எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 21, 2015

சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ!சுடச்சுட மோமோ..... 

தில்லியின் பிரதான நொறுக்குத் தீனியாக இருந்த சமோசா, கச்சோடி, பானிபூரி, தஹி பல்லா-பாப்டி போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை வெற்றி கரமாகப் பிடித்திருக்கிறது மோமோ! அதுவும் சமீப காலங்களில் எங்கே பார்த்தாலும் மோமோ கடைகள் – மாலை நேரங்களில் ஒரு சிறிய மேஜையை நடைபாதைகளில் போட்டு, அதன் மேலே ஒரு ஒற்றை கேஸ் அடுப்பு, மோமோ சூடாக்க ஒரு பாத்திரம், ஒன்றிரண்டு குப்பிகளில் சாஸ், சட்னி, பேப்பர் ப்ளேட்டுகள் வைத்து கடை ஆரம்பித்து விடுகிறார்கள். மாலை நேரங்களில் மட்டும் முளைக்கும் இக்கடைகளுக்கு இருக்கும் வரவேற்பு அமோகமானது. ஒவ்வொரு தில்லி வாசியும், குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்/சிறுமிகளும் அம்மா/அப்பாவிடம் Pocket Money வாங்கிக் கொண்டு போவதே இந்த மாதிரி மோமோ வாங்கிச் சாப்பிட என்று ஆகிவிட்டது. இரண்டு மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்த அத்தனை மோமோவும் காலியாகி விடுகிறது. ஒரு சில இடங்களில் வரிசையாக மூன்று நான்கு கடைகள் கூட உண்டு. அனைத்திலும் விற்பனை ஆகிவிடுகிறது என்பது தான் கூடுதல் சிறப்பு.அது என்ன மோமோ! அது சைவமா, அசைவமா? மோமோ என்பது ஒரு திபெத்தியன் உணவு. நம் ஊர் கொழுக்கட்டை போல ஒரு உணவுப் பண்டம். பொதுவாக வேக வைத்து சாப்பிட்டாலும் சிலர் எண்ணையில் பொரித்து எடுப்பதும் உண்டு. கொழுக்கட்டை போலவே மாவின் உள்ளே முட்டைக்கோஸ், இறைச்சி போன்றவற்றை வைத்து வேக வைத்து தருகிறார்கள். திபெத் உணவு வகை என்றாலும் நேபாள், வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இந்த உணவு பிரபலமாகி விட்டது.தில்லியில் இந்த மோமோக்கள் விற்பனை செய்வது ஒரு பெரிய குடிசைத் தொழிலாக மாறி இருக்கிறது. Chirag Delhi” எனும் தில்லியின் ஒரு பகுதியில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலர் இதை தயாரித்து தில்லியின் பல பகுதிகளுக்கும் அனுப்புகிறார்கள்.  Half Boiled Momo வாங்கிக் கொண்டு அதை சுடச் சுட வேக வைத்து தருவார்கள். முன்பெல்லாம் நேபாளிகள், வடகிழக்கு மாநிலத்தவர்கள் மட்டுமே விற்பனை செய்து வந்ததெல்லாம் மாறி விட்டது. அனைவரும் மோமோ விற்க ஆரம்பித்து விட்டார்கள்.சிராக் தில்லி பகுதியில் பல வடகிழக்கு மாநிலப் பெண்களிடம் தேவையான பொருட்களைக் கொடுத்து, செய்து தர கூலியாக ஒரு மோமோவிற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என தந்துவிட, அவர்கள் நாளொன்றுக்கு 100, 200 என தயாரித்துக் கொடுக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே இப்படித் தயாரித்துக் கொடுக்க, அவர்கள் வீட்டு வேலையும் செய்து கொண்டு பணம் சம்பாதிக்க முடிகிறது. அதை எடுத்துக் கொண்டு வந்து தில்லியின் பல பகுதிகளுக்கும் விநியோகம் செய்து சம்பாதிக்கிறார்கள் பல வியாபாரிகள்.தில்லியில் இப்படி மோமோ சாப்பிட வாய்ப்பிருந்தும் அது விற்கும் இடத்திலிருந்து வரும் வாசம் பிடிக்காத காரணத்தினாலேயே சாப்பிட்டதில்லை. சாப்பிடத் தோன்றியதும் இல்லை! சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் சென்ற போது பல இடங்களில் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக சைவ உணவு! அசாம் மாநிலத்தில் தேஸ்பூரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் “தவாங்செல்லும் போது வழியில் வெகு தூரத்திற்கு உணவகங்களே கிடையாது! வழியில் இருக்கும் சின்னச் சின்ன கிராமங்களில் தேநீர் [லால் சாய்!] குடிக்கும் இடங்களில் மோமோக்கள் மட்டுமே கிடைத்தன!

