செவ்வாய், 8 செப்டம்பர், 2020

கதம்பம் – மண் சட்டி – செருப்பு நம்பர் 10 – ஆசிரியர் தினம் – மலாய் கேக் – மண்டலா ஆர்ட்

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

ONCE YOU LET YOUR PAST DECIDE HOW YOU WXPERIENCE THE PRESENT, YOU HAVE DESTRYOYED YOUR FUTURE.

 

மண் சட்டி:



 

இன்று சற்று வெளியே சென்று வரும் வேலை இருந்தது. எவ்வளவோ முறை தேடி அலைந்த போது கிடைக்காதது இன்று கண்முன்னே தென்பட்டதில் மிக்க மகிழ்ச்சி!

 

உயரம் குறைவாக, சற்று அகலமாக மண்சட்டி ஒன்று கேட்டு கேட்டு அலுத்து விட்டேன். எப்போது கேட்டாலும் அந்தக் கடையில் "மீன்குழம்பு வைக்கவா" என்று கேட்பார்கள்...🙂 மீன ராசி என்பதைத் தவிர மீனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்தாலும் திரும்பத் திரும்ப இதே கேள்வி...:)))

 

இன்று எதேச்சையாக அந்தக் கடையை கடக்கும் போது கண்ணில் தென்பட எடுத்துப் பார்த்தேன்..கடைக்காரரும் மூணு கடைத் தாண்டி என் வீடு இருக்கும்மா..அங்க இரண்டு மூணு சைஸ்ல இருக்கு, வாங்க! என்றார்.

 

அங்கே இதே சட்டி சிறிய அளவிலும், பெரிதாகவும் இருந்தது. கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாமே என்று இரண்டுமே எடுத்துக் கொண்டேன். ஒன்றுக்குள் மற்றொன்று வைக்கலாம். இனிமேல் பழக்கப்படுத்தணுமே!!

அழகா இருக்கிறதா என்று சொல்லுங்கள்.


செருப்பு நம்பர் 10:


உயர ஃபேமிலி என்ற ஒரே காரணத்தால் எங்கள் மூவருக்குமே 10 ம் நம்பர் செருப்பு தான் பொருந்தும்.

 

நேற்று மகளுக்கு செருப்பு வாங்க வழக்கமாக செல்லும் கடைக்குச் சென்றிருந்தோம். ”வாங்கக்கா! உட்காருங்க! அண்ணா நல்லாருக்காங்களா?” என்று கேட்டு விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இவங்கள முடிச்சிட்டு வரேன்! என்று முன்பே அங்கு வந்திருந்த கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்தார்.

 

அதற்குள் நாங்கள் சுற்றி வரப் பார்த்து எந்த டிசைனில் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து எங்களிடம் 'யாருக்குக்கா' என்றார். பாப்பாவுக்கு தாங்க என்றேன்!

 

உடனே நான்கைந்து செட் செருப்புகளை எடுத்துப் போட்டார். அதில் நாங்கள் பார்த்து வைத்த எந்த டிசைனுமே இல்லை! ரொம்பவே சிம்பிளாக நான் அணிவது போல தான் இருந்தது. கட் ஷூ போலவும் வாங்க முடியாது. விரல்களை மடக்கி விடுவாளோ என்று எப்போதும் பதட்டம் இருக்கும்.

 

அவரிடம் கேட்டதும், ”இல்லக்கா! பத்தாம் நம்பர் பொதுவா யாருமே வாங்க மாட்டாங்க. பாப்பாவுக்கு இனிமே வேணும்னா முன்னாடியே சொல்லிடுங்க!!!” என்றார். முன்பும் பள்ளிக்கான ஷூவுக்கும் இது தான் சொன்னார்.

 

அவர் காண்பித்ததில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொண்டோம். வெளியே வந்ததும் மகளிடம் "பார்த்து பதவிசா நடக்கணும் கண்ணா! போனாலும் கிடைக்காது!" என்றேன். ”கலாய்க்கிறயாம்மா! இதுக்கு நடந்தே போக வேணாம்! பறந்து போலாம்” என்கிறாள்.


ஆசிரியர் தினம்:


கல்லைச் செதுக்கி சிலையாக்குவதைப் போல நம்மை செதுக்கி செப்பனிட்ட ஆசிரியப் பெருமக்களை இந்நாளில் நன்றியுடன் நினைவு கொள்வோம். தாய் போலவும், தந்தை போலவும் அறிவுரைகள் பல தந்து அன்பாகவும், கண்டிப்புடனும் வழிநடத்தியவர்கள் இவர்கள்.

 

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.


மலாய் கேக் – ஆதியின் அடுக்களை சேனலில்:



 

ஆதியின் அடுக்களைச் சேனலில் புதியதாக ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபி. இம்முறை வீடியோவும் நானே, பின்குரலும் நானே. எடிட்டிங் செய்தது மட்டும் மகள். ஒவ்வொரு முறையும் மெருகேற்றத் தான் நினைக்கிறேன். பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


லிங்க் இதோ...


https://youtu.be/aAqRjKMzFM0

 

மண்டலா ஆர்ட் – ரோஷ்ணி கிரியேட்டிவ் கார்னர் சேனலில்:

 

மகளின் Roshni's creative corner சேனலில் தற்போது Dot mandala Art! இந்த லிங்க்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கலாம்.

