எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 21, 2017

தொலைபேசியில் பூதம் – வண்ட்டூ மாமா – மண்சட்டி சமையல்

முகப் புத்தக இற்றைகள் – ஆதி வெங்கட்

இந்த திங்கள் கிழமையில் “சாப்பிட வாங்க” பதிவுக்கு பதிலாக என்னவளின் முக நூல் இற்றைகள் சில இங்கே உங்கள் பார்வைக்கு….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

தொலைபேசியில் பூதம்நம்ம BSNL Landline இணைப்பின் சேவைக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு அளவே இல்லை போங்க!

என் கணவர் வீட்டு லேண்ட்லைனுக்கு அலுவலக எண்ணிலிருந்து அழைத்திருக்கிறார். ரிங் வந்தது, எடுத்தால் சத்தமே இல்லை. இப்படியே மூன்று, நான்கு முறையாயிற்று. சிறிது நேரங்கழித்து மொபைலுக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பார்த்து லேண்ட்லைனுக்கு அவரது அலுவலக எண்ணிலிருந்து அழைப்பு. அவரிடம் "உங்க ஆஃபிஸில் இருந்து தான் அழைப்பு" என்றதும், எந்த நம்பர்?? என்றார்.

எண்ணைச் சொன்னதும்.... அதிலிருந்து தான் உங்கிட்ட பேசிட்டிருக்கேன் என்றார். ”லைன்ல இருங்க” என்று சொல்லி விட்டு, அழைப்பை எடுத்தால் சத்தமில்லை!

எப்போ பண்ணியது இப்போ தான் வருது பார்! என்று சொல்லி விட்டு இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்!

வண்ட்டூ மாமா….பதிவுலகில் ஒரு காலத்தில் தினம் ஒரு பதிவாக எழுதிக் கொண்டிருந்த பசுமையான நாட்கள். இப்போது எழுதுவதேயில்லை. முகப்புத்தகத்தோடு முடக்கிக் கொண்டு விட்டேன். இன்று அந்நாட்களில் எழுதிய பதிவுகளை வாசிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. முகப்புத்தக தோழமைகளுக்காக 2011-ல் எழுதிய என் பதிவு ஒன்று.


வெளி ஆண்டாள் சன்னதிஇன்று குடியிருப்புத் தோழிகளுடன் நடந்தே சென்று சிவன் கோவிலில் உள்ள அரசமரத்து நாகர்களுக்கு பால் தெளித்தோம்.. துர்க்கைக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து சற்றே தொலைவில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதிக்குச் சென்றோம்.

ஆடிப்பூரத்திற்கு சாலை வரை கும்பல் இருக்க, இன்று நிதானமாக நின்று தரிசிக்க முடிந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பிரசாதம் தயார் செய்யவே சிரமமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். ”மழை பெய்ய அருள்புரிம்மா. பூமி குளிரணும், தண்ணீர் பஞ்சம் வந்துடும் போல இருக்கு” என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.

பட்டர் புடவை தலைப்பில் எல்லோருக்கும் தாலிச்சரடும், மஞ்சளும், பூக்களையும் போட்டார். பிரசாதமாக கிடைத்ததை வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். இப்போ தான் சாப்பாடும் ஆச்சு.

இன்றைய நாள் இனிய நாள்!

தற்போது வாசிப்பில்!!466 பக்கங்கள் கொண்ட புத்தகம். பாதிக்கு மேல் வாசித்தாயிற்று. இரண்டாம் பாகம் தான் இது. முதல் பாகத்தின் கதைச்சுருக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய விக்கிரமாதித்த ராஜாவுக்கும் இன்றைய விக்ரமனுக்கும் இடையில் கதை நகர்கிறது. வேதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கதைகளும், 32 வது பிறவி எடுத்துள்ள இன்றைய விக்ரமன் செய்யும் சாகசங்களும், நாடி ஜோதிடத்தின் சிறப்புகளும், தகவல்களும் என ஆச்சரியங்களும், விறுவிறுப்பும் கதை முழுதும் வியாபித்திருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

டீச்சர் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ!!இன்னைக்கு நேராச் சாப்பாடு. கொஞ்சம் லேட்டா எழுந்து, ஞாயிற்றுக்கிழமைக்கே உண்டான வேலை இருக்கு. மகளுக்கு தலை தேய்த்து விடணும். சண்டை போட்டு ஒருவழியா வெளியே வருவோம்.

