ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி மூன்று



வாரணாசி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? காசி விஸ்வநாதர் கோவில், காசி விசாலாட்சி கோவில் மற்றும் அன்னபூரணி கோவில்! இந்த அன்னபூரணி கோவில் சென்றபோது அன்னபூரணியின் மிக அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தது – அவள் காலடியில் சில நிமிடங்கள் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடிந்தது. அன்னபூரணி கோயிலில் இருந்து பிராசாதமாக கொஞ்சம் அக்ஷதையும் கிடைத்தது. வாரணாசியில் இருந்த ஒரு வேளை உணவும் அவள் அருளாலேயே கிடைத்தது – சுவையான உணவு எங்கே என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!
 
காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட் என்பதை ஏற்படுத்தி, வருடம் முழுவதும், நாள் தவறாமல் ஆயிரக் கணக்கில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகத்தின் அருகிலேயே இருக்கும் இந்த அன்னதானக் கூடத்தில் தையல் இலையில் சாதம், ஒரு கறி, மோர்க்குழம்பு, ரசம், தயிர், ஊறுகாய் என சுவையான உணவு – வயிறு குளிரச் செய்யும் உணவு அளிக்கிறார்கள். இந்தச் சேவையை பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமே இருக்க, ஒருவர் சாப்பிட்ட உடன் இடத்தினை துடைத்து அடுத்தவர்கள் அமர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

அங்கே பணி புரியும் நபர்களைப் பார்க்கும்போது, மனதுக்குள் அவர்களது அயராத உழைப்பு குறித்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் வராமல் இல்லை. அன்னதானம் தானே என்று குறைவாகவோ, வருபவர்களைக் கடிந்து கொண்டோ அன்னம் பரிமாறுவதில்லை. தேவையான அளவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய இடம் என்றாலும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டே இருப்பது ரொம்பவே கடுமையான வேலை. சாப்பிட்ட பின்னர் இலையை நாமே எடுத்துக் கொண்டு போய் அதற்கான கூடையில் சேர்க்க வேண்டும். அந்த பிளாஸ்டிக் கூடைகள் தொடர்ந்து நிரம்ப, நிரம்ப அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்ட அந்த நேரத்திலேயே சுமார் 150 பேர் சாப்பிட்டு இருப்பார்கள். நாளொன்றுக்கு இத்தனை பேர் எனக் கணக்கு இல்லை! எத்தனை பேர் வந்தாலும் சாப்பாடு உண்டு! இந்தச் சேவையை செய்யும் மனிதர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த அமைப்பு பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுபவர்கள் இங்கே பார்க்கலாம். வாருங்கள் நண்பர்களே, வாரணாசி பயணத்தின் போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில்!




































என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

  படங்கள் எல்லாமே நல்லாருக்கு ...குறிப்பா நதியில் படகுப் படம் மிக மிக நன்றாக இருக்கிறது. அதாவது கரையில் கட்டிடங்கள் இல்லாமல் அந்தப் படங்கள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி!

   படங்கள் குறித்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம்.... எனக்கு முன்னாலேயே கீதா ரங்கனா? நேற்று இரவு வைகுண்ட ஏகாதசியோ இல்லை சிலராத்திரியோ இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா நெல்லை நாங்க காலைல சீக்கிரம் எழுவோமாக்கும்!!!

   நெல்லை இனிய காலை வணக்கம்

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் நெல்லைத் தமிழன்.

   பல நாட்களில் கீதாஜி தான் இங்கே முதல். அவருக்கும் ஸ்ரீராமுக்கும் தான் போட்டி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. அதானே... பல பதிவுகளில் உங்கள் கருத்து தானே முதலில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. அன்னதான சேவையைப் படித்து நெகிழ்ச்சி... பெரும்பாலும் அன்னத்தை இலவசமாக பெறுவதற்கு என் மனம் ஒப்புவதில்லை. அதற்கு ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது, "தான், தனது என்ற எண்ணம்தான் உன்னைச் சாப்பிட விடாமல் தடுக்குது. எதையும் பகவத் ப்ரசாதம் என்ற நோக்கில் சாப்பிட்டால் இந்த மாதிரி சிந்தனை உனக்கு எழாது" என்றார்.

