வெள்ளி, 31 மார்ச், 2017

ஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை….. – Sotally Tober

Sotally Tober! [முகப்புத்தகத்தில் நான் – 15]


 
சில சமயங்களில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் CP என அழைக்கப்படும் கனாட் ப்ளேஸ் வழியே வீடு திரும்புவதுண்டு. பாராளுமன்ற சாலையில் இருக்கும் பார்க் ஹோட்டல் வரை பேருந்து. அங்கிருந்து ரீகல் சினிமா தியேட்டர் வழியாக சிவாஜி ஸ்டேடியம். அங்கிருந்து மீண்டுமொரு பேருந்து பிடித்து வீடு திரும்புவது – பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து புறப்படும் வேளை எட்டு மணிக்கு மேல் எனும்போது! அப்படி வரும் வேளைகளில், கனாட் ப்ளேஸ் பகுதியில் நடக்கும்போது பராக்கு பார்த்தபடி வருவது தான் வழக்கம்.

உணவகங்கள், பெரிய பெரிய கடைகள், நடைபாதைக் கடைகள் என பார்த்தபடியே வரும்போது ஒரு Bar/Pub ”Q” என்று பெயர்! வெளியே ஒரு Podium வைத்து அங்கே நின்று கொண்டிருப்பார் ஒருவர் – சில சமயங்களில் பெண்! மூணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்ற விளம்பரமும் உண்டு! வேறென்ன பீர் தான்! Bar இன் பெயர் Q என்றாலும் வெளியே Q நிற்பதில்லை என்பதில் மனதுக்கு மகிழ்ச்சி.  இதுவரை உள்ளே சென்றதில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன் [எல்லாம் முன் ஜாக்கிரதை உணர்வு தான்…..]

அந்த Pub உள்ளே நடப்பது பற்றியோ, அங்கே குடிப்பவர்கள் பற்றியோ ஒன்றும் சொல்லப்போவதில்லை! வாசலில் நிற்பவருடன் இன்னுமொருவர் நின்று கொண்டிருப்பார். அவர் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். கருப்பு உடை – கருப்பு Pant, கருப்பு Shirt தான் அவருக்கு சீருடை போலும்! அந்த சட்டையின் பின்னால் எழுதி இருந்த வாசகம் தான் “Sotally Tober!”  - நமக்குத் தப்பாக புரிந்தாலும், நாம் தப்பாக படித்தாலும், Pub-லிருந்து மப்புடன் திரும்புவர்களுக்கு சரியாகவே படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்! அதாங்க….  Totally Sober!

அப்படி மப்பில் வெளிவரும் நபர்களை, அந்த நபர்களின் காரிலேயே காரோட்டியாக இருந்து அழைத்துச் செல்ல காத்திருக்கும் நபர் தான் கருப்பு சீருடைக்காரர்! நேற்று அப்படி ஒருவர் படிக்கட்டிலேயே எட்டு போட்டபடி Pub-லிருந்து வர, அவரைக் கைத்தாங்கலாக பிடித்து, அவர் கொடுத்த சாவியை வாங்கி வண்டியின் பின் சீட்டில் போட்டு! காரை எடுத்துக் கொண்டு சென்றார் கருப்பு சீருடைக்காரர்!

அந்தப் பகுதியில் நடைபாதையில் படுத்திருப்பவர்கள் நிறையவே உண்டு. அந்த Pub பெரிய புள்ளி போதையில் கார் ஓட்டிச் சென்றால் என்ன ஆகும்?….. நினைக்கும்போதே பதறுகிறது!  தனது சீருடையில் ஆங்கிலம் வேண்டுமென்றே தவறாக எழுதி இருந்தாலும், சிலரின் வாழ்க்கையைக் காப்பாற்றுபவராக இருக்கும் அந்த கருப்புச் சீருடைக்கார நண்பருக்குப் பூங்கொத்து!

இந்த வார காணொளி:

சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு காணொளி! நீங்களும் பாருங்களேன்!