 பசி சமயத்தில் இங்கே தான் அன்னபூர்ணி எங்களுக்காக கடை வைத்திருந்தார்.

காலையில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் ஏழு மணிக்கு மூன்று சப்பாத்தி சாப்பிட்டது. மதியம் இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. உணவகம் கண்ணில் தென்படவே இல்லை! ஓட்டுனரிடம் எங்கேயாவது சாப்பிட நிறுத்தச் சொல்ல, உணவகம் என்று ஏதுமில்லை, வேண்டுமெனில் மோமோக்கள் கிடைக்கும்எனச் சொல்லி வழியில் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்கே ஒரு சிறிய கடை. கடையை நடத்துவது ஒரு பெண். அவரிடம் கேட்க, Veg Momo மட்டும் தான் இருக்கிறது! பத்து நிமிடம் காத்திருந்தால் சூடாகத் தருகிறேன் எனச் சொல்ல, உடனேயே நான்கு ப்ளேட் மோமோ சொல்லி விட்டோம்!

சுடச் சுட மோமோ வர கூடவே மிளகாய்ச் சட்னியோடு மோமோவை உள்ளே தள்ளினோம்.  இருந்த பசிக்கு மோமோ அம்ருதமாக இருந்தது! இந்தப் பயணத்தில் தான் முதன் முதலாக மோமோவை சாப்பிட்டேன். அதற்குப் பிறகு பயணத்தில் பல இடங்களில், உணவு கிடைக்காத போது மோமோ தான்! வயிற்றுக்கு ஒன்றும் தீங்கு விளைவிக்கவில்லை என்பதும் அதைச் சாப்பிட ஒரு காரணமாக இருந்தது! சரி இந்த மோமோவை எப்படிச் செய்கிறார்கள் எனத் தெரிய வேண்டுமா?

இணையத்தில் நிறைய தளங்களில் இதை எப்படிச் செய்வது எனச் சொல்லி இருக்கிறார்கள். காணொளிகளும் இருக்கிறது! மாதிரிக்கு சில கீழே!
தமிழகத்திலும் சென்னை போன்ற இடங்களில் மோமோ கிடைக்கிறது என்றாலும் மற்ற இடங்களில் கிடைப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டுப் பாருங்களேன்!

உணவே கிடைக்காத போது தான் இது போன்று சாப்பிடாத உணவு வகைகளையும் சாப்பிடத் தோன்றுகிறது! வயிற்றுப் பசிக்கு எதையாவது உள்ளே போட்டுத் தானே ஆக வேண்டும்!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

54 comments:

 1. நம்ம ஊர் கொழுக்கட்டையை கொஞ்சம் பூரணத்தை மாற்றி மோமோ என்று பெயரிட்டிருகிறார்களோ?

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயகுமார்.

   Delete
 2. ம்ம்ம்ம், அரிசி மாவிலும் இது போல் செய்யலாம். பேர் தான் வேறே. நாம கொழுக்கட்டைனு சொன்னால் அவங்க மோமோனு சொல்வாங்க! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 3. மிகவும் ருசியான உணவு....எனது மகனுக்கு மிகவும் பிடித்தமான உணவு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. மோமோ! பேரே புதுசா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் கிடைக்கிறது என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. புதிதாகச் செய்துபார்க்க ஆர்வமும் பொறுமையும் வேண்டுமே.

  ReplyDelete
  Replies
  1. பொறுமை வேண்டும் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 6. சொல்லிட்டீங்கல்ல, விடுவோமோமோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. அருமையான மோமோ அயிட்டம் பெரிய தோசையை விட அழகாக இருக்கிறது
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு நன்றி புதுவை வேலு.

   Delete
 9. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
  பாரிசில் பட்டிமன்ற தர்பார்
  http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
  வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.

   Delete
 10. வணக்கம் சகோதரரே.!

  புது மாதிரி உணவு. பேரும் புதிது ஆனால் செய்முறை கொழுகட்டையின் பாணியில். சைவமும் இதில் இருப்பதால் தப்பித்தேன். கோஸ் உடன் காரட் பீன்ஸ் உ.கி என்று ௬ட கலவையாக வைத்து கட்லெட் மாதிரி செயது சாப்பிடலாம் என தோன்றியது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. செய்முறை தெரிந்து விட்டால் உள்ளே வைக்கும் பொருளை உங்கள் வசதிக்குத் தகுந்தமாதிரி தேர்ந்தெடுக்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 11. மோமோ
  அறியாத உணவு ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 12. கொழுக்கட்டை போலவேதான் இருக்கிறது! வித்தியாசமான அனுபவம்தான்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. வணக்கம்
  ஐயா.
  இந்த மோமோ. பெரும்பாலும் சீனர்கள் மலாய்க்கார்கள் வாழ்கின்ற இடங்களில் அதிகம் சீனர்களில் உணவு கடைகளில் இதுவும் ஒவகை உணவுதான். இதை மலேசியாவில் (பாவு என்பார்கள்) நல்ல சுவையாக இருக்கும் நீங்கள் சொல்வது போல.இங்கும் ஒரு கூட்டம் அலைமோதும் 2 சாப்பிட்டல் போதும். சுவை அதிகம் ஐயா.
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. டெல்லி வந்தால் உங்களோடு அவசியம் சாப்பிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வரும்போது சொல்லுங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 16. நல்லா இருக்கும் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நல்லாத் தான் இருக்கும் பழனி. கநதசாமி ஐயா.

