சனி, 9 ஜூன், 2018

புதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்புகளுடன் சந்திப்பு



முத்தமிழ் வாயில் - வரவேற்கும் புதுச்சேரி.....

சென்ற மாதத்தின் மூன்றாம் வாரம் – என்னவரின் கல்லூரி நட்புகளைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது – சந்திப்பு நடந்த இடம் புதுச்சேரி. போவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து பிறகு போவதென முடிவு செய்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். காலையில் தெரிந்த ஓட்டுனருடன் வாகனத்தில் சொகுசான பயணம் ஆரம்பித்தது. திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லப் போகிறோம். காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டதால் காலை உணவு வழியில் தான்! திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் தாண்டியபிறகு இருக்கும் A2B உணவகத்தில் தான் காலை உணவு. இட்லி, தோசை, என அவரவருக்குத் தேவையானதை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து பயணம். பாண்டிச்சேரி எங்களை வருக வருகவென வரவேற்றது.



ஆரோவில் ஆலமரம்  - தழைத்தோங்கி நிற்கும் மரம் பார்க்க ஆனந்தம்..... 

என்னவரின் கல்லூரித் தோழியும் அவரது அக்காவும் தான் சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நாங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ராம் இண்டர்னேஷனில் அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. நேரே அங்கே சென்று அறையில் பொருட்களை வைத்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்த ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்று பார்த்து விட்டு வந்துவிட்டால் அதற்குள் மற்ற நண்பர்கள் வருவார்கள் என முடிவு செய்தோம். பாண்டிக்கு வந்தவுடன் உறவுக்காரப் பெண்ணை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம். பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன். சிவகங்கைப் பயணத்தில் தான் அவள் பாண்டிச்சேரியில் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். அவள் குழந்தை ரொம்பவே க்யூட். குழந்தை நல்லா இருக்கட்டும். சிறிது நேரம் அவர்களுடன் இருந்து விட்டு அங்கிருந்து கிளம்பி, ஹோட்டலுக்கு வந்து நண்பர்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பி முதல் நாளே வந்திருந்த சில நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆரோவில் சென்றோம். மாத்ரி மந்திர் பார்த்துவிட்டு வந்தோம்.


ஆரோ பீச், புதுச்சேரி.....

மாலை அங்கிருந்து ஆரோபீச்சுக்குச் சென்று நல்ல ஆட்டம். கடல் அலுக்காத சிலவற்றில் சேர்ந்தது. இருட்டிய பின்னர் அறைக்குத் திரும்பினோம். உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டாச்சு. அடுத்த நாள் மணக்குள வினாயகரை தரிசித்து விட்டு, ரிசார்ட்டுக்கு செல்லத் திட்டம். அங்கே தான் என்னவரின் கல்லூரி நட்புகளுடனான சந்திப்பு.


இயற்கைச் சூழலில், ஆரோவில், புதுச்சேரி.....

அடுத்த நாள் காலை பாண்டிச்சேரி வந்து சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கும் அன்னை ஆஸ்ரமத்திற்கும் சென்று வந்தோம். காலை உணவை – மினி டிஃபன் - போத்தீஸ் எதிரே இருக்கும் Hot Chips-ல் எடுத்துக் கொண்டோம். அதுவும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்தில் தான் போத்தீஸ் இருந்தது. இன்னும் இரண்டு நாளில் [சந்திப்பிலிருந்து] வரவிருக்கும் எங்கள் திருமண நாளுக்காக செலவு வைக்கலாம் என்று பார்த்தால் நேரமின்மையால் என்னவர் தப்பி விட்டார்! பின்பு ரூமுக்குத் திரும்பி அறையை காலி செய்து விட்டு, நண்பர்களுடன் பீச் ரிசார்ட்டுக்குக் கிளம்பினோம்.


 ஆரோவில், புதுச்சேரி.....

சிறிது நேரத்தில் R.K.N Beach Resort-க்கு வந்தடைந்தோம். எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஹாலில் சற்றே இளைப்பாறினோம். பின்பு நண்பர்களுடன் உரையாடல், அறிமுகம், கேலி கிண்டல், அன்புப் பரிசு வழங்குதல், குழந்தைகளில் பாட்டு, நடனம் என பொழுது இனிமையாகக் கடந்தது.