 

https://youtu.be/ItPj99VTUYk

 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

26 கருத்துகள்:

  1. கதம்பம் வழக்கம் போல எல்லா விசயங்களும் சுவையோடு மணத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆதியின் அடுக்களையில் மலாய் கேக் செய்தது சூப்பர், பார்த்துக்கொண்டிருக்கும் போது கண்டிப்பாக நாமும் செய்யச் சொல்லி சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. செய்து தரச் சொல்லி சுவைத்துப் பாருங்கள் ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சிறப்பான பதிவு
    தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவாணன் ஜி.

      நீக்கு
  5. கும்பகோணத்தில் எங்கள் வீட்டருகில் இந்த மண் பாண்டங்கள் செய்யும் குடும்பத்தார் இருந்தனர். தஞ்சாவூரிலும் சில தெருக்கள் தள்ளி இத்தகு மண் பாண்டங்கள் செய்வோரை அடிக்கடிக் காண்கிறேன். அங்கெல்லாம் சற்று சிரமம்தான் என்பதை உங்கள் அனுபவம் உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அப்படி சிரமமாகத் தெரியலை. இங்கேயும் கிடைக்கின்றன. தெற்கு கோபுர வாயிலைத் தாண்டியதும் செல்லும் தெருவில் வலப்பக்கம் திரும்பினால் மட்பாண்டங்கள் வைத்திருக்கும் கடைகள் உண்டு. இப்போ நான் பார்த்து ஒன்றரை வருஷம் ஆகி விட்டது.

      நீக்கு
    3. சிரமம் என்பதாக இல்லை. பல நாட்களில் நமக்குத் தேவையான வடிவத்தில், தேவையான விதத்தில் கிடைப்பதில்லை. நீண்ட நாட்களாக சொல்லி வைத்த பிறகு தான் இங்கே கிடைத்தது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. // மீன ராசி என்பதைத் தவிர மீனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை //

    சப்தமாக சிரித்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எங்கள் வீட்டிலும் எல்லோரும் பத்தாம் நம்பர் சைஸ்...டிசைன் தேட வழிஇருக்காது...சைஸில் உள்ளதை வாங்கப்பழகிக் கொண்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்கள் வீட்டிலும் பத்தாம் நம்பர்! டிசைன் தேட வழியில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  8. கதம்பம் அருமை. குடும்பத்தில் அனைவருக்கும் ஓரே நம்பர் இருப்பது வியப்பை அளித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட் பத்தாம் நம்பர் எங்க மகளுக்கும் மகங்களுக்கும். அப்பாவுக்கு 11
    தேடுவார்.
    இப்போது பேரன் 13:)
    அந்த நாட்களில் சென்னையில் அகப்படாது. பெங்களூர் போகும்போது வாங்கி வருவார்.
    ரோஷ்ணி குட்டி சென்ஸ் ஆஃப் ஹியுமர் ரசிக்க வைக்கிறது.
    நானும் மீன ராசிதான். எனக்கும் மீன் பிடிக்கும். சாப்பிடப் பிடிக்காது.:)

    ஆதியின் சானலப் பார்க்கிறேன்.
    நன்றி மா. குடும்பம் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      கொஞ்சம் கடினம் தான் - தேடி எடுக்க வேண்டியிருக்கும் 10, 11 அளவுகள். நெய்வேலியில் இருந்தவரை தைத்து வாங்கிக் கொள்வதுண்டு!

      மீன ராசி! :) மகிழ்ச்சி மா.

      வாழ்த்தியமைக்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் அருமை.
    முகநூலில் வாசித்து ரசித்தேன்.இங்கும் படித்தேன்.

    ஆதியின் அடுக்களைச் சேனலில் புதியதாக ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபி பார்த்தேன் நன்றாக இருக்கிறது எளிதான சுவையான சத்து மிகுந்த பண்டம்.

    ரோஷ்ணியின் கைவேலையும் பார்த்தேன், மண்டலா ஆர்ட் நன்றாக இருக்கிறது.
    இருவ்ரௌக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை. மண் சட்டி அழகாக உள்ளது. நானும் மீன ராசி தான். ரோஷ்ணி wit ரசித்தேன். மலாய் கேக் நன்றாக உள்ளது. ரோஷ்ணி art பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கயல் ராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. முகநூலிலும் பார்த்தேன். சில தயாரிப்புச் செருப்புகள் ஒன்பதாம் நம்பரிலும் சிலவற்றில் எட்டாம் நம்பரிலும் எனக்குச் சேரும். ஆனால் நாமே அளவு கொடுத்து தைத்து வாங்குவது சிறப்பு. அம்பத்தூரில் இருந்தவரை அப்படித் தான் வாங்குவேன்.ஆனால் அந்த வீட்டு வளர்ப்புச் செல்லம் தான் உள்ளேயே விடாது! அதைப் பிடித்துக் கட்டிப் போடாமல் நாம் உள்ளேயும் போக முடியாது! ஒரு ஆள் உயரம் எம்பிக்குதித்துக் கொண்டு மேலே பாயும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செருப்பு அளவு கம்பெனிக்கு கம்பெனி வேறுபடுகிறது! தைத்து வாங்கிக் கொளவது நல்லதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....