வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்


மலையுச்சிக்குப் போகும் பாதை...


ராஞ்சி நகருக்கு நாங்கள் சென்று சேர்ந்த போது மதியம் ஆகிவிட்டது. இரயிலில் ஒன்றுமே சாப்பிடாமல் ராஞ்சி நகரில் தோசா பாயிண்ட் சென்று சாப்பிட்ட பிறகு தான் எங்களுக்கான தங்குமிடத்திற்குச் சென்றோம். தங்குமிடம் பற்றிய விவரங்களை இங்கே விரிவாக சொல்ல முடியாது!

அங்கே ராஜ மரியாதை தான் – தங்குவதற்கு கட்டணம் உண்டு என்றாலும் பொதுவாக அனைவரும் அங்கே தங்கி விட முடியாது. அரசுத் துறையினருக்கானது – குறிப்பாக சிலருக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு. நண்பர் மூலமாக தான் இங்கே ஏற்பாடு செய்திருந்தோம். அதுவும் கடைசி நேரத்தில் தான் இந்த இடம் முடிவு செய்தோம். கயாவில் தங்கியது போலவே ராஞ்சியிலும் ஏற்பாடு செய்திருந்தார் இன்னுமொரு நண்பர்.  ஆனால் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் ஏதோ கடைசி நேர சிக்கல்கள் என்பதால் மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லி, கயாவிலிருந்து இரயிலில் ராஞ்சி சென்று கொண்டிருந்த போது, வண்டியை ஏற்பாடு செய்த ஜார்க்கண்ட் நண்பருக்குச் சொல்ல, அவர் இந்த ஏற்பாடு செய்து தந்தார். எப்போதும் இரண்டு பேர் நம் ஏவலுக்குக் காத்திருக்க, எங்களுக்கே அந்த ஓவர் கவனிப்பு கொஞ்சம் இடைஞ்சலாகத் தான் இருந்தது!


சூர்யாஸ்தமனம்...

மதியம் நான்கு மணி ஆகிவிட்டதால் அன்றைக்கு பெரிதாக எங்கேயும் சுற்றிப் பார்க்க முடியாது என்றாலும் ராஞ்சி நகரில் உள்ள தாகூர் ஹில் பகுதிக்குச் சென்று வரலாம் என முடிவு செய்தோம். ராஞ்சி நகரின் மொராபாடி பகுதியில் இருக்கும் ஒரு சிறு மலைச்சிகரம் தான் இந்த தாகூர் ஹில்! அங்கேயிருந்து ராஞ்சி நகரம் முழுவதையும் பார்த்து ரசிக்க முடியும். அங்கேயிருந்து சூரிய உதயமும் அஸ்தமனமும் பார்க்க நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார் நண்பர். நாங்கள் அங்கே சென்று சேர்ந்தபோது மாலை ஐந்தேகால்! ஆறு மணிக்கு மூடி விடுவோம் சீக்கிரம் பார்த்து விட்டு கீழே இறங்கிவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார் அங்கே இருந்த பெண் காவலர்.

த்யான மண்டபம்... 

கூடவே ஓட்டுனர் குல்தீப் எங்களுடன் வந்து நிறைய செல்ஃபிக்களை சுட்டுத் தள்ளினார்! சிறு மலைதான் என்றாலும் படிகளிலும் பாதையிலும் ஏறிச் சென்று மலையுச்சியை அடைவதற்குள் கொஞ்சம் நேரமாகிவிட்டது. மலையுச்சியிலிருந்து நகரம் முழுவதும் விளக்கொளியில்! சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றாலும் கொஞ்சம் ரசிக்க முடிந்தது. சில நிமிடங்கள் அங்கே நின்று காட்சிகளை ரசித்தோம். சில படங்களை அலைபேசியில் எடுத்துக் கொண்டோம். அன்றைக்கு இரயிலிலும், வெளியே சென்ற போதும் என்னுடைய காமிராவினை பயன்படுத்தவே இல்லை! பயணத்தில் இப்படி காமிராவில் படம் எடுக்காத ஒரே நாள் இதுவாகத் தான் இருக்கும்!


நகரத்தினை ஒரு வ்யூ!


