எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 3, 2016

நாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி.....ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 63

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


லவ் பானி


பிட்சி....


நாங்கள் தவாங்கில் கிடைத்த அனுபவங்களோடு உறங்கிப் போக, சில நண்பர்கள் மட்டும் அருணாச்சலப் பிரதேசத்தின் நாட்டுச் சாராயம் அருந்த முடியவில்லை என்ற வருத்தத்தினை நண்பர் ஜார்ஜுடன் பகிர்ந்து கொண்டார்கள் போலும்...  அவர் எதற்குக் கவலைப் படுகிறீர்கள் என அதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.  தவாங்கிலிருந்து காலையில் ஓட்டுனர் ஷம்புவுடன் அவரது வாகனத்தில் புறப்பட்டு போகும் வழியில், தவாங்க் தாண்டியதும் நகரின் எல்லையில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் இருக்கும் கேரள மாநிலத்தவர் ஒருவருக்கு அலைபேசி மூலம் தகவல் தந்து விட்டார்.தங்குமிடத்தின் எதிரே இருந்த பூங்காவில் புத்தர் சிலை... 


தவாங்க் தங்குமிடத்தின் வெளியே நண்பர்களோடு..

நாங்கள் அடுத்த நாள் காலையில் தவாங்க் நகரில் இருந்த கடைவீதியைக் கொஞ்சம் சுற்றி விட்டு, நண்பர் ஜார்ஜிடம் எங்களது நன்றியைத் தெரிவித்து புறப்பட்டோம். வழியில் மற்றொரு கேரள மாநிலத்தவரைச் சந்தித்து பிறகு பயணம் தொடரவேண்டும். சில கிலோமீட்டர்கள் பயணித்தபிறகு ஒரு வளைவில் அந்த கேரள நபரைப் பற்றி விசாரித்தோம். அவர் அங்கே ஒரு Mechanic Shop வைத்திருக்கிறார். அதற்குள் நாங்கள் நின்றிருந்த சாலையின் மேலே இருந்த வீடு ஒன்றிலிருந்து மலையாளக் குரல்…..


தவாங்க் கடைவீதி...

நண்பர் மலை வழியே கீழே இறங்கி வந்து அறிமுகம் செய்து கொண்டார்.  வீட்டிற்கு வர வேண்டும் எனச் சொல்ல, இத்தனை பேரும் அவர் வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என அங்கேயே நின்று பேசினோம். அதற்குள் அவர் மகனுக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை கீழே வரச் சொல்ல, குடும்பம் முழுவதும் வந்து விட்டார்கள். அருணாச்சல் மட்டுமல்லாது பெரும்பாலான வடகிழக்கு மாநிலத்தவர்கள் ஜோல்னா பை இல்லாது இருப்பதில்லை. கேரள நண்பரின் மனைவி தோளிலும் ஒரு ஜோல்னா பை! அதில் இரண்டு பாட்டில்கள் லவ்பானி, இரண்டு பாட்டில்கள் ரெக்ஸி/பிட்சி. இரண்டுமே அருணாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் நாட்டுச் சரக்கு!


கடைவீதியிலும் பிரார்த்தனை உருளைகள்...

நமது ஊர் போல இதை யாரோ அரசியல்வாதியின் அடிப்பொடி ரவுடியின் மேற்பார்வையில் தயாராகும் சரக்கு அல்ல! ஒவ்வொரு வீட்டிலும் இந்த நாட்டுச் சரக்கினை பெண்களே தயாரிக்கிறார்கள். பெரியவர்கள், குறிப்பாக ஆண்கள் இந்த நாட்டுச் சரக்கினை தினமும் அருந்துகிறார்கள். பெண்களும் இதை அருந்துவதுண்டு.  இந்த நாட்டுச் சரக்கினை அடித்தால் IMFL சரக்கை விட கிக் அதிகமாக இருக்குமாம்.  அது சரி அருணாச்சல் பெண்கள் தயாரிக்கும் இந்த சரக்கு மலையாள நண்பரின் மனைவி எப்படி தயாரிக்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம்!


நண்பர்களுடன் தவாங்க் குடும்பம்...

கேரள நண்பர் இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக தவாங்க் நகர வாசி. இளமையிலேயே அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குழந்தைகள் அம்மாவிடம் அருணாச்சலப் பிரதேச மொழியிலும் அப்பாவிடம் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். மலையாளம் பேசத் தெரியாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். சில புகைப்படங்களையும் அந்த சாலையின் ஓரத்திலேயே நின்று எடுத்துக் கொண்டோம். 

கேரள நண்பரின் மனைவி எங்களுடன் வந்திருந்த நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க, நாட்டுச் சரக்கினைக் கொடுத்ததோடு, ஒரு Flask-ல் தேநீரும் கொண்டு வந்திருந்தார். அனைவருக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தார். குழந்தைகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய மகனுக்கு கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வமாம். அதற்காகவே கேரளாவிற்குச் சென்று அங்கே நிறைந்திருக்கும் கால்பந்து அகாடெமி எதிலாவது சேர்த்து விட எண்ணம் என்றும் சொன்னார் அந்த கேரள நபர்.  இன்னும் சில மாதங்களில் அருணாச்சலப் பிரதேசம் விட்டு கேரளத்திற்கே குடும்பத்துடன் சென்று Settle ஆகும் எண்ணம் இருப்பதையும் சொன்னார்.