  படங்கள் அருமை.... மனைவியை காசிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதையும் பகவத் ப்ரசாதம் என்ற எண்ணம் வந்துவிட்டால் சிறப்பு. ஆனால் அந்த எண்ணம் வருவதில்லை!

   மனைவியை காசிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை! என்பதே. என் பல பயணங்கள் தனியாகவோ, நண்பர்கள் குழுவுடனோ தான். பயணம் அவருக்கு அத்தனை பிடிப்பதில்லை. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. அட வெயிலுக்காக போட் மேல ஷாமியானா மாதிரி போட்டுருக்காங்களோ? அழகா இருக்கு ஜி.

  விவரங்களும் பார்த்துக் கொண்டேன் ஜி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வசதி அந்த ஷாமியானா - மழை, வெயில் போன்றவற்றிலிருந்து ஒரு பாதுகாப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. காசி பயணக் காட்சிகள் ப்ழைய நினைவுகளை கொண்டு வருகிறது.
  படங்கள் எல்லாம் அழகு.

  காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட்ப்பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம்.
  நாங்கள் நகரத்தார் சத்திரத்தில் தங்கி இருந்ததால் அங்கயே உணவு. இங்கும் உணவு நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகரத்தார் சத்திரமும் சிறப்பாக செயல்படுகிறது. அவர்களது சத்திரத்திலும் காலையிலேயே உணவு வேண்டும் என்று சொல்லி விட்டால் தந்து விடுவார்கள். டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்! உங்கள் காசிப் பயண நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. அன்னபூரணி கோவில் சென்றபோது அன்னபூரணியின் மிக அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தது – அவள் காலடியில் சில நிமிடங்கள் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடிந்தது. அன்னபூரணி கோயிலில் இருந்து பிராசாதமாக கொஞ்சம் அக்ஷதையும் கிடைத்தது. வாரணாசியில் இருந்த ஒரு வேளை உணவும் அவள் அருளாலேயே கிடைத்தது – சுவையான உணவு எங்கே என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!//

  ஆஹா அருமை வெங்கட்ஜி! சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்ய முடிந்ததும்...ப்ளஸ் பிரசாத சாப்பாடும் கிடைத்தது அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல தரிசனம் கூடவே ப்ரசாதமும்.... இறைவன் செயல்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 8. கோவில் தரிசனம் நிறைவைத் தரும்
  அருமையான படங்கள்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யார்ல் பாவண்ணன் ஐயா.

   நீக்கு
 9. எல்லாப் படங்களும் அழகு. பறவை பறக்கும் படம் போட் எல்லாம் அழகு. கடைசிப் படமும் செமையா இருக்கு. ட்ரஸ்ட் பத்தி நல்ல விஷயங்கள் அறிய முடிந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 10. காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட்ப்பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.
  இதே மாதிரி, இங்குள்ள குருத்வாரா கோயிலில் எப்பொழுதும் அன்னதானம் நடைப்பெற்று கொண்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலான குருத்வாராக்களில் லங்கர் என அழைக்கப்படும் அன்னதானம் குறிப்பிட்ட நேரங்களில் உண்டு. நல்ல விஷயம் அது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 11. படங்களும் விவரணங்களும் மிக நன்றாக இருக்கின்றன வெங்கட்ஜி. அன்னப்பூரணி ட்ரஸ்ட் விஷயமும் தெரிந்து கொண்டோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 12. அன்னதானத்தில் நாமும் பங்கேற்கலாம்ன்னு நினைக்கிறேன். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன்ல புக் பண்ணினால் சேவை செய்ய கூப்பிடுவாங்க. நமது வயது, உடல் தகுதிக்கேற்ப வேலைகளை பிரிச்சு தருவாங்க.

