ஞாயிறு, 29 ஜூலை, 2018

எங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா


Photo of the day Series – Part 7

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…




படம்-1: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், மே 2018.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான கோபுரத்தின் ஒரு பகுதி! எத்தனை கலை நுணுக்கம்.  அந்தச் சிற்பிகளின் திறமையை என்னவென்று சொல்ல! காலத்தால் அழியாத சிற்பங்களைத் தந்த அந்தச்சிற்பிகளுக்கு வந்தனம்…..


படம்-2: எடுத்த இடம் – ஷிம்லா, அக்டோபர் 2017.

ஏன் இந்த ஒற்றைக் கால் தவம்? கவனமாக இரு. கொஞ்சம் அசந்தால் இந்த மனிதர்கள் அடித்து சூப் வைத்து விடுவார்கள். 


படம்-3: எடுத்த இடம் – Bபீம் குண்ட்d, குருக்ஷேத்திரா, ஹர்யானா.

பெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்.

இந்தச் சிறுமியின் கண்களில் ஏன் இத்தனை சோகம்…. சிறுவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவளோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறாள். அடேய்…. அவளையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ளடா…..


படம்-4: எடுத்த இடம் – ஹுமாயூன் கல்லறை, தலைநகர் தில்லி.

பள்ளிப் பருவம்…. நம்மிடம் ஒரு சீருடைக்கு மேல் இருந்ததில்லை. அதையே தோய்த்து, தோய்த்து, கிழியும் வரை, கிழிந்தால் ஒட்டு போட்டு ஒட்டு போட்டு பயன்படுத்தி இருக்கிறோம் – இரண்டு வருஷத்துக்கு இந்த ட்ராயர் சட்டை தான் – கிழிச்சுட்டு வந்தே…. தோலை உரிச்சுடுவேன் என்று ஒவ்வொரு அம்மா/அப்பாவும் சொல்லி இருப்பார்கள்.

பள்ளிக்கு மதிய உணவு அலுமினிய தூக்கில், நோட்டு புத்தகங்கள் மஞ்சள்/துணி பையில்! அரையில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கட்டினாலும் அவிழ்ந்து விழும் ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே ஓடிய காலம்.

போகும் வழியெங்கும் பராக்கு பார்த்து மாங்காய் பொறுக்கித் தின்று, சகோதர, சகோதரிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டே பள்ளிக்குப் போன நாட்கள்!

அந்தப் பருவத்தில் இருந்த மகிழ்ச்சியும், குதூகலமும் மறக்க முடியாதவை…


படம்-5: எடுத்த இடம் – பேஷ்வா ரோடு, தலைநகர் தில்லி – நவம்பர் 2017.

எப்போதும் எதையோ நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம். எல்லை தெரியாத, முடிவில்லா ஓட்டம். எங்கே எப்போது முடியும்? அவனே அறிவான்!


படம்-6: எடுத்த இடம் – பிரதாப்கட் ஃபார்ம்ஸ், பிரதாப்கட், ஹர்யானா…

வாத்து இவ்வளவு அருகில் பார்த்ததுண்டா? பாருங்களேன் எவ்வளவு அழகு!

அழகு நிலையங்களால்
நம்மை அழகாக்க
இயலாது...

நமது குணம் தான்
நம்மை அழகாக இவ்வுலகில்
வெளிக்காட்டும்...    


படம்-7: எடுத்த இடம் – பாலம்பூர் மாவட்டம், ஹிமாச்சலப் பிரதேசம் – ஏப்ரல் 2016.

எங்கே பாதை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்க்கும் தெரியாது! 

எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள்…..  வாழ்க்கைப் பயணம் இனிமையாகவே அமையட்டும்.  

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

இதுவரை Photo of the Day Series-ல் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க, கீழுள்ள சுட்டியைச் சுட்டலாம்!


மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


36 கருத்துகள்:

  1. அத்தனை படங்களும் அருமை அண்ணா,
    கடைசியில் வளைந்த பாதை கொஞ்சம்
    கூடுதலாக பிடித்திருக்கிறது.

