சனி, 13 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – தாயின் புலம்பல் – வள்ளுவன் – ஹிந்தி – ஆலு டிக்கி


காஃபி வித் கிட்டு – பகுதி – 28

படித்ததில் பிடித்தது – ஒரு தாயின் புலம்பல்:

சமீபத்தில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்ட கவிதை. எழுதியவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.




எனதருமை மகனே !
எனதருமை மகனே !
.
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில் தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
.
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க !
.
ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
.
ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....
.
உன்னை குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக !
கவனித்துப் பழக அவகாசம் தருக !
.
இனி,
சில நேரங்களில் - என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
.
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள் என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை பழக
என் விரல் நீண்டது போல்
கைகொடுத்து எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று !
வருத்தப் படாதே.....
.
சில வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில வயதுக்கு மேல் வாழ்வதில் அர்த்தமில்லை...
.
காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
.
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????

இந்த வாரத்தில் ஒரு குறும்படம் - வள்ளுவன்:

அவன் அவளாக மாறும்போது சந்திக்கும் பிரச்சனைகள். நல்லதொரு குறும்படம். சுமார் 22 நிமிடங்கள் ஓடும் இப்படத்தினை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கலாமே…



ஹிந்தி அட்ராசிட்டிஸ்!

நண்பர் பத்மநாபன் எனக்கு முன்னரே தில்லி வந்து விட்டவர். தமிழகத்தில் இருக்கும்போது அவரது உறவினர் ஒருவரிடம் ஹிந்தி பயின்றவர். ஆனாலும் இன்னமும் ஹிந்தி வார்த்தைகள் அவ்வப்போது தடுமாறும் என்பது அவரே ஒத்துக் கொள்ளும் விஷயம்! சென்ற வாரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது சொன்ன ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம்… என்னை விடப் பெரியவர் என்றாலும், ஒருவரை ஒருவர் “அண்ணாச்சி” என்றே அழைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது எங்களுக்குள்!



”அண்ணாச்சி, நேத்து அலுவலகத்தில் ஹிந்தி காரங்கிட்ட பேசும்போது பல்லியோட தொல்லை பத்தி சொல்ல வேண்டியிருந்தது. பல்லிக்கு ஹிந்தில என்ன வார்த்தைன்னு யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன், மனசுக்குள்ள நிக்குது, ஆனா வெளியே வரமாட்டேங்குது! ரொம்ப யோசிச்சு யோசிச்சு, மண்டை குழம்பிடுச்சு… அடப் போங்கய்யா, நீங்களும் உங்க ஹிந்தியும்னு நினைச்சு “Crocodile கா சோட்டா பச்சா”ன்னு அடிச்சு விட்டேன்! ஹாஹா… அவனுங்களுக்கு புரிஞ்சு போச்சு நான் என்ன சொல்லவறேன்னு… ஓ… ‘சிப்கலியா?” என்று கரெக்டா ஹிந்தி வார்த்தையைச் சொல்ல, ‘அதே தான் சிப்கலியே தான்!”

இதை அவர் சிரித்தபடியே சொல்ல, நானும் சிரித்து ரசித்தேன். நீங்களும் சிரித்து ரசிக்க இங்கே பகிர்ந்தேன்!

ஆலு டிக்கி:



ப்ரயாக்ராஜ் நகரில் சாலையோரத்தில் வைத்து விற்றுக் கொண்டிருந்த ஆலு டிக்கி! உருளைக்கிழங்கை வேக வைத்து காரசாரமாக இப்படி விற்கிறார்கள்! சாப்பிடத் தோன்றினாலும் சாப்பிட வில்லை! பார்த்து ரசிக்க மட்டுமே!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    அம்மா பற்றிய கவிதை மனதை என்னவோ செய்துவிட்டது. அருமை அத்தனையும் உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      கவிதை மனதைக் கலங்கடித்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    க்ரோகடைல. கா சோட்டா பச்சா மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் வாங்க குட்மார்னிங்க்!!

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      க்ரோகடைல் கா சோட்டா பச்சா - இதை என்னிடமும் இன்னுமொரு நண்பரிடமும் சொன்ன போது அத்தனை சிரிப்பு ஒலி அங்கே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. ஹையோ வெங்கட்ஜி கண்ணுல தண்ணி வருது சிரிச்சு சிரிச்சு.....பப்பநாபன் அண்ணாச்சி சொன்னது ஹையோ நெஜமாவே செம காமெடி...அவரிடம் சொல்லுங்க செம ஜோக் நு ஹையோ முடிலப்பா சாமி இப்படி நிறைய இருக்குமே கொஞ்சம் எடுத்து விடச் சொல்லுங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சி பல விஷயங்களை இப்படி நகைச்சுவை ததும்ப சொல்வதுண்டு. நாங்கள் எப்போது பார்த்தாலும் இப்படி ஏதாவது விஷயங்களை பேசிக் கொண்டிருப்போம்... நீங்களும் க்ரோகடைல் கா சோட்டா பச்சாவினை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. ஆலு டிக்கி பார்க்க நல்லாருக்கே ஆனா சாதாரணமா சொல்லற ஆலு டிக்கி வேற இல்லையா?

