எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 5, 2015

ஏற்காடு – அண்ணா பூங்கா – மிளகாய் பஜ்ஜி!ஏழைகளின் ஊட்டி – பகுதி 5  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2 3 4


பூங்காவின் நுழைவாயில்....

சென்ற வாரத்தில் ஏற்காடு நகரின் PAGODA POINT பற்றி பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைபராமரிப்பில் இருக்கும் அண்ணா பூங்கா.  ஏற்காடு ஏரியின் எதிரிலேயே அமைந்திருக்கும் இந்தப் பூங்காவில் தான் வருடா வருடம் Flower Show மற்றும் கோடை விழா நடத்துவார்கள். நாங்கள் சென்றதற்கு சில நாட்களுக்குப் பிறகு தான் Flower Show நடக்கப்போகிறது என்றாலும் பூங்காவில் அத்தனை பூக்கள் இல்லை. வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வந்து அலங்கரிப்பார்கள் போலும்!

  
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ!

பூங்காவிற்குள் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு.  பெரியவர்களுக்கு ரூபாய் பதினைந்தும், சிறியவர்களுக்கு பத்து ரூபாயும், காமிராவிற்கு ரூபாய் இருபத்தி ஐந்தும் வசூலிக்கப்படுகிறது. உரிய கட்டணங்களை செலுத்தி உள்ளே செல்லும் நம்மை எதிரில் இருக்கும் குழலூதும் கிருஷ்ணர் சிலையும் ஒரு பெண்மணியின் சிலையும் வரவேற்கின்றன.  கூடவே கூந்தல் பனை, பாவாடை பனை போன்ற பல்வேறு மரங்களும் பூங்காவிற்குள் நிறையவே உண்டு.


 பாவாடைப் பனை

பூங்காவிற்குள் அப்போது இருந்த சில மலர்களை ரசித்தபடியே சுற்றி வந்தால், மனதுக்குள் மகிழ்ச்சி.  பூக்கள் இன்னமும் அதிகமாய் இருந்திருந்தால் ஒரு பாங்கரா நடனமே ஆடியிருப்பேனோ என்னமோ! பெரிய பெரிய மரங்கள் – அதுவும் பல மரங்கள் வைத்து நூறு வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். அதனால் பூங்காவிற்குள் நல்ல குளிர்ச்சி.  மே மாதத்திலும் கோடையின் கடுமை தெரியவில்லை என்பதற்கு இங்கிருக்கும் மரங்களும் காரணமாக இருக்கலாம். 
ஜப்பானியப் பூங்கா - சில வடிவங்கள்
 
பூங்காவிற்குள் சில வருடங்கள் முன்னர் ஒரு ஜப்பானிய பூங்காவும் அமைத்திருக்கிறார்கள். கற்களைக் கொண்டு அழகிய வடிவங்களையும், ஆமை, தவளை போன்ற உருவங்களையும், சிற்றோடையினைக் கடக்க மரப்பாலம் போன்றவற்றையும் அமைத்து மாலை நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் ஒளியூட்டுகிறார்கள்.  நாங்கள் சென்றது மதிய நேரம் என்பதால் விளக்குகள் இல்லாது பார்த்தோம்.  அவையும் நன்றாகவே இருந்தன.பெயர் தெரியாவிட்டால் ரசிக்க முடியாதா என்ன! கண்களைக் கவர்ந்த பூக்கள்!
 
பூங்காவினைச் சுற்றி வரும்போது அவற்றைப் பராமரிக்கும் பல்வேறு பெண்களையும் பார்க்க முடிந்தது. பூந்தொட்டிகளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு மாற்றிக் கொண்டும், சில செடிகளை நடுவதுமாக தங்கள் பணியில் மும்மரமாக இருந்தார்கள்.  விற்பனைக்கு சில செடிகளையும் வைத்திருந்தார்கள்.  சில பூக்கள் மிகவும் அழகாய் இருந்தன என்றாலும் பெயர் தெரியாத பூக்கள்! வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பெயரைக் கேட்க, அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை – “தெரிஞ்சுட்டு என்ன பண்ணப் போற!என்றார்!  பெயரைத் தெரிந்து கொண்டால் தான் ரசிக்க முடியுமா என்ன!இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் சாபக்கேடு இங்கே இருக்கும் கழிப்பறை வசதிகள். அண்ணா பூங்காவும் இந்த விஷயத்தில் குறை வைக்கவில்லை – மகா மோசமான கழிப்பறை வசதிகள். பயணிக்கும் மனிதர்களும் அதை இன்னும் அசிங்கப் படுத்தியபடியே இருக்கிறார்கள்! சுத்தம் என்பது பற்றி எத்தனை சொன்னாலும் நாம் திருந்தப் போவதில்லை என்று சபதம் செய்து இருப்பார்கள் போலும்!