 மாத்ரி மந்திர், ஆரோவில், புதுச்சேரி.....

மதியம் அருமையான உணவை ஏற்பாடு செய்திருந்தனர். மீண்டும் முதல் நாளைப் போல மாலை பீச்சுக்கு சென்று ஆசை தீர நனைந்து மகிழ்ந்தோம். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். தேநீருடன் பிரியாவிடை பெற்று அவரவர் கிளம்பினோம். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.


புதுச்சேரி கடற்கரையில்......

முந்தைய நாளைப் போல் பயணத்தை சுகமாக அனுபவிக்க முடியவில்லை. எனக்கும் மகளுக்கும் கிளம்பியது முதல் ( துளசி டீச்சர் மொழியில் ) டேஷ் பிரச்சனை!! சில வருடங்களாக இல்லாமல் இருந்தது, நேற்று வீடு வராதா என ஆயிற்று. இரவு சாப்பிடாமல் லங்கணம் போட்டுட்டோம்!

இரண்டு நாட்கள் பாண்டிப் பயணம் இனிமையாக கழிந்தது. சந்திப்பு, பார்த்த இடங்கள் பற்றிய பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் என்னவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்!

நட்புடன்

ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

  1. பாண்டிச்சேரி பயணத்தை படங்களில்லாமல் சுருக்கமாகமுடித்துவிட்டீர்களே. உங்கள் எல்லோருக்கும் மீண்டும் இளமைக்காலம் திரும்பிய சந்தோஷம் வந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பதிவுகள் அவருடைய எழுத்தில் வரும்.. கருத்துக்களுக்கு மிக்க நன்றி நெ.தமிழன் சார்..

      நீக்கு
  2. குட்மார்னிங் திருமதி வெங்கட்... சுருக்கமாக விளக்கிச் சென்று விட்டீர்கள். படங்களும் குறைவு! வெங்கட் போத்திஸ் செலவிலிருந்து அங்குதான் தப்பி இருக்க முடியும். பின்னர் உள்ளூரில் மாட்டி இருப்பார் இல்லையா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம் சார்..விரிவான பதிவுகள் அவருடைய எழுத்தில் விரைவில் வரும்..போத்தீஸ் வெறும் கலாட்டா தான்..:)) எப்போதுமே எதுவும் கேட்டதில்லை..உங்கள் நண்பரிடமே கேட்கலாம்..:)) கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்..

      நீக்கு
  3. ஆரோவில் மாத்ரி மந்திர் செல்ல கெடுபிடிகள் அதிகமென்று என்மைத்துனன் சொன்ன நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்.. மாத்ரி மந்திர் உள்ளே செல்ல அனுமதி வாங்க வேண்டும்.. நாங்கள் வெளியே நின்றே பார்த்து வந்தோம்.. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஜி.எம்.பி சார்..

      நீக்கு
  4. பதில்கள்
    1. தொடர்வதற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    அழகான படங்களுடன் அருமையான பயணம்.விளக்கி சொன்ன விதமும் நன்றாக உள்ளது.
    பாண்டிச்சேரி பிரயாணம் செய்ததில்லை.
    ஒரு தடவை கிளம்பி தடைபட்டு போனது. தங்கள் பதிவில் அனைத்தையும் ரசித்தேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டிச்சேரிக்கு ஒருமுறை சென்று வாருங்கள்..எல்லா பகுதிகளையும் படித்து கருத்திடுவதற்கு மிக்க நன்றி கமலா ஜி...

      நீக்கு
  6. ஆரம்பித்துவைத்துவிட்டீர்கள். அவர் நிறைவு செய்வார் போலுள்ளது. மகிழ்ச்சி. காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் விரிவாக எழுதுவார்.. நான் என்னுடைய பார்வையில் பகிர்ந்துள்ளேன்.. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஜம்புலிங்கம் சார்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. நல்லதொரு சந்திப்பு மகிழ்ச்சியான தருணங்கள் இல்லையா. படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்ற்ன

    துளசிதரன், கீதா

    கீதா: பாண்டிச்சேரியில் இருந்த நினைவுகளை எனக்கு அசை போட வைத்தது பதிவின் படங்கள் ஆதி! ரொம்ப நல்லாருக்கு ஆரோவில் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....