    காணொளி அப்புறம் பார்க்கறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாக ஆலு டிக்கி வட்ட வடிவில் இருக்கும். இங்கே வித்தியாசமாக இருந்தது. அதனால் தான் பகிர்ந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  5. அம்மா பற்றிய கவிதை ஒலியலையில் வெகுகாலமாக உலாவியது மனம் கனக்க வைத்தது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன் கேட்டதாக/படித்ததாக நினைவில்லை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. "//“Crocodile கா சோட்டா பச்சா”ன்னு அடிச்சு விட்டேன்! //" - ஓ, இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டு வாங்கறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. முதல் படம் ரொம்பவே கவர்ந்தது. இடுகையை அப்புறம்தான் படிக்கப்போகிறேன்.

    பொதுவா எனக்கு கவிதையை ரசிக்கும் மனம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் - இணையத்திலிருந்து.... ரொம்பவே பொருத்தமான படம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. அனைத்தையும் ரசித்தேன். கவிதை, மனதில் ஆழப்பதிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. சில வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
    சில வயதுக்கு மேல் வாழ்வதில் அர்த்தமில்லை.//

    முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது மனதை கனக்க வைத்த பதிவு.


    //Crocodile கா சோட்டா பச்சா”ன்னு அடிச்சு விட்டேன்! ஹாஹா…//

    சிப்கலி பெயர் கண்டு பிடிக்க உத்தி அருமை, சிரிக்க வைத்து விட்டது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. இன்றைய காபி வித் கிட்டுவில் நீங்கள் பகிர்ந்துள்ள கவிதை. அருமை. அதுவும் ‘சில வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
    சில வயதுக்கு மேல் வாழ்வதில் அர்த்தமில்லை...’ என்ற வரிகள் மிக அருமை. பாலினம் மாறியவர்களுக்கு ஏற்படும் வலியும், அதனால் ஏற்படும் சங்கடங்கள் பற்றியும் விளக்கும் குறும்படம் மனதை என்னவோ செய்தது.
    ஹிந்தி அட்ராசிட்டிடயையும் இரசித்தேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் - ஆமாம் ஐயா. மனதை என்னவோ செய்து விட்ட படம். பார்த்து உங்கள் கருத்தினைச் சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. கவிதை ரசித்தேன்...

    இப்படிதான் வார்த்தை தொண்டையிலிருந்து வெளிவராமல் நம்ம மானத்தை வாங்கும்.

    ஆலு டிக்கி.. ஈர்க்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தை வெளிவராமல் மானத்தை வாங்கும்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. தாயின் முகச் சுருக்கங்கள் மனதை என்னவோ செய்கிறது சிறுவயதில்தான் மகனைக் கவவனித்துக் கொண்டத்தை சொல்லிக் காட்டுவதுபோல் இருப்பதை ரசிக்க முடியவில்லை தாய்மார்கள்தனக்கும் இப்படி செய்ய நேரிடும் எகான்று எதையும் செய்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. முதலையின் சின்னக் குழந்தை பிரமாதம்.
    அம்மா கவிதை உருக வைத்தாலும், அவள் இப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். இதுவே மகன் சொல்வது போல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    காணொளி அழகாக எடுக்கப் பட்டிருக்கிறது.
    ஆலு டிக்கி சாப்பிட அழைக்கிறது.
    மிக மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  15. அம்மாவின் கவிதை முன்பு முகநூலில் வளம் வந்தது.
    ஆலு டிக்கி செய்முறையை எதிர்பார்த்தேன்.
    முதலையின் குழந்தை.. ஹாஹாஹா! நான் இப்போது இப்படிதான் என் வீட்டு பணியாளோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலு டிக்கி செய்வது எளிது தான்மா... இணையத்தில் நிறைய செய்முறை கிடைக்கும். பாருங்கள். இங்கே வெளியில் கிடைக்கிறது என்பதால் வீட்டில் செய்வது இல்லை. எப்போதாவது திருமணங்களில் சாப்பிடுவது உண்டு! ஆலு டிக்கி, தஹி Bபல்லே, கச்சோடி, என இந்த ஊர் உணவுகளை வீட்டில் செய்வது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  17. குறும்படம் செம படம் ஜி. மிகவும் ரசித்தேன். ட்விஸ்ட்....அப்புறம் முடிவு அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  18. கவிதை அருமை...
    கபிலர்கா சோட்டா பச்சா போல
    சரி ஆலு டிக்கி உருளை வறுவலா?

    ரெசிபி போடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெசிப்பி போடலாம்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  19. ஆலு டிக்கி ஆவலைத் தூண்டி விட்டது. ஆனால் உ.கி. அவருக்கு ஒத்துக்கறதில்லை. எனக்கு எதுவும் செய்யாது! இஃகி, இஃகி/
    அம்மா பற்றிய கவிதை முகநூலிலும், வாட்சப் மூலமும் பல முறை வந்தாலும் உண்மையைச் சொல்லுவது என்றுமே நிலைத்து நிற்கும் வகை!
    சிப்கலிக்கு இப்படியும் ஒரு பெயர் சொல்லலாமா? சரி தான்! :))))) காணொளி பின்னர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலு டிக்கி சிலருக்கு ஒத்துக் கொள்ளாது.

      சிப்கலி - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....