர் எண்ணிக்கையில் இன்னும் ஒன்றைக் கூட்டி விட்டேன். பேஸ்புக்கில் தீவிரமான பிறகு வலைப்பூவின் பக்கம் ஆர்வம் கொஞ்சம் குறைந்துவிட்டது. அங்கே நிறைய எழுதுகிறேன், வாசகர்களும் நிறையவே உண்டு. ஓராண்டாகத்தான் அதில் ஈடுபாடு அதிகம். இருப்பினும் வலைப்பூ போல சட்டென பழைய பதிவுகளைத் தேடிக் கண்டறியும் வசதி அதில் இல்லை. உங்களைப்போல தொடர்ந்து தினமும் எழுத என்னால் இயலுவதில்லை. அந்தவகையில் உங்களுக்குப் பாராட்டு - இந்த ஐநூறுக்கும் சேர்த்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 23. அடடா.... நான் இப்படி தாமதமா போனேனே இங்கே வந்து வாழ்த்த..!

  உங்கள் முதற் பதிவு சுவாரஸ்யம்! ஐநூறாவது பதிவு அசத்தல்! அருமை!

  இன்னும் பல பதிவுகளை நீங்கள் எழுதிப் பகிர்ந்திட என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

  த ம.7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி இளமதி.

   Delete
 24. உமது பதிவுலக பயணம் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி ரூபக் ராம்.

   Delete
 25. Dear Kittu,

  Unnudaya 500avadhu padhivukku vazhthukkal. Unnudaya padhivugal menmelum thodarattum.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி சித்தி.

   Delete
 26. முதல் பதிவின் உற்சாகம் இந்தக் கடைசிப் பதிவு வரை
  குறையாது தொடர்வதால் நீங்கள் நிச்சயம்
  இன்னும்சிறப்பாக பல ஆண்டுகள் பதிவினைத் தொடர்வீர்கள்
  என உறுதியாக நம்புகிறேன்
  எங்கள் ஆசையும் அதுதான்
  ஐநூறாவது பதிவுக்கும்
  இது ஆயிரம் ஆயிரமாய்த் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 27. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 28. 500 சீக்கிரமே 1000த்தைத் தொட வாழ்த்துகள்.

  சோர்வு ஏற்படுவதும் சீக்கிரமே அது விலகி புத்துணர்வோட மறுபடியும் உற்சாகத்தோட எழுத ஆரம்பிப்பதும் பதிவுலகில் ஜகஜமப்பா :-)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 29. ஐநூறாவது விசேட பதிவுக்கு வாழ்த்துகள்.

  மென்மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி மாதேவி.

   Delete
 30. 500 பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனாலும் ஒவ்வொரு பதிவுக்கும் பொருத்தமான படங்களைப் போட்டு.... நீங்கள் எடுக்கும் முயற்சிகள்.. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 31. ஐநூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் வெங்கட். இன்னும் பல நூறு பதிவுகள் கொடுத்து என்றென்னும் பதிவுலகில் நிலைத்திருக்க இனிதே வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி.

   Delete
 32. முதல் பதிவின் சந்தோஷ பகிர்வுக்கும், 500 வது பதிவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
  வெகுவிரைவில் உங்கள் பயணக்கட்டுரைகள் புத்தகமாக வெளி வர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....