சரி இந்த மலைக்கு ஏன் தாகூர் மலை எனப் பெயர் என்று பார்க்கலாமா! உண்மையில் தாகூர் மலை என்றதும் ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களுக்கும் இந்த மலைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் இந்த தாகூர் ரபீந்த்ரநாத் அல்ல! அவர் பெயர் ஜ்யோதீந்த்ரநாத்!  ரபீந்த்ரநாத் அவர்களின் மூத்த சகோதரர்! இப்போது சுற்றுலா தலமாக இருந்தாலும் அதற்கு முன்னர் ஜ்யோதீந்த்ரநாத் தாகூர் அவர்களின் தங்குமிடமாக இருந்ததாம் இந்த இடம். அதனால் தான் இந்த மலைக்கும் தாகூர் மலை என்ற பெயர் வந்திருக்கிறது. மலையின் கீழே ராமகிருஷ்ண ஆச்ரமம் ஒன்றும் இருக்கிறது. அழகான இடத்தில் அமைதியான சூழலில் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்படியான இடம். ரபீந்த்ரநாத் தாகூருக்கு வழிகாட்டியாக இருந்த ஜ்யோதீந்த்ரநாத் தாகூர் பற்றிய தகவல்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பற்றி இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.


இருட்டிப் போச்சு... கீழே போங்கடே!...

ஓவியம், இசை, கவிதை, மொழியாக்கம், கலை, இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஜ்யோதீந்த்ரநாத் தாகூர் 1839-ஆம் ஆண்டில் பிறந்தவர். 1868-ஆம் ஆண்டு காதம்பரி தேவி என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் காதம்பரி தேவி 1884-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு, ஜ்யோதீந்த்ரநாத் தன் இல்லம் விட்டு வெளியேறினார். அவரது தந்தையும் சில வருடங்களில் இறந்து விட, ஊர் ஊராக அமைதியைத் தேடி பயணித்து 1908-ஆம் ஆண்டு ராஞ்சி நகரை வந்தடைந்தார்.  மொராபாடி பகுதியில் இருந்த இந்த மலையுச்சியும், அங்கே இருந்த பாழடைந்த பங்க்ளாவும் அவருக்குப் பிடித்துப் போக அதனை வருடாந்திர குத்தகைக்கு எடுத்து பங்க்ளாவினை சீரமைத்து அங்கே தங்கினார். அந்த மாளிகைக்கும் கதை உண்டு!


த்யான மண்டபம் கீழேயிருந்து...


ஆங்கிலேயரான ஏ.ஆர். ஊஸ்லி என்பவர் தான் இந்த மலை பங்க்ளாவை நிர்மாணம் செய்தவர். தனது குதிரையில் தினமும் நகரை வலம் வந்து ஓய்வெடுக்க இந்த பங்க்ளாவை பயன்படுத்தினார்.  அங்கே அவருடன் தங்கியிருந்த ஊஸ்லியின் சகோதரர் ஒரு நாள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள, மனம் நொந்த ஊஸ்லி இந்த மலை பங்க்ளாவிற்கு வருவதையே நிறுத்தி விட்டார். பங்க்ளா பாழடைந்து கிடந்திருக்கிறது. அதைத் தான் ஜ்யோதீந்த்ரநாத் தாகூர் குத்தகைக்கு எடுத்து அங்கே தங்கி த்யானத்தில் ஈடுபட்டு மன அமைதியைத் தேடினார்! மலையுச்சியில் திறந்த வெளியில் ஒரு அழகிய மண்டபம் அமைத்து அங்கே அமர்ந்து கொண்டு தான் த்யானம் செய்வாராம் ஜ்யோதீந்த்ரநாத் தாகூர்! சில வருடங்களுக்குப் பிறகு அவர் இறக்க, அவரது உடல் இந்த மலையிலேயே புதைக்கப்பட்டது! இன்றைக்கும் சிலர் அங்கே த்யானம் செய்கிறார்கள்.

ஆனால் எல்லா சுற்றுலா தலங்கள் போலவே இங்கேயும் காதல் ஜோடிகள் தங்களை மறந்த நிலையில் ஓருடல், ஈருயிராக அமர்ந்து Sweet Nothings பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காவலாளி மாலை நேரம் எல்லா பகுதிகளிலும் சென்று அனைவரையும் கதவடைக்கும் நேரமாகி விட்டது என புறப்படச் சொல்லிக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது! பாவம் அவர் – சில ஜோடிகளிடம் திட்டு வாங்கினார்! அவர் வேலையை அவர் பார்ப்பது இந்த ஜோடிகளுக்குப் பிடிக்கவில்லை! பேச்சுக் கொடுத்த போது தினம் தினம் இந்த மலை முழுவதும் நடக்க வேண்டியிருக்கிறது! பல ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு இருக்க தேடித் தேடி வெளியே அனுப்ப வேண்டியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு மேலே நகர்ந்தார்!

