வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 206 – Temporary கணவன் – இழந்த உறவுகள் – Blue Whale - மின்புத்தகம்


இந்த வார செய்தி:



சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால், அனந்த்நாக் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத் அவர்களின் உடலைப் பார்த்த அவரது மகள் ”ஜோரா” கண்ணீர் விடும் படம் மனதை மிகவும் கலக்கிய ஒன்று.  இன்னும் எத்தனை இழப்புகளைத் தாங்கப் போகிறோம்……



இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் அவர்கள் ரஷீத் அவர்களின் மகள், என்ன படிக்க விரும்பினாலும், அதற்கு எத்தனை செலவு ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதாக செய்தி வெளியிட்டு இருப்பதைப் பார்த்தேன்.  நல்ல மனம் கொண்ட கௌதம் கம்பீர் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

இந்த வாரத்தின் சாலைக் காட்சி:

நேற்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு நடை வெளியே சென்று வந்தேன். அப்போது எதிரே ஒரு மோட்டார் பைக்.  அதில் அரை ட்ராயர் போட்ட அப்பா ஒருவர், ஒரு கை Accelerator-ஐ திருகியபடி வண்டியைச் செலுத்த, இடது கையில் ஒரு பீர் பாட்டில்! – அதை அண்ணாந்து வாயில் வைத்து பருகியபடியே பருகிக் கொண்டிருக்கிறார்! நடுவே ஒரு சாலை சந்திப்பு வர, பின்னால் அமர்ந்திருந்த அவரது சிறு பெண்ணிடம் பீர் பாட்டிலைக் கொடுத்து, சந்திப்பு கடந்தபிறகு மீண்டும் வாங்கிக் குடித்தபடியே சென்றார்!

அதைக் குடிக்கட்டும்! வேண்டாம் என்று சொல்லவில்லை. வண்டியை ஓட்டியபடியே குடிப்பதும், அதுவும், தன்னுடைய பெண்ணை வண்டியில் வைத்துக்கொண்டே இப்படிச் செய்வது நல்லதல்லவே.  விபத்து ஏற்பட்டால், அவருக்கு அடிபடுவதோடு, அந்தக் குட்டிச் செல்லத்துக்கும் அல்லவா அடி படும்! என்ன மனிதனோ!

இந்த வார காணொளி

தண்ணீருக்காக எத்தனை தூரம் உங்களால் நடக்க முடியும்?


இந்த வார ரசித்த குறும்படம்:

இழந்த உறவுகள் மீண்டும் கிடைத்தால்…. மனதைத் தொட்ட ஒரு குறும்படம்.


Blue Whale – Chennai Version!:

பெரும்பாலான சிறுவர்கள், Blue Whale எனும் ஆபத்தான விளையாட்டிற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தற்கொலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். மனதை ரொம்பவே கலங்கடித்த விஷயம் அது.  எவ்வளவு சீக்கிரம் அது தடை செய்யப்படுகிறதோ அவ்வளவு நல்லது. 

சரி சீரியஸ் மேட்டரிலிருந்து ஒரு “சிரியஸ்” மேட்டருக்கு வருவோம்! இந்த விளையாட்டின் சென்னை Version எப்படி இருக்கும் என ஒரு செய்தி வந்தது… அது கீழே!

நாள்-1: ஒரு வார நாளில், இரண்டு முறை - தாம்பரத்திலிருந்து பாரிமுனை சென்று திரும்ப வர வேண்டும் – வாகனம் நீங்களே ஓட்ட வேண்டும் – AC போடக்கூடாது! ஜன்னல்கள் கீழே இறக்கப்பட்டிருக்க வேண்டும் – பிறகு ஒரு செல்ஃபி எடுத்து அதை வெளியிட வேண்டும்!

நாள் – 2: கூவம் ஆற்றில் ஒரு முக்கு போட்டு, முகத்தினை மட்டும் செல்ஃபி எடுத்து, அப்படியே அந்த புகைப்படத்தினை வெளியிட வேண்டும்!

நாள்-3: சென்னையில் ஓடும் பல ஆட்டோக்களில் ஒன்றையாவது முந்திச் சென்று, ஓட்டுனரைப் பார்த்து சென்னை மொழியில் திட்ட வேண்டும்! முந்த முடியாது! அதுவும் திட்டிவிட்டு முன்னே சென்றால் சும்மா இருப்பாரா அவர்! உங்கள் முகத்தில் அவர் குத்த, வீங்கிய கண்களோடு ஒரு செல்ஃபி எடுத்து வெளியிட வேண்டும்!

நாள்-4: ஒரு வார நாளில், காலை 08.30 மணிக்கு OMR ஐ கடக்க வேண்டும் – கண்களைக் கொட்டிக் கொண்டு! செல்ஃபி எடுக்கும் கவலை உங்களுக்கு இல்லை. படத்தினை நாங்களே வெளியிடுவோம்!

நாள்-5: உங்கள் தெருவில் இருக்கும் சென்னை மெட்ரோ வாட்டர் பைப்பில் இருந்து 100 பக்கெட் குடிநீர் எடுத்து வர வேண்டும்.

நாள்-6: சென்னை மாநகரப் பேருந்தில் 2000 ரூபாய் நோட்டு கொடுத்து ஐந்து ரூபாய் பயணச் சீட்டு வாங்க வேண்டும்!

நாள்-7: மீட்டர் படி ஓடும் ஒர் ஆட்டோவைக் கண்டுபிடித்து, அதில் பயணம் செய்து, மீட்டர் காட்டும் பணத்தினைக் கொடுக்க வேண்டும்!

நாள்-8: OPS – EPS பேச்சு முழுவதையும் வாய்விட்டு சிரிக்காமல் கேட்க வேண்டும்!

