எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 26, 2017

நாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்


கடற்கரை என்றாலே நம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தானே. எத்தனை முறை கரைக்கு வந்து திரும்பும் இந்த அலைகள்…. அலுக்கவே அலுக்காதோ இந்த அலைகளுக்கு?  அலுக்காமல் வந்து திரும்பும் அலைகளை அலுக்காமல் பார்க்க எனக்கும் பிடிக்கும்… ரொம்ப நேரம் உப்புக் காற்றில் நிற்கக் கூடாது என்று சொல்வார்களே என்று அங்கிருந்து அகல மனதில்லாமல் தான் நகர்வேன்…. 

சில மாதங்களுக்கு முன்பு சென்று வந்த கடற்கரை – தியுவில் உள்ள நாகாவ் கடற்கரை.  அங்கே எடுத்த படங்களில் ஒன்று தான் இப்போது எனது வலைத்தளத்தின் முகப்பாக இருக்கிறது! இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்.  அவற்றில் சில இந்த ஞாயிறில் உங்கள் ரசனைக்காக……


கடல் அலைகளைப் பார்த்தபடியே நின்று கொண்டிருப்பதால் மட்டுமே கடலைக் கடந்து விட முடியாது.....


வாழ்வும் சாவும் ஒன்று தான்....
கடலும் நதியும் போல!


கடல்....  தன் அழகில் மயங்க வைத்து, தான் வீசிய வலைக்குள்ளே சிக்க வைத்துக் கொள்ளும் திறன் கடலுக்குண்டு!


கடல் - நம்மை விட உயர்ந்த சக்தி உண்டென்பதற்கு சாட்சி!


நாம் எல்லோருமே தீவுகள் தான்....
ஒரு மஹா சமுத்திரத்திற்குள் இருக்கும் தீவுகள்!


எல்லா நதிகளுமே கடலுடன் தான் சேருகின்றன....
என்றாலும் கடல் என்றுமே நிரம்புவதில்லை!


கப்பல் விபத்தில் மாட்டிக் கொண்டவன், அமைதியான கடலைப் பார்த்தும் பயப்படுகின்றான்.....


யாராலும் கப்பலைச் செலுத்த முடியும்....
கடல் அமைதியாக இருக்கும்போது!


கடல் அமைதியாக இருக்கும்போது கப்பலைச் செலுத்தலாம் என்று நினைத்தால் உங்களால் பயணிக்கவே முடியாது....


கடலுக்குள்ளே இருக்கும் மணல் துகளின் எண்ணிக்கைகளை விட அதிகமானது மனிதனின் விருப்பங்கள்....


கடலுக்குள் தகவல் பதாகைகள் இருப்பதில்லை! உங்கள் வழியை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்...


கடலைக் கொண்டாடுவோம்.....
நாகாவ் கடற்கரை ஓட கடைகள்.... நான் தான்... இங்கே தான் இருக்கேன்... காலம் காலமா...
நாகாவ் பீச் - அறிவுப்புப் பலகை. 

என்ன நண்பர்களே, நாகாவ் பீச் படங்கள் உங்களுக்குப் பிடித்ததா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


டிஸ்கி: படத்தின் கீழே சிவப்பு வண்ணத்தில் கொடுத்துள்ள வசனங்கள் ஆங்கிலத்தில் கடல் பற்றி படித்தவையின் தமிழாக்கம்.... தமிழாக்கம் மட்டுமே என் செயல்! கருத்து எழுதியவருக்கே சொந்தம். பாராட்டுகளும் அவர்களுக்கே!

34 comments:

 1. அழகிய புகைப்படங்கள்.

  சுனாமிக்குப் பிறகு வந்த ஒரு எஸ் எம் எஸ்... கடலலைகளைப் பார்த்து சொல்வது போல... "நீ எத்தனை முறை வந்து வந்து காலில் விழுந்தாலும் (என் குடும்பத்தையே பலிகொண்ட) உன்னை என்னால் மன்னிக்கமுடியாது"

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் உன்னை என்னால் மன்னிக்க முடியாது... :( உண்மை தான். அது பெரும் சோகம் அல்லவா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்கள் மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி!

  கீதா: அழகோ அழகு! ஜி! கடல் என்றாலே மிகவும் பிடிக்கும். அலைகள் நானும் உங்களைப் போல் நினைத்து மனமில்லாமல்தான் திரும்புவேன். கடற்கரை பார்த்ததும் கோவா பக்கம் டையு பீச்...அழகு. அருமையான இடமாயிற்றே...சுத்தமாக இருக்கிறதே...அது போல கேரளத்துக் கடற்கரையும் சுத்தமாக இருக்கிறது.....அப்போ பதிவு உண்டோ...