அப்போ சமையல் ரெடியாயிருந்தா நல்லா இருக்குமே!! அதனால சாதம் வெச்சு, பூண்டும், வெங்காயமும் போட்டு குழம்பும் வெச்சாச்சு. அப்பளம் போறாதா??

இந்த மண்சட்டிக்கு வயது ஐந்து. குழம்பு, கூட்டு, அவியல் என சகலமும் இதில் தான்.

நட்புடன்


32 comments:

 1. இங்கும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 2. பூண்டும், வெங்காயமும் போட்ட குழம்பு... அப்பளம்.. ஆகா!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துரை செல்வராஜு சார்..

   Delete
 3. Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா..

   Delete
 4. எங்கள் வீட்டிலும் சில பதார்த்தங்களுக்கு மண் சட்டியைப் பயன்படுத்துவது உண்டு. நன்றாக இருக்கும். அனைத்தும் சுவாரஸ்யம்..


  கீதா: மண் சட்டிச் சமையல்..அதுவும் பூண்டும் வெங்காயமும் போட்டு குழம்பு...இதை மண் சட்டியில் செய்தால் அருமையாக இருக்கும்..

  ஆதி உங்கள் வாண்டு மாமா கதைகள் சூப்பர் சிரித்துவிட்டேன்...அதைவிட ரொமப்ச் சிரித்தது எதுக்குத் தெரியுமா?!!! அந்த அப்பாவி ஜீவன் உங்கள் அனுபவம்!!! வெங்கட்ஜி சாவியை தன்னுடன் எடுத்துச் சென்றது...ஹாஹாஹாஹா...

  அனைத்தும் ரசனையானவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கீதா சேச்சி..

   Delete
 5. ஆதி டெலிஃபோன் பூதம் கதை செமையா இருக்கே!!! ஹாஹாஹாஹா..அதையும் ரசித்தோம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கீதா சேச்சி..

   Delete
 6. அனைத்தையும் ரசித்தேன் (பூண்டு வெங்காயக் குழம்பு தவிர). கிணற்றில் இப்போது ஜலம் ஊறியாகிவிட்டதா?

  ReplyDelete
  Replies
  1. பூண்டு சேர்த்ததால் பிடிக்காதோ?? இங்கும் அரிது தான்.. ஆனால் உடலுக்கு நல்லது. ஸ்ரீரங்கத்தில் மழை மிகவும் குறைவு தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நெல்லை சார்.

   Delete
 7. சுவையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கெளதமன் சார்.

   Delete
 8. கதம்பம் மணத்தது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜி..

   Delete
 9. அதுக்கு முன் கடுதாசி, தந்தி இடத்தை இப்ப லேண்ட் லைன் தொலைப்பேசி பிடிச்சுட்டுதா?!

  ஆண்டாள், பூண்டு குழம்பும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராஜி..

   Delete
 10. ஆதியின் எழுத்டு என்றதும் எனக்கு நினைவுக்கு வந்தது அவரதுபின்னூட்டமொன்றுதான் நான் திருச்சிக்கு வந்தது தெரிந்து அவருக்குத் தெரிந்துஇருந்தால் எங்களை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அழைத்துப் போயிருப்பேன் என்றார் அவர்வீடு கோவில் அருகில் என்று கூடுதல் தகவலும் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நினைவாற்றல் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது சார்.. இப்போது கோவிலை விட்டு சற்றி தள்ளி இடம்பெயர்ந்துள்ளோம்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜி.எம்.பி சார்.

   Delete
 11. முக நூல் பதிவுகள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அனுராதா மேம்.

   Delete
 12. அங்கும், இங்கும் ரசித்து படித்தேன்.
  அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கோமதிம்மா..

   Delete
 13. #மாலை கணவன் வரும்வரை அந்த தோழி வீட்டிலேயே இருந்து நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்#
  அவ்வளவு நேரம் என்னதான் கதைத்துக் கொண்து இருந்தீர்கள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பகவான்ஜி..

   Delete
 14. அனைத்தும் அசத்தல். மண் சட்டிகள் சுவிஸ் வரை கொண்டு வர வேண்டும் எனும் ஆர்வத்தோடு இருக்கின்றேன். இனித்தான் அதன் சாத்தியம் குறித்து விசாரிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க நிஷா.

   Delete
 15. kuzhambu super aiyo ore jols. lesa nallennai potu suda sathathil potu sapita thevamirtham. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தேனம்மை மேம்.

   Delete
 16. பூண்டு வெங்காயக்குழம்பு சுவைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....