 என்ன அழகு எத்தனை அழகு!

இப்படி பூங்காவினுள் இருக்கும் பல்வேறு பூக்களையும், மரங்களையும் ரசித்தபடியே வெளியே வந்தால் சாலைக்கு எதிர்புறத்தில் ஏற்காடு ஏரி. சாலை ஓரத்தில் பல்வேறு தள்ளுவண்டி கடைகள். கடைகளில் விற்கும் விதம்விதமான பஜ்ஜி வகைகள் சுற்றுலாபயணிகளைக் கவர்கின்றன. மிளகாய், வாழைக்காய் பஜ்ஜிகள் “என்னைக் கொஞ்சம் கவனி!  என்று விளம்பரம் செய்யாத குறை தான்!

 பறக்கும் படகு பறக்கும்! ஏரிக்கரையிலிருந்து ஒரு பார்வை!

இருந்தாலும், பயணத்தின் போது எத்தனைக்கு எத்தனை உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கிறோமோ அத்தனை நல்லது என்பதால் எந்த வித பஜ்ஜியையும் வேண்டாம் என்று மனதை கட்டுப்படுத்தியபடியே ஏரியை நோக்கிச் சென்றோம்.  அண்ணா பூங்காவின் எதிரிலும் ஒரு வழி உண்டு அங்கேயும் ஒரு சிறிய பூங்காவும், ஏரியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க சில இருக்கைகளும் உண்டு.  இயற்கையின் எழிலை நீங்களும் சற்று நேரம் ரசிக்கலாமே!

அடுத்த பதிவில் ஏற்காடின் எழிலைத் தொடர்வோம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. மலர்கள் மனத்தைக் கவர்ந்தன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. ஏற்காடு அண்ணா பூங்கா சிறியதாய் இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. தாங்கள் எடுத்துள்ள படங்களும் அதற்கான விளக்கங்களையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. வணக்கம்
  ஐயா
  பதிவை படித்த போது நானும் சென்று வந்த ஒரு உணர்வுதான் த.ம 3பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. ஏற்காடு பூங்காவை அப்படியே உங்கள் தளத்திற்கு கேமரா மூலம் கடத்தி வந்தீட்டீங்களே சபாஷ் வெங்க்ட் .. அது மட்டுமல்லாமல் நீங்கள் அவர்களை போல நுழைவுகட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை.. குட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.....

   Delete
 5. எல்லா போட்டோவையும் போட்டது சரி ஆனால் நீங்கள் தோட்டத்தில் டூயட் ஆடிய போட்டோமட்டும் மிஸ்ஸீங்க்

  ReplyDelete
  Replies
  1. டூயட் ? அப்படின்னா என்னாங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. படங்கள் அனைத்தும் அருமை.
  நுழைவுக்கட்டணம் - பெரியவர்களுக்கு விட காமிராவுக்குத்தான் அதிகம். இது ரொம்ப டூ மச்...

  நல்லகாலம் பஜ்ஜி,சொஜ்ஜி படம் எல்லாம் போடலை.போட்டிருந்தீங்கன்னா கடுப்பாயிருப்பேன் (எங்களுக்கு இங்க அதெல்லாம் சாப்பிடமுடியாதே!!!)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... உங்களுக்காகவே தான் அந்த படம் போடலை! :) நாங்களும் சாப்பிடலையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. மனிதர்களை விட கேமிராவுக்கு மதிப்பு அதிகம் போலும்! நுழைவுக்கட்டணம் 25 ரூபாய்!

  ரசிக்கவைக்கும் படங்கள்.