  நானும் மெய்யாலுமே பீச்சாங்கைப் பக்கப் படங்கள் அதான் மெரினா, கிழக்குக் கடற்கரை படங்கள் சமீபத்தில் எடுத்த்தைப் பகிர்கிறேன்...இங்கு கடற்கரையில் எல்லோரும் தங்கள் டாய்லெட்டாவும் இன்னும் சில பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள் மக்கள் கழிவுப் பொருட்களையும் வீசுகிறார்கள். பெசன்ட் நகர் பீச் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது...இப்போதும்..உங்கள் படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன ஜி!

  நானும் படங்களைப் பகிர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் சொன்னதற்கு நன்றி. கடற்கரையை மிகவும் மோசமாக பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் கோபம் தான் வருகிறது. நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் கீதா ஜி!...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. கடலும் நதியும் காடும் மலையும் காணக் காணத் திகட்டாதவை..

  அழகிய படங்களைக் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. நாகாவ் பீச் படங்கள்...வசீகரமான அழகு


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 5. படங்கள் நல்லா இருந்தது. அதைவிட உங்களின் விளக்கங்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாசகங்களின் தமிழாக்கம் மட்டுமே என் செயல். பாராட்டுகள் ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
  2. படங்கள் அருமை நண்பரே...
   வாசகங்களும் அருமை ...!!!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 6. படங்களும் வாசகங்களும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. கடலும் கடல் சார்ந்த இடமும் அழகு வெங்கட் சகோ :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ரொம்ப நாள் கழிச்சு நிறைய பேர் வலைப்பூக்கு வந்திருக்கீங்க போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 8. ஆஹா நானும் கடல்கரை ஓரமா முதன் முதலில் கால் பதிக்கிறேன்.. அலைக்குப் பயம்ம்மாக்கிடக்கூ ஆனாலும் வந்த வேகத்தில் 3 நம்பர் குத்திட்டேன்ன்.. நோட் திஸ் பொயிண்ட் பிளீஸ்ஸ்:)..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகை - மகிழ்ச்சி.

   நோட் திஸ் பொயிண்ட் பிளீஸ்ஸ்.... 3 நம்பர் விழல! இன்னும் ரெண்டுலேயே நிக்குது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 9. சந்தித்ததும் சிந்தித்ததும்////
  சந்தித்த இடத்தில ஓவரா சிந்திச்சிட்டீங்க.. நான் தலைப்புக்குச் சொன்னேன்:)..

  ///டிஸ்கி: படத்தின் கீழே சிவப்பு வண்ணத்தில் கொடுத்துள்ள வசனங்கள் ஆங்கிலத்தில் கடல் பற்றி படித்தவையின் தமிழாக்கம்.... தமிழாக்கம் மட்டுமே என் செயல்! கருத்து எழுதியவருக்கே சொந்தம். பாராட்டுகளும் அவர்களுக்கே!//

  ஓ அப்போ அதெல்லாம் உங்கள் சொந்தச் சரக்கு இல்லயோ?:).. நீங்களே சிந்திச்சதாக்கும் எனப் பயந்தே போயிட்டேன்ன்.. இருந்தாப்போல கப்பல் பற்றிப் பேசுறீங்களே எனப் பயந்திட்டேன்ன்:)..

  ரொம்ப அழகான அலைப் படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே ஓவரா ஜிந்திச்சா, உடம்புக்கு ஆகாது!

   படங்களை ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 10. இன்னொன்று கேட்க நினைச்சு மறந்திட்டேன்.. அந்தக்கா எதுக்கு பாயைச் சுருட்டி வச்சுக்கொண்டு கடலைப் பார்க்கிறா.. ஏதும் தியானம் பண்ணப்போறாவோ?:).

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை விஷ்ணு மாதிரி அனந்த சயனத்தில் படுத்துப்பாகளோ? தெரியலையே! கேட்டுருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 11. என் நினைவுக்கு வரும் பாடல்...கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. ப்டங்களும் வரிகளும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. படங்கள் அருமை! அதைவிட தாங்கள் தந்திருக்கும் கவித்துமான தலைப்புக்கள் மிக மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. அழகான படங்களும்...அருமையான வசனங்களும்...! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.

   Delete
 15. படங்கள் அழகு. சுத்தமான கடற்கரையாகத் தெரிகிறது. என்னமோ இங்கே எல்லாம் போகத் தோன்றவே இல்லை! :) உங்கள் அனுபவங்கள் வித்தியாசமானவை! அநேகமாக இந்தியாவில் நீங்கள் போகாத மாநிலமே இல்லைனு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கடற்கரை ரொம்பவே சுத்தம். பராமரிப்பும் நன்றாகவே இருக்கிறது.

   இந்தியாவில் போகாத மாநிலம் - இன்னும் உண்டு! :) போகணும்!

   Delete
 16. வணக்கம் சகோதரரே

  கடற்கரை படங்கள் மிக அழகாக இருந்தது. அதக்கேற்ற வாசக வரிகளும் மிக அருமை.எல்லோரின் கூற்றுப்படி மலையும், கடலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....