செவ்வாய், 16 நவம்பர், 2010

துர்காம்மா - சேக்கொடி

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5)

பெஜவாடா – விஜயவாடா பயணம்

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4



கனகதுர்கா கோவில்: கிருஷ்ணா நதியின் இடது கரையில் இந்திரகிலாத்ரி மலையின் மேல் உள்ள கனக துர்கா என அழைக்கப்படும் துர்காதேவி எட்டாம் நூற்றாண்டிலியே ஆதி சங்கரரால் பூஜிக்கப்பட்ட ஒரு ஸ்வயும்பு மூர்த்தம். இந்த கோவில் முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்ததாய் இரண்டாவது பெரிய கோவில் கனக துர்கா கோவில். துர்காம்ம்மா என்று பக்தர்களால் பாசமாய் அழைக்கப்படும் இந்த கோவில் தினமும் காலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

கிருஷ்ணா நதியில் திவ்யமாய் ஒரு குளியல் போட்டு விட்டு, மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் தேவஸ்தானத்தின் பேருந்திலோ, நடந்தோ செல்லலாம். வாடகை வண்டியில் சென்றால் மலை உச்சிக்கே சென்று சேர முடியும். இந்திரகிலாத்ரி மலையில் உள்ள கனகதுர்கா கோவில் செல்லும் பாதையின் நுழைவாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு தோற்றம் கீழே.




துர்காம்மாவை தரிசிக்க இலவச சேவை, ஐந்து ரூபாய் , 25 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சேவை என நான்கு விதமான சேவைகள்/வரிசைகள் இருக்கின்றன. உங்களுக்கு இருக்கும் நேரத்தையும் வசதியையும் பொறுத்து நீங்கள் தேவி கனக துர்காவினை தரிசனம் செய்யலாம்.

நாங்கள் சென்றது நவராத்ரியின் ஓரிரு தினங்களுக்கு முன்பு என்பதால் கனக துர்காவினை சிறிது சுலபமாய் தரிசிக்க முடிந்தது. அலங்கார ஸ்வரூபியாய் தரிசனம் அளித்துக் கொண்டு இருந்தாள் கனக துர்கா தேவி.

கோவில் தேவஸ்தானமே பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடங்கள், உடைமைகளைப் பாதுகாக்கும் அறைகள் போன்ற பலவித வசதிகள் செய்து கொடுக்கிறது.

கோவில் பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ள கோவில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள இணையதளத்தினை நீங்களும் சென்று பாருங்களேன்.

சேக்கோடி: அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்த மாவினை மெல்லியதாக திரித்து சிறிய துண்டுகளாக்கி, அதன் இரு முனைகளையும் சேர்த்து வட்ட வடிவமாய் எண்ணையில் பொரித்து எடுக்கும் ஒரு கார வகை தின்பண்டமே சேக்கோடி, கொஞ்சம் தெலுங்கு உணர்வு வேணும்னா, ஒரு “லு” சேர்த்து – சேக்கோடிலு!!!!





சேக்கோடிலு சாப்பிட்டு கொஞ்சமா காத்திருங்களேன் நான் உங்களை ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டிட்டு போகப் போறேன். எதுக்கும் ஒரு கைக்குட்டையை தயாரா வைச்சுக்கோங்க!

21 கருத்துகள்:

  1. கோவிலை பற்றி இன்னும் அதிகம் சொல்லி இருக்கலாமோ ??

    பதிலளிநீக்கு
  2. //எதுக்கும் ஒரு கைக்குட்டையை தயாரா வைச்சுக்கோங்க! //

    சஸ்பென்ஸ் தாங்கலே!

    பதிலளிநீக்கு
  3. அது என்ன ஒரு ஒவ்வொரு கோவில் கூட ஒரு சாப்பாடு அயிட்டம்.

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  4. @@ LK: எழுதி இருக்கலாம் – இன்னும் 2 பாரா எழுதி இருந்தேன், நீளம் கருதி குறைத்து விட்டேன். கருத்துக்கு நன்றி கார்த்திக்.

    @@ KBJ: சஸ்பென்ஸ் சீக்கிரமே தீர்த்து வைக்கிறேன் சார். :)

    @@ உயிரோடை: கருத்துரைக்கு நன்றி லாவண்யா. சம்பாதிப்பதே சாப்பாட்டுக்குத்தானே, : ) கோவில் பற்றிய இடுகையில் அது வந்து விட்டது அவ்வளவுதான். ஒன்றும் காரணம் இல்லை. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே உங்கள் பதிவு வந்து, அலுவல் அதிகமோ?