நாள்-9: உலக நாயகன் Twitter-இல் தமிழில் வெளியிடும் 100 கீச்சுகளை எல்லோருக்கும் புரியம்படி தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்!

நாள்-10: CR சரஸ்வதி அவர்களின் பேச்சை தொடர்ந்து மூன்று மணி நேரம் கேட்கவேண்டும்!

ஒரு சில லெவல் கூட நம்மால தாண்டமுடியாது! உங்களால?

இந்த வார WhatsApp – படித்ததில் பிடித்தது!

ஒவ்வொருத்தரும் நிறைய தொடர்பு எண்களை வைத்திருக்கும் நாட்கள் இவை! அவர்களின் எண்களை அலைபேசியில் எப்படியெல்லாம் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு!

"Mummy new"

"Papa 2"

"Wife old"

"Wife 2"

"Mother in Law Jio"

And the best one is

*Husband temporary*

இந்த வாரத்தின் புத்தக அறிமுகம்:

வலைப்பதிவர் ”புதுகைத் தென்றல்” அவர்களை உங்கள் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். கடந்த பல வருடங்களாக பதிவுலகில் இருப்பவர். ”புதுகைத் தென்றல்” என்பது தான் அவரது வலைப்பூ. அவரது சில கட்டுரைகளின் தொகுப்பு – “கொடி அசைந்ததும் காற்று வந்ததா?” எனும் தலைப்பில் மின்புத்தகமாக வெளி வந்திருக்கிறது.  நல்ல கட்டுரைகள் கொண்ட புத்தகம்! இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொண்டு படிக்கலாமே!  புத்தகம் தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டியைக் க்ளிக்கலாம்!


மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து, புத்தகம் பற்றிய கருத்துகளை அவரது வலைப்பூவில் தெரிவிக்கலாம்!

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

அலைபேசி மூலம் தமிழ்மணத்தில் வாக்களிக்க....

26 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு. சென்னையில் அனுபவிக்க வேண்டியவை ரசிக்கும்படி இருக்கு. உண்மையும் அதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  2. இதோ நூலினைத் தரவிறக்கம் செய்து கொள்கின்றேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. அனைத்தும் அருமை..முதல் செய்தியில் உள்ள படம் மனத்தை கனக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் - பார்க்கும்போதே மனதில் அதிர்ச்சி அலைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. சென்னைப் பதிப்பு நீலத்திமிங்கிலம்.. ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. இவ்வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாய் இருந்தது. இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. Nice thoguppu!! Liked the suggestions fr game in Chennai, particularly translating Kamal's tweets!! :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலின் தமிழ் கீச்சுகளை தமிழில் மொழிபெயர்ப்பது - இது தான் கடினமான ஒன்று! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  7. வழக்கம் போல அருமை.. தொகுப்பினுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. அருமையானதொகுப்பு. இழந்த உறவுகள் மீண்டும் கிடைத்தால் பார்த்து கண்ணீர் வந்து விட்டது, அன்பு வாழ்க!

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்த உறவுகள் - காணொளி எனக்கும் மிகவும் பிடித்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. //அப்துல் ரஷீத் அவர்களின் உடலைப் பார்த்த அவரது மகள் ”ஜோரா” கண்ணீர் விடும் படம் மனதை மிகவும் கலக்கிய ஒன்று. இன்னும் எத்தனை இழப்புகளைத் தாங்கப் போகிறோம்…//
    அந்த குழந்தையின் கண்ணீர் மிகவும் துன்பத்தை கொடுத்தது.…
    இனி இது போல் இறைவன் தான் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் கண்ணீர் - மிகவும் பாதித்த ஒரு விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. எல்லாவற்றையும் ரசித்தேன். காணொளி பிறகு பார்க்கிறேன் (காலையில் அழுகை தேவையா?) கம்பீரின் செயல் பாராட்டுதலுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் அழுகை தேவையா? - இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. ப்ளூ வேல் சென்னை வெர்ஷன் நிஜமாகவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் அல்ல! கற்பனை மட்டுமே! அதுவும் எனக்கு WhatsApp-ல் வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. கெளதம் காம்பிர் இது போன்ற நல்ல செயற்பால முன்னரும் செய்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய மனிதர்.

    பீர் மனிதர் - கஷ்டம்! என்ன மனிதர்களோ, என்ன சாதனைகளோ!

    இரண்டு காணொளிகளும் நன்றாயிருந்தன.

    நீலத்திமிங்கிலம் - :))))))

    புதுகைத் தென்றலுக்கு வாழ்த்துகள். தரவிறக்கம் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. முதல் செய்தி மனம் மிக வேதனை அதே சமயம் கம்பீர் கம்பீரமாக நிற்கிறார்!!மனித நேயம் மகிழ்வு!!

    குறும்படம் கண்ணில் நீர் வரவழைத்த ஒன்று நெகிழ்ச்சி!!! அருமை!!

    தண்ணீரை நாம் சேமிக்க வேண்டும் என்பது இங்கு மட்டுமல்ல வெளி நாடுகளிலும் என்பதும் தெரிய வருகிறது! உண்மைதான்!

    ப்ளூ வேல் மிகவும் அதிர்ச்சியான விஷயம். தடை செய்யப்பட வேண்டும். இணையச் சேவைகள் இன்னும் ரெஸ்ட்ரிக்ட் செய்யப்படலாமோ என்றும் தோன்றுகிறது...

    (கீதா: அதனோடு சேர்ந்த சிரியஸ் சென்னையும் ஹாஹா ஆம்...)

    வாட்சப் செய்தி ஹாஹாஹா....(கீதா: எனக்கும் வந்திருந்தது!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....