காதல் – ஜாதி, மொழி, மதம், இனம் என எதையும் பார்ப்பதில்லை. எவருக்கும் எவர் மீதும் காதல் வரலாம்! இரண்டு பேருக்குமே மற்றவர் மீது காதல் என்பதால் இத்தனை வருடம், மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் காதல் மட்டுமே துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காதல்…  அதற்குத் தான் எத்தனை சக்தி! எங்கிருந்தோ வந்து இப்படிக் காதல் புரிந்து திருமணமும் செய்து கொண்ட அந்த நண்பருக்கு இத்தனை வருடம் கழித்து நாங்கள் வாழ்த்துகளைச் சொன்னோம். கணவன் மனைவி குழந்தைகள் என அவர்களுக்குள் பரிமாற்றம் எல்லாமே ஹிந்தி மொழியில் தான். நாங்கள் அந்த நபரிடம் மலையாளத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹிந்தியிலும் பேசினோம்.  

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் நகரிலிருந்து கேரளாவிற்குப் பயணம் செய்யப் போகிறது அந்த குடும்பம். இந்திய வரைபடத்தின் தெற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிக்கு வந்து அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் அந்த கேரள நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துகளைச் சொல்லி, தொடர்பு எண்களைப் பரிமாறிக் கொண்ட பின் எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.   

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி

30 comments:

 1. காதல் தூர இடைவெளிகளைக் கூடக் குறைத்து விடுகிறது. மொழி கடந்து நிற்கிறது!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. >>> ஒருவருக்கு மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் -
  அன்பின் துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. <<<

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் பெண்கள் மற்ற மாநில ஆண்களை மணந்து கொள்வதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. அருணாச்சல் பிரதேசத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றிகள்!
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 4. படங்களை ரசித்தேன் !
  இந்த தொலைதூரக் காதலை தெய்வீக காதல் என்றும் சொல்லலாம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 5. காதலுக்கு கண்மட்டும் அல்ல தர்க்கமும் கிடையாது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களை அங்கு இருந்த மலையாளி ஒருவர் வரவேற்றார் என்னும் ஜோக் நினைவுக்கு வருகிறதுமலையாளிகள் இல்லாத இடமே இல்லைபோல் இருக்கிறது very enterprising people

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. ஆச்சரியமான தகவல்தான். உங்களுக்கு தே'நீரா அல்லது லவ்பானி/ரெக்சி/பிட்சியா? அதைச் சொல்லலியே.. :)) நல்லவேளை செய்முறைக் குறிப்பு கொடுக்கவில்லை (ஒருவேளை அடுத்த இடுகையில் 'எப்படிச் செய்யணும் மாமூ' என்ற வார்த்தையோடு கொடுக்க உத்தேசித்திருக்கிறீர்களா?

  புகைப்படத்தில் உள்ளவர் உதயனிதி ஸ்டாலின் மாதிரித் தெரிந்தார். (பெரிய மகன் என்று நினைக்கிறேன்.)

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தேநீர் மட்டுமே...... நாட்டுச் சரக்கு பாட்டிலோடு நாங்கள் பயணித்தோம். அன்று இரவு தங்குமிடத்தில் நண்பர்கள் சுவைக்க காத்திருந்தார்கள்.

   எப்படிச் செய்யணும் மாமூ என இதன் தயாரிப்பு வராது! வேறு பதிவு விரைவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. காதல் அனைத்தையும் சாதிக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 9. காதலுக்கு ஒரே மொழிதான் அது அன்புமட்டுமே

  ReplyDelete
  Replies
  1. காதலுக்கு ஒரே மொழி அன்பு மட்டுமே.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. அருணாச்சலப் பிரதேசத்தில் நாட்டுச் சாராயம் என்றால் கேரளாவில் ஒயின் அநேக குடும்பங்களில் வீட்டிற்கு வீடு தயாரிப்பார்கள் என் நண்பரின் அம்மா அமெரிக்கா வரும் போது என் நண்பருக்கு வீட்டிலே ஒயின் தாயாரித்து கொடுத்துவிட்டு போவார்கள்

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. காதலுக்கு மொழி அவசியமில்லை என்பதை இங்கே எம்மவரை திருமணம் செய்யும் சுவிஸ் காரர்களும் நிருபித்துகொண்டிருக்கின்றார்கள். நாட்டுச்சாரயம் வீட்டில் காய்ச்ச அரசு தடையில்லையா? ஆரோக்கியமான விதத்தில் தான் செய்வார்களாமா? சில பகுதிகளில் பற்றரிகளையும் போட்டு ஊற வைத்து செய்வதாய் சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே பாட்டரிகள் போடுவதில்லை. அரிசியிலிருந்து எடுக்கிறார்கள். இது தயாரிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. அரசாங்க அனுமதி பற்றி தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 13. அழகான படங்கள்...
  காதல் என்பது எதிலும் கலக்காத புதுமொழி...
  சந்தோஷமான குடும்பம் அமைந்து சந்தோஷிக்கும் அவரை வாழ்த்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 14. காதல் விரவியிருக்கும் பதிவு..

  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 15. உண்மையான காதலுக்கு அன்பு, அதுவும் அங்கண்டிஷனல் அன்பு என்பதே மொழி மதம் எல்லாமுமே! அதன் சக்தி அளப்பற்கரியது எனலாம். அந்தக் குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துக்களும்! சுவாரஸ்யமான தகவல்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....