செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கதம்பம் – நரஹரி – விடுமுறை - கதம்பத்துள் கதம்பம்



கோடையில் இதமாய் – 8 ஏப்ரல் 2019



கொளுத்தும் வெயிலுக்கு வயிற்றுக்கு இதமாய்!!!

நரஹரி! - வாசிப்பனுபவம் - 9 ஏப்ரல் 2019



பிறந்தநாளுக்கு அன்புப் பரிசாகக் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசிக்க இன்றே சிறந்த நாள் என்று "நரஹரி" சொல்லி விட்டார்.

மார்கழி முழுதும் பக்தியோடு முகநூலில் வாசித்திருந்தாலும், புத்தக வடிவில் பக்கங்களை ஸ்பரிசித்து, வரிகளை மனதுள் அசைபோட்டு, காட்சியை கண்முன் நிறுத்தி வாசிக்கும் அனுபவமே அலாதி..மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

எளியத் தமிழில் எல்லோருக்கும் விளங்கும் படியான வரிகள்..க்ஷண நேரத்தில் தூணைப் பிளந்து வந்து அசுரனை அழித்த நரசிம்மனை எத்தனை விதமாய் போற்றிப் பாடியுள்ளார் நூலாசிரியர்.

எத்தனை நாமங்கள். ஒவ்வொரு பாடலுமே சிறப்பு என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று.

மனதுக்கினியான்!!

வளர்ந்தே பிறந்தாய்...
பிளந்தே வந்தாய்..
பிள்ளைப் பருவக் குறும்புக் கதைகள்..
பெற்றோர் சுகம் ஏதுமில்லை..
வில் முறிக்கும் வாய்ப்பில்லை..
விலா முறித்துக் காட்டினாய்..
பால் தயிர்க் குடம் உடைத்தாயில்லை..
பாலகனைத்தான் மடியில் ஏந்தினாய்..
கள்ளத்தனம் செய்தவனில்லை
கவர்ந்ததென்னவோ எங்களை..
சொல்லுக்கே வேலையில்லை..
செயல் அரசன் நீயே..
எப்படி இது சாத்தியமோ
இன்னொருவர் ஈடில்லை..
மனதுக்கினியானே..
மனம் மகிழ எதிரில் வா!!

நான் ரசித்து வாசித்த இந்த நரஹரியை நீங்களும் வாசிக்கலாமே. ரிஷபன் சாரின் நட்பு கிடைத்தது அந்த காட்டழகிய சிங்கரின் அருள்.

ரோஷ்ணி கார்னர் – 10 ஏப்ரல் 2019



மகளுக்கு தேர்வுகள் இன்றோடு முடிந்தது. 50 நாட்கள் விடுமுறை. கொளுத்தும் வெயிலில் வீட்டுக்குள்ளேயே கைவேலை, ஓவியம், புத்தகம் வாசிப்பது என்று ஏதேனும் செய்வாள். இந்த முறை தையலும் செய்து பழகச் சொல்லியிருக்கேன்.

நேற்று புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்து வைத்தேன். கடைசியில் மகள் தான் அதை வாசித்துக் கொண்டிருக்கிறாள் :) மாலை எடுத்து 8 மணிக்குள் 100 பக்கங்களை தாண்டி விட்டாள். பொறுமையாக படிக்கலாம் என்று நிறுத்தி வைத்தேன். இப்போது பள்ளியிலிருந்து வந்து வாசிப்பை துவக்கி விட்டாள் :)

எங்களுக்கு PDF ஆகவோ, kindle லிலோ வாசிக்க விருப்பமில்லை. புத்தகமாகத் தான் வேண்டும். கணவரிடம் இதைச் சொல்லி ஆன்லைனில் இரண்டு புத்தகங்களை ஆர்டர் கொடுத்திருக்கிறோம்.

கோடைக்கால ரெசிப்பீஸ் - 16 ஏப்ரல் 2019 



மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டதே. மாம்பழ விழுதுடன் அகர்அகர் சேர்த்து செய்த ஜெல்லி!! இப்படி எல்லா விதமான பழங்களையும் கொண்டு ஜெல்லி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. விழுதாக சேர்த்தோ அல்லது துண்டங்களாக போட்டோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜனநாயகக் கடமை!!

