திங்கள், 22 நவம்பர், 2010

பவானிபுரம் தீவு

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 7)

பெஜவாடா – விஜயவாடா பயணம்
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 6

அடடே பரவாயில்லையே! எல்லோரும் சரியா விசைப்படகு கிளம்பறதுக்கு முன்னாடியே வந்துட்டீங்களே. சரி வாங்க போகலாம்.

கிருஷ்ணா நதியின் இரு கரைகளிலும் ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை நடத்தும் படகுத் துறைகள் உள்ளன. இங்கே இரு வகையான விசைப் படகுகள் இயங்குகின்றன, அவற்றில் ஒன்று குளிரூட்டப்பட்டது. கரையிலிருந்து ”புன்னமி” பவானி தீவிற்குச் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் நாற்பதும், சிறியவர்களுக்கு ரூபாய் இருபத்தி ஐந்தும் வசூலிக்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு இயங்குகிறது.

பத்து-பதினைந்து நிமிட படகுச் சவாரி முடிந்த பிறகு பவானிபுரம் தீவில் நம்மை இறக்கி விட்டு விடுகிறார்கள். நீங்கள் தீவை சுத்தோ சுத்துன்னு சுற்றி வந்து மாலை வரை அங்கு இருக்கலாம். நாலு மணிக்கு கடைசி படகு கிளம்பும் முன் வந்தால் போதும். தீவினுள் ஒரு ஹோட்டலும், நாள் வாடகைக்கு நிறைய தங்கும் அறைகளும் உண்டு. சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்ய 0-9848910517 மற்றும் 0-9848779685 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இங்கிருக்கும் அறிவிப்பு பலகை தெரிவிக்கிறது.






தீவிலிருந்து கிருஷ்ணா அணைக்கட்டு, கனகதுர்கா குடிகொண்டு இருக்கும் இந்திரகிலாத்ரி மலை, மற்றும் மலைத்தொடர் போன்றவற்றை கண்ணாரக் கண்டுகளிக்கலாம்.

குழந்தைகள், மற்றும் குழந்தைகளாக நினைத்துக்கொள்ளும் பெரியவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல்கள், சறுக்கு மரம், கயிற்றுப்பாலம், போன்றவைகளை வைத்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில்தான் இங்கு கூட்டம் அதிகமாய் வருகிறதாம். மற்ற நாட்களில் இளஞ்சோடிகளும், காதலர்களும் தான் இங்கு வருகை புரிகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது மூன்று-நான்கு தேனிலவுத் தம்பதிகளை பார்க்க முடிந்தது.

பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறைய தனியார் காவலர்களையும் அமர்த்தியுள்ளது சுற்றுலாத்துறை. இங்கே உள்ள உணவகத்தில், ஆந்திர உணவு வகைகள் தவிர வேறு ஒன்றும் கிடைப்பதில்லை.

ஆந்திர மாநில மக்கள் பொதுவாகவே உணவில் காரம் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அந்த உணவினை சாப்பிடக் கூட வேண்டாம், பார்த்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த ஊரில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி – அதன் காரத்தினைக் குறைப்பதற்காகவே நடுவே வெங்காயம் வைத்து பொரித்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து தருகிறார்கள். அப்படியே சாப்பிட்டால் கண்ணீரும் கம்பலையுமாகத் தான் திரும்ப வேண்டியிருக்கும் என்பதால் நான் சாப்பிடவில்லை. பதிலாக மாம்பழச் சாறில் தயாரிக்கும் ”மாவடித் தண்ட்ரை” என தெலுங்கில் கூறப்படும் மாம்பழ ஜெல்லி வாங்கிச் சாப்பிட்டேன். கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். தயார் செய்த பிறகு 21 நாட்கள் வரை கெடாமல் இருக்குமாம். நல்ல சுவை.

சந்தோஷமாய் மூன்று நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து கிருஷ்ணா நதியில் குளித்து, பல கோவில்களில் இறைவனை தரிசனம் செய்து, ஹவுராவிலிருந்து விஜயவாடா வழியாக கன்யாகுமரி செல்லும் விரைவு வண்டியில் கிளம்பி திருச்சி சென்றோம்.

இந்த விஜயவாடா பயணத்தின் போது நீங்களும் எங்களுடனேயே வந்ததில் எனக்கு ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் வேறு ஒரு பயணத்தில் சந்திப்போமா?.

17 கருத்துகள்:

  1. நல்ல தொடர். விரைவில் முடிந்து விட்டது

    பதிலளிநீக்கு
  2. Nice series. I suppose you will start your series on Delhi hereafter. Right??