அழகான சூழலில் சிறிது நேரம் இருந்து விட்டு கீழே இறங்கினோம். நல்ல இடம் நான்கு மணிக்குச் சென்றால் ஆறு மணி வரை இருந்து விட்டு கீழே இறங்கலாம்!

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

50 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  படங்கள் செமையா இருக்கு. உலா பதிவு வாசித்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வெளியே சென்ற போதும் என்னுடைய காமிராவினை பயன்படுத்தவே இல்லை! பயணத்தில் இப்படி காமிராவில் படம் எடுக்காத ஒரே நாள் இதுவாகத் தான் இருக்கும்!//

  எப்படி உங்கள் கவசத்தை விட்டுப் போனீங்க?! ஆச்சரியம்!

  கேமரா கொண்டு போயிருந்தால் இன்னும் படங்கள் வந்திருக்குமோ?!

  ரயிலில் நீங்கள் கண்டிப்பாக கேமரா பயன்படுத்தியிருக்க முடியாதே ஜி அந்தப் பயணம் அப்படித்தானே இருந்தது!

  நகரத்தினை ஒரு வ்யூ!///படம் அட்டகாசம்....செமையா இருக்கு அந்தக் க்ளிக்!!!


  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... எப்படி படம் எடுக்காமல் இருந்தேன் என்பது ஆச்சர்யம் தான் எனக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. மலையின் பெயருக்கான கதையும், பங்களா கதையும் இரண்டிலுமே தற்கொலைகள். தற்கொலை சம்பவம் ஒருவரை அலைய வைத்து இம்மலைக்கு வரச் செய்தது என்றால் மற்றொருவர் அது போன்ற சம்பவத்தினால் மலையை விட்டுச் சென்றிருக்கிறார்...

  நல்ல விவரணங்கள்

  சரி குல்தீப் பற்றி சொல்லவே இல்லையே. அவர் அடுத்த நாள் வராததன் காரணம் அடுத்த பதிவில்தான் வருமோ..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விஷயங்களை நினைத்தால் புதிர் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. குட்மார்னிங்.

  ஓவர் கவனிப்பும் இடைஞ்சலாகும் - உண்மை.உண்மை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இந்த குல்தீப் தொல்லை தாங்க முடியலைப்பா... என்று மனதில் தோன்றி இருக்கும்! ஓட்டுனர்கள் அமைவதும் வரம். கீதா அக்காவுக்கு அமைந்தாரே ஒரு ஆட்டோ ஓட்டுநர்... அவர் போலிருக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்கின்றனர். இதைச் சென்னையிலும் பார்த்திருக்கேன். ஒரு தரம் ஃபாஸ்ட் ட்ராக் கார் ஓட்டுநர் எங்களோடு சண்டை போட்டார். அதன் பின்னர் புகார் கொடுக்கவும் பின்னர் ஒருவர் குடும்ப ஓட்டுநராக ஆகிவிட்டார். ஃபாஸ்ட் ட்ராக்கை அணுகாமலேயே இவரை நேரிடையாகத் தொடர்பு கொண்டு அழைப்போம். அவர் மூலம் ஃபாஸ்ட் ட்ராக்கில் முன்பதிவு செய்து கொண்டு பயணம் செய்வோம். நீண்ட தூரப் பயணங்கள் எல்லாம் பாதுகாப்பாகவும் தொந்திரவில்லாமலும் இருக்கும்.

   நீக்கு
  2. சண்டை போட்டவரே நண்பராகி விட்டார்.. அருமை. எனக்கும் அப்படி சில அனுபவங்கள் உண்டு.

   நீக்கு
  3. சண்டை போட்ட ஓட்டுநர் அல்ல! வேறொருவர். ஆனால் எங்கள் அனுபவங்களில் அதிகம் சண்டை போட்டவர்கள் நண்பர்களானதும் உண்டு தான்!

   நீக்கு
  4. //ஓட்டுனர்கள் அமைவது ஒரு வரம்// உண்மை தான். சில சமயங்களில் ரொம்பவே தொல்லையாகி விடும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  5. மனைவி அமைவதெல்லாம் மட்டும் அல்ல! ஓட்டுனர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  6. சண்டை போட்டவரே நண்பர் - அப்படி நடந்தால் நல்லது தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  7. சண்டை போட்டவர்கள் நண்பர்களாக ஆவது - மகிழ்ச்சியான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 6. ஐந்தேகால் மணிக்கு மேலேறி ஆறுமணிக்குள் இறங்க வேண்டுமா? கொடுமைதான். குறைந்த நேரத்தில் மேலே அவசர அவசரமாகப் பார்க்கவேண்டுமே... அங்கும் ஜோடிகளா? போச்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கெல்லாம் ஏறவே ஆறு மணி ஆயிடும். அப்படியே இறங்க வேண்டியது தான்.