ஒரு மணிநேரம் காத்திருந்து வரிசையில் நின்று தான் வாக்களித்தேன். வியர்வை மழையில் புடவையெல்லாம் நனைந்து பிழிந்து எடுக்கும் அளவில் புழுக்கம். அருகிலிருக்கும் அரசுப் பள்ளியில் வாக்களிப்பு. அதற்குள்ளேயே நான்கு பூத்துக்கள். மெஷின் வேலை செய்யாமல் ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்திருந்தார்களாம். நான் சென்றது அதன் பின்பு தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரிசை. ஆண்கள் வரிசை தான் முதலில் செல்வதாக குற்றச்சாட்டு. அதே போல் அங்கேயிருந்தும் குற்றச்சாட்டு.


காத்திருந்த வரிசையில் பலவித மனிதர்களின் எண்ணங்கள் இங்கே. "எங்கேயோ ஃபேன் ஒண்ணு தான் இருக்கு! இதில் எப்படி நிக்கறது" - இது போகும் வழிம்மா! இதுல எங்க ஃபேன் போட முடியும்!!

"குடிக்கத் தண்ணீ கூட குடுக்க மாட்டேங்கறாங்க! என்ன ஏற்பாடு பண்றாங்களோ" ( முன்னாடி குடிநீர் ஏற்பாடு செய்திருக்காங்க பாருங்க )

"இந்த ஸ்லிப் மட்டும் போதும் தானே!!" (இல்லம்மா! இது மட்டும் போதாது! வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை..இது மாதிரி ஏதாவது அடையாள அட்டை வேணும்) அப்படி யாரும் எங்கிட்ட சொல்லலியே!!! "இந்த போலீஸ்காரன் ஒழுங்காவே அனுப்ப மாட்டேங்கறான்"...!!!!

"எத்தனையோ பேர் ரத்தம் சிந்தி போராடி சுதந்திரம் வாங்கி குடுத்திருக்காங்க. இங்க நாம வியர்வை சிந்தி ஓட்டு போடறோம். எதுக்கு!! நல்லது நடக்கணும்னு தான். என்னவோ போங்க!!" 

இப்படி பலவித குரல்கள். எவ்வளவு ஏற்பாடு செய்தாலும் அதையும் மீறி ஆயிரம் குறைகள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் நான்.

ஓட்டு போடுவது நம் உரிமை. கடமை!! நல்லது நடக்கட்டும்!!

பின்னோக்கிய பயணம் – 23 ஏப்ரல் 2013


கோவை2தில்லி வலைப்பூவில், 2013-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய ஒரு கதம்பம் பகிர்வு இந்தக் கதம்பத்தில்! :)



பதிவினை அப்போது வாசிக்காதவர்கள் இப்போது வாசிக்கலாமே! 

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    நீர் மோர் மற்றும் மாம்பழ ஜெல்லி வாவ்!!

    மாம்பழ ஜெல்லி பார்த்ததும் மகனின் நினைவுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி

      மாம்பழ ஜெல்லி - மகனின் நினைவுகள்... :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரோஷினிக் குட்டிக்கு வாழ்த்துகள்! அவள் வாசிப்பனுபவம் தொடரட்டும்!
    தையல் கற்பதும் மிக மிக நல்லது. உதவும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தையல் நல்லது! உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. நாட்டில் நல்லது நடக்க வேண்டும்.

    பழைய கதம்பத்தையும் பார்க்கிறேன் ஆதி.

    இன்றைய கதம்பம் எல்லாமே அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டில் நல்லது நடக்க வேண்டும். நடக்கட்டும் கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    கொளுத்தும் வெயிலுக்கு வயிற்றுக்கு இதமாய் கண்ணில் படுவது பழைய சோறா? நேற்றுதான் ஒரு செய்தி கண்ணில் பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் பழைய சோறு விற்பனைக்குத் தருகிறார்களாம். இதற்காகவே முதல் நாள் மாலை சாதம் வடித்து மண் கலயங்களில் நிரப்பி மறுநாள் அதில் மோர், நீர் விட்டு தருகிறார்களாம். தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம் போன்றவை வைத்து. இதை ஆன்லைனிலும் புக் செய்து பெற்றுக்கொள்கிறார்களாம் மக்கள். ஐம்பது ரூபாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      மண்கலயங்களில் பழைய சோறு - அதன் சுவையே தனிதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நரஹரி மாதிரி வரிகள் சிறப்பு. சில பதிவுகளை நானும் பேஸ்புக்கில் படித்த நினைவு. ரிஷபன் ஸாருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். புத்தகமாக வெளிவருவதற்கு முன்னர் முகநூலில் பகிர்ந்து வந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அடடே... ரோஷ்ணிக்கு புத்தக ஆர்வம் - அதிலும் குறிப்பாக தமிழ்ப் புத்தக ஆர்வம் - இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த புத்தக ஆர்வம் தொடர வேண்டும் என்பது எனது ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வாக்களிக்கச் செல்லும் கொஞ்ச நேரத்தில்தான் நாம் எவ்வளவு வசதிகளை எதிர்பார்க்கிறோம்? அந்த வெயிலின் அனலில் அந்த அலுவலர்கள் நாள் முழுவதும் அங்கு அமர்ந்து வேலை செய்வதையும் மறந்து விடுகிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாள் முழுவதும் இப்படி வேலை செய்வது கடினம். ஆனால் பொதுமக்கள் உணர்ந்து கொள்வதே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பழைய பதிவை மறுபடி ரசித்தேன். அங்கே என் கமெண்ட்டையும் பார்த்தேன்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவினை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. டெல்லி போயாச்சா..
    நரஹரி பாராட்டிற்கு நன்றி
    ரோஷ்ணி.. சரியான வளர்ப்பில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.

