திங்கள், 8 செப்டம்பர், 2025

3BHK - திரை விமர்சனம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் தான் பார்த்து ரசித்த 3BHK திரைப்படம் குறித்த அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


*கேட்டதும் கிடைத்ததும்* - 3BHK - பட விமர்சனம் 



நடிகர் கார்த்தியின் குரலில் படம் ஆரம்பிக்கிறது.


எப்படி ஒரு கீழ்நிலை மத்திய வகுப்பைச் (lower middle class) சேர்ந்த ஒரு குடும்பத்தலைவன் 3 BHK வாங்க ஆசைப்படுகிறான் (அல்லது ஏன்  ஆசைப்படக் கூடாது) என்பது ஒற்றை வரிக் கதை…


அன்பான மனைவி (தேவயானி) பாசமான குழந்தைகள் (சித்தார்த், மீத்தா).


வாடகை வீட்டுக் கஷ்டங்களை தவிர்க்க சொந்தமாக வீடு வேண்டும் (அதுவும் 3BHK தான் வேண்டும்!) என்று மிகச் சிரமப்பட்டு முயல்கிறார்கள்.


பணம் சேர்க்க EMI கட்ட (வீடு வாங்கினால்) என்னவெல்லாம் செய்கிறார்கள் பின் அந்தக் கனவு நிறைவேறுகிறதா என்பது கதை. 


யப்பப்பா ஒருத்தருக்கு வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள், முட்டுக்கட்டைகள் வர முடியுமா என்ன?😟


ஒரு accident ம், கைகால் முறிவு மட்டும்தான் பாக்கி!


பாந்தமான tailor-made ரோல் தேவயானிக்கு…


கண்ணைச் சுற்றிக் கருவளையம் நல்ல மேக்கப்👌🏻 (இல்லை நிஜமாவே தானோ?🤔) சோர்வாகத் தெரிகிறார். எப்போதும் ஒரே புன்னகை சோகமாக. ஒரே ஒரு இடத்தில் SK விடம் உங்களுக்கு பையனுக்கு  கல்யாணம் ஆகவில்லை என்று வருத்தமில்லை, வீடு போய்விட்டதே என்றுதான்… என்று சொல்லுமிடம் சிறப்பு👌🏻


சித்தார்த் - வெற்றியடைய படிப்பு, பரிக்ஷை, இன்டர்வியூ என்று பல விதமாக முயல்கிறார். பல விதமாகத் தோற்கிறார்.. படம் நெடுகிலும் sorry பா… நாலாம் முறை அவர் வீட்டுக்குள் வந்த உடன் பார்வையாளர்களே Sorry பா சொல்லிவிடுகின்றனர்! கட்டக் கடைசியில் தான் நாம ஜெயிச்சுட்டோம் பா எனும் positive வார்த்தை! 

ஸ்..ஸப்பா… (நம்மிடமிருந்து பெருமூச்சு....).


மீசை எடுத்தால் 16 வயதுப் பையன். மீசை, குறுந்தாடி இருந்தால் 34 வயது! இரண்டும் பொருந்துகிறது சித்தார்த்துக்கு!👍🏻


(பிற்கால சிவாஜி போன்றோர் தொந்தி, Wig ஓடு college student ஆக வந்து, அதை நாம் பார்த்து மிரண்டது மனதில் நிழலாடுகிறது😳)


SK திரும்பத் திரும்ப நீ என்னை மாதிரி ஆகிவிடக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே சித்தார்த்தின் பயத்தை, nervousness ஐக் கூட்டுகிறார்… தவறான அணுகுமுறை...


ஆனால் கடைசியில் சித்தார்த், என் அப்பாகிட்டேர்ந்து தான் தொடர் தோல்வி வந்தாலும் எப்படி அதைக் கடந்து போய்கிட்டே இருக்கணும், அப்போதுதான் மீண்டும் மீண்டும் முயற்சிக்க முடியும் என்று கற்றுக் கொண்டேன் என்று சொல்வதும் நேர்முகத் தேர்வில் வெல்வதும் சிறப்பு!


துணிந்து அப்பாவை எதிர்த்துத் தன் துணையைத் தேர்ந்தெடுப்பதும் (சற்று ஆறுதல்!)... பல தோல்விகளுக்குப் பின் தனக்குப் பிடித்த துறையிலேயே மீண்டும் போய் சேர்ந்து, படித்து, சிறந்து, ஜப்பான் நாட்டு இன்ஜினியர்களை ஓரம் கட்டி(??!!) பேர் வாங்கி உயர்வது (ஒரே சீனில்!) ரொம்ப cinematic....


புத்திசாலியான, அவ்வப்போது அப்பா, அண்ணாவுக்கே அறிவுரை சொல்லும் குறும்பான கலகலப்பான SK யின் பெண்ணாக ஆர்த்தி (மீத்தா) அழகான இயல்பான ரசிக்கும்படியான நடிப்பு👏🏻👌🏻ஆனால்  புத்திசாலியான படித்த ஒரு பெண் புகுந்த வீட்டில் நாலு வருடங்கள் கொடுமை அனுபவித்துவிட்டு சிரமப்பட்டுத்தான் வெளியே வரவேண்டுமா என்ன? நல்ல வேளை SK,  குடும்ப மானத்தைக் காப்பாற்ற புருஷனுடன்தான் நீ இருக்கணும் என்றெல்லாம் சொல்வதாகக் காட்டவில்லை. எண்ணங்களில் நல்ல மாற்றம்! பையன்களைவிட பெண்களுக்கு படிப்பும்  உத்யோகமும் எவ்வளவு முக்கியம் என்பது underlying point!