   நீக்கு
  2. நேரப் பற்றாக்குறை - சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

   ஜோடிகள் - எங்கும் நிறைந்திருப்பவர்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. படிகளில் ஏறி இறங்குவது கடினம் தான் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பிரபலங்கள் வாழ்வில் அவர் உறவுகள், குறிப்பாக வாழ்க்கைத்துணை தற்கொலை செய்து கொண்டால் ஆராய்ச்சி செய்து பார்க்கத் தோன்றும். ஜ். தாகூரின் எந்த நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பார்?!! அவரும் அதற்குப்பிறகு த்யான வாழ்வுக்கு வந்து விடுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலர் வாழ்க்கையும்/ அதிலும் பிரபலங்கள் வாழ்க்கை எப்போவும் சோகமயமாக இருப்பதோடு இல் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவும் மாட்டார்கள்! அது ஏன் என்று தெரியவில்லை.

   நீக்கு
  2. ஸ்ரீராம் - சாதாரணர்களின் வாழ்வுதான் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். மிகப் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை (அதிலும் அவங்க குடும்பத்தின் வாழ்க்கை) தியாகம் இல்லைனா சோக மயமாக இருக்கும். சிவாஜிக்கு (அட இங்கும் அவரா...வேண்டாம்). சர்சிவி ராமன் போன்ற புகழ் பெற்றவர்களின் வீடுகளை நினைத்துப்பாருங்கள்..... இல்லை நடிகர்களின் மனைவியரை நினைத்துப்பாருங்கள்...

   நீக்கு
  3. பிரபலங்கள் சிலர் வாழ்க்கை ரொம்பவே சோகமானது தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. பிரபலங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் உண்டு. உள்ளே நுழைந்து பார்க்காதவரை நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  5. பல பிரபலங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. இன்னொரு தற்கொலை நடந்த இடத்தில அவர் தங்கியிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது! அதுவும் தனியாக அதற்கும் ரொம்பவே மன உறுதி வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. yesssssssssssssssssssssssu!

   மலை ஏறும் படிகள் அழகோ அழகு!

   நீக்கு
  2. இன்னொரு தற்கொலை நடந்த இடத்தில் தனியாக இருப்பது கடினமான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 9. பொதுவாக சிலருக்கு பயங்கரமான இடம் என்று கருதப்படுவது சிலருக்கு சொர்க்கமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 10. ஜ்யோதீந்த்ரநாத் தாகூர் , ரவீந்திரரின் அண்ணன் எனத் தெரிந்திருந்தாலும் மற்ற விபரங்கள் முற்றிலும் புதிது. விளக்கமாகச் சொன்னதுக்கு நன்றி. நல்லதொரு தகவலும், அருமையான நினைவிடமும்! இப்போ அரசாங்கம் பாதுகாக்கிறதா இந்த மலையை? அழகாக இருக்கிறது. படமும் அருமை! அப்புறம் அந்தக் குல்தீப் இங்கே எப்படி வந்தார்? ரயில் பயணத்திலும் கூடவே வந்தாரா? அல்லது ஜார்க்கண்டில் முதல் நாள் பயணத்தில் குல்தீப் தானோ ஓட்டுநர்? நான் மறந்துட்டேன் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஞ்சி நகரில் முதல் நாள் பயணம் முழுமையாக குல்தீப் தான் ஓட்டுனர். நீங்கள் மறந்து விட்டீர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. புதிய இடம், பலதகவல்கள் அடங்கிய அருமையான அழகான் தியானம் மண்டபம்.
  அஸ்தமன சூரியன் அழகு.
  மாளிகை போனீர்களா? அது பின்னர் வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரப் பற்றாக்குறை என்பதால் மாளிகைக்கு உள்ளே செல்ல இயலவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 13. இவ்வாறாக ஒரு தாகூர். இப்போததான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி.

   நீக்கு
 15. புதிய இடம்..புதிய தகவல்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 16. அருமையான படங்கள். புதிய தகவல். ஒருவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் தனியாக இருப்பது என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருப்பது கஷ்டம்தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 17. படித்து ரசிக்க மட்டுமே முடியும் சென்று பார்க்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. தாகூர் மலை பற்றிய விபரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....