வியாழன், 20 டிசம்பர், 2018

கதம்பம் – அரிசி உப்புமா – காகிதப் பென்சில் – காதணி - கோலங்கள்



சாப்பிட வாங்க – அரிசி உப்புமா - 18 டிசம்பர் 2018:



வைகுண்ட ஏகாதசியான இன்று, இங்கு பெரும்பாலான வீடுகளில் இது தான் உணவு - அரிசி உப்புமா!!!

 
காகிதப் பென்சில் - 11 டிசம்பர் 2018



மரங்களை அழிப்பதை தவிர்க்க ஒரு மாற்று வழி. மறுசுழற்சி காகிதத்தில் செய்யப்பட்ட பென்சில். பின்புறம் தாவரங்களின் விதைகளுடன். குழந்தைகளைக் கவரும் வகையில். ஒவ்வொரு பென்சிலிலும் ஒவ்வொரு திருக்குறள். வேண்டுமானால் பிறந்தநாள் வாழ்த்துகளும் ப்ரிண்ட் செய்து கொள்ளலாமாம்.

பென்சிலை உபயோகித்த பின் மண்ணில் புதைத்து தண்ணீர் தெளித்து வந்தால் ஐந்திலிருந்து பத்து நாட்களுக்குள் முளைத்து விடுமாம். நன்றாக இருக்கிறது அல்லவா!!

ஒரு பென்சிலின் விலை பத்து ரூபாய். குழந்தைகளுக்குப் பரிசளிக்கலாம். அவர்களுக்கு தாவரங்கள் வளர்ப்பதில் ஆர்வத்தை உண்டாக்கலாம். மரங்கள் அழிக்கப்படுவதை பற்றிச் சொல்லி புரிதலை உருவாக்குவோம்.

பள்ளிப்பருவத்திலிருக்கும் பிஞ்சுகளுக்கு சிறுவயது முதலே பூமியை பாதுகாக்கும் எண்ணத்தை தோற்றுவிப்போம்.

நாளைய பாரதத்தை நல்ல எண்ணங்களுடன் வளர்த்து பசுமையாக்குவோம்!!

ஸ்ட்ரிக்ட் தாத்தா – 12 டிசம்பர் 2018

இன்று ஒரு நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று வந்தோம்..வழக்கம் போல் கலகலப்பான பேச்சுகளுக்கு பதிலாக பெரும்பாலும் செல்ஃபோன் காமிராக்களுக்கு முகங்களை காண்பித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்..:)

எங்களுக்கு பின்னே அமர்ந்திருந்த இருவர் மட்டும் எஸ்.ரா வை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

நிச்சயம் ஆனவுடன் சாப்பிடச் சென்றோம். அங்கு ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராக தாத்தா ஒருவர் எல்லோரையும் சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடும் படி மிரட்டிக் கொண்டிருந்தார்...:)

மகளையும் அந்த பூச்சாண்டியிடம் புடிச்சுக் கொடுத்துடுவேன் என்கிற ரீதியாகச் சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தேன்...:) சுடச்சுட அக்கார வடிசலை ( பாயசம் ) ரசித்து சாப்பிட்டேன்..:)

பேப்பர் பைகளில் தேங்காய், ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு விடைபெற்றோம்.

இன்றைய நாள் இனிய நாளாக இருந்தது.

ரோஷ்ணி கார்னர் – 12 டிசம்பர் 2018



மகள் செய்த காதணி – சில்க் த்ரெட்-இல் செய்தது.

மார்கழி கோலங்கள் - டிசம்பர் 2018


மார்கழி பிறந்தாச்சு – முதல் நான்கு நாட்கள் எங்கள் வீட்டு வாசலில் போட்ட சின்னச் சின்னக் கோலங்கள்!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    ஆஹா கதம்பம் ரொம்பவே ஈர்க்கிறதே..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பென்சிலை உபயோகித்த பின் மண்ணில் புதைத்து தண்ணீர் தெளித்து வந்தால் ஐந்திலிருந்து பத்து நாட்களுக்குள் முளைத்து விடுமாம். நன்றாக இருக்கிறது அல்லவா!!//

    ஜூப்பரோ ஜூப்பர்!!!

    அதுக்காகவாவது இந்தப் பென்சிலை வாங்கனும்...இதைச் சொன்னதுக்கு மிக்க நன்றி ஆதி....இனி இதைப் பரிசாகக் கொடுக்கலாம் குழந்தைகளுக்கு....நல்ல விஷயம்!!! ரொம்ப ஈர்த்த ஒரு விஷயம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம் தான். பரிசாக வழங்க ஏதுவான பொருள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ஸ்ற்றிக்ட் தாத்தா செல்ஃபோனுக்கும் இப்படி ஒரு தாத்தா இருந்தால் நல்லது...ஹா ஹா ஹா...உணவை வேஸ்ட் செய்யாமல் சாப்பிடச் சொன்னதுரொம்ப அருமை...தாத்தாவுக்கு ஒரு பூங்கொத்து!