சித்தார்த்தின் காதலியாகக் கூட படிக்கும் ஐஸ்வர்யா (Chaithra) குடுத்த பாத்திரத்தில் நன்றாகவே shine ஆகிறார்! துணிக் கடையில் சித்தார்த்தை காப்பாற்ற சமாளிக்குமிடம் சிறப்பு👌🏻👏🏻


சரத்குமாருக்கு (SK) ஒரு படம் குடுத்தே ஆகவேண்டும் என்று இயக்குனர் நினைத்து கொடுத்திருக்கிறார். SK வின் (அதாவது நம்ம Supreme star😜 - ஆமா, யாருங்க இந்தப் பட்டமெல்லாம் கொடுக்கறது??? அவனத்தான் தேடிக்கிட்டிருக்கேன்..🧐) முக (B)பாவங்களைத்தான் மாற்றமுடியாது (இப்போது KB யே இருந்திருந்தாலும் ம்ஹும்… ஒண்ணும்நடக்காது😏), அவரிடம் இருக்கும் ஒரே (b)பாவத்துக்கு பொருந்துகிறமாதிரி கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ஶ்ரீ கணேஷ். கில்லாடி👌🏻😁


படம் நெடுகிலும் கண்களில் தேங்கிய நீரோடும் முகத்தில் அப்பிய சோகத்தோடும் வளைய வருகிறார் SK. ஆனால் tally exam pass பண்ணிவிடுகிறார்😊. அவர் பல் வரிசையைப் பார்க்க (அட, அவர் புன்னகையைத்தாங்க....) படம் இறுதிக் காட்சி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று! ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்த பின் (director மிக முயன்றும்🫢) பலப் பல அதிர்ச்சிகளை வரிசையாகச் கொடுத்தும் மறுமுறை அட்டாக் வராதது ஆச்சர்யம். இவரை அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு அவர் ரூமுக்குள் பிறர் போகும்போதெல்லாம் அதை director எதிர் பார்க்க வைக்கிறார். பரவாயில்லை, SK இதயம் நல்லெண்ணெய் பயன் படுத்தியிருக்கிறார் போல இருக்கிறது😜


யோகிபாபு ஒரு சீனில் வந்து கிச்சு கிச்சு மூட்ட முயற்சிக்கிறார்.... ஆனால் முடியலை.. இன்னும் எத்தனை நாள்தான் உடல் பருமனை காமெடி ஆக்குவார்கள்! Very primitive....


இசை( அம்ரித் ராம்நாத்) மனதில் நிற்கவில்லை.


ஒளிப்பதிவாளர் பங்கும் (தினேஷ் கிருஷ்ணன்) பெரிதாக வியக்குமளவுக்கு இதில் scope இல்லை (பாதி கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பல மாடிக் கட்டிடங்களில் நம்மை ஏற்றி இறக்குகிறார்! அவ்வளவே😣)


ஆமா, எடுத்தவுடன் 3 பெட்ரூம் flat க்குத்தான் ஆசைப் பட வேண்டுமா? 1BHK லிருந்து ஆரம்பித்திருக்கலாமே… budget இல் உக்கார்ந்திருக்குமே! ஆனா படம் முடிஞ்சுடுமே....


குத்துப்பாட்டு, ரத்தம் வழியும் சண்டைக்காட்சிகள், ரெட்டை அர்த்த வசனங்கள் இவையெல்லாம் இல்லாமலும் இயல்பான நடிப்பு, சீரான கதையோட்டம் இவைகளால் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றச் செய்ய முடியும் என்கிற இயக்குனரின் தன்னம்பிக்கைக்கு  வெற்றிதான்..👏🏻👏🏻


கேட்டவரை அனைவருக்கும் இப்படம் பிடித்திருக்கிறது (யதார்த்தமான கதை, நடிப்பு, மேலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளுடன் link ஆவதாலும் இருக்கலாம்)


மொத்தத்தில் 


3 BHK -


B aயங்கற 

H eவியான

K aலைப்படைப்பு!


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 செப்டம்பர் 2025


4 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம்.   ரத்தங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.  மற்றபடி படம் முழுவதும் - வ்.  கடைசி ஒரு சீனில் மட்டும் பாசிட்டிவ்.  யோகி பாபு உடல் பருமனைக் காட்டி நகைச்சுவை செய்யவில்லை.  அவர் முகபாவமும், குரலும், மாடுலேஷனும்தான் பெரும்பாலும்.  ஒரே மாதிரி செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முறையில் சினி விமர்சனம் விஜி அக்கா. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. யப்பப்பா ஒருத்தருக்கு வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள், முட்டுக்கட்டைகள் வர முடியுமா என்ன?😟//

    வருமே!!!!! அனுபவம்தான். பல வீடுகளில் உள்ளவை வெளியில் தெரிவதில்லை அவ்வளவுதான்.

    விமர்சனம் நல்லாருக்கு, விஜி.

    //குத்துப்பாட்டு, ரத்தம் வழியும் சண்டைக்காட்சிகள், ரெட்டை அர்த்த வசனங்கள் இவையெல்லாம் இல்லாமலும் இயல்பான நடிப்பு, //

    இப்படியான கதைகள் படம் வர வேண்டும். சும்மா மாஸ் மாஸ்னு போர்!

    SK - ஓ சரத்குமாரா....இப்பலாம் SK என்றால் சிவகார்த்திகேயன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கருத்துப் பதிவிற்கு நன்றிகள் friends.
    Viji

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....