    பதிலளிநீக்கு
  5. சர்வா அலங்கார பூஷினி அவள். லோக மாதா தரிசனம் கிடைக்கப்பெற்று அருள் பெற்றீர்கள். எங்களுக்கு கோவில் கோபுரமாவது ஒரு ஃபோட்டோ போட்ருக்கலாம் ;-(
    கைகுட்டையோடு அடுத்த ரவுண்டுக்கு ரெடி. ( ஒரு சின்ன இது. துர்க்காம்மா டைட்டில் கூட சேக்கொடிலு ஜோடி சேரலை... இல்லை அது அங்கு ப்ரசாதமா? )

    பதிலளிநீக்கு
  6. @@ RVS: நன்றி சார். கோவில் கோபுரம் அல்ல, கோவில் இருக்கும் இந்திரகிலாத்ரி மலையின் புகைப்படத்தினை பதிவில் போட்டு விடுகிறேன். சேக்கோடிலு போட்டதற்கு தனியாக ஒன்றும் காரணம் இல்லை. வளைந்த மலைப்பாதையில் சென்றதால் போட்டதாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் : ) கனக துர்கா கோவிலிலும் பிரசாதம் லட்டு தான்!

    பதிலளிநீக்கு
  7. போன பதிவில் பூந்தி. இந்த பதிவில் காரம். அடுத்த பதிவில் என்ன...? (அட நான் கோவிலைப் பற்றி ஒண்ணுமே கமெண்டலையே...)

    பதிலளிநீக்கு
  8. தெய்வ தரிசனம் தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  9. @@ கலாநேசன்: நன்றி சார். அடுத்த பதிவில் என்ன போடலாம் சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  10. சுத்திக்காமிச்சிட்டே.. வயிற்றுப் பசிக்கும் குடுக்கிறீங்க ..:)

    பதிலளிநீக்கு
  11. துர்க்காம்மா தரிசனம் திவ்யம்! சேக்கொடிலுவை நம்ம ஊருல ஸ்வீட் ஸ்டால்களில் ஆந்திரா முறுக்கு என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனை டில்லி போகும் வழியில் பார்த்ததோடு சரி. அங்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அழகாய் ஒரு சஸ்பென்ஸ்!
    பயணக் கட்டுரை மாஸ்டர் ஆகி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. தஞ்சை புன்னை நல்லூர் கோவில் வாசலில் சேக்கோடி விற்கிறார்கள் நல்ல சிவப்பு கலரில்.ஆனால் எதில் செய்கிறார்கள் என்று தெரியாது சாப்பிட்டுப் பார்த்தது இல்லை.

    கனகதுர்க்கா தரிசனம் கிடைத்தது எங்கள் பாக்கியம். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @@ முத்துலெட்சுமி: வரவுக்கு நன்றி சகோ. இரண்டு மூன்று பதிவில் பார்க்கிறேன், ரெண்டு முறை ஒரே கருத்து போடறீங்களே : ))))

    @@ நிலாமகள்: நன்றி சகோ. ஆந்திரா முறுக்கு, புதிய தகவல். நன்றி.

    @@ Dr.Kandaswamy, PhD: நன்றி ஐயா. நான் எழுதியது மிகக் குறைவே, நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் விஜயவாடாவில் இருக்கிறது ஐயா.

    @@ ரிஷபன்: நன்றி சார். உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. @@ கோமதி அரசு: வருகைக்கு நன்றிம்மா. அக்டோபரில் தமிழகம் வந்திருந்த போது, நானும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். நல்ல கோவில்.

    பதிலளிநீக்கு
  17. @@ RVS: கிருஷ்ணா நதியில் படகு சவாரி செய்தபோது எடுத்த இந்திரகிலாத்ரி மலை, நுழைவாயில் கோபுரம் தெரியும் படத்தினை பதிவில் சேர்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. உங்களின் இடுகையில் உள்ள அந்த சஸ்பென்ஸ் நம் கம்ப்யூட்டர் chair ன்
    விளிம்பில் என்னை உட்கார்த்தி வைத்து விட்டது!!

    “ஆரண்ய நிவாஸ்”
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. @@ ஆர். ராமமூர்த்தி: சஸ்பென்ஸ் சீக்கிரமே தீர்த்து வைக்கிறேன் சார். :)

    பதிலளிநீக்கு
  20. மௌஸ் வேகமாக க்ளிக்கிவிடுகிறது. அதனால் வேகமாக வந்து இரண்டு கமெண்ட் விழுந்துடுது .. ;)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....