சனி, 12 ஏப்ரல், 2014

ஓவியர் கோபுலுவின் நகைச்சுவை




சில வாரங்களுக்கு முன்னர் ஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட ஓவியங்கள் உங்கள் நினைவில் இருக்கலாம். இன்றைய பதிவாக அவர் வரைந்த சில ஓவியங்களும் நகைச்சுவையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இவையும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தவை.

படக் கதைகள் போல தொடர்ந்து படங்களும் அதனுள்ளே சில வரிகளும் எழுதி அவர் வெளியிட்ட நகைச்சுவை துணுக்குகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். பழைய துணுக்குகளை இப்போது படித்தாலும் ரசிக்க முடிகிறது என்பதே அவரது வெற்றி. ஓவியங்களும் மிகவும் அழகாக இருப்பது சிறப்பது. வாருங்கள் சிரிக்கலாம்!

பெரியவர்களுக்கு கால் வலிக்கிறது என்று சொல்லி, குழந்தைகளை தங்களது பிஞ்சுக் கால்களால் மிதித்துவிடச் சொல்லிக் கேட்பதுண்டு. நானும் பல முறை செய்திருக்கிறேன் – சிறு வயதில்.  இப்போது என் மகளிடம் “அப்பாக்கு கால் வலிக்குதும்மா....  கால் மேல் நின்னுக்கோஎன்று சொல்வதுண்டு! இங்கே பாருங்க என்ன நடக்குதுன்னு!

 



நேற்று கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே பீமன் மாதிரி ஒருவர் எனக்கு முன்னால் நின்று கொண்டார். இறைவனைப் பார்க்க நினைத்தால் முன்னால் நின்ற பீமனின் முதுகு தான் தெரிந்தது! இங்கே என்ன நடக்குது?








உடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் கிட்ட போய் மருந்து வாங்கிக்கலாம். ஆனா அந்த மருத்துவருக்கே தீராத வியாதி என்றால்!


 






அன்று வில்-அம்பு; இன்று?
 








எக்ஸ்க்யூஸ் மீ! அங்க என்ன நடக்குது?
 




என்ன நண்பர்களே இந்த வார பொக்கிஷப் பகிர்வினை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்.....

வெங்கட்
புது தில்லி.

நன்றி: ஆனந்த விகடன், தீபாவளி மலர் 1948.

30 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றும் முத்துக்கள். முத்துப் போன்ற என் பற்களையெல்லாம் காட்டி சிரிக்க முடிந்தது (தனிமையில் இருக்கும் தைரியம்தான்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் என தெரியும் கணேஷ்....

      தனிமையில் இருக்கும் தைரியம்! :))))

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காலத்தால் அழியாதவை கோபுலுவின் நகைச்சுவையும் ,ஓவியமும் !சிரித்து மகிழ்ந்தேன் !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  4. ஓவியர் கோபுலு அவர்களின் இரசிகன் நான். அவரின் கைவண்ணத்தில் வந்த பழைய சிரிப்புத் துணுக்குகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. எல்லாம் படிச்ச நினைவு இருந்தாலும், மீண்டும் படிப்பதில் ஆனந்தம். அதுவும் கோபுலுவோடதுன்னா கேட்கவே வேண்டாம். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. உடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் கிட்ட போய் மருந்து வாங்கிக்கலாம். ஆனா அந்த மருத்துவருக்கே தீராத வியாதி என்றால்!//

    பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியல,
    பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுனா,
    அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்
    எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பித்திரியல
    எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்கிட்ட போய்
    தன் பைத்தியதுக்கு வைத்தியம் பார்த்துகுவார்?!"

    பொக்கிஷமான சந்தேகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவை துனுக்குகள். கோபுலு அவர்களின் திறமை அபாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  9. ஓவியங்களும் அதன் நகைச்சுவையும் அருமையோ அருமை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  14. கோபுலுவின் சித்திரங்களும், அவை சொல்லும் நகைச்சுவை துணுக்குகளும் அருமை. எந்தக் காலத்தில் படித்தாலும் சிரிக்க வைக்கும் திறனுள்ளவை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  15. அனைத்தும் அருமை! இரசித்தேன் நண்பரே! நன்றி! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....