எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 1, 2017

கொல்கத்தா – அன்னை இல்லம்…..


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 101

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.Acharya Jagdish Chandra Bose Botanic Garden சென்று அங்கே இருந்த Great Banyan Tree பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சில விஷயங்கள் பார்ப்போம்….

26 ஆகஸ்ட் 1910 – அல்பேனியா நாட்டிலுள்ள ஸ்கோபியே [Skopje] எனும் இடத்தில் பிறந்தவர் Gonxha Agnes…. பெற்றோர்கள் Nikola and Drane Bojaxhiu. எட்டு வயதிலேயே தந்தையை இழந்த அக்னேஸ் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.  இளம் வயதிலேயே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்குடன் இருந்தவர் 18-வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறி அயர்லாந்து சென்றார். அங்கே மூன்று மாதங்கள் இருந்த பிறகு இந்தியா/கொல்கத்தா வந்து சேர்ந்தார். பெண்களுக்கான ஒரு பள்ளியில் கல்வி கற்பித்தார். எந்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாரோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் ஆனார். செப்டம்பர் 10, 1946 அன்று, கொல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்க் நகருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது மனதில் ஒரு எழுச்சி, உட்தூண்டல்…. நாம் பிறந்ததன் காரணம் என்ன? நாம் இப்படியே இருந்துவிடக்கூடாது, அனைவருக்கும் பயன் தரக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என ஒரு அமைப்பினைத் துவங்கினார்.  இரண்டு வருடங்கள் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏழை எளியவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்ட முதியவர்கள் என ஒவ்வொரு நாளும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது வழக்கமாயிற்று.கிட்டத்தட்ட 87 வருடங்கள் உயிர்வாழ்ந்து, அதுவும் அடுத்தவர்களுக்காகவே உயிர்வாழ்ந்து பல சீரிய பணிகளைச் செய்து செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தன்னுடைய உடல் நீத்தார்….. Gonxha Agnes என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை நாம் வேறு பெயரில் அறிவோம்… அது அன்னை தெரசா….. பூங்காவிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் ஆசார்ய ஜகதீஷ் சந்திர போஸ் சாலையில் அமைந்திருக்கும் அன்னை இல்லம்.  தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும் இந்த இல்லத்திற்குச் சென்று அன்னை தெரசாவின் கல்லறை அருகே சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தோம். அவர் எத்தனை எத்தனை மக்கள் மீது அன்பு செலுத்தி இருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே இருந்தோம்.அவர் இருந்த சிறிய அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  அனைத்தையும் நின்று நிதானித்து பார்த்த பிறகு வெளியே வந்தோம்.  ஆங்காங்கே அன்னையின் பொன்மொழிகளை எழுதி வைத்திருக்கிறார்கள். எங்கும் அமைதி. அன்னையின் பொன்மொழிகள் உள்ள புத்தகங்களை – பல மொழிகளில் வெளியிட்டு இலவசமாக விநியோகம் செய்கிறார்கள். கூடவே அன்னை இல்லத்தின் வாசலில் ஒரு தகவல் – அன்னையின் இல்லத்திற்காக காசு கொடுங்கள் என கேட்பவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள் என்பது தான் அது!

அன்னை தெரசாவின் அறைக்கு வெளியே...

மனதில் ஒரு வித அமைதியுடன் வெளியே வர ஒரு முதிய பெண்மணி வாசலில் நின்று கொண்டிருந்தார்.  குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்க வேண்டும், நீங்கள் கொடுக்கும் பணம் அன்னை இல்லத்திற்கு உதவியாக இருக்கும் என்றார். உள்ளே தகவல் பதாகை பார்த்திருந்தாலும் முதியவராக இருக்கிறாரே என்று நண்பர் பத்து ரூபாய் தர, “பால் பவுடர் வாங்க ஐநூறு ரூபாய் தேவை, கொடுக்கலாமே” என்கிறார். நீங்கள் அன்னை இல்லத்தில் உதவியாளரா, உங்களுக்கு அடையாள அட்டை ஏதும் உண்டா? என்று நண்பர் கேட்க, இல்லத்திலிருந்து ஒரு கன்னிகாஸ்திரி சகோதரி வெளியே வர, முதிய பெண்மணி “எஸ்ஸானார்….”!