      நீக்கு
  10. ஆதியும் ரோஷ்ணியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க இல்லையா? விடுமுறை இனிமையாகக் கழிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை இனிதே கழிந்தது! நான் இங்கே பதில் தருவதில் ரொம்பவே தாமதம்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. பழசு, புதுசு எல்லாமும் மணக்கிறது. நரஹரி மனதிலேயே குடி கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. கருத்துச் சொல்லி வெளியிட்டதும் வலைப்பக்கம் பழைய நிலைக்கு வர நேரம் பிடிக்கும். இப்போது 2,3 நாட்களாக விரைவில் வந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இப்போதும் நேரம்தான் பிடிக்கிறது. எனக்கு நேரமில்லை என்றால் மூன்று நான்கு ஜன்னல்களில் வெங்கட் தளம் திறந்து சட்சட்டென ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு கமெண்ட் போட்டு விடுவேன்!!!

      நீக்கு
    2. இந்த வலை மாய வேலை - சில சமயங்களில் ரொம்பவே படுத்தும் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. இரண்டு மூன்று ஜன்னல்களில் - ஆஹா... நல்ல யோசனை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. முதல் படம் குளுமை...
    பாடல் அருமை...
    புத்தக வாசிப்பு பெருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. இன்று புத்தக வாசிப்பு தினம் இல்லையா?
    ரோஷிணி புத்தகம் வாசிப்புக்கு கேட்க வேண்டுமா! அப்பா, அம்மா இருவரும் நல்ல படிப்பாளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  15. ரோஷ்ணிக்கு வாசிப்பதில் அதிலும் தமிழ் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் இருப்பது சந்தோஷம். திருச்சி வெயிலிலிருந்து டெல்லி வெயிலுக்கா? என்ஜாய் மாடி. Happy holidays Roshini!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஞ்சாய் மாடி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  16. நரஹரி அட்டைப்படமே அற்புதமாய் உள்ளதே. ரிஷபன் அவர்களின் ஒரு சில சிறுகதைகளை படித்ததிலிருந்து நான் அவரின் ரசிகன் ஆகிவிட்டேன்.

    ரோஷ்ணிக்கு தமிழ்ப் புத்தக வாசிப்பு பழக்கத்தை அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எனது மகளுக்கு தமிழ்ப் புத்தக வாசிப்புப் பழக்கம் மிக குறைவு என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் அவர்களின் ரசிகன் - அவரின் சிறுகதைகள் மறக்க முடியாதவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. நரஹரி மனதுக்கு நெருங்கியவராக தோன்றுகிறார். சிங்கமாச்சே! (ஆமாம்! ஆமாம்னு இப்ப வல்லிசிம்ஹன் வந்து சொல்வாங்க பாருங்க) :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்கு நெருங்கியவர்... உண்மை தான் அம்பி!

      வல்லிம்மாவின் சிங்கம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. ரோஷ்ணியின் வாசிப்பு அதுவும் தமிழ்ப்புத்தகம் வாசிப்பு பழக்கம் அருமை. மகிழ்ச்சி வாழ்த்துகள்.

    கதம்பம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  19. எங்கள் ஊரில் இன்றுதான் ஓட்டு போடும் தினம். ஓட்டு போட்டாச்சு. ஊரில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!.

      நீக்கு
  20. தங்கள் மகள் தமிழ் புத்தகம் வாசிக்கிறாள் என்று தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்கச் சொல்லுங்கள். அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மையானவன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....