சனி, 19 ஏப்ரல், 2014

கைநீட்டம்.....



சாலைக்காட்சிகள் பகுதி 12

தில்லியின் மத்தியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதி. இந்த குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளில் குறைந்த பட்சம் ஒருவராவது வேலையில் இருப்பவர்கள் தான். குடும்பங்களும் தற்கால நிலைக்கு ஏற்ற மாதிரி சிறிய குடும்பங்கள் தான். ஆங்கிலத்தில் Nuclear Family என்று சொல்லக் கூடிய கணவன்-மனைவி, குழந்தைகள் மட்டுமே குடும்பத்தில்.  சில குடும்பங்களில் மட்டும் குடும்பத்தலைவர்/தலைவியின் அப்பா-அம்மா உடன் இருக்கிறார்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவுக்கோ உடைக்கோ குறையில்லை.

சில வருடங்களாக அப்படி ஒரு குடியிருப்பில் இருக்கிறேன். பக்கத்திலேயே இருக்கும் அலுவலகத்திற்குச் செல்ல பேருந்து மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருக்கும் சமயங்களில் பல விதமான மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பார்த்தும், அதில் சில விஷயங்களை சாலைக் காட்சிகள் பகுதியில் பகிர்ந்து கொண்டிருப்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம். இன்றைய பகுதியும் அப்படி ஒரு சாலைக் காட்சி தான்.

பல நாட்களாக இப்படி பேருந்து நிறுத்த்ததில் காத்திருக்கும்போது ஒரு பெரியவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வட இந்திய பெரியவர். வட இந்திய பாரம்பரிய மேலுடையான குர்தாவும், அரையில் கச்சம் வைத்துக் கட்டிய வேட்டியும் தான் அவருடைய உடை. அணிந்து இருக்கும் உடையும் மிகச் சுத்தமாக, நன்கு தோய்த்து இருக்கும். சுத்தமாக இருப்பார்.  கையில் ஒரு தடி – தள்ளாமையின் காரணமாக தளர்ந்து விட்ட கால்களுக்கு ஒரு துணை.

 படம்: இணையத்திலிருந்து...

நடந்து வரும்போது எதிரே யாரேனும் வந்துவிட்டால் அவர் முகத்தில் கொஞ்சம் பரவசம். வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளி வராது. எதிரே வரும் நபரை நோக்கி கை மட்டும் தானாக நீளும்....  யாராவது ஒரு நாணயத்தினை நீட்டிய அவர் கைகளில் தந்துவிட்டால் தலையாட்டி மனதில் நன்றியோடு அங்கிருந்து நகர்ந்து விடுவார்.   அடுத்ததாய் பார்க்கும் நபரிடமும் அதே கை நீட்டம்....

நாளொன்றுக்கு இப்படி ஐந்து பத்து ரூபாய் கிடைத்துவிட்டால் அங்கிருந்து நகர்ந்து ஒரு தேநீர் அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.  வீட்டில் தனக்கு உடையும் உணவும் கிடைத்தாலும் அவருக்கு வேண்டிய எல்லா சமயத்திலும் தேநீரோ மற்ற உணவோ கிடைக்கவில்லை என்பதற்காக இப்படிச் செய்கிறாரா? உடையை பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.

ஏனோ மனதை அவரைப் பார்க்கும்போதெல்லாம் நெருடும்.  சென்னையின் ஒரு முதியோர் இல்லத்தின் அருகில் மாலை வேளைகளில் உணவு கேட்டு நிற்கும் சில பெரியவர்களைப் பார்க்கும்போது மனதில் தோன்றிய வருத்தம் இங்கே இந்த பெரியவரைப் பார்க்கும்போதெல்லாம் மட்டுமல்ல, அவரை நினைக்கும் போதெல்லாம். இவர் இப்படிச் செய்வது வீட்டினருக்கு தெரிந்தால் இவருக்கு இப்போது கிடைக்கும் உடையும், உணவும் கூட நின்றுவிடக் கூடும் என்று தோன்றும்.

யாரைக் குறை சொல்வது? பெரியவரையா இல்லை பெரியவரின் மகன்/மருமகளையா? 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 கருத்துகள்:

  1. பெரியவரின் கைச்செலவுக்கு பத்துரூபாயாவது வீட்டில் கொடுத்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. //யாரைக் குறை சொல்வது? பெரியவரையா இல்லை பெரியவரின் மகன்/மருமகளையா? //

    இந்த சமூகத்தைத்தான். எப்போது கூட்டுக்குடும்பம் என்ற முறை மறையத் தொடங்கிவிட்டதோ அப்போதே இது போன்ற அவலங்களும் தொடங்கிவிட்டன.இனி வயதானவர்களுக்கு அரசு ஏதேனும் முதியோர் விடுதி நடத்தினால் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. அட ராமா:(

    ஏதோ விஷு கை நீட்டம் தர்றீங்கன்னு வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
    2. நானும் அப்படித்தான் நினைத்தேன்..