அன்னை இல்லம் செல்லும் வழி...

எந்த இடமாக இருந்தாலும், ஆண்டவன்/கடவுள்/மதம் என்ற பெயரில் இப்படி யாராவது மனிதர்களின் பக்தியை வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள்.  அது எந்த மதமாக இருந்தாலும்.  இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் இப்படி பார்த்திருக்கிறேன் – அது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் இப்படியே – இதில் மாற்றமில்லை. இப்படி ஏமாற்றுவதில் இருக்கும் ஒற்றுமை, அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதில் அனைத்து மதத்தினரிடம் இருந்துவிட்டால் மதக் கலவரமே இருக்காது! ஆனால்…. 

மனதில் ஒரு வித அமைதியுடன் அன்னையின் வரலாற்றைப் படித்த படியே அன்னை இல்லத்திலிருந்து வெளியேறினோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன இடம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  பதிவு எண் - 1300!  இத்தனை பதிவுகள் எழுத எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

20 comments:

 1. சிலவரிகளிலேயே உணர்ந்து கொண்டேன்.. பதிவு யாரைப் பற்றியென்று!..

  மகத்தானவர்.. மண் பயனுறப் பிறந்தவர்களுள் சிறப்பிடம் பெற்றவர்!..

  என்றும் மக்களின் மனங்களில் அன்னை தெரசா ஒளிர்வார்!..

  ReplyDelete
  Replies
  1. அவரைப் போல இன்னுமொருவர் கிடைப்பதரிது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. அன்னை தெரேசா மாதிரி இனி ஒருவர் வருவாரா?

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அவரைப் போல இன்னுமொருவர் கிடைப்பதரிது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு நொரண்டு.

   Delete
 4. வாழ்ந்தால் - இப்படி வாழ ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அன்னை இல்லாம்
  வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் சென்று பார்க்க வேண்டும்
  என்ற ஆவல் எழுகிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. அன்னை இல்லம்
  முந்தையக் கருத்துரையில் தவறுதலாகத் தட்டச்சு செய்துவிட்டேன்
  பொருத்தருள்க

  ReplyDelete
  Replies
  1. சமயத்தில் இப்படி நடந்து விடுவது தவறல்ல...

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. ஆச்சரியப்பட வைத்த அன்னை !

  1300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

   Delete
 8. நன்மொழிகள் பலவற்றையும் படிக்கிறோம் கேட்கிறோம் ஆனால் நம் வழி தனி வழிதானே

  ReplyDelete
  Replies
  1. நன்மொழிகள் படிக்க/கேட்க மட்டுமே செய்வது தான் நம்மில் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. சொல்ல ஆரம்பித்ததுமே தெரிந்துவிட்டது அன்னை தெரசா என்று இனி அப்படி ஒரு பெண்மணி வருவாரா என்பது மிகவும் கேள்விக் குறியே!!! நல்ல பதிவு!

  கீதா: ஜி மேற் சொன்ன கருத்துடன் தாங்கள் கொடுத்திருக்கும் பூக்களின் படங்கள் அழகு! வார்த்தைகளும் அருமை!.

  ReplyDelete
  Replies
  1. பூக்களின் படங்கள் நான் எடுத்தவையே... பொன்மொழிகள் அன்னை தெரசாவின் பொன்மொழிகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   Delete
 10. பதிவு எண் - 1300! // வாவ்!! வாழ்த்துகள் ஜி! மேலும் பல எழுதி சாதனை படைத்திட வாழ்த்துகள் ஜி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், உங்களைப் போன்றவர்கள் தரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....