    ரோஷினி குட்டி செம போங்க பேசாம ஒரு கடை ஆரம்பிச்சுடலாம்....குட்டி யு ராக்!! எப்பவுமே! அம்மா புலி, அப்பா புலி எத்தனை அடி பாய்கிறார்கள்...அப்பு குட்டிப் புலி பல காத தூரம் பாயாமல் இருக்குமோ!! வாழ்த்துகள் ரோஷினி குட்டி!

    கலக்கல் அண்ட் கலர்ஃபுல் கோலங்கள் ஆதி.

    அரிசி உப்புமா ரொம்பப் பிடிக்கும்...வெண்கல உருளி புதுசோ?!!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மூன்று தலைமுறைகளை கடந்த உருளி சேச்சி... என் மாமியாரின் அம்மாவுடையது.. உப்பு, புளியின் மகிமை புதுசாயிடுச்சு..

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    அரிசி உப்புமா என்று சொல்வதைவிட குருணை உப்புமா என்று சொல்லலாம் அல்லவா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா வீட்டில் குருணை உப்புமா என்று தான் சொல்வார்கள் ஸ்ரீராம் சார்..

      நீக்கு
  5. பென்சில் தகவல் நல்ல விஷயம். ரோஷ்ணியின் கைவண்ணம் பாராட்டுக்குரியது.
    கதம்பத்தை சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. உங்கள் தளத்தில் நட்பின் முகவரி களை இப்போதுதான் பார்க்கிறேன். புதுசு போல... எத்தனை நாட்களாக? முன்னர் ஓரிரண்டு வலைப்பூக்கள் முகவரி மட்டுமே பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப மாதங்களுக்கு முன்னரே சேர்த்து விட்டேன் ஸ்ரீராம். கவனித்து இருக்க விடுபட்டு இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. காகிதப் பென்சில் கேள்விப்படாத விஷயம். மற்றவை முகநூலிலும் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காகித பென்சில் .... புதிய விஷயம் உங்களுக்கு என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. பென்சிலின் பயன்பாடு பிரமிக்க வைக்கிறது. ஆங்காங்கே இப்படி நல்லதை நினைப்பவர்கள் இருக்கும்வரையில் உலகம் உயிர்ப்புடன் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் உயிர்ப்புடன் இருக்கும்.,... அதுதான் இங்கே தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. ரசிக்கும் கதம்ம விடயங்கள் சகோ நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. பேப்பர் பென்சில் புழக்கத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சுது..

    பாப்பா செஞ்ச கம்மல் சூப்பர்

    கோலமும் அருமை...

    உணவு வீணாக்குதல் எனக்கும் பிடிக்காது. பலரின் உழைப்பு அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

  11. இந்த மறுசுழற்சி பென்சில் பற்றி முதல் தடவை தெரிந்துகொண்டேன்.இது சூழலுக்கு மிகவும் நல்லது.ரோஷ்னியின் கைவினை மிகவும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  12. அரிசி உப்புமா தயார் ஆவதற்கு முன்பே படம் எடுத்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்..கொதி வரும் போதே எடுத்து விட்டேன்..

      நீக்கு
    2. தவறாச் சொல்லலை... அதை யாரும் கவனிக்கலையே என்பதற்காக எழுதினேன்.

      கோலங்கள் மற்றவைகளும் அருமையா இருக்கு.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. arisiupma very tasty upma. Lighter than ravaiupma. Nice to see your post. I love the idea of pencils made of recycled newspaper. First time I am hearing.cute pencil.Roshini's craft skill superb. Happiness is home made. Congrats to her creative activities

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  14. கதம்பம் எல்லாம் அருமை சகோதரி.

    ரோஷினியின் கைவேலைப்பாடு வழக்கம் போல் மிக மிக அருமை. வாழ்த்துகள் பாராட்டுகள்!

    உங்கள் கோலங்களும் மிக அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  15. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  16. பென்சில் விதைகள் அருமையான ஐடியா. ஒரு சதவிகிதம் மரமானாலே வெற்றிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சதவிகிதம் மரமானாலே வெற்றி - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. காகிதப் பென்சில் அருமை இயற்கையை பேணுவோம்.

    ரோஷினிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....