இந்த வார செய்தி:
கொல்கத்தா நகரில் வாடகை கார்
ஓட்டுகிறார் திரு [Dh]தனஞ்சய்
சக்ரபோர்த்தி. தனது வாகனத்தினை ஒரு சிறிய தோட்டமாகவே மாற்றி இருக்கிறார். வாகனத்தின்
மேற்புறத்தில் சில மாற்றங்கள் செய்து, அதில் புற்களை வளர்ப்பது மட்டுமன்றி,
வாகனத்தின் உள்ளேயும் தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறார். குளிரூட்டப்பட்ட வாகனம் இல்லை என்றாலும் இவரது
வாகனத்தில் பயணம் செய்யும் போது சூடு தெரியவில்லை என்று அதில் பயணித்த பலரும் சொல்கிறார்களாம்.
செடிகள் நட்டால் மட்டும்
போதாது அவற்றுக்கு தண்ணீர் விட்டு பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்று
சொல்லும் இந்த 40 வயது இளைஞரைப் பற்றிய முழு செய்தியும் இங்கே சென்றால் படிக்கலாம்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
Always smile back at little children. To ignore
them is to destroy their belief that the world is good.
இந்த வார குறுஞ்செய்தி:
மீதம் வைத்த உணவில் யாருடைய பசியோ இருக்கிறது.
பின் குறிப்பு: இந்த செய்தியைப் படித்த பிறகு
வந்த இன்னுமொரு செய்தி. எத்தனை கொடுமையான
உண்மை..... :(
The World’s hunger is getting ridiculous. There is
more fruit in a rich man’s shampoo than in a poor man’s plate.
இந்த
வார காணொளி:
தழைக்கட்டும் மனிதம்......
ராஜா காது கழுதை காது:
சென்னையின் மின்சார ரயில் பயணத்தின் போது, நான்
இருந்த பெட்டியில் பயணித்த குடும்பத்தில் ஒருவர் கைகளை நீட்டியபடி ஆலாபனை செய்து
பாட்டுப் பாட ஆரம்பித்தார். அப்போது அந்த
மனிதரின் பெண் சொன்னது – “அப்பா பாட்டு பாடாதே.... அதுவும் கையை வேற
நீட்டிக்கிட்டு பாடற! யாராவது பிச்சை போட்டுட போறாங்க!”
படித்ததில் பிடித்தது:
ஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.
அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப்
பெண்ணை கேட்டார்: "என் செல்லம், நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை
கொடுக்க முடியுமா ?"
சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று
குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும், அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும்
ஒரு கடி கடித்து விட்டாள்.
அம்மாவுக்கு சற்றே ஏமாற்றம்.
அப்பொழுது, குழந்தை
தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள், "இந்தா அம்மா... இது தான் மிகவும்
சுவையா இருக்கு"
இந்த வார கேள்வி:
பதில் சொல்லுங்க ப்ளீஸ்!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: இரண்டு
மூன்று வாரங்களாக வெள்ளிக் கிழமைகளில் ஃப்ரூட் சாலட் பகுதி வெளியிட முடியவில்லை.
இந்த வாரம் முழுவதுமே பதிவுகள் எழுத வில்லை! இடைவிடாத பணிச் சுமை! முடிந்த வரை
வாரத்தில் சில பதிவுகளாவது எழுத வேண்டும். ஹிமாச்சலப் பிரதேசம் பயணத் தொடர் வேறு
பாக்கி! பார்க்கலாம்! மற்றவர்களின் பதிவுகள் படிக்கவும் முடிவதில்லை! விரைவில்
இந்த பணிச் சுமைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம் – அப்போது தொடர்ந்து
சந்திப்போம்!