    பாதையும் சரி,வாழ்க்கையும் சரி
    நேராக இருந்தால் ஸ்வாரஸ்யம் இருக்காதல்லவா...?
    வளைவு,நெளிவு தேவை இல்லையா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைவு நெளிவு தேவை இல்லையா.... நிச்சயம் தேவை தான் அஜய். அப்போது தானே சுவை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  2. // கவனமாக இரு... கொஞ்சம் அசந்தால் இந்த மனிதர்கள் அடித்து சூப் வைத்து விடுவார்கள்.....//

    ஹா... .ஹா.... ஹா... குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் ஏமாந்தால் போதுமே... அதான்....

      காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. //எப்போதும் எதையோ நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம்./

    ஆஹா... ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரும் ஓட்டம் - ஒவ்வொருவர் வாழ்விலும் இல்லையா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எல்லாப் படங்களுமே அழகு.

    வாத்து இவ்வளவு க்ளோசப்பில் பார்த்தது இல்லைதான்.

    வளைந்து செல்லும் பாதை பாடம் சொல்கிறது மனிதனுக்கு - வளைந்து கொடுத்து வாழ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்து நானும் இத்தனை அருகில் பார்த்ததில்லை. காமிரா கண்களால் இப்படி அருகே செல்ல முடிந்தது! :)

      வளைந்து கொடுத்து வாழ - உண்மை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அனைத்துப் படங்களும் அழகு. ஹுமாயூன் கல்லறை - இவருடைய சரித்திரம் இறைவனின் அஅருளைப் நினைவுபடுத்தவில்லையா? இவருடைய நோயைத் தந்தை பெற்றுக்கொண்டு இவரை உயிர்ப்பித்தார். தந்தையின் வாக்குக்காக சகோதர்ர்களின் தவறுகையெல்லாம் பொறுத்துக்கொண்டு அதனால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி கதைகள். ஹுமாயூன் பற்றி படித்தது எல்லாம் நினைவுக்கு வரவில்லை. அங்கே சென்ற போது கட்டிடங்கள் பற்றியும் அவற்றைக் கட்டிய மனிதர்கள் பற்றியும் நினைத்தபடியே தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. ஹரியானா மானிலக் குழந்தைகள் அழகு, அது கினிக் கோழிபோல இருக்கே ஒற்றைக்கால் தவம்... வாத்தை தூக்கியிருக்கிறேனே:) அருகில் பார்த்ததுண்டோ எனக் கேட்டுப்புட்டீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தை தூக்கி இருக்கீங்களா..... நான் கோழி தூக்கி இருக்கிறேன்! :) வாத்தைத் தூக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

      நீக்கு
  11. வாத்துக்கிட்ட நெருங்கினதும் அது பயந்து ஓடலியா?! மனம், குணம், அழகுநிலைய கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளக்கரையில் வாத்து இருக்க, நாங்கள் வெளியே பாதுகாப்பு தடுப்பிற்கு இந்தப் பக்கம் இருந்தோம். பயப்படவில்லை வாத்துகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. படங்கள் ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. ./அந்தப் பருவத்தில் இருந்த மகிழ்ச்சியும், குதூகலமும் மறக்க முடியாதவை…/காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நாமும்மாற வேண்டாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் மட்டுமே நிலையானது!

      மாறித்தான் ஆக வேண்டும் என்றாலும் பழையதும் மறக்க வேண்டாமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. அனைத்தும் அருமை. உங்களுடன் இந்தியாவையே சுற்றிவந்ததுபோல உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக அருமையான படங்கள். அதைவிட அழகான சொற்கள். அந்தப் பள்ளிக் குழந்தைகளின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். மனசை அள்ளிக் கொண்டுதான் போகிறது.
      எங்கே வாழ்க்கை தொடங்கும் எவ்விதம் முடியும். பெரு மூச்சு விடச் செய்யும்கவிதை வரிகள்.
      மிக மிக இனிமை. வெங்கட். நன்றி மா.

      நீக்கு
    2. இந்தியாவைச் சுற்றி வந்தது போல! ஹாஹா... ஒரு வாரத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
    3. குழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோஷம் மனதை அள்ளிக்கொண்டு தான் போகிறது! உண்மை தான்மா.. அவர்கள் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  16. அருமையான படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைச் சொல்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. படங்களும் உங்கள் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....