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  4. //யாரைக் குறை சொல்வது? பெரியவரையா இல்லை.. பெரியவரின் மகன்/மருமகளையா? //
    கண்டிப்பாக - பெரியவரின் மகன்/மருமகளைத் தான்!..
    தேநீருக்காக மட்டுமே கைநீட்டம் எனில் பரிதாபம் தான்...
    என்னதான் சோறும் துணியும் நிம்மதியைத் தந்து விடுமா.. தள்ளாத வயதில்?..
    அன்பின் அரவணைப்பினைத் தர மறந்த அவர்களின் தவறே இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. இங்கே மதுரையிலும் வயதான தம்பதி ஜோடியை தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்கள் காசைக் கொடுக்கிறார்கள் ...ரெண்டுநாளாய் காணலயே என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள் ..வாரம் இருமுறை சொந்த ஊரான காரைக் குடிக்கு சென்று விடுவதாக !அங்கே அவர்களின் வாரிசுகள் இருக்கக் கூடும் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு
    நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாக செய்யாத பட்சத்தில் இதே
    நிலை தான் நாளை எமக்கும் ! சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  9. தள்ளாத வயதில் அந்தப் பெரியவரின் நிலையை நினைத்தால் பரிதாபமும் வேதனையும்தான் வெளிப்படுகின்றன. பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  10. திண்டுக்கல் தன்பாலன் கருத்துத்தான்
    என் கருத்தும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. பாவம்! அவர்! வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  12. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  13. வருந்த வைக்கும் காட்சிதான்! சில கிராமங்களில் கூட இந்த மாதிரி காட்சிகளை பார்த்திருக்கிறேன்! வசதியான குடும்பத்து பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க சிலர் முணுமுணுத்தபடி பணம் கொடுப்பார்கள். இது வீட்டுக்குத் தெரிந்து அங்கு அவர்களுக்கு திட்டும் விழும்! இருந்தாலும் மறுநாளும் பழையபடியே கையேந்துவர்! இது என்ன வியாதி?! புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. அருமையான பதிவு. உண்மை தெரியாமல் நாம் யாரையும் குறை கூறத் தலைப்படக் கூடாது. நீங்கள் ஒரு நாளேனும் அப்பெரியவரோடு உரையாடி உண்மையை இதே போன்றதொரு பதிவின் மூலம் வெளியிட வேண்டும் என்பது என் அவா + கோரிக்கை. த.ம. 9.மிக நீண்ட நாளுக்குப் பின் த.ம வில் ஒருவருக்கு வாக்களிக்கும் முதல் சந்தர்ப்பம். மனதை நெகிழச் செய்தது பதிவு. உண்மையை அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில முறை அவரிடம் பேச முயற்சி செய்தேன். ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவார். மீண்டும் பேச முயற்சிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  15. என்ன தான் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்தாலும் அவர்களுக்கென்று சில ஆசைகள் இருக்கும் அதை கேட்டு வாங்கி தர வேண்டும் இல்லையேல் பாக்கெட் மணி போல் தர வேண்டும் மகனும் மருமகளும் தான் இதற்கு காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

      நீக்கு
  16. பிற்காலத்துக்கு எனத் தனியாகக் கொஞ்சம் பணத்தை எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். உடை சுத்தமாக இருக்கிறது என்பதால் வீட்டில் கவனிப்பு இல்லைனு சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. மேல் செலவுக்கு என இப்படி சம்பாதிக்கிறாரோ? வீட்டில் போய்ப் பார்த்தால் தான் தெரியும். கவனிப்பு இல்லை எனில் சோப் போட்டுத் துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய முடியாது. அல்லது மன அழுத்தம் காரணமாக இப்படிக் கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிற்காலத்துக்கு என தனியாக சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.... உண்மைதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பழகிக் கொண்டு சில நாட்கள் கழித்து ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க வேண்டியது தான் ஒரே வழி. :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு முறை அவரிடம் பேச முயற்சித்தேன். பதில் ஏதும் சொல்லாது அங்கிருந்து நகர்ந்து விடுவார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  18. ஒரே முறை தேநீரோடு நிறுத்தி இருப்பாங்களோ என்னமோ! இரண்டாம் தேநீருக்காகக் கையேந்துகிறாரோ? ம்ம்ம்ம்ம்ம்? யோசிச்சுட்டே இருப்பேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  19. முதியவர்களின் மதிப்பு தெரியாதர்கள். கண்டிப்பாக அவருடைய மகனும் மருமகளும், இதே மாதிரியான அவலத்தை அனுபவிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  22. பெரியவரின் கைச்செலவுக்கான காசு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்...
    வருத்தமாக இருக்கிறது அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  23. தள்ளாத வயதில் அந்தப் பெரியவரின் நிலையை நினைத்தால் பரிதாபமும் வேதனையும்தான் வெளிப்படுகின்றன. கடவுளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  24. பதிவைப் படித்ததும் மனதிற்கு வருத்தமாக உள்ளது .

    பெரியவரின் பிரச்சினையில் மகன், மகள், மருமகன் இவர்களையும் சேர்த்துக்கொள்வோமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  25. மனம் வருத்தமடைகிறது! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  28. Vunmail yenna nadandhadhu yenbadhu theriya vendum. Yar meedhu thavaru yenbadhu theriyadhapodhu yaraiyendru kutram solvadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  29. நான் சித்திரை வருடபிறப்புக்கு கைநீட்டம் கொடுப்போம். ,பெரியவர்கள் சிறியவர்களுக்கு கொடுப்பார்கள் காசு. அதை தான் சொல்ல போகிறீர்கள் என்று நினைத்து படித்தால் பெரியவர் நிலை மனதை கஷ்டப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....