  //"தெரிஞ்சுட்டு என்ன பண்ணப்போறே?"//

  என்ன பொறுப்பற்ற பதில். தெரியாதவர்களுக்காக அதன் பெயர்களை எழுதி அருகிலேயே ஒரு போர்ட் வைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. பொறுப்பற்ற பதில் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. பூக்களுக்கு அருகே அதன் பெயர்களை எழுதி வைத்தால் அனைவரும் தெரிந்து கொள்ளலாமே...
  படங்கள் அழகு... காத்திருக்கிறோம்... இன்னும் சுற்றிப் பார்க்க...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. படங்கள் அனைத்தும் அழகு! சுவையான தகவல்களுடன் பகிர்வு அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 10. நேரில் காண்பதைவிட புகைப் படங்களில் அழகாகத் தெரியுமோ.?

  ReplyDelete
  Replies
  1. புகைப்படங்களில் அழகாய்த் தெரியுமா! :)) சில சமயங்களில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. பூக்களின் அழகு சொட்டும் புகைப்படங்கள் அற்புதம்..கண்கள் குளிர்ந்தன நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   Delete
 12. நல்ல விளக்கவுரையுடன் அழகான புகைப்படங்கள் அருமை ஸார்
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ!
  பறக்கும் படகு பறக்கும்! ஏரிக்கரையிலிருந்து ஒரு பார்வை!

  ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி புது தில்லியோ
  தென்கிழக்கு வாசமல்லி….
  உம் பதிவை நாடி வர தூது சொல்லு….
  பதிவின் மார்கழி பனி மழையில் நனைந்தேன்
  மதி தரும் கருத்தினை புனைந்தேன்
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு....

   Delete
 14. நல்லா சுத்திக்காட்டியதோடு மிளகாய் பஜ்ஜியும் சாபிடக் கொடுத்து விட்டீர்கள்(நீங்கள் சாப்பிடாவிட்டாலும்!)
  தம7

  ReplyDelete
 15. ஆஹா நல்ல கார சாரமா மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டீங்களா! :) நல்லது!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

  ReplyDelete
 16. எனது இளமைக் காலம் நான் ஏற்காட்டில் பணியில் இருந்தபோது இங்குதான் மகிழ்ச்சியாய் களித்தேன்.நான் ஏற்காடு ஜெசிஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் வாயிலாக நிறைய கிராமங்களுக்கு உதவி செய்தது நினைவுக்கு வருகிறது.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 17. வண்ணமயமான புகைப்படங்களைவிட உங்களது எழுத்துக்கள் படிப்பவர்களை ஈர்க்கும்படி உள்ளது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. வணக்கம் சகோதரரே!

  அழகாக கண்ணையும் மனதையும் கவரும் மலர்களும், மற்ற இயற்கைப் புகைப்படங்களும், விளக்கமாக தாங்கள் எழுதிய விதமும் ஏற்காட்டை சுற்றிய நிறைவைத் தருகிறது.
  தொடருங்கள்.. தொடர்ந்து வருகிறோம்.. நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 19. காமெராவுக்கு கட்டணம் அதிகம்தான். பூங்கா நாங்கள் சென்றிருந்த போதும் சுத்தமாக இல்லை. ஏற்காடு முழுவதுமே குப்பையாகத்தான் இருந்தது. நாங்கள் சென்றிருந்த போது. ஒரு சுற்றுலா இடம் இப்படி இருப்பது எத்தனை அவலமானது! பூங்காவில் பூக்களும் அத்தனை இல்லை.

  தங்க்ளின் படங்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 20. இந்தப் பதிவை இப்போத் தான் பார்த்தேன். பூக்களின் வண்ணம் கண்ணையும் மனதையும் சுண்டி இழுக்கிறது. மிளகாய் பஜ்ஜினு பார்த்ததும் ஓடி வந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... எழுதி மூணு வருஷமாச்சு - இப்பதான் உங்க கண்ணுல பட்டுருக்கு போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 21. ஹை! இதுக்குக் கமென்ட் மாடரேஷன் வந்திருக்கே!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவாக இருந்தால் கமெண்ட் மாடரேஷ்னுக்குப் பிறகு தான் வரும். அப்படி செட்டிங்ஸ் வைத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....