இந்த வார குறுஞ்செய்தி:

உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது. உலகிலேயே மிகக் கடினமானது தன் குறையை தானே உணர்வது.

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார WhatsApp:

The amount of money that’s in your bank at the time of death, is the extra work you did which was not necessary!

இந்த வார ரசித்த இசை:

சத்யஜீத் ஜெனா என்று ஒரு சிறுவன்.  ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்தவர். Sa re ga ma pa Little Champs 2017 போட்டியில் பங்கெடுத்து வருகிறார். அவர் பாடிய ஒரு பாடல்…. கேட்டுப் பாருங்களேன். என்ன ஒரு குரல்!


ராஜா காது கழுதை காது:

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு நின்றிருந்தேன். அங்கே இரண்டு பெண்களிடம் ஒரு ஆண் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு செலவு பற்றியதாக இருந்தது. அந்த ஆண் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தார். “நீங்க ரெண்டு பேரும் தண்ணி அடிக்கறதில்லை, சிகரெட் பிடிக்கறதில்லை, அப்புறம் எப்படி உங்களுக்கு இவ்வளவு செலவு ஆகுது!” பதிலே சொல்லாமல் இரண்டு பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள்! 

படித்ததில் பிடித்தது:



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. கருப்புச் சட்டைக்காரரின் பணி பாராட்டிற்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. சூப்பர் ப்ரூட் சாலட் தம்பி!
    ஒரிசா பையன் கலக்குறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி அண்ணா!

      நீக்கு
  3. இது போல் எத்தனை கருப்புச்சட்டைக் காரர்கள் வந்திருப்பவரின் விலாசம் அவர்களுக்குத் தெரியுமாஇந்த மனசாட்சியை எப்படி வேண்டுமானாலும் யூஸ் செய்யலாம் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய கருப்புச் சட்டைக்காரர்கள் உண்டு. வீட்டு விலாசம் கேட்டுக் கொள்வார்கள். போதையில் இருந்தாலும் வீடு விலாசம் சொல்லும் அளவிற்கு நினைவு இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கறுப்புச் சட்டைக்காரருக்கு எங்கள்து பூங்கொத்தும்.

    இற்றையும் குறுஞ்செய்தியும் மிக மிக அருமை

    காணொளி சூப்பர்!! ரொமப் ரசித்தோம்...

    படித்ததில்பிடித்தது எப்போதோ எங்கோ வாசித்த நினைவு....அதுவும் ரசித்தோம். நெகிழ்ச்சி....

    அச்சிறுவன் மிக நன்றாகப் பாடுகிறான்....அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. கறுப்புச் சீருடைக்காரர் பணத்துக்காக செய்தாலும் நன்மையே செய்கிறார். அனைத்து தகவலும் அருமை, ஆனா கடசியாக போட்ட தாத்தா பாட்டி கதை நெஞ்சை சோகமாக்கிட்டுது... எப்பவும் ஆண் முந்திவிடவேணும் வாழ்க்கையில்.. பெண் தன்னை எப்படியும் சமாளித்துக் கொள்வா... வயதான காலத்தில் தனிமை கொடுமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  7. ....சுவையான கலவை. ரசித்தேன் மிகவும்!
    இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.

      நீக்கு
  8. கருப்பு சீருடைக்காரர் பல உயிர்களை காப்பாற்றும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.
    அருமையான புரூட் சாலட் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  9. கருப்பு சீருடைக் காரருக்குப் பாராட்டு.. கடைசிக்கவிதை மனம் பிசைகிறது. இருக்கும்வரை துணையின் மதிப்பு அறியாது பின்னாளில் வருந்தி என்ன பயன்.. காணொளியும் குட்டிப்பையன் பாடலும் அசத்தல். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. இருக்கும் போது மதிப்பு தெரிவதில்லை.

      நீக்கு
  10. இந்த வார காணொளியும், WhatsApp தகவலும், படித்ததில் பிடித்ததும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....