சனி, 16 செப்டம்பர், 2017

அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்!


”அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் எழுதி வந்த பயணத் தொடர் இந்த வாரம் முடிந்திருக்கிறது. இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்று வந்த பயணங்களின் எண்ணிக்கை மூன்று! இதில் முதலாவதாகச் சென்றது பற்றிய பயணக்கட்டுரைகள் வரும் திங்களன்று தொடங்கும்! அப்படித் தொடங்குவதற்கு முன்னர் ஒரு புகைப்பட முன்னோட்டம் இந்த சனிக்கிழமை அன்று! வாருங்கள் சில புகைப்படங்களைப் பார்க்கலாம்! எங்கே செல்லப் போகிறோம் என்பதை யூகிக்க முடிந்தவர்கள் சொல்லலாம்! அப்படிச் சொல்லாவிட்டாலும் தவறில்லை! திங்களன்று நான் சொல்லத்தான் போகிறேன்!


ஒரு இடம் விடமாட்டோம்... எல்லா இடத்திலும் வீடு, தங்குமிடம் கட்டி ஒரு வழி பண்ணாம விடப்போறதில்ல!



ஒரு பழமையான கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம்....



சுத்திவிட்டு சுத்தி வரலாம்! புத்தமத வழிபாட்டுத் தலம்....



தேயிலைத் தோட்டம்....




வளைஞ்சு நெளிஞ்சு ஃபோட்டோ புடிப்போம்! 
புகைப்படம் எடுக்கும் குழு நண்பர்!


இப்படியான பாதைகளில் ஒரு பயணம்!



மலைப்பாதைகள் பெரும்பாலானவை இப்படித்தான்... கொஞ்சம் பயமாத்தான் இருக்குல்ல!



முதுகுப் பையிலிருந்து எட்டிப்பார்ப்பது யாரோ!


மலையுச்சியில் இப்படி ஒரு குடிசை....  இயற்கையான காற்றைச் சுவாசித்து இருக்க வழி உண்டோ!


பழமையான கோவில் ஒன்று!


ஒரு அருங்காட்சியகத்தின் தோட்டத்தில் புத்தர்!


கொஞ்சம் இடம் கிடைச்சாலும் வீடு கட்டிடுவோம்ல!


பைன் மரக்காடுகளின் நடுவே ஒரு பாதை!


சுற்றிலும் பைன்மரக்காடுகள் - நடுவே புல்வெளி - சிறு நீர்நிலை!


ஆஹா மழை வரப்போகுது! நனையலாம் வாங்க!


ஹேய்... சும்மா உக்காரு... கிச்சு கிச்சு மூட்டி, எனக்கு சிப்பு சிப்பா வருது! 
முயல்: யோவ்... வயித்த அழுத்தாதய்யா... எனக்கு மூச்சா வருது! 


எங்கும் விளையாடலாம்! மனம் இருந்தால் மார்க்கமுண்டு!

வண்ணமயமாய் ஒரு மலைப்பகுதி!


மலைகளுக்கு நடுவே ஒரு நீர்நிலை!



அந்தப் பாலம் வழியாத் தான் போகப்போறோம்! 
கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கோ!


மலைகளுக்குக்கிடையே இருக்கும் நீர்நிலை - ஒரு படகுப்பயணம் போலாம் வரீங்களா?


இப்படி ஒரு வீடு நமக்கு இருந்தா எப்படி இருக்கும்!!
ஆசைக்கு அளவேது!


இன்னுமொரு கிடுகிடு பாலம்! இரும்புப் பாலம் என்றாலும் “தடதட”க்கும் ஒலியோடு வாகனம் பயணிக்கும்போது, உடம்பில் கொஞ்சம் உதறல்!


என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்

புது டில்லி.

14 கருத்துகள்:

  1. படங்களும் இடமும் நன்றாயிருக்கு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் அருமையான முன்னோட்டம்...

    முன்பே பார்த்த மாதிரி இருந்தாலும் - ஒன்றும் பிடிபடவில்லை..

    பதிவுக்காக காத்திருக்கின்றேன் - ஆவலுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில படங்கள் எனது வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன் முன்னர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. ஏதோமலைப் பகுதி நிச்சயமாக நான் சென்றதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பகுதி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  4. படங்கள் அருமை. நீங்கள் சென்ற இடம் இமாச்சல பிரதேசமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அதே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. படங்கள் பிரமாதமாக இருக்கின்றன. முயலின் பதில் சிரிப்பு! ஓரிரண்டு படங்களை துளசி டீச்சர் பதிவில் பார்த்திருக்கிறேனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில படங்கள் எனது தளத்திலேயே பார்த்திருக்கலாம்! :) முன்னர் வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  7. துளசி: அடுத்த பயணக் குறிப்பா! சூப்பர்! படங்கள் எல்லாம் ரொம்ப அழகு. ஆவலுடன் தொடர்கிறோம்

    கீதா: படங்கள் எல்லாம் வெகு அழகு பிரமாதம்! அதுவும் நீர்நிலை பாலங்கள் எல்லாம் செமையா இருக்கு...முயல் ஹாஹாஹாஹா செம சிரிப்பு!!! ஹிமாச்சலில் தரம்ஷாலா அடுத்தப் பயணக் குறிப்பு!!! சரிதானே ஜி! தொடர்கிறோம்...ஆர்வத்துடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....