   Delete
 17. மோமோ சூப்பர், சாப்பிட தூண்டுகிறது, அருமையாக சொல்லியுஙளளீர், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டுத் தான் பாருங்களேன் மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 18. போகிற போக்கைப் பார்த்தால் "மோமோ" தெரியலைன்னா மெமோதான் பொல இருக்கே! நான் இப்போதான் கண்ணால பாக்குறேன் நண்பரே! நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. மோமோ தெரியலைன்னா மெமோ தான்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.

   Delete
 19. எனது வடகிழக்கு மாநிலப் பயணத்தின் போது இதை சாப்பிட்டுள்ளேன். எனக்கு அவ்வளவு சுவையாக தெரியவில்லை. பதிவு நன்றாக உள்ளது.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. இதன் வாசமே சிலருக்குப் பிடிக்காது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 20. மோமோ ருசியாக இருந்தது. வித்தியாசமாக இருந்தாலும் நீங்கள் எழுதியவிதம் எங்களை அதன்மேல் ஆசை கொள்ள வைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 21. ஷிம்லா பயணத்தில் மோமூஸ்ன்னு வித்துக்கிட்டு இருந்தாங்க. கடையில் கூட்டம் அம்முச்சு. இனிப்பு, உறைப்புன்னு ரெண்டுவகையாம். பயம் காரணமா சாப்பிடத்தோணலை:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 22. மோமோ சாப்பிட்டிருக்கின்றோம் வெங்கட்ஜி. சிம்லா, மணாலி சென்றிருந்த போது....வீட்டிலும் செய்திருக்கின்றேன். திபெத் உணவு....நம் கொழுக்கட்டை போல என்றாலும் மாவு மைதா வில் செய்யப்படுவது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 23. சிங்கப்பூர் ரெஸ்டாரிண்டு களில் பார்த்த நினைவு. அளவில இங்கு காட்டியிருப்பதைவிட பெரிதாக இருந்தது. ஏதோ நான் வெஜ் ஐட்டமோன்னு நினைத்தோம்

  ReplyDelete
  Replies
  1. வெஜ், நான் வெஜ் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   Delete
 24. மைதாவில் சின்ன வட்டம் செய்து, திரட்டுப்பால்மாதிரி கோவாவை உள்ளே வைத்துமூடி, குவக்கட்டை வேகவிடுவதுபோல் நீராவியில் வேகவைத்து எடுப்பார்கள். மாமிஸத்தையும் பக்குவம் செய்து செய்வார்களாம். நேபாலில் மிகவும் ஃபேமஸ். மோமோ சாப்பிடப் போவதுஎன்றால்
  மிகவும் குஷியென்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.. கோஸைத்துருவி உப்பு காரத்துடனும் ஸ்டஃப்
  செய்வார்கள்.. எனக்கு பயம் யார்வீட்டிலும் சாப்பிட்டதில்லை.. இரண்டொருமுறை செய்திருக்கிறேன். மறந்தே போனது ஞாபகம் வந்தது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 25. This is called "Dumpling" in USA. very popular. For veggies, they make it with hot spinach. A pack of 10 dumpling cost about 7$.
  Thyagarajan

  ReplyDelete
 26. புதுசா ஒரு உணவை டிரை பண்ணுவதே கொஞ்சம் கஷ்டமானதுதான். (என்ன எழவெல்லாம் உள்ளே வைத்திருக்கிறானோ என்ற பயம் மனதில் இருக்கும். சாப்பிட்டபின், சாப்பிட்டது சரியா..தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றிக்கொண்டே இருக்கும்). நீங்க எஞ்சாய் பண்றீங்க. சந்தோஷம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 27. என் தளத்தில் இன்று மோமோஸ் பற்றிய சமையல் குறிப்பில் தங்களது மோமோஸ் தகவல்களையும் இணைத்துள்ளேன்....

  https://anu-rainydrop.blogspot.in/2017/05/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. எனது பதிவு பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....