வியாழன், 10 மார்ச், 2016

ஃப்ரூட் சாலட் – 161 – ஆறாது சினம் – காயம் – தமிழகத்தில் தேர்தல்


பெண்கள் தினம்…



The Hindu நாளிதழின் இணைய இதழில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்ட கட்டுரை Small farmer, big heart, miracle bike – சந்திரா சுப்ரமணியன் எனும் பெண்மணியைப் பற்றிய கட்டுரை.  மிகச் சிறப்பான இந்தப் பெண்மணி பற்றி படித்துப் பாருங்கள்……


சந்திரா சுப்ரமணியன் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து. 

அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் – சற்றே தாமதமாக!

காயப்படுத்தும் சொல்!:

காயப்படுத்தும் என்று தெரிந்தே பேசும் மனிதர்களின் சொல்லுக்கு உன் ஒரு துளி கண்ணீரைக் கூட வீணாக்கி விடாதே… அதுவே அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி!

Love as weapon!



ரசித்த விளம்பரம்: காணொளி

மனம் தொடும் குறும்படங்கள்/விளம்பரங்கள் எடுப்பதில் தாய்லாந்து காரர்கள் சிறந்தவர்கள்.  அவர்களது பல விளம்பரங்களும் குறும்படங்களும் பார்த்து ரசிப்பதுண்டு.  சமீபத்தில் Haier நிறுவனத்திற்காக அவர்கள் எடுத்த ஒரு விளம்பரத்தினைப் பார்க்க நேர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நீங்களும் பாருங்களேன்!



ரசித்த பாடல்: ஆறாது சினம்…

தனிமையே தனிமையே உனக்கென்ன… சமீப நாட்களில் இந்தப் பாடலை பல முறை கேட்க நேர்ந்தது.  நன்றாக இருக்கிறது. நான் ரசித்த இந்தப் பாடல் ஆறாது சினம் படத்தில் இடம்பெற்ற பாடல்.  பாடலைப் பாடியவரின் குரல், பாடல் படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் பிடித்திருக்கிறது. நான் ரசித்த பாடலை நீங்களும் ரசிக்க இதோ…..



ரசித்த கார்ட்டூன்!

1970-களில் திரு ஆர்.கே. லக்ஷ்மண் அவர்கள் வரைந்த கார்ட்டூன் இது. தமிழகத்தில் தேர்தல் நடக்கப்போகும் இந்த நேரத்திலும் இது பொருந்துகிறது!  தேர்தலுக்கு முன்னர் வாக்காளருக்கு கிடைக்கும் மரியாதை, தேர்தலுக்குப் பின் என்ன ஆகும் என்பதை இதை விட அழகாய்ச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை!


என்ன செய்வாய்?

ஒரு கணவன் தனது மனைவிக்கு Whatsapp-ல் தகவல் அனுப்பினாராம்….. “சாலையில் வேறு ஒரு பெண்ணைத் தழுவியபடி நான் இருப்பதை பார்த்துவிட்டால் நீ என்ன செய்வாய்?”

அதற்கு மனைவி பதில் அனுப்பினாராம் – “ஒரு கண்ணை மூடி, மறு கண்ணைத் திறந்து வைத்துக் கொள்வேன்!”

அட பரவாயில்லையே…  வேறு எதையும் செய்யமாட்டாயா? என்று மீண்டும் பதில் அனுப்பினாராம் கணவர்.  அப்போது மனைவி தன் கணவனுக்கு அனுப்பிய புகைப்படம் இது தான்!



மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி

32 கருத்துகள்:

  1. ஆஹா அருமையான விளம்பரம்,பாட்டும் அருமை... அனைத்தும் கலக்கல் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  4. ஆஹா... ஆஞ்சி செல்லம். எனக்கு அவன் உடனே இங்கு வரணும்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. கார்ட்டூன் உட்பட அனைத்தையும் ரசித்தேன். முதல் செய்தியை எங்கள் 'பாஸிட்டிவ் செய்தி'க்கு எடுத்துக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அருமை அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது...



    எங்கள் வீட்டில் துப்பாக்க்கி இருந்தால் என் மனைவி பூரிக்கட்டைக்கு பதில் துப்பாக்கியை ஒரு கண்ணை மூடிக் கொண்டு மறு கண்ணை திறந்து வைத்து உபயோகித்து இருப்பாள் ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. தனிமையே பாடல்
    விளம்பரக் காணொளி
    கார்டூன்
    பழமொழி அனைத்தும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  9. சுவையான ப்ரூட் சாலட். ரசித்தோம். Love as weapon- superb poem.

    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  10. ஆரம்பம் முதல் இன்னொரு கண் வரை அசத்தலான தகவல் களஞ்சியம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  11. இந்த வார பழக்கலவையில் Haier நிறுவனத்தின் விளம்பரத்தை பெரிதும் இரசித்தேன்! ஆறாவது சினம் பாடலும், என்ன செய்வாய் என கணவன் WhatsApp
    இல் கேட்டதிற்கு மனைவி தந்த பதிலும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. அந்த கார்ட்டூன் செம...

    மனைவி தன் கணவனுக்கு அனுப்பிய புகைப்படம் இது தான்!//

    அவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    தகவல் ஒவ்வொன்றும் வெகு சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  14. பூங்கொத்திற்கும் மகளிர் தின வாழ்த்திற்கும் உரியவரே சந்திரா சுப்பிரமணியன் அவர்கள்.

    லவ் பற்றியதும், காயப்படுத்தும் சொல் இரண்டுமே அருமை.

    விளம்பரம் செம...மிக மிக ரசித்தோம். மீண்டும் பார்க்கத் தூண்டியதால் பார்த்தோம்.

    பாடல் நன்றாக இருக்கிறது. கார்ட்டூன் இப்போதும் பொருந்துகிறதே அருமை...ரசிக்க வைத்தது.

    வாட்சப் ஹஹஹஹ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களத்உ வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. அனைத்தும் அருமை .

    சந்திரா சுப்ரமணியன் ......இந்தப் பெண்மணி பற்றி படித்துப் பாருங்கள்..........

    இந்தப் பதிவை .......... நான் படிக்க வழி காட்டுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Small farmer, big heart, miracle bike என்று வரும் இடத்தில் க்ளிக் செய்தால் நீங்கள் அச்செய்தியைப் படிக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

      நீக்கு
  16. படித்தேன் நன்றி ..அவளது மனத்தைரியது க்கு துணிச்சலுக்கு விடாமுயற்சிக்கு ஒரு சலூட் ..போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....