  தினத்துக்கும் இரண்டு லட்டு, தங்குமிடம், உணவு இலவசம், சேவை நாட்களின் கடைசி தினத்தில் வரிசையில் செல்லாமல் தனிப்பட்ட முறையில் ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 13. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 14. அன்னதானம் பற்றிய தகவல்கள் சிறப்பு. படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 16. //எத்தனை பேர் வந்தாலும் சாப்பாடு உண்டு! இந்தச் சேவையை செய்யும் மனிதர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்//

  இம்மாதிரி மனிதாபிமானிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நல்லது.

  படக் காட்சிகள் அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பசி பரமசிவம் ஐயா.

   நீக்கு
 17. புது தில்லியில் இருந்தபோது கடைசியாய் 1976 ஆம் ஆண்டு காசிக்கு போயிருந்தேன். ஆதற்குப் பிறகு இன்று தான் காசியை தங்கள் பதிவு மூலம் கண்டு இரசித்தேன். படங்கள் அருமை. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காசி பற்றிய உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 18. சுவையாகவும் சிறப்பான நடை முறையிலும் அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட் செய்து வரும் அன்ன தானம் பாராட்டுக்குரியது.

  படங்கள், அருமையான காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 19. சலிக்காமல் அன்னம் வழங்கும் அன்னபூரணி. எல்லோரும் பசியின்றி இருக்கட்டும். பசிக்கும் போது உணவு கிடைக்கட்டும். எத்தனை அற்புத சேவை.
  படிக்கவே அமிர்தமாக இருக்கிறது வெங்கட்.
  நிறைய பேர் கங்கையின் மாசு பற்றி அலுத்துக் கொள்ளும்போது நீனகள் அருமையான படங்களுடன் தேவியின் திவய தரிசந்த்தையும் சொல்லும்போது
  மனம் லயிக்கிறது.
  ஜெய் கங்கே. ஜெய் பாகீரதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கங்கா மையா கீ ஜெய்! கங்கை இப்போது ரொம்பவே சுத்தமாக இருக்கிறது. இப்போதும் சிலர் அசுத்தம் செய்வதுண்டு என்றாலும், தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 20. அருமை. உண்டி கொடுத்தோர் உயிர் குடுத்தார்! உணவு விடுதி, கோவிலுள் புகைப்படம் அனுமதி இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலுக்குள் அலைபேசி, கேமரா, பெரிய பைகள் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. வரும் வழியிலேயே அவற்றை உங்கள் வண்டியிலோ அல்லது கடைகளில் டோக்கன் பெற்றுக் கொண்டு வைத்து விட வேண்டும். உணவு விடுதி கடைக்கும் கோவிலுக்கும் நடுவே! எனவே படங்கள் எதுவும் எடுக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பி.

   நீக்கு
 21. காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட்ப்பற்றி கடந்த வாரம் அறிந்தேன் ..இன்று இங்கும் ....


  தகவல்களும் ...படங்களும் மிக அருமை வழக்கம் போல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்....

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. வாரணாசி படங்களும். படகு படங்களும், நதியோடு கட்டிடங்களை இணைத்தாற்போல் எடுத்துள்ள படங்கள் எல்லாமே மிகவும் அழகாக உள்ளது.

  அன்னபூரணி தரிசனம் நீங்கள் கூறிய முறை மகிழ்வை தந்தது. நிம்மதியான ஆண்டவனின் தரிசனம் என்றும் மறக்க முடியாத அனுபவம். அன்னபூரணி அன்னம் தருபவள். அவள் அங்கு குடியிருக்க உணவிற்கு குறையேது? பசிக்கு தினம்தினம் உணவிடும் அன்னதான டிரஸ்டிக்கு வாழ்த்துக்கள். விபரங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 23. Please visit Kasi. Mind will be peaceful after worshipping the God and Goddesses. Personal experience.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவைப் படிக்காமலே ஒரு கருத்தோ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....