    பதிலளிநீக்கு
  3. //நாலு மணிக்கு கடைசி படகு கிளம்பும் முன் வந்தால் போதும். //
    கடைசி போட்டை விட்டால் எப்படி கரை சேர்வது? இராத்தங்கல் அனுமதி உண்டா? அடுத்த டூர் எப்போ? ;-)

    பதிலளிநீக்கு
  4. கண்ணீரும் கம்பலையுமாக // :))

    மாம்பழ ஜெல்லியோ மிளகாய் பஜ்ஜியோ படமெடுத்துப் போடலையா.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவிசய ம் சாப்பிடக்குடுத்தீங்களே ;)

    பதிலளிநீக்கு
  5. மாம்பழ ஜெல்லி டேஸ்ட்டுக்கு ஈடு இணை இல்லை..
    தொடர் முடிஞ்சிருச்சா

    பதிலளிநீக்கு
  6. @@ LK: தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி கார்த்திக்.

    @@ மோகன்குமார்: நன்றி. தில்லி பற்றி இரண்டு மூன்று பதிவு எழுதி வைத்திருக்கிறேன். திரும்ப ஆரம்பிக்க வேண்டும்.

    @@ RVS: கள்ளத்தோணி எதுவும் உண்டா தெரியவில்லை :))) இரவு தங்குவதற்கு வசதிகள் இருக்கிறது, ஆனால் வாடகைதான் ஜாஸ்தி. சீக்கிரமே வேறு ஒரு பயணத்தொடர் இருக்கலாம்.... :))))

    @@ முத்துலெட்சுமி: மிளகாய் பஜ்ஜி படம் எடுக்கவில்லை - காரம் ஜாஸ்தியா இருந்ததால :) மாம்பழ ஜெல்லி படம் எடுக்க இயலவில்லை - சீக்கிரம் தீர்ந்ததால்.... : )))))

    @@ கலாநேசன்: நன்றி சகோ..

    @@ ரிஷபன்: ஆமா சார். நல்ல சுவை.

    @@ KBJ: நன்றி சார். பல பொருளை கொடுக்கும் இரு வார்த்தைக் கருத்து.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் மற்ற இடுகைகளை இனி தான் பார்க்க வேண்டும்.டூர் ரொம்ப ஜாலியாக இருந்திருக்கும் போல.நல்ல பகிர்வு.தெரியாத இடங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  8. //இந்த ஊரில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி – அதன் காரத்தினைக் குறைப்பதற்காகவே நடுவே வெங்காயம் வைத்து பொரித்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து தருகிறார்கள். //
    நம்ம ஊரு டாஸ்மாக் குடிமகன்களுக்குக் கிடைத்தால்,இன்னும் இரண்டு கட்டிங்க் உள்ள போகும்!
    உங்கள் பதிவுக்கு என் முதல் வருகை.ரசிக்க வைக்கும் பதிவு.
    பின்தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. @@ அசியா ஓமர்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. என் வலைப்பூவினை தொடர்வதற்கும் நன்றி.

    @@ சென்னை பித்தன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. என் வலைப்பூவினை தொடர்வதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. உட்கார்ந்த இடத்திலேயே உங்க புண்ணியத்தில் விஜயவாடா பயண அனுபவங்கள் வெகு இனிமை!

    பதிலளிநீக்கு
  11. @@ நிலாமகள்: தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகள், மற்றும் குழந்தைகளாக நினைத்துக்கொள்ளும் பெரியவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல்கள், சறுக்கு மரம், கயிற்றுப்பாலம், போன்றவைகளை வைத்துள்ளனர்.//

    இந்த மாதிரி இடங்களுக்கு செல்வோர் பலர் குழந்தையாக மாறிவிடுவதை நானும் கவனித்திருக்கிறேன். கவலையை மறந்தால் நாமும் குழந்தைதான்.

    நல்ல பதிவு.

    அடிக்கடி இந்த மாதிரி டூர் போயிட்டு வாங்க சார். இன்னும் நிறைய எழுதுங்க. அது சரி, பைனான்ஸ் டிபார்ட்மென்ட் நீங்களா, மேடமா? யார் முறைக்கிறிங்கன்னு கண்டுபிடிக்கத்தான்:-)))))))))!

    பதிலளிநீக்கு
  13. @@ அமைதி அப்பா: நன்றி சார். அடுத்த டூர் சீக்கிரமா போகணும், பார்க்கலாம். : )))

    பதிலளிநீக்கு
  14. ஊஞ்சலை கண்டால் நானும் குழந்தை ஆகிவிடுவேன்.

    விஜயவாடா பயணம் இனிதாக இருந்தது.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  15. @@ கோமதி அரசு: முழு பயணத்திலும் கூடவே வந்தமைக்கு மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....